Published:Updated:

வாசகர் மேடை: ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!

விகடன் டீம்HASSIFKHAN K P M
கார்த்திகேயன் மேடி

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதும் சிம்பு ஷூட்டிங் வருவதும் ஒன்றுதான். படம் எடுத்து முடித்த பிறகு பேர் வைக்கலாமே.

பிரீமியம் ஸ்டோரி

? ஆதாம் ஏவாளுக்குக் கிடைத்த ஆப்பிள் உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

ஒளித்துவைத்துவிடுவேன். வாழ்க்கை நிம்மதியாய் இருக்கும்.

S.கருணாகரன், சென்னை

சாறுபிழிந்து ஒரு ஸ்பூன் ஒரு சவரன் என விற்றுவிடுவேன்.

S சோமசுந்தரம், குளித்தலை.

விதை எடுத்து விவசாயம் பண்ணி ஆதாம் ஏவாள் வெரைட்டி ஒண்ண செம்மயா டிரெண்ட் பண்ணி மார்க்கெட் பண்ணிர வேண்டியதுதான்.

saraa_cbe

`சாத்தானே அப்பாலே போ’ன்னு தூக்கி வீசிருவேன்.

pachaiperumal23

ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!
ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!

மேல மெழுகு இருக்கான்னு செக் பண்ணுவோம்.

Lakshmivva1

அத கடிச்சிட்டே “ஈறுகளில் பிரச்னையா, உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா”ன்னு திரிஷா, காஜல், சமந்தா இந்த மாதிரி அழகான பொண்ணுங்க யாராவது வந்து கேட்பாங்களான்னு நினைச்சிட்டிருப்பேன்.

Ramesh46025635

? எல்லோரும் மொபைலில் மூழ்கிக் கொண்டிருக்கும் காலத்தில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்த என்ன செய்யலாம்?

புத்தகத்தை மொபைலுக்குள் திணித்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

பெ.பச்சையப்பன், கம்பம்

புத்தகங்கள் படித்துக் கணக்கு காட்டுபவர்களுக்கு மட்டுமே, மொபைல் வைத்துக்கொள்ள அனுமதி.

இள.மாலதி, கடலூர்

ஐந்து புத்தகம் வாங்கு பவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் மொபைலில் தள்ளுபடி தரப்படும்.

விஜயலட்சுமி

ஹெச்.ராஜாவோட அட்மின் மட்டும் புத்தகம் படிக்காதீங்க அப்டின்னு ஒரே ஒரு ட்வீட் போட்டால் போதும்!

sudarvizhie

புத்தகம் வாங்குபவர்களுக்கு, வருமான வரிச்சலுகை அளிக்கலாம்.

karthik_thinks

ஒரு புத்தகம் படித்தால் 1 GB data இலவசம் என அறிவிக்கலாம்.

ஜெ.ஜான்ஸி ராணி சுப்புராஜ், கடலூர்

மாணவர்கள் செய்தித்தாள், புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்! வாரம் ஒரு புத்தகம் படிக்கச் சொல்லி அதிலிருந்து எளிதான கேள்விகள் கேட்டு, சிறிய பரிசுகள் அளிக்கலாம்!

balebalu

2.0 பக்ஷிராஜனை விட்டு எல்லா மொபைலையும் தூக்கிட்டுப் போகச் சொல்லலாம்.

p_jegatha

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? கட்சித் தலைவர்களுக்கெல்லாம் அடைமொழிகள் இருக்கின்றன. கட்சிகளே இப்போது கார்ப்பரேட் கம்பெனிகளை நம்பியிருக்கும் நிலையில் ‘அரசியல் ஆலோசகர்’களுக்கு என்ன அடைமொழி கொடுக்கலாம்?

எலெக்ஷன் ‘கமிஷனர்.’

sudarvizhie

Political Fixer.

SowThanishka

சின்ன பகவதி,

manikandan

கிங்டம் மேக்கர்ஸ்

saravankavi

‘பஞ்ச தந்திரன்’

muthiah.kannan.7

கார்ப்பரேட் கிளி ஜோசியர்

enos.ibrahim

மந்திரி மேக்கர்

lalinama1

பொலிட்டிகல் ஹெச்.ஆர்

மலர்சூர்யா

பாலிட்டிக்ஸ் பீடியா

எம்.விக்னேஷ், மதுரை

சக்சஸ் சாணக்யன்ஸ்

(வெற்றி பெறாவிட்டால் பணம் வாபஸ்)

urs_venbaa

சப்வே சர்ஃபர்ஸின் ஸ்கோர் மல்ட்டிப்ளையரே!

vigneshmos

கட்சிகளின் ஹெட்கோச்

KayathaiS

? ஒரு பழைய படத்திலிருந்து ஜாலியான குறியீடு ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்லவும்.

அலை, காற்று, பறவை, இடி என அனைத்தும் தமது வேலையைச் செய்யாமல் நின்றுவிடுவதுபோன்ற காட்சி இருந்தால் ஹீரோ / ஹீரோயின் இறந்துவிட்டார்கள் என்பது குறியீடு.

subburu

வாசகர் மேடை: ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!

