Published:Updated:

வாசகர் மேடை! - ட்ரம்ப் வித் வடிவேலு!

ட்ரம்ப் வித் வடிவேலு
பிரீமியம் ஸ்டோரி
News
ட்ரம்ப் வித் வடிவேலு

நானும் டம்மி... நீயும் டம்மி... டம்மிக்கு டம்மி!

? 2021- ஐ வெற்றிகரமாகக் கடக்க ஒரு ஜாலி மந்திரம் சொல்லுங்கள்!

ஓம்... க்ரீம்... ஜூம்!

எல்லா மீட்டிங்குகளையும் ‘ஜூம்’லயே நடத்தினா பிரச்னை இல்லாமல் கடக்கலாம்.

Raveendran Gopalasamy

2020-ஐ மற... 2021-ஐ நினை!

Ram Aathi Narayenan

‘மன் கி பாத்.’ இதைவிட ஒரு மந்திரம் வேணுமா? (அவருக்குக் கதை சொல்லியே பழக்கிடுச்சு. நமக்குக் கதை கேட்டே பழகிடுச்சு.)

vigneshmos

ஒரு நிமிஷம் 2020-ஐ நினைச்சுப் பார்த்தாலே போதும்... 2021 நம்ம கண்ணுக்கு சந்தோஷமா தெரியும்!

San8416

? பள்ளி, தியேட்டரை எல்லாம் திறப்பதும் மூடுவதுமாக அறிவித்துக் குழப்பும் அரசுக்கு நறுக்குன்னு ஒரு அட்வைஸ்?

அந்த வழிகாட்டுதல் குழுவுக்கு என்னதான் வேலை, இந்த மாதிரி முடிவுக்காவது வழி காட்டலாமே?

SowThanishka

ஒன்றே செய், நன்றே செய், ஒரே முறையில் செய்!

saravankavi

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் வர்ற மாதிரி ‘திறந்திடு சீசேம், மூடிடு சீசேம்’னு சொல்லிட்டே இருக்கீங்களேய்யா!

SeSenthilkumar

இப்படிக் குழப்பிட்டே இருந்தீங்கன்னா... அப்புறம் வர்ற தேர்தல்ல நாங்களும் குழப்பமான முடிவு எடுக்க வேண்டியிருக்கும்... அப்புறம் உங்க இஷ்டம்!

poonasimedhavi

மாற்று அரசியல் வேண்டும்னு பலர் கேட்பதை இப்படித் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு எல்லாத்தையும் மாத்தக் கூடாதுங்கய்யா.

Hariprabu Guru

? ட்ரம்ப்பும் வடிவேலுவும் இப்போது சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்?

வாசகர் மேடை! - ட்ரம்ப் வித் வடிவேலு!

வடிவேலு: டிரம்ப்னு பேரு வெச்சிருந்தா ஊதணும்... அத வுட்டுட்டு ஜோ பைடன் ஜெயிச்சிட்டாருங்கிற வயித்தெரிச்சல்ல ஆட்கள ஏவி விட்டு மோதறியே... உனக்கே நல்லாருக்கா..?

பாலா சரவணன், சென்னை

வடிவேலு: “பேசறியா... பைடன்கிட்ட பேசறியா?”

ட்ரம்ப்: “பைடன்னா?’’

வடிவேலு: ‘‘ஜோ பைடன்!”

saravankavi

வடிவேலு: நானும் டம்மி... நீயும் டம்மி... டம்மிக்கு டம்மி!

பாலு, திருச்சி

வ: புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் ட்ரம்ப், எங்க செல்லூர் ராஜூதான்.

ட்: அப்போ நானு?

வ: நீங்கதான் அமெரிக்காவின் செல்லூர் ராஜூ.

balasubramni1

ஒரே ஒரு எலெக்ஷன்தான்... ரெண்டு பேருக்கும் எண்டு கார்டு போட்டுட்டாய்ங்க!

KarthikeyanTwts

வடிவேலு: என்னண்ணே... இந்தத் தடவ அடி கொஞ்சம் ஓவரோ?!

ட்ரம்ப்: வாழ்க்கைன்னா சில அடிகள் விழத்தான் செய்யும் தம்பி!

வடிவேலு: ஹய்யோ... ஹய்யோ..!

sheik_twitts

ட்: மாப்பு... வெச்சுட்டாங்க ஆப்பு!

வ: எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்... ஓகே!

Shivan_11

வடிவேலு: உங்க ஊர்லதான் இதுக்குப் பேர் ‘கலவரம்.’ எங்க ஊர்லல்லாம் ‘தகுந்த ஆதாரங்கள் இல்லை.’

RamuvelK

வடிவேலு: என்ன ட்ரம்ப்... தெருவுக்கா போறேள்?

ட்ரம்ப்: அதுக்குள்ளய்யா... இன்னும் நாளிருக்கு!

manipmp

‘‘இந்த மாஸ்க்கு எங்க வாங்கினீங்க ட்ரம்ப்?’’

