Published:Updated:

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

வாசகர் மேடை

? அரசியல் தலைவரின் கதையை பயோபிக்காக எடுப்பதென்றால் யாருடைய பயோபிக்கில் எந்த நடிகர் நடிக்கலாம்?

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பயோபிக்கில் நிழல்கள் ரவி நடிக்கலாம். இருவரின் தோற்றமும் பொருந்திப்போகும்.

ப.இராஜகோபால், மன்னார்குடி.

தொல் திருமா - விஜய் சேதுபதி

V.அனுமிதா, சென்னை

மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ். வாட்டசாட்டமான உருவம். அகன்ற மார்பு.

எஸ். மோகன், கோவில்பட்டி

ஓபிஎஸ்-க்கு வேல ராமமூர்த்தி... முதலமைச்சர், தர்மயுத்தம், துணை முதல்வர் என எல்லா ரோலும் வெளுத்து வாங்குவாரு.

Ntramesh_kpm

தலைவி ஜெ.தீபாம்மா பயோபிக்கில் மதுவந்தி நடித்தால் அருமையாக இருக்கும்!

Prabacurren

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மோடியாகக் கமல் நடிக்கலாம். கமல் படத்தில் போட்ட கெட்டப் அளவிற்கு மோடி இந்த ஆறு வருடத்தில் போட்டிருப்பார்! (அவ்வை சண்முகி வேடத்தைத் தவிர)

h_umarfarook

யோகி ஆதித்யநாத் : ஹாலிவுட் நடிகர் வின் டீசல்

forgjeryda

ப. வளர்மதியின் பயோபிக்கில் நடிகை வடிவுக்கரசி நடித்தால் நன்றாக இருக்கும்.

@poonasimedhavi

எடப்பாடி பழனிசாமி பயோபிக்கில் காளி வெங்கட் நடித்தால் பக்காவாக இருக்கும்.

@IamJeevagan

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

? தமிழுக்கென ஒரு ஓடிடி சேனல் வந்தால் அதற்குத் தமிழிலே என்ன பெயர் சூட்டலாம்?

தமிழாலயம்

கே.கருணாநிதி

தமிழ் என்றே சூட்டலாம்.

Brammahbal

சாமிங்கற பேரையே வைங்க. எந்த சாமியா, அட நம்ம எடப்பாடி பழனிசாமிங்க..!

Absivam

‘வலைதிரை’ என்று வைக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் ‘ஓடிடி’ என்ற வார்த்தைக்கு தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்க வேண்டும்.

Vijikumaran1

ஓகோ ஓடிடி!

ஓகோ புரொடக்சனின் அடுத்த அவதாரம்... ஓகோன்னு வரும்!

Probacurren

௨௪×௭

24×7-ஐத்தான் தமிழ் எழுத்துக்களா எழுதிடலாம்!

Absivam

நேரங்கடத்தி

Nanbanvela

எண்ணத்திரை

Rajusundararaja

ஊர் பெயரை மாற்றி அழகு பார்த்த எங்க முதல்வர் சாமி எடப்பாடியாரைக் கலந்து ஆலோசிக்கவும்.

bharathi.neeru

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

? உங்க வாழ்க்கையில் மறக்கவே முடியாத காமெடி சம்பவம்னு எதைச் சொல்வீங்க? (ரொம்ப சுருக்கமா)

ஆங்கில தினசரியில் முகவரியுடன் வெளியான என் கடிதத்தைப் பார்த்து, என்னைப் பெண் என நினைத்து ஒருவர் உருகி உருகிக் காதல் கடிதம் அனுப்பியது.

வன்னி தங்கம் ராதா, மதுரை

என் தங்கை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவரின் கணவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். என் மகனின் திருமணத்திற்குப் பெண் தேடியபோது இருதரப்பிலும் விவரம் தெரியாமல் அவரின் பெண்ணது ஜாதகத்தையே வாங்கிப் பொருத்தம் பார்த்தது வேடிக்கை.

க. ரவீந்திரன், ஈரோடு

ஏழாவது படிக்கும்போது ஆப்பிரிக்கா பற்றிய பாடத்தில் அங்கே ஆண் யானைக்கும் தந்தமுண்டு பெண் யானைக்கும் தந்தமுண்டு என ஆசிரியர் சொல்ல, “அப்போ எப்படி சார் எது ஆண் யானை எது பெண் யானை எனக் கண்டுபிடிப்பாங்க” என நான் கேட்க, வகுப்பே கொல்லெனச் சிரித்தது!

இளையநிலா

பக்கத்து வீட்டுப் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்குப் பார்க்கப் போக ஹார்லிக்ஸ் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.வாங்கும்போது கவனக்குறைவா இருந்திட்டேன்.அங்க போய் குடுக்கும்போது பார்த்தால் Mother horlicks. அசடு வழியச் சிரிச்சேன்.

