
முன்னணி நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி அரசே படத்தைத் தயாரிக்கலாம்.
? கிரிக்கெட் வீரர்கள் டிக்டாக் வீடியோக்கள் போடும் இந்த நேரத்தில் எந்தெந்த இந்திய வீரர்களுக்கு எந்தெந்த தமிழ்ப் பாட்டுகள் பொருத்தமாய் இருக்கும்?
மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே
தர்மம் தோற்காதே…
ஆளும் காவலனே
- யுவராஜ்
Algebraiway
சாஹல்: எனக்கிப்போ கல்யாண வயசுதான் வந்துருச்சிடி..
Kavi Prasath
கோலி : தோல்வி நிலையென நினைத்தால், மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
SriRam_M_20
வா அசுரா வா அசுரா வா... தோனிக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும்!
Vikki_Twits
சலாம் ராக்கி பாய் - ரோஹித் சர்மா
Thaadikkaran
ஹர்பஜன்சிங் : அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி...
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி..!
pbukrish
யுவராஜ் சிங் : நான் செத்துப்பொழச்சவன்டா.
venkat mail

? ஐபிஎல் முடியும் தறுவாயை எட்டிவிட்டது (நடந்திருந்தால்). யார் வெற்றி பெற்றிருப்பார்கள். என்ன பேசியிருப்பார்கள்?
வழக்கம்போல் சென்னை அணிதான்! ஆரஞ்சு capக்கு பதிலா ஆரஞ்சு கலர் மாஸ்க் கொடுத்திருப்பாங்க!
balebalu
யார் வெற்றிபெற்றிருந்தாலும், என்ன பேசியிருந்தாலும் கடைசியில், “ஃபைனலி இட் ஹேப்பன்ஸ்” என்று ஒரு சிரிப்பு சிரிப்பார்கள்!
RavindranRasu
ஆர்.சி.பி வெற்றிபெற்றிருக்கும், பரிசுத் தொகையை வெச்சு, தள்ளுபடி போக மீதிக் கடனை மல்லையா கட்டியிருப்பாரு..!
ரமேஷ்.ஏ
KXIP. அணி வீரர்களை மாஸ்க் அணிந்தபடியே முத்தம் கொடுத்துப் பாராட்டு தெரிவித்திருப்பார் ப்ரீத்தி ஜிந்தா.
Ayyan M Akasnandan
DC. மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகுவதுபோல் நாங்கள் வெற்றியுடன் வாழப் பழகிவிட்டோம் என்று டைமிங் டயலாக் பேசிக் கொல்வார்கள்.
- க.அய்யனார், தேனி.
ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர்.
விராட் கோலி: லேட் ஆனதால கொஞ்சம் ஒடஞ்சிருச்சி, ஆனாலும் கப் தங்கம் சார்.
KM Nidhish
? கமலுக்கு ட்வீட், ரஜினிக்கு கேட். தமிழின் பிற முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு எது அரசியல் அடையாளமாக இருக்கும்?
நயன்தாரா - கோலமாவு
ஏ.முருகேஸ்வரி, தென்காசி
மதுவந்தி - கால்குலேட்டர்
பார்த்தசாரதி
தனுஷ் - யாராவது இருக்கீங்களா?
NedumaranJ
ராஜ்கிரண் - நல்லி எலும்பு
JaNeHANUSHKA
விஜய் - குட்டிக்கதை
balasubramni1
சத்யராஜ் - தகடு தகடு
Thaadikkaran
குஷ்பு - இட்லி
amuduarattai
? டாஸ்மாக்கைத் திறக்காமல் கஜானாவை நிரப்ப தமிழக அரசுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்...
நாங்க என்ன யோசனை சொன்னாலும் அவங்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் செயல்படுவாங்க. நாங்க எதுக்கு யோசனை சொல்லணும்?!
பாலசுப்ரமணி
TAMIN-னு ஒரு தமிழக அரசு நிறுவனம் இருக்கே. அதன் கட்டுப்பாட்டில் அரசே நேரடியாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்டாலே, தமிழக அரசின் கஜானா நிரம்பி வழியுமே.
nedumaran jagadees
அம்மா அழகு நிலையம் ஆரம்பிக்கலாம்.
pbukrish
கஜானாவின் சைஸை சின்னதாக்கிவிடலாம். சீக்கிரம் நிரம்பிவிடும்.
