Published:Updated:

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

நாட்டையே தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடிக்கு ஏலம் விடும்போது ஆட்டும் மணியைப் பரிசாகத் தரலாம்!

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

நாட்டையே தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடிக்கு ஏலம் விடும்போது ஆட்டும் மணியைப் பரிசாகத் தரலாம்!

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? மோடிக்கு ராகுல் ஒரு பரிசு தர வேண்டும் என்றால் என்ன தரலாம், ஏன்?

அருணாசலப்பிரதேச எல்லையில் சீனா உருவாக்கியுள்ள புதிய கிராமத்தில், ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதன் சாவியைப் பரிசாக அளிக்கலாம்..!

LAKSHMANAN

வடிவேலு காமெடிக் காட்சிகள் நிறைந்த டிவிடி. இருவருமே வடிவேலுபோலதான் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கோம், இனிமேலாவது இருவரும் திருந்துவோம் என்ற வாசகத்துடன்.

SriRam_M_

தமிழ்நாட்டில் ராகுல் ரசித்து ருசித்த பிரியாணியை சுடச்சுடப் பரிசாக மோடிக்குத் தரலாம். `யாம் பெற்ற இன்பம் பெறுக மோடியும்' என்று ராகுலும் தமிழில் பேசலாம்.

RamAathiNarayen

இன்னும் தனியார்மயமாகாத பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலைப் பரிசாக வழங்கலாம்.

amuduarattai84

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

ஒரு குட்டித் தீவு - மோடி விமானத்தில் பறந்து சென்று கொண்டாடத்தான்.

balasubramni1

பெட்ரோல் வாங்கித் தரலாம். உடன் வெங்காயம் ஒரு கிலோ.

b_rajeshkumar22

ஒரு கட்டு விறகு (நிதின் கட்கரி மாற்று எரிபொருளுக்கு மாறச்சொல்லியிருக்கிறாரே).

IamUzhavan

30 நாளில் தமிழ் பேசுவது எப்படின்னு ஒரு புத்தகம் பரிசளிக்கலாம். தேர்தல் நேரத்தில் உதவும்!

h_umarfarook

நாட்டையே தனியாருக்குத் தாரை வார்க்கும் மோடிக்கு ஏலம் விடும்போது ஆட்டும் மணியைப் பரிசாகத் தரலாம்!

mohan.moorthy.F

ஒலி எழுப்ப எவர்சில்வர் தட்டும், ஒளி எழுப்ப விளக்கும் பரிசாகத் தரலாம் (கொரோனா போன்ற பேரிடர்க் காலங்களில் தேடி அலைய வேண்டாம்).

jerry.darvey.7

இதுவரை ஆளே கிடைக்காத காங்கிரஸின் தலைவர் பதவியை மோடிக்குப் பரிசளிக்கலாம். அதன்பின் மோடிக்கு அரசியல் பண்ணும் தேவையே இருக்காது. மோடியை அரசியலை விட்டு விரட்ட இப்படியும் செய்துபார்க்கலாமே?!

Ayyanar

? 40 ப்ளஸ் அங்கிள்ஸ் தங்களை ‘யூத்’ என்று காட்டிக்கொள்வதில் உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயம் எது?

புல்லட் ஓட்றதே பெரிய விஷயம்... இதுல எல்லார் முன்னாடியும் யூத்துனு காட்டிக்க சென்டர் ஸ்டாண்ட் போட்டு பந்தா பண்ணி இழுத்துப் புடிச்சுகிட்டு .........ம்... எதுக்கு இதெல்லாம்?!

பானுமதி பாபு, சென்னை

நாங்களும் வாட்ஸப், ஃபேஸ்புக்ல இருக்கோம்னு காட்டறதுக்காக மோகனசுந்தரம் பட்டிமன்றம், இன்றைக்கு ஒரு தகவல், பொன்மொழிகள் என ஃபார்வேர்டு மெசேஜா தள்ளிவிடறது.

வி. ஜெய்கணேஷ், கொச்சி

அடிக்கடி பெண்கள் முன்பு சீப்பெடுத்து சீவிக்கொள்வது.

MUBARAKAM129

டீசர்ட்டும், கூலரும் போட்டுட்டா 'யூத்'னு நினைப்பு.

Aruns212

இயற்கையான தலைமுடியின் கறுப்பு நிறத்தைவிட கண் கூசும் வகையில் கறுப்பு மையைத் தலையில் பெயின்ட் அடித்திருப்பது கடுப்பேத்துகிறது.

மகிழி.M.நிஹ்மத் அலி, அடியக்கமங்கலம்

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

ஜீன்ஸ் தொப்பை துருத்தினாலும் டீசர்ட் கூலிங்கிளாஸ் என்ற அலப்பறையான டிரஸ்.

prema gururajan

? நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்...

எல்லாருக்குமான வீடு துண்டாடப்பட்ட பின்எஞ்சின சாவிகள்.

~ தேனம்மை லெஷ்மணன்

saravankavi

என் கல்லறை வாசகம், இங்கே யாரும் இல்லை நீங்கள் போகலாம்.

