Published:Updated:

வாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

23ஆம் புலிகேசி வடிவேலு கேரக்டரில் சந்திரபாபு. பாடிலாங்வேஜில் பின்னுவார்!

வாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்

23ஆம் புலிகேசி வடிவேலு கேரக்டரில் சந்திரபாபு. பாடிலாங்வேஜில் பின்னுவார்!

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

?? வாசகர் கேள்வி: மறைந்த தமிழ் ஹீரோக்கள், இன்றைய இளம் ஹீரோக்களின் எந்தெந்தப் படங்களில் நடிக்கலாம், ஏன்..?! - லஷ்மணன்

ஜெமினி கணேசனை சிம்புவின் `மன்மதன்' படத்தில் நடிக்க வைத்தால் ஒரு புதுப் பரிமாணம் கிடைக்கலாம்! - Kozhiyaar

‘மாஸ்டர்’ படத்தில் வாத்தியாராக எம்.ஜி.ஆர் அவர்களும் பவானியாக சிவாஜி அவர்களும் நடித்தால் கனகச்சிதமாகப் பொருந்தும். - Kumar47652390

விக்ரம் நடித்த `அந்நியன்' படத்தில் தியாகராஜ பாகவதரை நடிக்க வைக்கலாம்.அவரது ஹேர் ஸ்டைல் அட்டகாசமாகப் பொருந்திப்போகும்..! - LAKSHMANAN_KL

கார்த்தியின் `பையா' படத்தில் நடிக்க இளமை அழகு நடிப்பு துடிப்புடன் `காதலிக்க நேரமில்லை' படத்தில் ஜொலித்த நடிகர் ரவிச்சந்திரனே பொருத்தமாய் இருப்பார். - Kirachand4

`நம்பர் 1' நடிகை நயன்தாரா நடித்த `கோலமாவு கோகிலா' படத்தில் `நடிப்பில் நம்பர் 1' நடிகையர் திலகம் சாவித்திரி நடிப்பதுதான் பொருத்தம். - Kirachand4

23ஆம் புலிகேசி வடிவேலு கேரக்டரில் சந்திரபாபு. பாடிலாங்வேஜில் பின்னுவார்! - sarathitup4

துப்பறிவாளன்! `தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்' என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான ஜெய்சங்கரைவிடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்..?! - LAKSHMANAN_KL

வாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்

? கள்ள ஓட்டு, கள்ள நோட்டு - ஜாலியான வித்தியாசம் சொல்லுங்களேன்!

கள்ள நோட்டிற்கு எல்லா நாளும் வேலை நாள் தான். கள்ள ஓட்டிற்கு அந்த ஒருநாளே வேலைநாள். - jerry

கள்ள ஓட்டு: வாக்காளர் அட்டையில் இருக்கும் போட்டோ தெளிவில்லாமல் இருக்கவேண்டும்.
கள்ள நோட்டு: ஒரிஜினல் போல மிகத் தெளிவாக இருக்கவேண்டும். - IamUzhavan

கள்ள ஓட்டு போட மணிரத்னம் படம் மாதிரி மெதுவா போகணும். கள்ள நோட்டை மாற்றியதும் ஹரி படம் மாதிரி வேகமாக நடக்க வேண்டும். - balasubramni1

இரண்டுக்குமே மையும் பொய்யும் தேவை, இதுல என்ன வித்தியாசம்! - Pachaicumbum

கள்ள ஓட்டு - போட்டுட்டா ஜெயிக்கலாம்.கள்ள நோட்டு - மாத்திட்டா கொழிக்கலாம். - sanfancy1/status

ஆளிடம் மாத்துனா கள்ள நோட்டு;ஆளையே மாத்துனா கள்ள ஓட்டு. - sanfancy1

கள்ள ஓட்டு: எவன் வேணும்னாலும் போடுவான்.

கள்ள நோட்டு: எவன் கண்டுபுடிச்சாலும் நம்பள போடுவாங்க. - raja_varman1

? மிஷ்கின், செல்வராகவன் வரை பேய்ப்படம் எடுத்துவிட்டார்கள். ஷங்கர் பேய்ப்படம் எடுத்தால் அதன் ஒன்லைன் என்னவாக இருக்கும்?

அதான் ஆல்ரெடி 2.0-ன்னு ஒரு பேய்ப் படம் எடுத்துட்டாரே... பக்‌ஷிராஜா அதில பேயாதான வருவாரு. போய்ட்டு வேற கேள்வி கொண்டு வாங்க நண்பா. - nightMare_Tn

மிருகனஜம்போஸ்தய கும்பிபாகம முந்திரிபகோடா. - drcnpkaran

ஒரு தேசத்தில் தலைவிரித்தாடும் பேயை ஒழிக்க எந்திரனை அனுப்புகிறார் விஞ்ஞானி. கடைசியில் எந்திரனும் தோற்றுப்போய் வருகிறது. அது ஊழல் பேய்! - Rajkumarvee

