Published:Updated:

வாசகர் மேடை: பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

அனைத்து வீதிகளிலும் வீடுகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பார் கமல்.

வாசகர் மேடை: பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம்!

அனைத்து வீதிகளிலும் வீடுகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பார் கமல்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ஒருவேளை மக்கள் நீதி மய்யம் வெற்றிபெற்று கமல் முதல்வர், சரத்குமார் துணை முதல்வர் என்றால் என்னென்ன சட்டங்கள் வரும்?

‘வெற்றி நடைபோடும் தமிழகமே’ பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு கமல் தன் சொந்தக்குரலில் பாடி வெளியிடுவார்.

krishmaggi

`உலக நாயகன்' உணவகங்கள் ஏற்படுத்தப்படும். ‘மிஸ்டர் மெட்ராஸ்' உடற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பார்கள்.

KrishnaratnamVC

அம்மா உணவகம் சித்தி உணவகமாக மாற்றப்படும்.

amuduarattai9

வாசகர் மேடை:  பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம்!

நாட்டாமை தம்பி பசுபதிதான் டீச்சரைக் கொன்றாரா என்ற வழக்கு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்படும்!

absivam

பழ.கருப்பையா கட்சி மாறத் தடை விதிக்கப்படும்.

IamUzhavan4

தமிழகமெங்கும் ‘அபிராமி உணவகம்’ திறக்கப்படும்.

Vinayagannn

மய்யவியல் - என்றொரு பாடம் தமிழகப் பள்ளிகளில் கற்பிக்கப்படும்.

livesaravanann2

மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படும்.

Vasanth9206

கமல் ~ ஆரம்பிக்கலாம்ங்களா..சரத் ~ எந்தத் திட்டம்...?

கமல் ~ ஷூட்டிங்கைச் சொன்னேன்..

saravankavi

அனைத்து வீதிகளிலும் வீடுகளிலும் கேமரா பொருத்தி கண்காணிப்பார் கமல்.

கேமராவில் பதிவாகும் குடும்பச் சண்டைகளுக்கு வீடியோகாலில் தீர்ப்பு வழங்குவார் சரத்குமார்.

ranjanikovai

மின்சாரத்தைச் சிக்கனம் செய்ய விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் சட்டசபை நடைபெறும்.

balasubramni1

வீட்டுவேலைகளை cooking team, cleaning team என்று குடும்ப உறுப்பினர்கள் பிரித்துக்கொள்ள புதிய சட்டம் இயற்றப்படும். வேலையைச் சரியாகச் செய்யாதவர்கள் அவர்கள் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்.

Laviher38

அனைவருக்கும் ஒரு சொம்பும் ஒரு டார்ச் லைட்டும் இலவசமாக வழங்கப்படும்.

MSURIYARAJ2

? விஜய் ஏற்கெனவே ‘துப்பாக்கி’ படத்தில் நடித்துவிட்டார். துப்பாக்கி சுடுவதில் பதக்கங்கள் வாங்கிய அஜித் ‘துப்பாக்கி-2’ நடித்தால் எப்படி இருக்கும்?

துப்பாக்கியில் சுடுகிறவர் & துப்பாக்கிகளைச் சுடுகிறவர்னு படத்தில் அஜீத்துக்கு இரட்டை வேடம். இருவருக்குமான கண்ணாமூச்சி விளையாட்டுதான் படமே. 'சுட்டுப்பார்'னு டைட்டில் கூட வச்சிக்கலாம்.

SeSenthilkumar

கொடுவிலார்பட்டியில் பிறந்த அஜித் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு கோல்டு மெடல் வாங்கித் தருகிறார்.

balasubramni1

'2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதும் 'துப்பாக்கி-2' அப்டேட் தருவேன்'னு வானதி சீனிவாசன் பேட்டி கொடுப்பாங்க..!

LAKSHMANAN_KL

சிறுத்தை சிவா விவேகம்-2 கதையை விஜய்யிடம் சொல்வார்.

Vasanth9203

வாசகர் மேடை:  பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம்!

? யானை, புலி, சிங்கம் எல்லாம் பெட் அனிமலாக மாறினால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

புலி பசிச்சா புல் சாப்பிடுமா, சாப்பிடாதான்னு கண்டுபிடிச்சுடலாம்.

சி.பி. செந்தில்குமார், சென்னிமலை

நாம குடும்பத்தோட ஊருக்குப் போக பஸ் ஸ்டாண்ட் போனால் சிங்கமும் நம்ம பின்னாடியே வரும், அதை வீட்டுக்கு விரட்டி விடவேண்டும்.

krishmaggi

பப்பிக்கு `டைகர்'னு செல்லமா பேர் வைக்கிற மாதிரி, டைகருக்கு 'பப்பி'ன்னு பேர் வைப்பாங்க..!

LAKSHMANAN_KL4

சிங்கம் புலியை வைத்து போஸ்டர், பேனர் அடிக்கும் சாதிச்சங்கங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும்.

kusumbuonly/

அரசாங்கத்தின் சார்பில் பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம் நடத்திக்கொண்டு இருப்பாங்க!

JaNeHANUSHKA8

உங்க சங்காத்தமே வேணாம்டா சாமின்னு சிங்கம் திரும்ப காட்டுக்கே போயிடும்.