ஹர்ஷாபா
அரசை ஒட்டுமொத்தமாக, பெரும் தொழிலதிபர்களுக்கு 5 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடலாம்.
karthik_thinks

இட்லிக்கடை வைக்கலாம். ஒரு செட் இட்லி (2) ஒரு கோடி ரூபாய்க்கு வித்து கஜானாவை நிரப்பலாம்.
Algebraiway
ஓட்டுக்குத் தரும் பணத்தை, அரசியல் கட்சிகள் தமிழக கஜானாவில் செலுத்தினால் கஜானா நிரம்பும்!
karthik_thinks
பெட்ரோல், டீசல் லிட்டர் ₹100,
பேருந்துக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு, பால்பாக்கெட் ₹5 உயர்வு.
- இதுதான் அரசாங்கத்துக்குத் தெரியும் ஒரே வழி.
absivam
முன்னணி நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கி அரசே படத்தைத் தயாரிக்கலாம்.
Thaadikkaran
நிர்மலா சீதாராமனிடம் கெஞ்சிக் கூத்தாடி, பல டன் கொண்டைக் கடலையை வாங்கி, அரசே சுண்டல் வியாபாரம் செய்ய ஆரம்பித்தால், விரைவில் கஜானா நிரம்பும் என்பது திண்ணம்..!
மயக்குநன்
கஜானா நிரப்பும் பணியை டெண்டருக்கு விட்டுவிட வேண்டியதுதான்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி-11,
? உங்கள் அலுவலக வீடியோ மீட்டிங்கில் நடந்த குபீர் சம்பவம் ப்ளீஸ் (சுருக்கமாக)
வீடியோ கால் பேசிட்டிருக்கும்போது
அக்கா மவன் வந்து லேப்டாப் ON/OFF பட்டன் Press பண்ணி விளையாண்டுட்டு இருந்தான்...
Algebraiway
மேனேஜர் உட்பட எல்லாரையும் கிண்டல் செய்து திட்டி வைக்கவும், டேய் மியூட் போடலேன்னு பின்னாடி இருந்து ஒரு சவுண்டு... திகில் படம் பார்த்த மாதிரி ஆயிருச்சு.
Thaadikkaran
ஒரு உண்மைய சொல்லியே ஆகணும். அலுவலகம் எப்டி இருக்கும்னு என் பரம்பரைக்கே தெரியாது பாஸ்.
sheik_twitts
கான்பரன்ஸ் மீட் ஒருவழியா ராப் அப் ஆகி boss போனபின் கலீக்ஸ் ஃபிரெண்ட்ஸ்கிட்ட “யாரு பெத்த புள்ளையோ இவ்ளோநேரம் தனியாபுலம்பிட்டு இருக்குன்னு” சொல்லி முடிப்பதற்குள் மறுபடிவந்த பாஸ் “ம்ம்...கொரோனா பெத்த பிள்ளைன்னு” டெரரா லுக்விட்டு பின் அவரும் சிரித்தார். லாக் அவுட் பண்ணலையாம்.
gmuruganandi
நான் ஏதோ அமேசான் பிரைம்ல படம் பார்க்கறதா நெனச்சுக்கிட்டு, விரதம் இருக்கும் மனைவி ‘உப்பு சரியா இருக்கா பாருங்க’ன்னு சொல்லி சாம்பார் கரண்டியை நீட்டும் மொமன்ட் இருக்கே... ஹாரிபிள்.
parveenyunus
போனைக் கீழே வைத்துவிட்டு எழுந்து நிற்பாங்க.இமயமலையின் உச்சியிலிருந்து வாய்ஸ் வருவது போல இருக்கும். சொன்னபிறகு நார்மலா உட்கார்ந்து பேசுவாங்க.
mani pmp
வாசகர் மேடை
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ஸ்டாலின் அ.தி.மு.க தலைவர் ஆனால் எப்படி இருக்கும்?
? கிராமத்துப் படங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத காட்சி எது; ஏன்?
? உங்களுக்குச் சொந்தமாக ஒரு தீவு வழங்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
? மொபைல் போன் பற்றி கமல் பாணியில் ஒரு கவிதை சொல்லுங்கள், பார்ப்போம்!
? ‘அட, இந்தப் படத்துல இவர் நடிச்சிருக்கலாமே’ என்று எந்தப் படத்தைப் பார்த்து, யாரை நினைத்தீர்கள்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com