சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: 16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

சின்னத் தயாரிப்பாளர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நசுக்குது என்பதை ஒரு கார்ப்பரேட் கம்பெனி படமாக்குது.

? கமல், விக்ரம், சூர்யா மூவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்கள் மூன்று வெவ்வேறு கெட்டப்களில்... என்னென்ன கெட்டப்கள் யார் யார் போடலாம்?

கமல் : தாத்தா

விக்ரம் : அப்பா

சூர்யா : மகன்

poonasimedhavi

கமல்: ‘பேரழகன்' சூர்யாவின் கேரக்டர். விக்ரம்: அப்பு கேரக்டர்.சூர்யா: ‘16 வயதினிலே' கேரக்டர்

LAKSHMANAN_KL2

`சம்பூர்ண ராமாயணம்' படத்தை நவீனத் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக ராஜமவுலி டைரக்‌ஷனில் எடுக்கலாம். ராமராக கமல், லட்சுமணனாக சூர்யா, ராவணனாக விக்ரம்!

RamAathiNarayen

மாற்றான் மாறி ஒரு படம். பேரு ‘ஏமாற்றான்,’

மூணு பேரும் ஒட்டிப் பிறந்த மாதிரி...

ரொம்பப் புதுமையா இருக்கும்.அவங்க அவங்க மேனரிசத்த படம் முழுதும் காட்டினா கல்லா கட்டலாம்.

nanbanvela

சிவாஜி நடித்த தெய்வமகன் படத்தை ரீமேக் செய்யலாம். தந்தை வேடத்தில் கமல், செல்லப்பிள்ளை சூர்யா, இன்னொரு முக மகனாக விக்ரம்.

valarselvan

கமல் : Captain America

விக்ரம் : Iron Man

சூர்யா : Spiderman

AjithSkit

வாசகர் மேடை:  16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

? தமிழ்சினிமாவில் கார்ப்பரேட் கம்பெனிகள் பற்றிய கதைகள் போரடித்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்து வித்தியாச ஒன்லைன் சொல்லுங்களேன்!

ஒரு கார்ப்பரேட் கம்பெனியோட பலம், பலவீனம் இன்னொரு கார்ப்பரேட் கம்பெனிக்குத்தான் தெரியும். இதை வெச்சே `வெச்சி' செய்றார் கார்ப்பரேட் ஹீரோ!

பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

சின்னத் தயாரிப்பாளர்களை கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நசுக்குது என்பதை ஒரு கார்ப்பரேட் கம்பெனி படமாக்குது. அந்தப்படத்தை ஃபிளாப்பாக்கிட்டா அந்த கம்பெனி க்ளோஸ். அதுக்கு ஹீரோ போடும் பிளான் தான் கதை.

சென்னிமலை சி.பி. செந்தில்குமார்

வாசகர் மேடை:  16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

? செலவே இல்லாமல் கோடை வெயிலை சமாளிக்க சில ரகளை ஐடியாக்கள் ப்ளீஸ்?

ரெண்டே ரெண்டு வெள்ளரித் துண்டுகளை வெட்டி கண்ணுல வச்சுக் கலாம்... ‘ஐஸே' குளிர்ந்தி டுச்சுன்னா, கோடை வெயிலெல்லாம் ஜூஜூபி..!

LAKSHMANAN_KL

நித்யானந்தாவிடம் சொல்லி சூரியனைக் கோடைக்காலம் முடியும் வரைக்கும் வராமல் நிறுத்தி வைக்கச் சொல்லலாம்.

saravankavi5

செல்லூர் ராஜூ ~ வானத்துக்கும் ஒரு தெர்மாகோல் போட்டு மூடிட்டா வெயில் வராது, பூமி எப்பவுமே குளிர்ச்சியா இருக்கும்.

saravankavi

அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை சட்டையைத் தண்ணீரில் நனைத்து அப்படியே போட்டுக்கலாம்.

RahimGazzali

நகைக்கடையில் டிசைன் பார்த்துப் பார்த்து நேரத்தைப் போக்கிவிட்டு, கேஷ் எடுத்துட்டு வருவதாகச் சொல்லி நழுவிடலாம். ஏ.சி மட்டுமல்லாமல் குளிர்பானமும் கிடைக்கும்.

ARiyasahmed

ஃபிரிட்ஜுக்குள்ள கொஞ்ச நேரம் படுத்து எழுந்துக்க வேண்டியதுதான்.

chennappan

இதைவிட சூடாக இருக்கும் ராஜஸ்தான் மாதிரி இடங்களுக்குப் போய் இரண்டு மூன்று நாள்கள் இருந்துவிட்டு வந்தால், இங்கேயே பரவாயில்லை என்று சமாளித்துவிடலாம்!

sarathitup40

ஒரு கூலிங் ‘வாட்டர் பாக்கெட்டை’ தலையில ஒரு தொப்பிக்குள்ள மறைச்சு வச்சுக்கிடலாம்.

krishmaggi9

ஏதாவது ஒரு கார்ப்பரேட் ஹாஸ்பிடல் வெயிட்டிங் ஏரியால போய் உட்கார்ந்துவிடலாம்!

San84166

‘அந்நியன்’ பட சார்லி போல பூங்கா ஒன்றின் மரத்தடியில், ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகலாம்!

absivam5

வாசகர் மேடை:  16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

? இந்தத் தேர்தல் பிரசாரத்தில் நீங்கள் அதிகம் மிஸ் செய்தது எது?

கலைஞரின் கணீர்க் குரலும், `அம்மா'வின் இரட்டை இலை காட்டும் விரலும்!