~ மனுஷ்யபுத்திரன்

இ.காளிராஜ்

தாளில் ஒத்தி எடுக்க எடுக்க ஈரம் காயாத மனம் கசிந்துகொண்டே இருக்கிறது!

~ புவியரசு

மெய்யாத்தூர் சொ. வேல்முருகன், திருச்சி

அவன் இல்லாமல் வாழப் பழகி விட்டிருந்தது வீடு.

~ கனிமொழி

ஜெ. ஜான்சி சுப்புராஜ், கடலூர்

பறவைகளை விடுங்கள், வெட்டும் முன் அந்த மரத்தின் நிழலில் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் இருந்தது.

- அரவிந்தன்

அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

உன்னைத் தவிர்த்து எல்லோருக்கும் புரிந்துவிடுகிறது உன் ஒப்புதல் இல்லாமல்நான் நம்மைப் பற்றி எழுதுவது..!

~ பாமரன் பரமகுரு

PG911

கடப்பாரைகளோடு சென்று கொண்டி ருந்தவர்களைக் கேட்டேன் `எங்கே செல்கிறீர்கள்?' அவர்கள் சொன்னார்கள் `ஆலயத்தை இடிப்பதற்காக' `ஏன்?' என்று கேட்டேன், அவர்கள் சொன்னார்கள் `ஆலயத்தைக் கட்டுவதற்காக.’

~ அப்துல் ரகுமான்

LAKSHMANAN_KL

? வாசகர் கேள்வி: டைரக்டர் விசு படங்களைத் தற்போது ரீமேக் செய்தால், அவர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்... ஏன்?

M.S.பாஸ்கர் - வேடிக்கை என் வாடிக்கை

RajaAnvar_Twits

ராதா ரவியே நடிக்கலாம். சின்ன மாப்ள படத்தில் விசுவோடு போட்டி போட்டு நடித்திருப்பாரே!

umarfarooksta

டெல்லி கணேஷ் - விசுவைப்போல முதலில் நாடகம் பின்பு சினிமா என வந்தவர், டயலாக் டெலிவரி விசுவைப்போல கச்சிதமாக இருக்கும்.

Vanni_Radha

சமுத்திரக்கனி சார், ஏன்னா அவர்கிட்ட தான் கருத்து பேசி கல்நெஞ்சையும் கரைக்கக்கூடிய ஆற்றல் இருக்கு.

Tamilnithy

அம்மையப்பன்: எடப்பாடி பழனிசாமி. ஆயிரம் பேரு ஆயிரம் சொன்னாலும், அந்த மோனலிசா புன்னகை ஒண்ணு போதும், ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட!

poonasimedhavi

விசுவோட படங்களில் விசு மாதிரி விசுவாலேயே நடிக்கவும் இயக்கவும் முடியாமல் போனதால்தானே விசுவே விசுவின் படங்களை இயக்கியும் ஓடாமல்போனது. அதனால விசுவோட படங்களில் விசுவைவிட நல்லாவோ இல்லை விசு மாதிரியாகவோ விசுவே இப்ப நடிச்சாலும், நல்லா இருக்காது.

HariprabuGuru5

நடிகர் இளவரசு - குணச்சித்திர நடிப்பையும், நகைச்சுவை நடிப்பையும் சரிவிகிதத்தில் கலந்து `விசு'வாச நடிப்பைக் காட்டுவதில் வல்லவர்..!

LAKSHMANAN_KL1

பிரகாஷ்ராஜ் - `பைத்தியக்கார ஹாஸ்பிடலில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பாக்கற பைத்தியக்கார டாக்டர்'னு பேச ஆரம்பிச்சார்னா கிளாப்ஸ் அள்ளுமே!

NedumaranJsta

? வேல், பங்காரு அடிகளார் என்று ஆன்மிக ரூட் பிடிக்கும் தி.மு.க-வில் உதயநிதி ஒரு பக்திப்படம் நடிப்பதாக இருந்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

ஆன்மிக சூரியன்

கனிமொழி சோமன், சங்ககிரி

உதயசாமி

iAijth

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

என் வழி பிள்ளையார் வழி

saravankavi

என் ஆத்தா வேப்பிலைக்காரி

ச.பிரபு, குற்றாலம்

இது கதிர்வேலன் சாமி

TAWDE V SRIDAR, சென்னை

ஒரு வேல்! ஒரு விடுமுறை தினம்!

akas.ayyan1

வாசகர் மேடை! - மோடிக்கு பிரியாணி பார்சல்ல்ல்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சினிமா - சீரியல் - வெப் சீரியஸ் வித்தியாசங்களை ஜாலியாகச் சொல்லுங்களேன்!

? எடப்பாடிக்கு ‘வெற்றிநடை போடும் தமிழகம்’போல் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கவர்ச்சிகரமான ஸ்லோகன் சொல்லுங்களேன்...

? விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன் சேர்ந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்? ஒன்லைன் ப்ளீஸ்...

? பெண்களுக்கு இன்னும் எந்தெந்த இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன?

? வாசகர் கேள்வி : சீமான் கதை சொல்வதற்கு பதிலாக கவிதை சொன்னால்

எப்படி சொல்வார்? - எம்.சரவணன்

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com