Published:Updated:

வாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

வாசகர் மேடை

வாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா!

வாசகர் மேடை

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டர் வேடத்தில் நம் ஹீரோக்கள் நடித்தால் யாருக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

சிம்பு : கொரோனாவுக்கு முன்னே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட மருத்துவர்.

SriRam_M_20

சூர்யா: பேசிக்கா நான் ஒரு டாக்டர்னு அடிக்கடி சொல்லி, கொரோனாவையே குழப்பலாம்.

manipmp

விஜய்சேதுபதி : இதற்குத்தானே ஊசிபோட்டாய் பாலகுமாரா.

krishmaggi

விஜயகாந்த்: மாநகர சுகாதாரம்.

urs_venbaa

வாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகார்த்திகேயன்: வருத்தப்படாத டாக்டர்கள் சங்கம்.

saravankavi

சத்யராஜ் : வைரஸுக்கே நான் வைரஸ்.

கு.ராஜஸ்வாதி ப்ரியா, சென்னை

உதயநிதி : கோவிட் இளைஞர் அணி மருத்துவர்.

SriRam_M_20

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? சினிமாவுக்கு ஓடிடி ஒரு மாற்று. ஐபிஎல்லுக்கு ஆளே இல்லாத மைதானம். அதே போல தேர்தலுக்கு எது மாற்றாக இருக்க முடியும்?

விர்ச்சுவல் ஓட்டளிக்கும் இயந்திரத்தின் மூலம் இணையம் வழியே தேர்தலில் மக்கள் வாக்களிக்கலாம்.

ஜெ.ஜான்சி சுப்புராஜ் ,கடலூர்

தேர்தலுக்கு மாற்று தேர்தலே இல்லாமப் பண்ணுறதுதான். இப்ப இருக்கிறவங்களே நிரந்தர பிரதமர், நிரந்தர முதல்வா்.

Elanthenral

என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு. சொன்னா உலகநாடுகள் காப்பி அடிச்சிரும். தனியா எலக்‌ஷன் கமிஷனர்ட்ட சொல்றேன்.

pachaiperumal23

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வீதியில் மருந்தடிப்பதுபோல் வீட்டுக்கே வோட்டிங் மெஷின் கொண்டு சென்று வாக்களிக்க வைக்கலாம்.

urs_venbaa

பிக் பாஸ் மாதிரி ‘ஆன்லைன் வோட்டிங்’ வைக்கலாம். தேர்தலே ஒரு எலிமினேஷன் ப்ராஸஸ்ஸா மாறிவிடும். மக்கள் எல்லோரும் கோடிக்கணக்குல ஓட்டு போடுவாங்க.

VijiKumaran1

தேர்தலுக்கு மாற்று தேதிய மாத்தி மாத்தி வைக்கறது. வேற மாற்றே இல்லைங்கோ!

MahaDV1610

வேட்பாளர்களுக்கு ஆன்லைனில் ‘நேஷனல் எலிஜிபிலிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாம்’, அதாங்க, ‘நீட்’ நடத்தித் தேர்வு செய்யலாம்..!

KLAKSHM14184257

‘யானைகிட்ட மாலை கொடுத்துப் போடச் சொல்லலாம்.’

krishmaggi

சுழற்சி முறையில் அனைத்துத் தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். எல்லாருமே சம்பாதிக்கட்டுமே, குடியா முழுகப்போகுது!

pachaiperumal23

பூத்தில இருக்கப்போறது யாரு... நம்மாளுங்க தான்.

JaNeHANUSHKA

சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. முழுவதும் மீண்டு விடுமென்ற நம்பிக்கையில் அதற்கு ஒரு பட்டப்பெயர் கொடுங்களேன்.

நமது சென்னை நலமான சென்னை.

ஆ.மாடக்கண்ணு

இந்த விவரம் நமக்குள்ளே இருக்கட்டும், வெளியே சொல்லிடாதீங்க.

Harshika.M கும்பகோணம்

சென்னைக்கு வெகு தொலைவில் கொரோனா.

என். பாக்கியலட்சுமி மதுரை

சென்னையை மீட்ட சுந்தரபாண்டியன்கள்.

balasubramni1

வாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா!

பனை மரத்தில வவ்வாலா...

சென்னைக்கே சவாலா...

pachaiperumal23

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா கொரோனா!

sudarvizhie

? மோடி அமெரிக்க அதிபரானால் என்ன நடக்கும்?

