? ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் தானே தனிக்கட்சி தொடங்கும் அர்ஜுனமூர்த்திக்குத் தேர்தலில் என்ன சின்னம் ஒதுக்கலாம், ஏன்?

‘இலவு காத்த கிளி’ சின்னம்

umakrishh7

கட்சி ஆரம்பிக்காம ரஜினி கொடுத்த பல்பையே அவருக்குச் சின்னமா ஒதுக்கலாம்.

R.அருண்குமார், கும்பகோணம்.

கண்ணாடியைத் திருப்பினால் ஓடும் ஆட்டோ!

அஜித், சென்னை

சிஸ்டம்தான் சின்னம். அதைச் சரிசெய்யத் தானே களத்திலே இறங்கறாரு?!

பா து பிரகாஷ், தஞ்சாவூர்

‘வரும், ஆனா வராது' என்ற பொன்மொழி தோன்றிய இடமான, அந்தக் காரைச் சின்னமாகக் கொடுக்கலாம்.

SeSenthilkumar

‘காலி நாற்காலி' சின்னத்தைப் பெற்றால், கூட்டத்திற்கு மக்கள் வராவிட்டாலும் சின்னம் பிரபலமடையும்!

San84168

டார்ச்லைட்டுக்குப் போட்டியா டியூப் லைட்..!

LAKSHMANAN_KL

ரஜினி கட்சி தொடங்காம விட்ட இடத்திலிருந்து, அதே ஜோதியை இவர் வாங்கிட்டு ஓடுறதால, ஒலிம்பிக் ஜோதியைச் சின்னமா வெச்சிடலாம்.

RamuvelK

சானிட்டைசர் சின்னம். தேர்தல் முடிஞ்சவுடனே கை கழுவ வசதியா இருக்கும் இவரையும் சேர்த்து...!

vvenkat11597747

அல்வா சின்னம். இதைவிடப் பொருத்தமான சின்னம் வேறு கிடைக்குமா என்ன..?

parveenyunus8

? வாசகர் கேள்வி: தனது பேரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி எம்.ஜி.ஆரின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும்?

மா.தருண், புதுக்கோட்டை

‘நான் சத்யா மூவிஸ் மூலமா பிலிம் எடுத்தேன். நீங்க என்னை வச்சு பிலிம் காட்டறீங்க.’

venkat

என்னவோ என்கூட ஹீரோயினா நடிச்ச மாதிரி, எல்லாப் பயபுள்ளைகளும் என் மடியில தவழ்ந்ததா சொல்லிட்டுத் திரியுதுங்க..!

LAKSHMANAN_KL

என்னப்பா, ஆவியாக வாத்தி ரெய்டு வரணுமா?

balasubramni1

என்னை நேர்ல பார்த்தே இருக்க மாட்டாங்க, மடியில தவழ்ந்தேன், மாடியில உருண்டேன்னு கதை விட்டுட்டு இருக்காங்க... எல்லாம் ஓட்டுக்காக!

CpsWriter

நடிகர் சூரியைத் தவிர அத்தனைபேரும் என் மடியில தவழ்ந்தேன்னு சொல்றீங்களே... நான் என்ன குழந்தைகள் காப்பகமா நடத்திட்டிருந்தேன்?

pachaiperumal23

முதல்ல நீங்க எல்லாம் ஒரு முடிவுக்கு வாங்க... உங்க பாக்கெட்ல இருக்க வேண்டியது என் படமா, அம்மாவா, சின்னம்மாவான்னு?

poonasimedhavi

என் சமாதியில் காதை வச்சு டிக் டிக் சத்தம் கேட்குதான்னு செக் பண்றவங்க இருக்கும் வரையில் எத்தனை பேர் வேணும்னாலும் என் பெயரைப் பயன்படுத்தலாம்.

SeSenthilkumar

‘நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்’ என்று தனது மரணத்திற்காக மூகாம்பிகைக்கு நன்றி கூறுவார்!

ஆர்.ஆர்.உமா, நெல்லை

? எடப்பாடி பயோபிக் எடுத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் கேரக்டர்களில் யார் யார் நடிக்கலாம்?

