Published:Updated:

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? டிரம்ப் இந்தியாவின் பிரதமரானால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் ?

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

? டிரம்ப் இந்தியாவின் பிரதமரானால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் ?

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? விஜய், அஜித் இருவரும் யாராவது ஒருவர் பயோபிக் படத்தில் நடிக்கலாம் என்றால் விஜய், அஜித் யார் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்கலாம்?

அஜீத் - திப்பு சுல்தான்.

விஜய் - பகத்சிங்.

sheriff.sheriff

அஜித் - எம்ஜிஆர்

விஜய் - ஜெமினி கணேசன்

பெ பாலசுப்பிரமணி, திண்டுக்கல்

விஜய் - அப்துல்கலாம்

அஜித் - நம்மாழ்வார்

pachaiperumal23

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விஜய்: நான் இப்போவும், எப்போவும் மகேஷ்பாபு பயோபிக்லதான் நடிப்பேன்.

pbukrish

அஜித் பைலட்ங்கிறதால, விங் கமாண்டர் அபிநந்தனாக நடிக்கலாம்.

RamuvelK

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

விஜய், அஜித் பயோபிக்கிலும்; அஜித், விஜய் பயோபிக்கிலும் நடிக்கலாம். இரு தரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாகப் பார்ப்பார்கள்.

ம.ஹர்ஷிகா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? டிரம்ப் இந்தியாவின் பிரதமரானால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் ?

காய்ச்சல் மாத்திரை அமெரிக்காவுக்குத் தரமுடியாதுன்னு மிரட்டியிருப்பார்.

அனுசுயா ஜி.வி., திருவரங்கம்.

வடிவேலுவைப் பின்னுக்குத் தள்ளி மீம்ஸ்களில் முன்னிலை வகிப்பார்!

San8416

ஒரு மோடிக்கே டவுசர் கிழியுது, டிரம்ப் பத்து மோடிக்கு சமம்.

ShivaRiviere

இந்தியாவில் இந்தியர்களுக்கே வேலைன்னு அறிவிப்பார்.

manipmp

ராகுல்காந்தி : ஒரு பேச்சுக்காவது நான் பிரதமரானால்னு கேள்வி கேட்குறாங்களா பாரு? கல்நெஞ்சக்காரங்க.

pbukrish

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

டெல்லி செங்கோட்டைக்கு சுண்ணாம்பு அடிச்சு வெள்ளை மாளிகை ஆக்கப்படும்.

CpsWriter

இப்பவே அப்படித்தான இருக்கு. ஆனா எங்கயாச்சும் மிரட்டி நமக்கு மாத்திரையெல்லாம் வாங்கித் தந்துருவாப்ல. தங்கமான மனுசன்.

Sowmya Red

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? ஊரடங்கு காலத்தில் பலவற்றை மிஸ் செய்திருப்பீர்கள். ஊடரங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் எதையெல்லாம் மிஸ் செய்வீர்கள்?

பகல் தூக்கம்

எஸ். மோகன், கோவில்பட்டி

வாரத்தின் ஏழு ஞாயிற்றுக் கிழமைகளையும் ரொம்பவே மிஸ் செய்வேன்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

கார்ட்ஸ் விளையாடி லேட்டாகத் தூங்கி

லேட்டாக எழுந்தது.

ஜெயா வெங்கட், கோவை

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

ஒரு நாளைக்கு 5 தடவை சாப்பிடுவதையும், ஓயாமல் தின்று தீர்த்த நொறுக்குத் தீனிகளையும்.

amudu.gurusamy

குடும்பத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து உண்ணுதல்.

S.சௌமியா, தேவனாங்குறிச்சி

தாயம் விளையாடுவது

Ntramesh_kpm

இருபது லட்சம் கோடியும் ஒரு கிலோ கொண்டைக்கடலையும்.

saravankavi

அப்படியெல்லாம் எதும் இல்லை பாஸ். எப்படா லாக்டௌன் முடியும் அந்தப் பரபரப்பான வாழ்க்கை வாழலாம்னு... I’m waiting

vrsuba

? ஓராண்டு ஆட்சி முடித்து மக்களுக்கு மோடி கடிதம் எழுதியிருக்கிறார். மோடி ஆட்சி குறித்து மக்களாகிய நீங்கள் நாலு வரியில் கவிதை எழுதுங்க, பார்ப்போம்.