கல்லறை கட்டுனதுல ஊழல் என்பதால் இடுகாடு பூட்டப்படுறதால ஒரு பொணத்த புதைக்க முடியாமப்போயிடுது. ஊழலுக்குக் காரணமானவங்கள அந்தப் பேயே எந்திருச்சி வந்து கொன்னுட்டு ஜப்பான்ல நல்ல பூஞ்சோலையோட இருக்குற கல்லறைக்குப் போய்ப் படுத்துக்குது. - nilaavan

ஒரு கதாசிரியரின் கதையை ஒருவர் திருடிப் படமெடுக்க, இதனால் மனமுடைந்த அந்தக் கதாசிரியர் தற்கொலை செய்துகொண்டு, ஆவியாக மாறி அந்த இயக்குநரை மிரட்டி, அந்தப் படம் ஓடும் தியேட்டர்களில் யாரையும் வரவிடாமல் செய்கிறார். இயக்குநர் என்ன செய்தார் என்பதே க்ளைமாக்ஸ். - RahimGazzali

அநியாயத்தைத் தட்டிக் கேட்கும் ரோபோ ஒன்றை வில்லன்கள் டிஸ்மேண்டில் பண்ணிடறாங்க... அந்த ரோபோ ஆவியா மாறி வில்லன்களைப் பழிவாங்குது..! - LAKSHMANAN_KL

ஒன்லைன் என்னவா இருக்கும்ன்னு தெரியல ஆனா பேயை பிரமாண்டமா காட்ட ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். - rajuashokmedl

பேய் வந்து கறுப்புப் பணத்தையெல்லாம் திருடி, இல்லாதவங்களுக்கு உதவி செய்யும். - Vijayak156

? சீட்டு வாங்க இவ்ளோ கஷ்டப்படும் காங்கிரஸ் அடுத்த தேர்தலிலாவது ஆட்சியைப் பிடிக்க என்ன செய்யலாம்? யோசனைகள் சொல்லுங்களேன்!

எல்லாக் கஷ்டமும் பட்டுட்டேன். இனிமே கஷ்டப்பட எதுவும் இல்ல. இப்படிக்கு, ராகுல் காந்தி. - RajaAnvar_

சட்டை மடிப்பு கலையாமல் சரித்திர வெற்றியைப் பெற முடியாது என்பதை அவர்கள் முதலில் உணர வேண்டும். - PG911_twitz

மீ - உங்க கட்சி ஆட்சிக்கு வர எங்க கிட்ட நெறைய ஆலோசனை இருக்கு, சொல்லட்டுமா?

காங்கிரஸ் - பரவாயில்லை சொல்லுங்க, எங்களுக்குக் கடைசி பஸ் பத்து மணிக்குத்தான். - SowThanishka

நிறைய யோசனைகளைச் சொல்லலாம்தான், ஆனா எல்லாத்தையும் கேட்டுட்டு `அதுவா கிடைக்கும்’ன்ற நினைப்புலதான் காங்கிரஸ் கட்சியினர் இருப்பாங்க...! - saravankavi

சின்னத்தை `மாவுக்கட்டு போட்ட கை’ என்று மாற்றியமைக்கலாம். அனுதாப அலையில் ஆட்சிக்கு வந்திடலாம். - PG911_twitz

விகடனில் இந்தக் கேள்வி வந்த நாள் முதல், மணிசங்கர் ஐயர் நான் ஸ்டாப்பாகச் சிரிக்கிறாராம்...! - BaaluElango

எத்தனையோ கிரிக்கெட் வீரர்களை பி.ஜே.பி தன் கட்சில் சேர்க்குது. தல தோனியை மட்டும் காங்கிரஸ் சேர்த்தால் போதும். - balasubramni1

நடிகர் செந்தில் பா.ஜ.க-வில் சேர்ந்துவிட்டார். அவருக்குப் போட்டியா நம்ம `கவுண்டமணியை' காங்கிரஸில் சேர்த்தார்கள் என்றால் ஆட்சியைப் பற்றி யோசிக்கலாம். - IamJeevagan

வாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்

? அரசியலில் கூட்டணி சேர்ந்துள்ள கமல்ஹாசனும் சரத்குமாரும் சினிமாவில் சேர்ந்து ஒரு படம் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

அத்தனைக்கும் ஆசைப்படுவோம் - eromuthu

விருமாண்டியும் சாமுண்டியும் - jerry46327240

மூன்றாம் பாறை - BaaluElango

உனக்கு 64 எனக்கு 66 - SJB56856832

ஆளவந்தான் அண்ணாச்சி - Elanthenral

அந்த மூன்று தொகுதிகள் - swamies07

வெல்லத்தான் நினைக்கிறோம்! - laks.veni

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: விருமாண்டியும் சாமுண்டியும்

* ? தேர்தல் முடிந்து முடிவு வரும்வரை ஒரு மாதம் ரெஸ்ட். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, முருகன், கமல், சீமான் போன்றவர்கள் என்ன செய்யலாம்?

* ? இந்தத் தடவை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பை ஜெயிக்க சில ரகளை ஐடியாக்கள் ப்ளீஸ்!

* ? 2050-ல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் என்னவாக இருக்கும்?

* ? ஆதாம், ஏவாள் கையில் மொபைல் போன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

* ? அஜித் சயின்ஸ் பிக்‌ஷனில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்? ஒன்லைன் சொல்லுங்களேன்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com