பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: ராஜா ராணி டவுன் பஸ்!

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

? இன்னும் ஓராண்டு மட்டுமே தொடரப்போகும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

? சிம்பு இயக்கத்தில், குறளரசன் இசையமைப்பில், டி.ஆர் ஹீரோவாக ஒரு படம் நடித்தால் அதற்கு டைட்டில் என்னவாக இருக்கும்?

எல்லாமே நாங்கதான்

கே.எம்.ஃபாரூக், சென்னை

வந்தா குடும்பத்தோடு தான் வருவேன்

kaviprasath1029

இந்தப் படம் ரிலீசாகும்

SowmyRed

சர்வம் தாமத மயம்.

டி.ஆர், சிம்பு
டி.ஆர், சிம்பு

Ramesh

அன்பான புலி

அடங்காப் புலி

அசராப் புலி

manipmp

வரும் ஆனால் வராது

roadoram

மெகா மாநாடு

HariprabuGuru

? மொக்கையான வாட்ஸப் ஃபார்வர்டு அனுப்புபவர்களை சமாளிப்பது எப்படி?

பதிலுக்கு அதைவிட மோசமான மொக்கைகளை அனுப்பி எரிச்சலூட்ட வேண்டியதுதான்.

ஏ.எஸ்..நடராஜன், சிதம்பரம்

இனிமேல் வாட்ஸப் ஃபார்வர்டுகளுக்கு எல்லாம் காசு சார்ஜ் பண்ணுவாங்கன்னு ஒரு மெசேஜ் தட்டினால் போதும், கண்டிப்பா நம்பி அமைதியாகிடுவாங்க.

deepa.ilango.9

மெடிக்கல் பில்லை ஸ்கேன் செய்து அவருக்கு வாட்ஸப்பில் அனுப்பி, இத்தனைக்கும் காரணம் உன் மொக்கை ஃபார்வர்டு மெசேஜ்கள்தான்னு சொல்லலாம்.

pudhuvandi.ravindran

எதிர்த்துக் கேள்வி கேட்டு வாதம் பண்ண ஆரம்பிச்ச பிறகு ஒருத்தரும் பண்றதில்ல.

umakrishh

தினம் மோடி, சீமான், எச்.ராஜா, மாபா.பாண்டியராஜன் பேசும் வீடியோக்களை விடாமல் அனுப்பி வைத்தால், ஆள் ஒரு வாரத்துக்குள் காண்டாகிக் காணாமல்போய்விடுவார்.

chithradevi_91

கான்டாக்ட் லிஸ்ட்ல அந்த ஆசாமி பெயரை மாப்ள மொக்கச்சாமின்னு மாத்தி நிம்மதி அடைவேன்.

vrsuba

டாப் டென் மொக்க ஃபார்வர்டு மெசேஜ் அனுப்பியவர்கள்னு வாராவாரம் பெயர் போட்டு ஸ்டேட்ஸ் வைக்கலாம்.

Ntramesh_kpm

யூசர் டைடு வால்பேப்பர் டிபி வைக்கலாம்.

pbukrish

? இப்போது உங்களுக்குப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

இப்போதாவது ஒழுங்காகப் படிப்பேன்.

இரா.கமலக்கண்ணன், சித்தோடு

பிரேயர் நடக்கும்போது தூரத்துல நிற்கிற நமக்குப் பிடிச்ச பொண்ணு நம்மளைப் பார்க்குதான்னு பார்ப்பேன்..!

Thaadikkaran

கூச்சமேபடாம மஞ்சப்பையத் தூக்கிட்டு என் பொண்ணுகூட கிளம்பிடுவேன்.

Ramesh

கோ-எட் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லுவேன்.

mrs_vetti

ஸ்கூல் முடிச்சா போதும், அப்றம் நீங்க காலேஜ் போனதும் ஜாலியா இருக்கலாம்னு சொல்றவனுங்கள எல்லாம் தூக்கிப்போட்டு மிதிச்சிருப்பேன்!

ஆத்ரேயாடா

? பழைய ராஜா ராணி படங்களில் உங்களுக்குச் சிரிப்பூட்டும் விஷயம் எது?

எல்லாக் காட்சிகளிலும் மகாராணி `கேட்வாக்’கில் நடப்பது.