Manipmp

அப்போதான் கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டிருந்தேன். எம்.எஸ்.வேர்டில் டைப் செய்துகொண்டே பக்கத்தின் கடைசி வந்ததும் கற்றுத்தருபவரிடம் பதறிப்போய் “மேடம், பக்கம் தீரப்போகிறது’’ என்று சொன்னதைக் கேட்டு வகுப்பே சிரிப்பாய் சிரித்தது.

Saravankavi

? பெண்கள் மனதைக் குறிப்பிட கடல் தொடங்கி ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. ஆண்மனதை என்ன சொல்லிக் குறிப்பிடலாம், ஏன்?

ஆண் மனதைச் சுரங்கத்தோடு ஒப்பிடலாம்.எக்கச்சக்கமான விஷயங்கள் இருக்கும். தோண்டி எடுக்கும் சாமர்த்தியம் இருந்தால் அவர்களின் எண்ணங்களை வெளிக்கொணரலாம்.

விசாலாட்சி நடராஜன், மும்பை

ஆண் மனதை அலையோடு ஒப்பிடலாம்.உணர்ச்சிகள் மகிழ்ச்சியோ, கோபமோ எதுவானாலும் அலைபோலச் சீறி ஆர்ப்பரித்து எழுந்து வந்து அடித்துவிட்டு ஓய்ந்துவிடும்.

மீனலோசனி பட்டாபிராமன், சென்னை

கழுதை - குடும்ப பாரம் எவ்ளோ இருந்தாலும் தாங்கிக்கொண்டு சுமக்கும் அந்த குணம்!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

நடிகன். அழணும்போல இருக்கும்போது கோபப்படுவான். கோபம் வரும்போது சிரிச்சுட்டுப் போயிடுவான்.

@corona_tweeter

ஆண் மனசு உப்புமா மாதிரி. யாருக்குப் பிடிக்கும் யாருக்குப் பிடிக்காதுன்னு கண்டுபிடிக்கவே முடியாது. ஆனாலும் பசியை இன்ஸ்டன்டா தீர்க்கும்.

@IamUzhavan

பல பேருக்கு கவுண்டமணிகிட்ட அடிவாங்கற செந்தில் மாதிரியே, எப்பவுமே பயந்துகிட்டே இருக்கும்.

Nanbanvela

அது ஒரு குப்பைத் தொட்டி யுவரானர். எல்லாமும் அங்க கொட்டிக் கிடக்கும்.

Thaadikkaran

ஒயிட் போர்டு

யார் வேணாலும் எதை வேணாலும் எழுதலாம்.

Vrsuba

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

ஓ.பி.எஸ் மாதிரி தர்ம யுத்தம் நடத்தும்,

தேவைப்படும்போது பேசி ஹெலிகாப்டர் வாங்கும், எல்லாரும் தோத்தாலும் மகனை ஜெயிக்க வைக்கும், அசிங்கப் படுத்தினால் “எதையும் தாங்கும் இதயம்’’னு சொல்லும், சும்மா இல்லை, எவ்ளோ கஷ்டம்!

Prabhu65290

கமலோட டுவிட் மாதிரி குழப்பமா இருக்கும். ஆனால் ஆழ்ந்து படித்தால் அர்த்தம் பொதிந்ததாய் இருக்கும்.

Pachaiperumal23

ஆணின் மனசு மோடியின் அறிக்கை மாதிரி, வெறும் வாய்ல வடை சுடும், ஆனா காரியம் ஏதும் நடக்காது.

Cps writer

? உதயநிதி ஸ்டாலினும் ஓ.பி.ரவீந்திரநாத்தும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

தர்மத்தின் கலைஞன்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்

இணைந்த எதிர் துருவங்கள்

சிம்மன், ஹைதராபாத்

அரியாசன ஆசை

S. விஜி கண்ணதாசன், சென்னை

வணக்கம்டா மாப்ள பாராளுமன்றத்திலிருந்து

balasubramni1

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

டேட் பாய்ஸ் (Dad Boys) - பேட் பாய்ஸ் இருக்கும்போது டேட் பாய்ஸ் இருக்கக் கூடாதா?

San8416

இப்படி இருந்த நாங்க எப்படி ஆகிட்டோம்!

pbukrish

ஒரு கல்வெட்டு ஒரு கண்ணாடி

Thaadikkaran

எல்லாமே என் அப்பாதான்

urs_venbaa

மூன்றாம் கலைஞரும் இரண்டாம் பன்னீரும்

@h_umarfarook

சன்ரைஸ் காபியும்

பன்னீர் சோடாவும்

Adhirai Yusuf

வாசகர் மேடை

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஒரு கல்வெட்டு, ஒரு கண்ணாடி!

? 2020-ம் ஆண்டுக்கு ஒரு பெயர் சூட்டுவது என்றால் என்ன பெயர் சூட்டுவீங்க?

? கொரோனா பிரச்னை முடிந்து அதைப் படமாக்கினால், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டராக யாரை நடிக்க வைக்கலாம்?

? இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம்?

? கொரோனாவுக்கு வாய் இருந்தால் அது இந்தியர்களிடம் என்ன சொல்லும்?

? உதயநிதி இயக்கத்தில் ஸ்டாலின் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com