‘‘அமெரிக்காவுல... விலை 15 டாலர்...’’

‘‘ஹாஹா... என் மாஸ்க் உசிலம்பட்டில வாங்கினது. மூணு 10 ரூவா...’’

vrsuba

ட்ரம்ப்: Let’s Make America Great Again

வடிவேலு: ஏன், இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதா..?

சிவன், கோவை

? பிக்பாஸ் முடிந்த பின் கமல், தேர்தல் வரை மக்களைச் சந்திக்க என்ன ரியாலிட்டி ஷோ தொகுத்து வழங்கலாம்?

மாற்றுக் கட்சியினரை அழைத்து ‘நீயா, நானா?’ ஷோ நடத்தினா பட்டையக் கெளப்பும்!

Rajkumarvee69

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி போல ஊழல் செய்த அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் ‘கிக் வித் கோல்மாலிஸ்’ என்ற நிகழ்ச்சி நடத்தி மக்களை ஈர்க்கலாம்.

prem.prathap.56

சொல்வதெல்லாம் குழப்பம்!

vc.krishnarathnam

சொன்னா கமல் காப்பியடிச்சுடுவார்... அதனால் சொல்ல மாட்டேன்.

safath.ahamed

‘Clap வித் கமல்’ என்று ஒரு நிகழ்ச்சி தொடங்கி மக்களோடு பேசலாம்... கமல் பார்க்கும்போதெல்லாம் correct-டா கைதட்டினவங்களுக்கு ஒரு torch light பரிசு!

Laviher3

கமல் அரசியலுக்கு வந்து விட்டதால், “உங்களில் யார் அடுத்த கமல்ஹாசன்?” என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தலாம்.

IamJeevagan

வாசகர் மேடை! - ட்ரம்ப் வித் வடிவேலு!

? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஸ்லெட்ஜிங்கை சமாளிக்க ஒரு கோலிவுட் நடிகரைக் களமிறக்கலாம் என்றால் உங்களின் சாய்ஸ் யார்?

அவர்களுக்கு சரிக்கு சரி ‘உயரத்தில்’ இருக்கும் ‘சத்யராஜ்’. ‘‘என்னம்மா கண்ணுங்களா’’ என்று ‘சவுண்டு விட்டால்’ போதும்.

Suyambu26745699

‘‘பந்து இங்க இருக்கு, ஆனா இல்லை. பந்து இங்கதான் வந்துச்சு, ஆனா இப்ப இங்க இல்லை’’ என்று பேசி ஆஸ்திரேலிய வீரர்களுக்கே தலை சுற்ற வைத்து மைதானத்தை விட்டு ஓட விடுவார் எஸ்.ஜே.சூர்யா.

SriRam_M_20

கோவை சரளா. ‘சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டைப் பாடி ஆஸ்திரேலிய வீரர்கள் சிலாகித்து நிற்கும் வேளையில் எளிதாக வென்றுவிடலாம்.

pachaiperumal23

ஆர்.ஜே.பாலாஜி... இவர் பேசுற பேச்சுல எவனும் ஸ்லெட்ஜிங் பண்றது என்ன... ‘கிரிக்கெட்டே விளையாட மாட்டேன் போடா’ன்னு போயிடுவாங்க!

Ko Rajasekar

கில்லி விஜய். ‘கபடி... கபடி...’ சொன்னார்னா பேட்ஸ்மேன் கோட்டை விட்டு ஓடிடுவார். சுலபமா ரன் அவுட் பண்ணிடலாம்!

AdhiraiY

சந்தானம்தாங்க - கவுன்டர் கொடுத்துக்கொண்டே இருப்பார்.

JaNeHANUSHKA

எம்.ஆர்.ராதா இருந்தால் 100 சதவிகிதம் பக்காவாகப் பொருந்துவார். அவர் கலாய்ப்புக்கு எதிர் ஸ்லெட்ஜிங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய டீமே திணறிப்போகும்!

absivam

மன்சூர் அலி கான்... மானக்கேடா கேப்பாப்ல!

DhileepSrinivas

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வாசகர் மேடை! - ட்ரம்ப் வித் வடிவேலு!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

விஜய்சேதுபதி ஹீரோவாகவும் விஜய் வில்லனாகவும் நடித்தால் அந்தப் படத்தின் ஒன்லைன் சொல்லுங்கள்...

நிலவில் குடியேறும் வாய்ப்பு வந்தால் முதலில் என்ன செய்வீர்கள்?

காதலர் தினத்தன்று உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் சொல்லுங்களேன்...

எடப்பாடி இந்தியப் பிரதமராகவும் மோடி தமிழக முதல்வராகவும் பதவிகளை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும்?

வாசகர் கேள்வி: இந்தப் பொருள் ரேஷன் கடையில் மானிய விலையில் கிடைத்தால் நல்லது என்று நீங்கள் நினைப்பது..?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com