எம்.சேவியர்பால், கோயம்புத்தூர்

தூங்கி விழுந்துகொண்டு தேமே என சாமரம் வீசும் பெண்கள்.

ஆர்.நந்தினி, வந்தவாசி

ராஜாக்கள் அணிந்திருக்கும் லேடீஸ் பேன்ட்ஸ்

அ.வேளாங்கண்ணி, வேலூர்

ராஜா, ராணி தூங்கும்போதுகூட முழு மேக்கப், நகைகளுடன் இருப்பது.

என்.சாந்தினி, மதுரை

ராஜா லெக்கின்ஸ்க்கு மேல் குட்டைப்பாவாடை போட்டுக்கிட்டு கையில் குச்சிமாதிரியான கத்தியைப் பிடிச்சுக்கிட்டு யார்மேலும் படாதவாறு உதறிக்கொண்டு மேசை மேசையாய்த் தாவுவதைக் காணவும் கண்கோடி வேண்டுமேயடா என் செல்வமே..!

manisuji12

எடுப்பது கறுப்புவெள்ளைப் படம்தான் என்றாலும், டப்பா டப்பாவாகப் பூசப் பட்டிருக்கும் மைதா மாவு... சாரி, பவுடர்!

Anumadhan

டவுன் பஸ் சீட் போல இருக்கும் ஒரே அரியணையில் ராஜா ராணி இருவரும் அமர்வது. ராஜாதானே, இன்னொரு சமமான இருக்கை செய்தாலென்ன?!

SeSenthilkumar

`மந்திரியாரே, நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா’ என மன்னர் கேனத்தனமாய்க் கேட்பது.

Pethusamy

வாள் சண்டையில ஹீரோவின் வாள் கண்டிப்பா உடைஞ்சிடும். அவர் புது வாள் எடுக்கிறதுக்கு வசதியா பக்கத்து சுவரிலேயோ தூணிலேயோ டிஸ்பிளேயா ரெண்டு வாள் இருக்கும். அதில் ஒண்ணை உருவி ஹீரோ சண்டையை கன்டினியூ பண்ணுவாரு.

bommaiya

மன்னருக்கு வரும் ஓலைகளை அமைச்சரே வாசித்துக் காட்டுவது. ஏன், மன்னருக்குப் படிக்கத் தெரியாதா?

pachaiperumal23

அவ்ளோ வெய்ட்டா நகை, பட்டுத் துணிய பல மீட்டர்ல சுத்திக்கிட்டு லவ் பண்றேங்கற பேர்ல செடிய பிச்சுக்கிட்டு உக்காந்திருக்கும்க...கசகசன்னு இருக்காது?!

SENTHIL_WIN

மரு வைத்த மாறு வேடம். நகர்வலமாம்..!

Alsetwits

? இன்னும் ஓராண்டு மட்டுமே தொடரப்போகும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

அடுத்த பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.5000 பொங்கல் பரிசு வழங்கலாம்.

மலர்சூர்யா, பாண்டிச்சேரி

இரட்டை இலையோடு தாமரையை இணைத்து புதுக் கொடி தயாரானாலும் ஆகலாம்.

அ.ரியாஸ் சேலம்

கோலமாவு கோகிலா குண்டர் சட்டத்தில் கைது.

மணி, தெற்கு கருங்குளம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மன் கீ பாத் நிகழ்ச்சியைக் கேட்டால்தான் ரேஷன் அரிசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு கூட வரலாம்!

balebalu

ஸ்டாலினின் வெளிநடப்பும்

மோடியின் வழிநடப்பும்

தொடரும்.

sorkkalanjiam

எல்லா அதிருப்தியாளரையும் அ.தி.மு.க-வில் இணைப்பாரு.

urs_venbaa

தமிழகத்தில் “கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர்கள் கிளினிக் வைத்துக்கொள்ள அரசாணை” வெளியிடப்படலாம்.

துயிலன்

இன்னும் நிறைய மாவட்டங்கள் உருவாகும்.

Ammukutti

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை:  ராஜா ராணி டவுன் பஸ்!

? பிரியாணியைப் பற்றி நச்சென்று நாலு வரியில் ஒரு கவிதை...

? பிரபல அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்களின் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்க.

? சூர்யாவும் கார்த்தியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? சினிமா வில்லன்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

? திருமண விழாக்களில் உங்களை எரிச்சலூட்டும்

விஷயம் எது?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com