15 லட்சம் டாலர்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

இரு நாட்டு நட்புறவுக்காக அடிக்கடி இந்தியா வந்து போவார்.

N.RAMYA பெங்களூரு

உடனடியாக வெள்ளைமாளிகைக்கு `காவி பெயின்ட்’ அடிக்கப்படும்.

R. பாமா தேவி, தேனி

அமெரிக்க கரன்சி மதிப்பு இந்திய கரன்சி அளவுக்கு வந்துவிடும்.

yogbal_anima

அமெரிக்காவில் வளர்ச்சி இல்லாமல் போனதற்கு ஆப்ரகாம் லிங்கன்தான் காரணம் என்று சொல்லுவார்.

SriRam_M_20

இந்தியா தப்பிக்கும்.

advocatearuldev

நமக்கு விடுதலை கிட்டி.

mvigneshh

? உங்களுக்கு நிலாவுக்குச் சென்று வரும் அனுமதி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

நிலாவுக்குச் சென்று வருவேன்.

Mahiiofficial

திரும்பவும் பூமிக்கு அனுப்பமாட்டோம் என்று உறுதி தந்தால் மட்டுமே போவேன். ஊரா பாஸ் இது? யார பாத்தாலும் பேங்குல கொள்ளையடிக்கப் போறமாதிரி முகமூடி போட்டுத் திரியுறாங்க.

pachaiperumal23

‘நிலா அது வானத்து மேலே...’ என்ற பாடலை, ‘பூமி அது நிலவுக்குக் கீழே...’ அப்டீன்னு ஜனகராஜ் வாய்ஸில் நிலாவிலிருந்து பாட்டு பாடுவேன்.

altaappu

வந்திறங்கியவுடன் நிலாவில் கறி இட்லின்னு கதையை ஆரம்பிச்சுடணும்...

HariprabuGuru

‘நிலாவுல இருந்து வணக்கம் பங்குகளா...’னு அங்கேயிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப்ல ஸ்டேட்டஸ் போட வேண்டியதுதான். லைக்ஸ் பிச்சிக்கும்!

absivam

அந்தப் பாட்டிய தேடிக் கண்டுபிடுச்சி, நம்ம ஊருக்குக் கூட்டி வந்து ஓட்டல் ஆரம்பிச்சுடுவோம்ல...

வே.புனிதா, வேளாங்கண்ணி

என் மனைவியை நிலவுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒரு வாரம் வீட்டிலே சந்தோஷமாக இருப்பேன்! #என் பெண்டாட்டி நிலாவுக்குப் போய்ட்டா...!

absivam

தனியாக என்றால் வேண்டாமென்று சொல்லி விடுவேன்! இங்கே இருக்கும் என்டர்டெயின்மென்ட்கள் அங்கே கிடைக்காதே! அப்புறம் அமாவாசை அன்று இருட்டா வேற இருக்குமே.

h_umarfarook

நிலாவுக்கு மோடியை அழைத்துச் சென்று அங்கு வடை சுடுற பாட்டியிடம் ‘உங்களவிட அதிகமாக வடை சுடுறவரு இவர்தான்’ என்று அறிமுகம் செய்து வைப்பேன்.

SriRam_M_20

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: இட்லிக்கறி, வடை, நிலா!

? தோனியுடன் ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னாவின் பயோபிக் தமிழில் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம், யார் நடிக்கலாம்?

? இந்தியர்கள் மட்டும் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடிக்காமல் போயிருந்தால் என்ன நடந்திருக்கும்?

? விஜய்க்கு மகேஷ்பாபு கிரீன் சேலஞ்ச் டாஸ்க் கொடுத்ததைப் போல மற்ற எந்த நடிகர்களுக்கு என்ன சேலஞ்ச் டாஸ்க் கொடுக்கலாம்?

? ‘பா.ஜ.க வேட்பாளரை வெற்றிபெற வைத்தால் மாவட்டச் செயலாளருக்கு இனாவோ கார் பரிசு’ - பா.ஜ.க தமிழ்நாட்டுத் தலைவர் முருகன். பா.ஜ.க.வினர் இனாவோ வெல்ல ஆலோசனைகளை அள்ளி வழங்குங்களேன்!

? மதுரை இரண்டாவது தலைநகரானால் என்னென்ன நடக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com