எடப்பாடி பழனிசாமி-லொள்ளு சபா சாமிநாதன், ஓ.பன்னீர்செல்வம் - வேல.ராம மூர்த்தி, டி.டி.வி.தினகரன் - சச்சின் கெதேகர்.

ஜா.ஜெயசீலன்

எடப்பாடி பழனிசாமி -விஜயகுமார்ஓ.பன்னீர் செல்வம் - ராஜ்கிரண் டி.டி.வி.தினகரன் - ராதா ரவி.

ந.ஜெயபால், சென்னை

யார நடிக்க வச்சாலும், அவங்க அளவுக்கு நடிக்க முடியாது..!

danysang

எடப்பாடி-டெல்லி கணேஷ், ஓ.பி.எஸ். - நாசர், தினகரன் - விவேக்.

அவ்வை கே. சஞ்சீவி பாரதி, கோபி

இ.பி.எஸ் - ராஜ்கிரண், ஓ.பி.எஸ் - சிவா,டி.டி.வி - பார்த்திபன்.

gmuruganandi

எடப்பாடியாராக மோகன்லால்,ஓ.பி.எஸ்ஸாக மம்மூட்டி,டி.டி.வியாக பிரகாஷ்ராஜ்.

ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.

எடப்பாடி - நாஞ்சில் சம்பத், ஓபிஎஸ் - பழ.கருப்பையா, டிடிவி - கரு பழனியப்பன்!

பாலு இளங்கோ, வேலூர்.

இ.பி.எஸ் - சூர்யா, ஓ.பி.எஸ் - சித்தார்த்,டி.டி.வி - மாதவன். டைட்டில்கூட ‘ஆயுத எழுத்து 2’ன்னு வைக்கலாம்.

balasubramni1

இந்த மூன்று கேரக்டர்களையும் நம்ம விக்ரம் ஒருவரே நடிச்சிடுவார்.

RamuvelK2

இ.பி.எஸ் - மன்சூர்அலிகான், ஓ.பி.எஸ் - யோகிபாபு, டி.டி.வி - மயில்சாமி

ARiyasahmed7

? ‘நானும் விஞ்ஞானிதான்’ என்று நீங்கள் உணர்ந்த வினோதமான தருணம் எது?

பகல் பொழுதொன்றில் எறும்புகள் வேகவேகமாக மேடேறுவதைப் பார்த்து நண்பனிடம் மழை வரப்போகுது என்றேன். ‘எறும்புக்குத் தெரிஞ்சது நமக்குத் தெரியலையேடா’ன்னு வருத்தப் பட்டவனிடம் சொன்னேன், ‘எறும்புக்குத் தெரியும்னு நமக்குத் தெரிஞ்சிருக்கேடா, அது போதாதா?!’

SeSenthilkumar2

பள்ளிக்காலத்தில் புத்தகம் நடுவில் மயில் தோகையை வைத்தால் குட்டி போடும் என்று பலரும் சொன்ன நேரத்தில், அது குட்டி போடாது என்று சொல்லி நிரூபித்தபோது.

balasubramni10

பேட்டரியை நாவால் தொட்டு பவர் இருக்குன்னு கண்டுபிடிக்கும்போது... ஏதோ எடிசன் போல உணரலாம்.

manipmp3

எரியாத டியூப் லைட்டை லேசாகச் சுழற்றி எரிய வைத்தபோது குடும்பமே என்னை தாமஸ் ஆல்வா எடிசனைப் பார்ப்பதுபோலப் பார்த்தது.

pachaiperumal231

பாப்பாவின் ஹெலிகாப்டர் பொம்மை சரியாக ஓடாதபோது கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முன்னாடி நாலு தள்ளு, பின்னாடி நாலு தள்ளு தள்ளி ஓட வைத்தபோது.

vrsuba

தையல் மெஷின் ரிப்பேர் ஆச்சி... எங்க ஊர்ல இருந்து ரிப்பேர் கடை 20 கிலோ மீட்டர்... சுத்தி எடுத்து தையல் மெஷின் தலையிலே ரெண்டு வச்சேன்... இப்போ வரைக்கும் ரிப்பேர் இல்லாம ஓடிட்டு இருக்கு.

ananthi.ramakrishnan.