முதுகைக் காட்டி ஹீரோ குலுங்கினால், அவர் அழுவதற்கான குறியீடு அது!

எம்.சேவியர் பால், கோவை

கிராமத்திலிருந்து வரும் கதாபாத் திரத்தின் தலையில் வாழைப்பழத்தார் சுமந்து வருதல்!

கே.எம்.ரவிச்சந்திரன் மதுரை

காதல் பாடலில் முன் சீனில் காணாமல் போய் அடுத்த சீனில் பின்னால் வந்து நாயகியின் கண்மூடும் அல்லது தோள்தொடும் நாயகன்.

Elangovan

நாயகனின் அறையில் இருக்கும் புத்தகங்கள் அவரின் அரசியல் சித்தாந்தங்களை மறைமுகமாகக் கூறியது.

sriram_m20

ராஜ்கிரண் வேட்டிய பட்டாப்பட்டி டவுசர்க்கு மேல தூக்கிக் கட்டுனா சண்டை கன்பார்ம்டோய்!

karuppukullaa

முதலிரவுக் காட்சியில் பால் சொம்பு கீழே விழுந்து உருண்டால் முதலிரவு முடிந்துவிட்டது என அர்த்தம்.

Veenaa_ponavan

எல்லா முத்தக் காட்சிகளிலும் பூக்கள் மோதிக்கொள்வது...

Daarwinthehero

ஒரு படத்தில் ஒரு காட்சியில் சௌகார் ஜானகி வருகிறார் என்றால், ஏதோ அழுகை சீன் வரப்போகிறது என்பது குறியீடு.

புலாங்குழல் காற்றின் மொழிபெயர்ப்பு

`கிழக்குச் சீமையிலே’ படத்தில் நெப்போலியன் மீசை புலிவால்போல் இருக்கும். விஜயகுமார் மீசை அணில்வால்போல் இருக்கும். இதையே ராதிகா பாடும் பாடலில் “அணில்வால் மீசை கொண்ட அண்ணனே உன்ன விட்டுப் புலிவால் மீசைகொண்ட புருசனோடு போய் வரவா” என்று வைரமுத்து எழுதியிருந்தார்.

balasubramni1

அண்ணாந்து பார்த்து, சக்கரம் சுழல்வது போல் காண்பித்தால், ஃப்ளாஷ்பேக் வருவதன் குறியீடு.

vigneshmos

வயதான பெரியவர் சாகும்போது ஒரு பெட்டியைக் கொண்டு வரச் சொன்னால் ஹீரோவின் பிறப்பு ரகசியம் அதில் இருக்கு என்று குறியீடு!

balebalu

கடைசி வரைக்கும் ரஜினி அரசியலுக்கு வருவதாக ‘பாச்சா’ காட்டிக்கிட்டே இருப்பாரு என்பதன் நாசூக்கான குறியீடே ‘பாட்ஷா’ படத்தின் டைட்டில்..!

KLAKSHM14184257

? தனுஷை வைத்து மட்டுமே படங்கள் இயக்கும் வெற்றிமாறன், சிம்புவை வைத்துப் படம் இயக்கினால் என்ன டைட்டில் வைப்பார்?

வடமதுரை

எல்.எம்.மங்கை, சென்னை

பகாசூரன்

எஸ்.பத்மினி, சென்னை

‘அசுரன்’ - ‘வடக்கூரான போடணும்’

selvin.mjs

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதும் சிம்பு ஷூட்டிங் வருவதும் ஒன்றுதான். படம் எடுத்து முடித்த பிறகு பேர் வைக்கலாமே.

SowThanishka

வாசகர் மேடை: ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!

பிப்ரவரி 29

(எப்படியும் நாலு வருசத்தில் படம் வந்திடும்)

இளைய நிலா

வராத வாசல்

SriramMurugan20

எல்லோரையும் நோக்கி பாயும் தோட்டா

chitrasekar.lattu

சிங்கிள் பசங்க

Veenaa_ponavan

`மாநாடு’ மாதிரி வெற்றிமாறனின் `மன்றாடு’ எனப் பேரு வைக்கலாம்.

thangaraja85

நீங்க வந்தா மட்டும் போதும்!

pbukrish

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஒரு ஆப்பிள்... பல கேள்விகள்!

? எடப்பாடி ஆட்சியின் மூன்றாண்டுகள் - சிறுகுறிப்பு வரைக.

? உங்களுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை எது, ஏன்?

? ரியாலிட்டி ஷோ நடுவர்களின் அட்ராசிட்டிகளில் உங்களை எரிச்சலூட்டுவது எது?

? டிக்டாக் பற்றி ஒரு ஜாலி கவிதை சொல்லுங்க!

? இந்த ஹீரோ இந்த கேரக்டரில் நடிச்சா நல்லாயிருக்கும் என்று நீங்கள் யோசிப்பது யாரை, எந்த கேரக்டர், ஏன்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு