Published:Updated:

வாசகர் மேடை: இந்த பிரஸ்மீட்டை வழங்குபவர்...

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

பில்லா யாரு..? ரங்கா யாரு..? - கேடி டிரம்ப் கில்லாடி மோடி

? மோடி - ட்ரம்ப் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

விளக்கேற்று! வெளியேற்று!!

ஏ.முருகேஸ்வரி, தென்காசி - 627 862

கேடி ட்ரம்ப்! கில்லாடி மோடி!!

க.அய்யனார், தேனி.

மங்காத்தா- 2

அபிவீரன்

இதுவரை உடைக்கப்பட்ட பர்னிச்சர்கள்!

Algebra

லைப் ஆப் பொய்

எனக்கொரு டவுட்டு

நடுவுல கொஞ்சம் மாத்திரையைக் காணோம்.

பாலசுப்ரமணி

ட்ரம்ப் கார்டு

சுனா.பானா

? வொர்க் ஃப்ரம் ஹோமின் போது அதிகம் தொல்லை தரும் விஷயம் அல்லது நபர் யார்?

4G மற்றும் 3G நெட்வொர்க் பல மணி நேரம் வரை 2Gயாக மாறி சுற்றிக்கொண்டே இருப்பது.

- க.அய்யனார், தேனி.

கம்பெனியில் ஃபுல் ஏசியில் வேலை செய்வோம். வீட்டில் முடியுமா, அடிக்கிற வெயிலுக்கு எத்தனை ஃபேன் ஓடினாலும் வியர்வைதான், தொல்லைதான்.

Ashokan Ahan

 டிரம்ப்,  மோடி
டிரம்ப், மோடி

வேற யாரு, அடிக்கடி ‘ஹோம்’ ஒர்க் தர்ற என் ஒய்ப்தான்!

Mohamed Humayoon

சாப்பாடுதான். காலை டிபன் 11 மணிக்கும், மதியம் சாப்பாடு 4 மணிக்கும், இரவு சாப்பாடு 11 மணிக்கும்தான் கிடைக்குது.

மலர்சூர்யா

ஆபீஸில் தேமேன்னு இருக்கும் மேனேஜர் வொர்க் ஃப்ரம் ஹோம் நேரத்தில் தன் மனைவி தன் அதிகாரத்தைப் பார்க்க வேண்டும் என்று அலம்பல் செய்வதுதான் பெரும் போர்.

Vaira Bala

என்னோட மனசுதான்... கொரோனா பீதியில எதை எதையெல்லாமோ தறிகெட்டு யோசிக்குது... அதை ஆசுவாசப்படுத்தி ஒரு நிலைக்குக் கொண்டு வர்றதுக்கு டெய்லி படாதபாடு பட வேண்டியிருக்கு..!

laks veni facebook

இன்னைக்கு இந்த வேலையை முடிச்சிடணும்னு இருக்கும்போது, மச்சி இந்த வெப்சீரிஸ் பாருடான்னு ரெஃபரன்ஸ் அனுப்புற நண்பன்.

அப்புறம் என்ன? வெப்சீரிஸ் இன்னைக்கு, வேலை நாளைக்கு.

Ramuvel Kanthasamy

பொழுது போகல, டிவி பார்க்கலாமுன்னா... போட்டதையே திரும்ப திரும்பப் போடும் டிவி சேனல்கள்.

எனக்கொரு டவுட்டு

வீட்டில் ஒரு டிவியும் ஒரு ரிமோட்டும்தான் இருக்கு. ஆனா டிவியில் ஏகப்பட்ட சேனலும் வீட்டில் ஆட்களும் அதிகமாக இருக்காங்க... இதை வெச்சுக்கிட்டு சமாளிக்க முடியல.

Jerry Davey

அக்கா பசங்க... கூடவே இருக்கணுமுன்னு அடம் புடிச்சு வந்து உட்கார்ந்துகிட்டு... முக்கியமான நேரத்துல எதுனா wire-ரைப் புடிங்கிவிட்டுடுறாங்க. தண்ணியை ஊத்தி வெச்சுடறாங்க, சமாளிக்க முடியல.

Algebra

நம் வீட்டு மிக்ஸி சத்தத்தை நிறுத்தச் சொல்லி விட்டு ஆபீஸ் ஃபோன் காலை அட்டன்ட் செய்தால், கட்டுக்கடங்காமல் பக்கத்து வீட்டில் இருந்து வரும் அதே மிக்ஸி சத்தம்.

Viji Kumaran

செல்போனில் விழிப்புணர்வு ஆடியோ இதுநாள் வரை ஆங்கிலத்தில் 1538 மற்றும் தமிழில் 3464 கேட்டது. இப்பதிவு மேடையேறும்போது மேலும் 1500 எண்ணிக்கை நெருங்கியிருக்கும்.

Jerry.D.Darvey6

? ஐ.பி.எல் நடந்திருந்தால் இந்நேரம் 25 போட்டிகள் முடிந்திருக்கலாம். அப்போது, பெங்களூரு அணி எந்த நிலையில் இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?

எப்பவும் போல கடைசிதான்.

ஆனா ஆர்சிபியன்ஸ் கொரோனா வராம இருந்திருந்தா எங்க நிலைமையே வேறன்னு கதை விட்டிருப்பாங்க.

Madhesh_Twitz

தனித்திரு - RCB

விழித்திரு - கோலி

முழித்திரு - RCB ரசிகர்கள்

ஹர்ஷாபா

கோலி ஜெர்சி(18) நம்பர்லயே இருக்கே! இன்டர்நேஷனல் மேட்ச்னா 1வது, ஐபிஎல் மேட்ச்னா 8வதாகவும் இருப்பாரு.

pbukridh

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். ஆனால் புள்ளிகள் பட்டியலைக் கீழிலிருந்து மேலாகப் பார்க்க வேண்டியது நம் பொறுப்பு.

புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

தோல்வியில் RCB அணி RQB (Royal Quarantine Bangalore) ஆகியிருக்கும்

Vignesh

இந்தியா தற்போது இருப்பது இரண்டாம் கட்டமா அல்லது மூன்றாம் கட்டமான்னே தெரியாம இருப்பது போல இருந்திருப்பார்கள்...

sendhil.darshan

கோலி : முதல் மூன்று மேட்ச்ல தோல்வி அடையும்போதுதான் பயமா இருக்கும்...!

டீம் : அப்புறம்..?

கோலி : பழகிடும்..!

saravanan.kavi

கோதுமை, அரிசி போதுமான அளவிற்குக் கையிருப்பு உள்ளதென RBI கவர்னர் சொன்னது போல, RCB அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற போதுமான வாய்ப்புகள் கைவசமிருக்கு என்று ஐபிஎல் தலைவர் சொல்லும் நிலையில் இருந்திருக்கும்..!

Pamaran Paramaguru

ஜெர்சி கலரை ஒரு முறை மாற்றியிருப்பார்கள்!

RavindranRasu

நடந்திருந்தால் ஆர்சிபி எங்கேயிருந்திருப்பார்கள் என்பதெல்லாம் இருக்கட்டும்... நடக்காததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதில் முதலிடத்தில் கோலிதான் இருப்பார்... மிகப் பெரிய மன அழுத்த விடுதலைக்காக.

புகழ்

லீக் சுற்றில் ஒரு போட்டியில்கூடத் தோல்வியடையாத அணியாக இருக்கும். ராயலாக, எல்லா அணிகளுக்கும் சேலஞ் பண்ணும் அணியாக மாறியிருக்கும்.

amuduarattai

? பிரஸ் மீட்டில் பேச வேண்டுமென்ற மியூசிக்கல் சேர் விளையாட்டில் அடுத்து யார் வரலாம்; ஏன்?

எச்.ராஜாவின் அட்மின் வரலாம்

ஹர்ஷாபா

ஓபிஎஸ். ஏதோ சேர்னு சத்தம் கேட்டுச்சு, அதான் வந்தேன்!

Pbukrish

தமிழிசை ‘கொரோனா ஒழிந்தே தீரும்’ என்று பேசி நம்மை உற்சாகப்படுத்துவார்.

Ravikumar Krishnasamy

மதுவந்தியைக் கொண்டு வரலாம். ஒரே நாளில் தமிழகத்தில் 3,000 கோடி பேருக்கு கொரோனாத் தொற்று உறுதியானது என்று சொல்லுவார். அதைக் கேட்ட மக்கள் பயந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பர்.

h_umarfarook

பிரேம்ஜி அமரன் வரலாம். எவ்வளவோ பார்த்துட்டோம், இதைப் பார்க்க மாட்டோமா...

PrabuG

சிவகுமார்
சிவகுமார்

டி.ராஜேந்தரிடம் ஒப்படைச்சா எதுகை மோனையில் பேசியே, ஒப்பேத்திடுவார் என்பதால் அவரிடம் வழங்கலாம்!

(மீறி பத்திரிகையாளர் யாராவது கேள்வி கேட்டால், வாயிலேயே ஆப்பிரிக்கன் மியூசிக் போட்டு சமாளித்துவிடுவார்)

ட்விட்டர் போராளி

ஜிஜின்பிங், சீன அதிபர். டெப்டேசனில் தமிழகத்திற்கு அழைத்து வந்து பிரஸ் மீட்டுக்குப் பேட்டி கொடுக்க வைக்கலாம்.

வெண்பா

நித்தி. மீனாட்சி மீனாட்சின்னு சூரியனை மறையச் செய்தவர், கொரோனாவை மறையச் செய்ய வழி சொல்வாரே.

சுனா.பானா

இருங்க, மத்திய அரசைக் கேட்டுச் சொல்றேன்.

ரஹீம் கஸ்ஸாலி

சிவகுமார்தான்! இதுவரை உலகில் எவ்வளவு நோய்த் தொற்று வந்துள்ளது என்று வரிசையாக மூச்சு விடாமல் அதன் பெயர்களை ஒப்பிப்பார். கொரொனாவுக்குக் கிலி வந்துவிடும்!

balebalu

வாசகர் மேடை: இந்த பிரஸ்மீட்டை வழங்குபவர்...

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? எடப்பாடியும் ட்ரம்பும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

? லாக்-டௌனை வைத்துப் படம் எடுப்பதாக இருந்தால் எந்த இயக்குநர் என்ன டைட்டில் வைப்பார்?

? கருத்துகள் சொல்லிக் குவிக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு அடைமொழி ப்ளீஸ்!

? பழைய ஹிட் பாடல்களில் மிக மோசமாகப் படமாக்கப்பட்ட பாடல் என நீங்கள் நினைப்ப்து எது?

? கிரிக்கெட் வீரர்களில் மிகவும் ஸ்டைலான ஆட்டக்காரர் என்றால் யார்? ஏன்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com