RamAathiNarayen3

தங்கபாலு & ஹெச்.ராஜா... ‘தமிழ் மொழிபெயர்ப்பு'!

BaaluElango2

விஜயகாந்தின் தேர்தல் பிரசாரத்தை.

SriRam_M_205

ஜெ. பாணியில் இம்முறை ‘மோடியா, எங்கள் டாடியா’ என உதயநிதி பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்திருந்தேன்.

IamUzhavan

எல்லாத்தையும்தான் மிஸ் பண்றேன்... பின்னே, எலக்‌ஷன் டூட்டி பார்க்கச் சொன்னா எப்படிய்யா அதெல்லாம் பார்க்க முடியும்...?

saravankavi6

‘இப்ப இல்லேன்னா...எப்பவும் இல்லை’ன்னு சொன்ன இன்னொரு முதலமைச்சர் வேட்பாளரின் பிரசாரத்தை மிஸ் பண்ணிட்டோம்.

poonasimedhavi5

வாசகர் மேடை:  16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

? எதிர்காலத்திற்கு டைம் ட்ராவல் செய்து அங்கிருந்து ஒரே ஒரு பொருளை எடுத்துக்கொண்டு திரும்ப நிகழ்காலத்திற்கு வந்துவிடலா மென்றால் உங்களின் சாய்ஸ் எந்தப் பொருள்?

சாலை, விண்வெளி இரண்டிலும் பயணம் செய்யும் டூ இன் ஒன் பறக்கும் பைக்.

ayyan.aar.

வீட்டுக்கு வீடு பிபி, சுகர் மாத்திரையோடு இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தடுப்பு மாத்திரை.

PG911_twitz7

அந்த நேரத்துல ட்ரெண்டிங்ல இருக்கும் மொபைல் போனைக் கொண்டு வந்துடுவேன்...இப்ப இருக்குறவங்களுக்குக் காட்டி வெறுப்பேத்தலாம்!

YAADHuMAAGE

என்னோட பேரக்கு ழந்தைகளை இப்பவே கூட்டிட்டு வந்து வரப்போற லாக் டௌன்ல கொஞ்சி விளையாடணும்.

poonasimedhavi0

ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனின் தீர்ப்பு.

pachaiperumal

ஐபிஎல் கோப்பை : ஆர்சிபி எந்த வருஷம் கப் வாங்கியிருக்கிறதுன்னு பார்க்கத்தான்.

balasubramni1

ஆயிரம் ரூபாய் நாணயம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டு.

chennappan10

உதயநிதி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில், துரைமுருகன் கண் கலங்க, பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவி ஏற்கும் வீடியோ.

JaNeHANUSHKA

காஞ்சனா பார்ட் - 10 சிடி.

chennappan

இறந்தவர்களை உயிர்ப்பிக்க ஏதேனும் கண்டுபிடித்திருந்தால் இறந்த அப்பாவை மீட்டு அழைத்து வருவேன்.

MUBARAKAM

ஆனந்த விகடன் இதழ். வாசகர் மேடையில் கேட்கிற கேள்விகளுக்கு இப்போவே பதில்களை எழுதி வச்சிக்கலாம்...

Arun_Ramadassan

எனக்கு நண்பர்கள் அடிக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.

ARiyasahmed0

நிலாவில் இடம் வாங்கி மங்களகரமான நாளில் பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை.

PG911

மே 3, 2021 கமல் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறாரா, ‘பிக்பாஸ்’ ஷூட்டிங்கில் இருக்கிறாரா, எம்எல்ஏ பதவியேற்பில் இருக்கிறாரா என்று பார்த்து, அவருடன் ஒரு செல்ஃபி! (போன் பிடுங்கி எறியப்படாமல் இருக்கும் பட்சத்தில்!)

JaNeHANUSHKA

என்னோட பூத் சிலிப். என்னோடத மட்டும் பய புள்ளைக கண்ணுலயே காட்டமாட்றானுவ.

சையது இப்ராகீம்.யா. புதுக்கோட்டை

அப்போதைய நடிகர் விஜய்யின் தமிழக மந்திரி சபை பட்டியல்.

jerry

டைம் மெஷின்ல போய் நூறு ஆண்டுகள் கழித்து வரும் ஆனந்த விகடன் புத்தகம் வாங்கிட்டு வந்திருக்கேன் சார். அதுல வாசகர் மேடை பதிலுக்கு ரூபாய் 25,000/- பரிசு கொடுப்பதாக அறிவித்திருக் கிறார்கள் விகடனாரே!

Kirachand4

வாசகர் மேடை:  16 வயதினிலே அபூர்வ பேரழகன்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ‘போட்டோ எடுக்கிறேன் பேர்வழி’ என உங்கள் நண்பர்கள் உங்களைப் படுத்தி எடுத்த ரகளை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

? ஓடிடியில் ஒளிந்து கிடக்கும் பல மொக்கைப் படங்களைப் பார்த்துவிடாமல் இருக்க ஒரு ஜாலி ஐடியா சொல்லுங்கள்.

? திரைக்கதை எழுதியுள்ள ரஹ்மான், படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தால் அவர் என்ன வேடங்களில் நடிக்கலாம்?

? கொரோனாத் தடுப்புக்கு வித்தியாசமான விழிப்புணர்வு வாசகம் சொல்லுங்களேன்.

? கமலின் ‘விக்ரம்’ ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதுவரை போடாத ஒரு கெட்டப்பை இதில் அவர் போடலாம் என்றால் உங்களின் சாய்ஸ் என்ன கெட்டப்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com