? ‘பாட்ஷா’ கேரக்டரும் ‘வேலு நாயக்கர்’ கேரக்டரும் சந்தித்துக்கொண்டால் என்ன பேசுவார்கள்?
பாட்ஷா: நீங்க நல்லவரா கெட்டவரா?
வேலு: நீங்க நல்லவரா இருந்து நான் நல்லவன்னு நினைச்சா நல்லவன். நீங்க நல்லவரா இருந்து நான் கெட்டவன்னு நினைச்சா கெட்டவன். நீங்க கெட்டவரா இருந்து நான் நல்லவனா தெரிஞ்சா நான் கெட்டவன். நீங்க கெட்டவரா இருந்து நான் கெட்டவனா தெரிஞ்சா நான் நல்லவன்...
- saravankavi
வேலு நாயக்கர் : ஸ்டாலினை காப்பியடிக்கிறதை நிறுத்தச் சொல்... நான் நிறுத்தறேன். எடப்பாடியை காப்பியடிக்கிறதை நிறுத்தச் சொல்... நான் நிறுத்தறேன்!
பாட்ஷா: நல்லவேளை! நான் அரசியலுக்கு வரல... எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ... அரசியல்னா ஓடி ஓடி ஒளிஞ்சுக்கோ!
RamAathiNarayen
பாட்ஷா: ஏன் அப்படி குறுகுறுன்னு பார்க்கிறீங்க நாயக்கரே?
வேலு நாயக்கர்: எப்படி இந்த ‘கெட் அப்' விட்டுப் போச்சுன்னு பார்க்கறேன்!’’
KRavikumar39
பாட்ஷா: நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி.
வேலு நாயக்கர்: நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவைக்கு அப்புறம்தான் புரியும்.
krishmaggi
வேலு நாயக்கர்: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல...
பாட்ஷா: நான் ஏன் கட்சி தொடங்கலைன்னு நீங்களாவது புரிஞ்சுக்கிட்டிங்களே...
saravankavi
பாட்ஷா: நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...
வேலு நாயக்கர்: அப்புறம் ஏன் நீங்க ‘அரசியலுக்கு வருவேன், வரலே’ன்னு ஆயிரம் தடவை மாத்தி மாத்திச் சொன்னீங்க?!
valainghan?

காலையில் நிலாவும் இரவில் சூரியனும் உதித்தால் எப்படியிருக்கும்?
ஏ.ஆர்.ரஹ்மான் காலையில் இசையமைப்பார்.
SriRam_M_20
பகலிரவு டெஸ்ட் மேட்ச் இரவு பகல் டெஸ்ட் மேட்ச்சாகும். ஒன்டே மேட்ச் ஒன்நைட் மேட்ச்சாகும். நைட் வாட்ச்மேன் டே வாட்ச்மேன் ஆவார்.
h_umarfarook
திருமணப் பத்திரிகைகளில் திருமணம் இரவு 7 - 8 மணிக்குள் நடைபெறும் என்று அச்சடிக்கப் படும்.
balasubramni1
சூரியன்: விகடனாரே அங்க வச்சி இங்க வச்சி கடைசியில் என் தலையிலேயே கை வச்சிட்டீங்களே!
Kirachand4
‘நவராத்திரி’ பண்டிகை ‘நவபகல்’ பண்டிகை என்று கொண்டாடப்படும்.
krishmaggi
அடிக்கிற வெயிலுக்கு ராத்திரி மொட்டை மாடியில் தூங்க முடியாது.
pesumpadam123
பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களின் டிஆர்பி குறைந்து மத்தியானம் ஒளிபரப்பாகும் மெகாதொடர்களின் டிஆர்பி கூடும்.
balasubramni1
“Sir, நான் HALF NIGHT லீவுல போறேன்” என்ற விண்ண்ணப்பங்கள் வரும்.செல்போனில் DAY MODE என்று இருக்கலாம்...பகலில் பனி பெய்யக்கூடும். அந்தக் காலத்திலும் பகல் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள்...
AchariyaLenin
பெருசா ஒண்ணுமில்ல. ‘நைட்டாகிடுச்சு. இன்னுமா தூங்கிட்டு இருக்க? எந்திரி கிளம்பு’ன்னு அம்மா வந்து எழுப்பி டீ கொடுப்பாங்க.
blocked_one0808
முதலிரவு முதல் பகலாக மாறும்.
Seafart2011
நைட் ஷிப்ட் வேலை பார்க்கும் மக்கள், கால் சென்டர் மக்களுக்கு வசதியா இருக்கும்.
vivaaji

? ஆளாளுக்கு சசிகலாவை சந்திக்கிறார்களே, சசிகலாவை மோடி சந்தித்தால் என்ன பேசுவார்?
அப்ப... இனிமேதான் உண்மையிலேயே ‘தவ வாழ்க்கை' வாழப் போறீங்க போல..?!
LAKSHMANAN_KL
சசி: இவ்ளோ சீக்கிரம் பேரம் பேச வருவீங்கன்னு எதிர்பார்க்கலை...
மோடி: இப்ப வந்ததே லேட்டுன்னு நான் நினைக்கிறேன்.
tparaval
உங்களுக்கு ஆசீர்வாதம் பண்ற மாதிரி ஒரு போட்டோ ஷூட் எடுத்துக்கலாமா?
balasubramni1
“ஜெ. சமாதியில என்ன நினைச்சு சத்தியம் பண்ணுனீங்க? என்கிட்ட மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்!”
pachaiperumal23
உண்மையிலேயே அப்போலோவில் ஒரு இட்லி என்ன விலை?
IamUzhavan
சிறைவாசம் பத்தி `மன் கி பாத்'ல பேசலாம்னு இருக்கேன், உங்க அனுபவங்களைச் சொல்லுங்க சோட்டா மாதாஜி!
balebalu?
வாசகர் கேள்வி : பா.ஜ.க-வுக்குத் தாமரை. இதுபோல மத்த கட்சிகள் மலரைத் தேர்வு செய்தால் எந்தெந்தக் கட்சிக்கு என்னென்ன மலர்கள் பொருத்தமாக இருக்கும்?
காங்கிரஸ் - ரோஜா
கே.எம்.ரவிச்சந்திரன் மதுரை
தே.மு.தி.க - செந்தூரப்பூ
(இருக்கு ஆனா இல்லை என்பதுபோல கட்சியின் நிலை உள்ளதால்)
PG911_twitz
மக்கள் நீதி மய்யம் - ஹைபிஸ்கஸ் ரோஸா சைனென்சிஸ்... (என்ன, அரண்டு போயிட்டீங்களா? ‘செம்பருத்திப் பூ’வோட தாவரவியல் பெயர்தான் அது... கமல் எப்போதும் வித்தியாசமா சிந்திக்கிறவர் ஆச்சே... அதான்!)
LAKSHMANAN_KL
பாட்டாளி மக்கள் கட்சி - மாம்பூ
jerry46327240
அ.தி.மு.க - சின்னத்தாமரை.
amuduarattai
பா.ம.க - ஜாதி மல்லி
h_umarfarook1
தி.மு.க - சூரியகாந்திப்பூ
ramkianandh1
தனி ஒருவனாக ஆரம்பித்திருக்கும் அர்ஜுன மூர்த்தி கட்சிக்கு ‘ஒத்த ரோசா.’
Kirachand4
? நீங்கள் தேர்தல் ஆணையரானால் புதிதாக என்ன சீர்திருத்தம் கொண்டுவருவீர்கள்?
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சியை தகுதியிழக்கச் செய்வேன்.
ஸ்ரீதேவி , திண்டுக்கல்
ஓட்டுப்பதிவை இரவு 8 மணி வரை நீட்டிப்பேன்.
ஈஸ்வரிராஜ், திருச்சி
ஓட்டுக்குப் பணம் கொடுத்து பணத்த வீணாக்காம மொத்தமா என்கிட்ட கொடுங்க, அதிக பணம் தரவங்களை ஜெயிக்க வெச்சிடுறேன்னு சொல்வேன்.
YAADHuMAAGE
‘வோட் ஃப்ரம் ஹோம்’ சிஸ்டம்
balasubramni1
மத்திய அரசைக் கேட்டுச் சொல்றேன். வெயிட்!
valainghan
தேர்தல் அறிக்கையில ஒண்ணு சொல்லி அத ஆட்சி முடியுறதுக்குள்ள செய்யலன்னா, அந்தக் கட்சி அடுத்த 10 ஆண்டு தேர்தல்ல நிக்க முடியாத மாதிரி பண்ணுவேன்...
jega2weets
ஒரு தொகுதியில் நோட்டாவைவிடக் குறைவாக ஒரு கட்சி வாக்குகள் பெற்றால், அந்தத் தொகுதியில் அடுத்த முறை அந்தக் கட்சி நிற்க அனுமதி கிடையாது.
RamAathiNarayen
இரண்டு முறைக்கு மேல் யாரும் ராஜ்ய சபா எம்.பியாக இருக்க முடியாது, கட்டாயம் தேர்தலைச் சந்தித்தே ஆக வேண்டும் என்று சட்டம் போடுவேன்.
h_umarfarook
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் கட்சிகளுக்கு அரசாளும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும்.
KRavikumar39
‘ஒரே நாள் தேர்தல், மறுநாள் முடிவு’ என்று சீர்திருத்தம் கொண்டு வருவேன்.
Kirachand4
ஆளும் கட்சிக்கு ஆதரவாயிருந்து ரிட்டயர்டு ஆனதும் ஆளுநர் பதவிக்கோ ராஜ்யசபா எம்.பி பதவிக்கோ துண்டு போட்டு வைப்பேன்.
jerry46327240
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே ஒரு தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சட்டம் கொண்டு வருவேன்.
amuduarattai
தேர்தல் தேதி அறிவித்தவுடன் எல்லாச் செய்திச் சேனல்களும், மியூசிக் சேனல்களாக மாற்றப்படும்.
IamUzhavan
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,
அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com
? ஒருவேளை மக்கள் நீதி மய்யம் வெற்றிபெற்று கமல் முதல்வர், சரத்குமார் துணை முதல்வர் என்றால் என்னென்ன சட்டங்கள் வரும்?
? விஜய் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்தில் நடித்துவிட்டார். துப்பாக்கி சுடுவதில் பதக்கங்கள் வாங்கிய அஜித் ‘துப்பாக்கி-2’ நடித்தால் எப்படி இருக்கும்?
? நம் அரசியல்வாதிகளின் பிரசாரங்களில் இன்னும் என்ன நவீன உத்திகளைப் பயன்படுத்தலாம்?
? பெட்ரோல், டீசல் விலை குறைய ஜாலியான யோசனைகள் சொல்லுங்களேன்!
? யானை, புலி, சிங்கம் எல்லாம் பெட் அனிமலாக மாறினால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!