ARiyasahmed3

பெண்கள் சிலர் கரடி பொம்மைக்குப் பதிலாக கரடியைக் கட்டிப்பிடித்துத் தூங்கும் போட்டோவைப் பதிவிடுவார்கள்.

vigneshmos

சிங்கம், புலி, யானை இதை யாராவது திருடிட்டுப் போயிடுவாங்களோ என்று பயந்து நாயைக் காவல் வைத்திருப்போம்.

h_umarfarook

`எங்க வளர்ப்புச் செல்லம் செல்வி என்ற சிங்கத்தை காணோம்'னு பத்திரிகையில் விளம்பரம் வரும்.

Kirachand48

ராமராஜன் பாட்டுப் பாடி புலியிடம் பால் கறப்பார்.

balasubramni1

யானை மேல உட்கார்ந்து நாமளும் யோகா பண்ணலாம்.

Laviher30

? நம் அரசியல்வாதிகளின் பிரசாரங்களில் இன்னும் என்ன நவீன உத்திகளைப் பயன்படுத்தலாம்?

தங்களுக்குத் தோதான கதையை வடிவமைத்து, அவர்களே நடித்து வெப் சீரிஸ் தயாரித்து வெளியிடலாம்.

amUzhavan

தெர்மாகோலில் சின்னங்கள் வரைந்து தண்ணீரில் மிதக்கவிட்டு வாக்கு சேகரிக்கலாம்.

muthooshm7

டேக் செய்து மெசேஜ் பதிவிட்டால் பால் பாக்கெட் வழங்கும் திட்டம் அனைவருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று செயல்முறையில் காட்டலாம்.

saravankavi3

ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கட்சியின் சின்னம் பொறித்த ஆடைகளைக் கொடுக்கலாம்.

balasubramni12

செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி சூரியன், நிலா மற்றும் விண்மீன்களில் தம் சின்னம் தெரியுமாறு செய்யலாம்.

SeSenthilkumar

சொமோட்டோ, சுவிக்கி போன்றவர்கள் போல் டெலிவரியோடு ஓட்டுக்குக் காசும் கொடுத்துட்டு வரலாம்!

பா து பிரகாஷ், தஞ்சாவூர்

சின்சான், டோரிமான், டோரா புஜ்ஜி வேடங்களில் வந்து பிரசாரம் செய்து, சிறுவர்களின் மனங்களைக் கவர்ந்து, பெற்றோர்களுக்கு அழுத்தம் தர வைக்கலாம்..!

LAKSHMANAN_KL9

? பெட்ரோல், டீசல் விலை குறைய ஜாலியான யோசனைகள் சொல்லுங்களேன்!

ஒவ்வொரு மாதமும் தேர்தலைத் தள்ளி வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

MaharajaT18

மாசத்துக்கு 5 லிட்டர் ஃப்ரீனு தி.மு.க அறிக்கை விட்டாப்போதும். மாசம் முழுக்க ஃப்ரீனு எடப்பாடி அறிக்கை விட்ருவார்.

RamuvelK

பேசாம இந்தியாவத் தூக்கி அரபு நாடுகளுக்கு நடுவுல வச்சிட்டம்னா குறைஞ்ச விலைக்கு வாங்கலாம்!

San8416

டூ வீலருக்கும் டோல் கேட் கட்டணம் உண்டு என்று அறிவித்து ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் போட்டுவிட்டால் மக்கள் டோல் கேட் கட்டணத்திற்கு பயந்துகொண்டு வாகனங்களைப் பயன்படுத்த மாட்டார்கள்! வாங்க ஆளில்லாத காரணத்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும்.

h_umarfarook

காரில் ஒரேயொருவர் மட்டும் தனியாகப் பயணம் செய்தால், 1,000 ரூபாய் அபராதம் போடலாம்.

IamUzhavan0

பெட்ரோல், டீசலைத் தவிர எல்லா பொருளோட விலையையும் உயர உயர உயர்த்தவேண்டும்.

இப்ப பாத்தா பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கும்.

நற்றிணை

கபசுரக் குடிநீரைக் கலக்கி ஓட்டினால் மைலேஜ் கிடைக்கும்னு சொல்லிக் குறைக்கலாம்.

urs_venbaa

அமெரிக்காவோடு போரிட்டு டாலர் மதிப்பை ரூபாயைவிடக் குறைத்துவிடலாம்.

AlayamSenthil

ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துவிட்டு, பின்னர் நாள்தோறும் ஒரு ரூபாய் குறைக்கலாம். நமக்கும் தினமும் ஒரு ரூபாய் குறையுதேன்னு நிம்மதியா இருக்கும்.

valainghan

வாசகர் மேடை:  பூனைகளுக்குப் புத்துணர்வு முகாம்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை எட்ட சில ஐடியாக்கள் சொல்லுங்களேன்!

? உதயநிதிக்குப் போட்டியாக ஓ.பி.ரவீந்திரநாத்தும் சினிமாவுக்கு வந்தால் அவர் எந்தப் படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?

? நம்மூருக்கு வரும் ஏலியனுக்கு ஒரே ஒரு உணவுவகையை மட்டுமே சாப்பிடத் தரலாம். நீங்கள் என்ன உணவுவகையைக் கொடுப்பீர்கள், ஏன்?

? டிவி சீரியல் பார்க்கும்போது உங்களுக்குத் தோன்றும் வினோதமான சந்தேகம் எது?

? பிளாக் அண்ட் ஒயிட் கால காமெடியன்களை வடிவேலுவின் புகழ்பெற்ற கேரக்டர்களில் நடிக்க வைக்கலாமென்றால் யார் யார் என்னென்ன ரோல்களில் நடிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com