பிறப்பது என்னவோ புதிய இந்தியாவே, ஆனால் பிரசவ வலி மட்டும் மக்களுக்கு..!

Thaadikkaran

எட்டுமணி அடித்தால் ஜீ உங்கள் ஞாபகம்

‘மன் கி பாத்’தில் வேண்டும் உங்கள் தரிசனம்

போதும் ஜீயே நீங்கள் நடத்தும் நாடகமே

ஏழை மக்களையும் கொஞ்சம் கவனிக்க வேணுமே..!

மயக்குநன்

உலகம் சுற்றும் வாலிபன்

உள்ளூர்கூட சுற்ற விடாமல்

கொரோனாவின் கோரத் தாண்டவம்

என்னத்த சொல்ல.

கு.ராஜசுவாதி ப்ரியா,

சென்னை

நாலு வரி எதுக்கு

இரண்டு வரி போதுமே

பதினைந்து லட்சம்

இருபது லட்சம் கோடி

சாதிக் காரைக்குடி

கறுப்புப் பணத்தை

கள்ள நோட்டை ஒழிக்க

பணமதிப்பு நீக்கம் என்றார்

இரண்டுமே ஒழியவில்லை

கொரானாவை ஒழிக்கக் கைதட்டினோம் மெழுகுவத்தி ஏந்தினோம்

இப்போ உலக அளவில் ஏழாமிடம்

எங்க ஜி ஆட்சியில்!

இளையநிலா

? ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆகியுள்ள ஜெ.தீபா தமிழகத்தின் முதல்வராகிவிட்டால் என்ன நடக்கும்?

இப்படிதான் மேடம் நாட்ல அவ்ளோ பிரச்னை, என்ன முடிவு சொல்றீங்க...

எனக்குத் தூக்கமா வருது, அப்புறமா பேசலாம்.

kaleeswaran_18

அதை மக்கள்தான் கூற வேண்டும்.

கு.ராஜசுவாதி ப்ரியா, சென்னை

தன் கணவர் மாதவன் அவர்களைத் துணை முதல்வராக நியமிப்பார் ஜெ.தீபா.

பாலசுப்ரமணி

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

வருங்காலப் பிரதமர் தீபாம்மா வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும்.

pachaiperumal23

ஜெயலலிதாவுக்கே அரசியல் கற்றுத்தந்தவர் தியாகத் தலைவி தீபாம்மாதான்னு அதிமுக தலைவர்கள் சட்டசபையிலே சொல்லி பெஞ்சைத் தட்டுவாங்க!

இளையநிலா

வெயில் குறைவான நாள்களில் மட்டுமே சட்டசபை நடக்கும்.

urs_venbaa

அம்மா உணவகங்கள் `பேபிம்மா உணவகம்’ எனப் பெயர் மாற்றப்படும்.

gmuruganandi

தீபா அம்மையாரின் ஆட்சியில் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து எதிர்ப்பார்.

vc.krishnarathnam

நாம் கொரோனாவை மட்டுமல்ல தீபாம்மாவையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்!

karthik.partee

“இருப்பீர்களா... நீங்கள் வீட்டுக்குள் இருப்பீர்களா...!”

ashoka.bharathi

வாசகர் மேடை: ஆப்கி பார் டிரம்ப் சர்க்கார்...

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ஆன்லைன் கிளாஸ் எடுக்க தமிழ் சினிமாவின் எந்த டீச்சர் சரியாக இருப்பார், ஏன்?

? அதிரடி அறிவிப்புகளால் ‘அடேங்கப்பா’ போட வைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சுயசரிதையைப் படமாக எடுத்தால் என்ன பெயர் வைக்கலாம்?

? 2020-ம் ஆண்டை ஒற்றை வரியில் விளக்குவதைப்போல ஒரு திருவாசகம் சொல்லுங்கள்...

? ஊர்ப்பெயர்களை மாற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு நல்ல பெயரை மாற்றிவைக்கலாம் என்றால் என்ன பேர் வைக்கலாம்?

? விக்ரம் - த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ஆளுக்கு ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுங்களேன்...

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism