Published:Updated:

வாசகர் மேடை: ராகு(ல்) காலம்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ஓவியங்கள்: ரவி

வாசகர் மேடை: ராகு(ல்) காலம்!

ஓவியங்கள்: ரவி

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? சீனியர் படங்களைத்தான் ஜூனியர் ரீமேக் செய்ய வேண்டுமா என்ன, தனுஷின் எந்தப் படத்தை ரஜினி ரீமேக் செய்யலாம்?

தனுஷ் நடித்த `புதுப்பேட்டை.’ கொலை செய்ய பயந்து நடுங்கும் சுபாவமாகட்டும், கேங் லீடராகி துவம்சம் செய்வதாகட்டும் 100% சூப்பர் ஸ்டார் ஹிட். ரஜினிக்கு பாட்ஷா-2.

த.ராஜவேல், தேனி

அசுரன் - சிவசாமியாக சூப்பர்ஸ்டார் வரும்போது, தியேட்டர்களில் திருவிழா நிச்சயம்.

செல்வகணேசன்

 ரஜினி
ரஜினி

பரட்டை (எ) அழகுசுந்தரம். அம்மா ரோலில் மீனாவை நடிக்க வைக்கலாம். தலைவருக்கும் டைட்டிலுக்கும் பொருத்தமான படமாக இருக்கும்.

க.அய்யனார், தேனி

‘ஆடுகளம் படத்தை ரஜினியை வைத்து போர்க்களம் என்ற பெயரில் கடைசி வரை சண்டையே போடாத சேவல் கதையைப் படமாக எடுத்தால், பிச்சிக்கிட்டு ஓடும்!

ravikumar.krishnasamy

துள்ளுவதோ இளமை!

ரீமேக் பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு... எறங்கி யூத்தா நடிக்க வேண்டியதுதான்!

prabacurren

பொல்லாதவன். ஆனா பைக் பேரு லட்சுமி.

gmuruganandi

பவர் பாண்டி படத்தில் இளம் வயது ஹீரோவாக ரஜினியும், முதியவராக வரும் ராஜ்கிரண் வேடத்தில் தனுஷும் நடித்தால் சரியான குடும்பப் படமாக இருக்கும்!

absivam

மாப்பிள்ளை - ரஜினி படத்தைத்தான் தனுஷ் பண்ணினாரு; இப்ப அந்த தனுஷ் படத்தை ரஜினி பண்ணலாம்; பிறகு தனுஷ்; பிறகு ரஜினி... இப்படியே பண்ணிகிட்டு இருந்தா 2031க்கு அப்புறம் கட்சி ஆரம்பிக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சா போதும்...

ThanjaiPrana

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? எடப்பாடி பழனிசாமியை ஒரு விஷயத்தில் பாராட்டலாம் என்றால் எந்த விஷயத்துக்காகப் பாராட்டுவீர்கள்?

லாக் டௌன் சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வீட்டு வாசலுக்கே வந்து பொருள்கள் விநியோகம் செய்தனர்.

வே.புனிதா, சோளிங்கர்

வலிமையான சட்டமன்ற எதிர்க்கட்சியையும் அதன் தலைமையையும் பெரிய முன்னேற்பாடு களோ திட்டமிடலோ எதுவுமின்றி எளிமையான புன்னகையுடன் கடந்து செல்லும் லாகவம் பாராட்டுதலுக்குரியது.

ராஜகோபால், மன்னார்குடி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சாமான்ய மக்களுக்குப்பிடித்ததுபோல எப்போதும் சிரித்த முகத்துடன் எளிமையானவராகக் காட்டிக்கொள்வது. ஜெ வுக்கு முற்றிலும் நேர் எதிர்குணம்.

senthilkumarcp

அரசியல் வியூகங்களை சூழ்நிலைகளுக்கேற்ப சரியாகக் கையாண்டுகொண்டிருக்கிறார்... அதைப்பற்றிய ஆழ்ந்த விவரம் தெரியாமல் இருப்பினும்.

malik.babu

எவ்ளோ பெரிய பிரச்னை வந்தாலும், “மூஞ்சிய சிரிச்சா மாதிரியே வச்சிக்கிட்டு” ஈஸியா கடந்துபோயிடுறாரு...

KarthikMSomasundaram

எப்படித் தள்ளிவிட்டாலும் கீழே விழாமல் நிமிர்ந்து நிற்கும் தஞ்சாவூர் பொம்மைபோல இருப்பதால்.

muthiah.kannan

மதுக்கடைகளைத் திறக்க டெல்லி வரை சென்று போராடிய அந்தப் போர் குணத்தைப் பாராட்டலாம்.

balasubramni1

பத்தாவது இடத்துக்கும் மேல இருந்தவர் சட்டென முதல்வரான சாதுர்யம்.

pachaiperumal23

தன்னை டயர் நக்கி என்று சொன்னவர்களுக்குக் கூட்டணி சீட் கொடுத்து அவர்கள் வாயாலே தன்னைப் பாராட்ட வைத்த அந்த அரசியல் சாணக்கியத்தனத்திற்கு நிச்சயம் பாராட்டலாம்!

sudarvizhie

இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப ஆட்சி செய்கிறார்! என்ன ஒண்ணு, மக்களுக்குத் துன்பம் வரும்போதுகூட பேஸ்ட் விளம்பரத்தில் சிரிப்பதுபோல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.

h_umarfarook

? ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படாத துறை எதுவென நினைக்கிறீர்கள்?

`காசு கட்டுங்க’ என இக்கட்டான நிலையிலும் மிரட்டி நச்சரிக்கும் (தனியார்) கல்வித்துறை.

அயன் கேசவன், கரிசல்குளம்

மின்சாரத் துறை... நாங்க செலுத்துற பில்லுலயும் சேர்த்து வச்சிட்டாங்க மின்சாரத்தை!

ananthi.ramakrishnan

எங்க வீட்டுப் பக்கத்துல கறிக்கடை வெச்சிருக்கும் ‘சின்னத்துரை’தான்... ஊரடங்கின் போதுதான் எதிர்பார்த்ததைவிட மட்டன், சிக்கன் வியாபாரம் அமோகம்..!

laks veni

பத்திரப்பதிவுத்துறை. பெயரிலே ரொம்ப பத்திரமா இருக்காங்க..! மருத்துவர்களுக்கே PPE கிட் கிடைக்காத போது இவங்க அதைப் போட்டு வந்து டூட்டி பார்த்ததெல்லாம் கொரானா காலச் சுவடு!

absivam

கைதட்டி, விளக்கேற்றி, சாப்பிட்டு, மாவாட்டி, தூங்கி ஊரடங்கை வெற்றிகரமாகக் கழிக்க வைத்த நம் பொழுதுபோக்குத் துறைதான்.

vikneshmadurai

பெட்ரோலியத் துறை. பெட்ரோல் விலை மட்டும் குறையவே இல்லை, கச்சா எண்ணெய் விலை சரிந்தும்!

SriRam_M_20

தொலைத்தொடர்பு துறை...

இந்த ஊரடங்கில் இத்துறைக்கான தேவையும் தேடலும் அதிகம்... அவர்கள் காட்டில்தான் மழை.

p_jegatha

? ராகுல்காந்தி இப்போது தமிழில் ரிங்டோன் மாற்ற வேண்டுமென்றால் உங்கள் சாய்ஸ் என்ன பாடல்?

இந்த முழு நாடும் பா.ஜ.க-வுடன் போராடுகிறது, நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் சண்டையிட வேண்டியது காங்கிரஸ் உடன் அல்ல...

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி

Adhirai Yusuf

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்

மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்

கொட்டும் மழைக் காலம் உப்பு விற்கப் போனேன்

காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்

ananthi ramakrishnan

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு

Thaadikkaran

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

UDAYAKUMARKR202

காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா, அன்பென்றாலே அம்மா, என் தாய்போல் ஆகிடுமா?

pbukrish

? ஒரு வித்தியாசமான மாஸ்க் தயாரிக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான மாஸ்க் தயாரிப்பீர்கள்?

சோலார் மாஸ்க். இந்த மாஸ்க்கைப் போட்டுட்டு ஒரு ஒயரை எடுத்து செல்போன்ல மாட்டி விட்டா போதும், செல்போன் தானா சார்ஜ் ஆகிடும்!

இளையநிலா

எந்த ட்ரோன்லயும் கண்டுபிடிக்க முடியாத மாஸ்க்னு,

அல்ட்ரா வைலட் சக்தி கொண்டதுன்னு சொல்லி வித்துக் காசு பார்ப்பேன்.

Ntramesh_kpm

கொரோனாக் கிருமி அருகில் வந்தால் நிறம் மாறும் மாஸ்க்.

VijiKumaran1

என்னோட மாஸ்க்ல `மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டது’னு பிரின்ட் செய்வேன். அப்புறம் பாருங்க, மோடியே என்னை வாழ்த்துவார். வாழ்த்து அட்டைன்னு பிஜேபி உறுப்பினர் அட்டை எங்க வீட்டுக்கு வரும்.

balasubramni1

மாஸ்க்-குடன் மைக் இணைத்து (டிவி புரோகிராமில் உபயோகிப்பது போன்றே) உருவாக்கிவிடலாம். மாஸ்க்-கைக் கழற்றிவிட்டுப் பேச, கேட்க வேண்டிய அவசியமில்லை.

jerry46327240

நான் சார்ந்த கட்சிக் கரை வைத்த மாஸ்க்

gg19952772

நம் உடல் டெம்ப்ரேச்சர் டிஸ்ப்ளே ஆகும் மாஸ்க்.

ARiyasahmed

‘QR Code Mask’ தனி நபரின் உடல் நிலை, பயண மற்றும் சுய விவரம் ஆகியவற்றை உள்ளீடு செய்துவிட்டால் கண்காணிப்பதற்கு சுலபமாக இருக்கும்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

மூக்கு அரிச்சா அதுவே சொறிந்து விடற மாதிரி.

km.nidhish.7

வாசகர் மேடை: ராகு(ல்) காலம்!

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? இப்போது திருவள்ளுவர் இருந்திருந்தால் எடப்பாடிக்கு ஏற்ற மாதிரி எப்படி குறள் எழுதியிருப்பார்?

? சைக்கோ த்ரில்லர் படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

? இப்போதைய சூழலில் சென்னைக்காரர்கள் பற்றி மற்ற ஊர்க்காரர்களின் மைண்ட் வாய்ஸ் என்ன? ஒரே வரியில் சுவாரஸ்யமாகச் சொல்லவும்.

? சிம்புவும் தனுஷும் ஒரு குறும்படத்தில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

? தமிழ்ப் படங்களில் எந்தப் படத்தை வெப் சீரிஸ் போல பல சீசன்களாக எடுத்து நிறைய பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள், ஏன்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com