டேப் ரெக்கார்டரில் வரும் மோட்டாரைக் கழற்றி, அதில் காத்தாடி செஞ்சி சுத்த விட்டபோது.

kavimurugan3

ஒருமுறை ஆனந்த விகடன் ட்விட்டர் ஐடி ஹேக் ஆனபோது ‘விகடன் வாசகர் மேடை’ கேள்வியை விகடன் ட்விட்டர் ஐடிக்குச் சென்று தேடிப்பிடித்து முதல் ஆளாக பதிலளித்த தருணம்.

IamJeevagan

என் அப்பா செல்லை முழுவதுமாக சார்ஜ் போட்டுவிட்டு, அந்த பேட்டரியை எடுத்துச் சென்று, என் செல் பேட்டரி தீர்ந்தவுடன் போட்டுப் பயன்படுத்தியபோது.

SriRam_M_20

காதைக் கொஞ்சம் குடுங்க, ‘முதல்ல எனக்குத்தான் தெர்மாகோல் திட்டம் கனவுல வந்தது!’

பெரியகுளம் தேவா, திண்டுக்கல்

சிறு வயதில் பந்துகளைக் கால்களின் கீழே கட்டி, கங்காரு மாதிரி குதிச்சு குதிச்சே ஊர் விட்டு ஊர் போகலாம்னு முயற்சி செய்தபோது.

ச.பிரபு, குற்றாலம்

? சட்டசபை, நாடாளுமன்றம் எல்லாம் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் செயல்பட்டால் எப்படி இருக்கும்?

ஆன்லைனில் இருந்துகொண்டே வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதிர்க்கட்சிகள் அவையை அவமதிப்பு செய்ததாகச் சொல்லி அவரின் வீடியோவை ஆப் செய்வார்கள்.

RajaAnvar_5

ஆக்ரோஷ வெளிநடப்புக் காட்சிகளெல்லாம் காணாமல்போயிடும்!

அனன்யா,பொள்ளாச்சி.

அவைக்குறிப்பு எழுதறவங்க நிலைமைதான் பாவம். யார் சொல்றாங்கன்னு தெரியாம முழிப்பாங்க!

manipmp

அப்புறம் நாங்களும் ‘வோட் ஃப்ரம் ஹோம்’ தான். நாங்க மட்டும் இளிச்சவாயன்களா? வேகாத வெயில்ல வரிசையில் நின்னு ஓட்டு போட!

poonasimedhavi

ஸ்டாலின் சட்டை கிழியாமல் இருக்கும்

Senthil Mani

அன்புமணி ராமதாஸ்: ஏற்கெனவே அப்படித்தான் இருக்கேன்... ஓவர்... ஓவர்...

saravankavi0

‘அனைத்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு தினமும் 50 ஜிபி டேட்டா இலவசம்’ என்று அறிவிப்பு வரலாம்.

amuduarattai

அப்பாடா... புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான செலவு மிச்சம்..!

LAKSHMANAN_KL

அமைச்சர்கள் அனைவரும் முதல்வர், பிரதமரைப் பாராட்டிப் பட்டம் அளித்து வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் ட்ரெயின் விடுவார்கள்.

saravankavi7

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ‘போன் செய்தால் மக்களின் குறை தீர்க்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்ன குறையை போன் செய்து சொல்லலாம்?

? தேர்தலின்போது உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று சொல்லுங்களேன்...

? கமல், ஸ்ருதி, அக்ஷரா மூவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? காதல், நட்பு, தாய்ப்பாசம் - மூன்றுக்கும் உள்ள வித்தியாசங்களை சுவையான உதாரணங்களுடன் விளக்குங்கள்.

? வாசகர் கேள்வி : `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்குறது கிடைக்காது’ டைப்பில் இரு வரி ஜாலி பஞ்ச் சொல்லுங்கள். - ரியாஸ் அகமது

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com