கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: ஒரு கதை சொல்வீங்களா தல?

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

ஒரு ஊரு... அது பேரு அத்திப்பட்டு... ஆனால் அது இப்போ இல்ல... கொரோனாவுக்கு முன்னாடி நடந்த பயங்கரம்.

? குட்டிக்கதைகள் சொல்வதில் ரஜினிக்கும் விஜய்க்கும் ஆர்வம் அதிகம். அஜித் குட்டிக்கதை சொன்னால் அது எப்படி இருக்கும்?

balasubramni1

வாழ்க்கையும் பைக் ரேஸ் மாதிரிதான். பின்னால் யார் வர்றாங்க பக்கவாட்டில் யார் வர்றாங்கன்னு பார்க்காம நம் இலக்கை நோக்கி மட்டுமே ஓட வேண்டும். வெற்றி நிச்சயம்!

வாசகர் மேடை: ஒரு கதை சொல்வீங்களா தல?

Aaathithamizhan

எது எப்படியோ கதையைச் சொல்லி முடிக்கும் போது `அது’ என்ற வார்த்தையை சத்தமாகச் சொல்லி முடிப்பார்.

mekalapugazh

ஒரு ஊரு... அது பேரு அத்திப்பட்டு... ஆனால் அது இப்போ இல்ல... கொரோனாவுக்கு முன்னாடி நடந்த பயங்கரம்.

pachaiperumal23

கண்ணாடியைத் திருப்பினா ஆட்டோ எப்படி ஓடும்? நான் கதை சொன்னா கொரோனா எப்படி குணமாகும்? போங்க, போய் டாக்டர்ட்ட காட்டுங்க. இல்லைன்னா அத்திப்பட்டு கிராமம் காணாமப்போனமாதிரி காணாமப்போயிருவிக.

pbukrish/

“தலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலலல”சத்தத்தில் குட்டிக்கதை காதில் கேட்கல! ஸாரி.

KLAKSHM

மனுஷனுக்கு எல்லாமே ரெண்டுதான்... ரெண்டு கால், ரெண்டு கை, ரெண்டு கண், ரெண்டு காது, ரெண்டு நாசி... ஆனா, தலை மட்டும் ஒண்ணே ஒண்ணுதான்... அதுதான் ‘தல..!’

? தனி மனிதராக கொரோனாப் பிரச்னையைச் சமாளிக்க நீங்கள் எடுத்த சீரியஸான நடவடிக்கைகள் என்னென்ன?

இளையநிலா

அரை மணி நேரம் கடைக்குப் போய்விட்டு வந்தால்கூட போட்டிருந்த ஆடைகளை உடனே வாஷிங் மெஷினில் போட்டுவிடுவது!

pachaiperumal23

வீட்டில் பணிபுரியும் பணியாளுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணக் கூறிவிட்டேன்.

karthik_thinks

கொரானா பற்றி, வாட்ஸப்பில் வரும் வதந்திகளை யாருக்கும் அனுப்பாமல் வைரஸையும், வதந்தியையும் பரப்பாமல் இருக்கிறேன்!

vikneshmadurai

குழந்தைகளுக்கு பேய் பூதம் கதைகளைச் சிறிது காலம் தவிர்த்து கொரோனாவைப் பற்றி அச்சம் கலந்த விழிப்புணர்வுக் கதைகளைச் சொல்லுவது சிறந்தது!

POONKATHIR

வீட்டு வாசலில் பக்கெட்டில் நீர் வைத்து உள்ளே வரும்போதும் கைகால்கள் கழுவிவிட்டு வரவேண்டும் என்ற அறிவுறுத்தல், பிள்ளைகளை முடிந்தவரை வெளியில் அனுப்பாமல் பாதுகாத்தல், கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்தல், குளிர்பானங்கள் தவிர்த்தல்... இப்படி நிறைய!

Sowmya Red

முக்கியமாக Quarantine. வதந்திகளைப் பரப்பாமலோ, நம்பாமலோ இருப்பது. Experts சொல்வது போன்று, கை கழுவுதல், சத்தான பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவது.

? பேங்க், வாராக்கடனை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

prabhu65290/s

இந்தியா டு லண்டன்

RavikumarMGR/

வராக்கடன்கள் ஓய்வதில்லை

umakrishh5

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி

Veenaa_ponavan

கடனைக் கட்ட வருவாயா

வாசகர் மேடை: ஒரு கதை சொல்வீங்களா தல?

p_jegath

எங்கேயோ போன கடன்

mekalapugazh

நீ வரமாட்டாய் என

KLAKSHM’பற’சிம்மா..!

‘திவாலான’ மோகனாம்பாள்..!

sarianees

ஒரு வங்கி கடன் கேட்கிறது

KarthiKeyanTwts

4 customer-ம் நல்லா இருந்த Bank-ம்

? பா.ஜ.க-வின் புதிய தமிழகத் தலைவர் முருகன், முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்று நினைக்கிறீர்கள்?

pbukrish

முன்னாள் தலைவர்களைக் கூட வைத்துக்கொண்டு சுற்றாமல், தமிழகத்தில் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

gZfD4jzeG3j4ZHM

மக்கள் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராட வேண்டும். அது செய்தியாக வர வேண்டும். அவர்கள், அவர்களையே தாக்கிக்கொண்ட நாடகச் செய்திகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

saravankavi

“புதிதாக தலைவர் பதவிக்கு வந்திருக்கீங்களே, என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க..?”

“முன்னாடி தலைவரா இருந்தவங்க எல்லாம் என்ன பண்ணாங்க..?’’

“தாமரை மலர்ந்தே தீரும்னு சொன்னாங்க...!’’

“அதையேதான் நானும் செய்யப்போறேன்...!’’

Veenaa_ponavan

தமிழ்நாட்டில் ஹெச் ராஜா எஸ்.வி. சேகர் போன்றோர் ஆளாளுக்குத் தங்கள் விருப்பம்போல் கருத்து சொல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

mekalapugazh

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு, நடுநிலையாளர்; வலதுசாரி; பத்திரிகையாளர் போர்வையில் பா.ஜ.க-வின் கொள்கை மற்றும் திட்டங்களை ஆதரிப்பவர்களை உடனடியாக விலக்க வேண்டும்.அவர்கள் எப்போதும் தமிழருணர்வுக்கு எதிராகப் பேசி பா.ஜ.க மீது ஒரு ஒவ்வாமையை உண்டாக்குகின்றனர்.

பொன்னையா , திருப்பூர்

கட்சி உயிரோடு இன்னும் இருக்கா... அப்பிடின்னா அந்த உயிர் சரியா எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கணும். அப்புறம் மத்தத மோடி அமித்த வச்சு ரெடி பண்ணிக்கலாம்.

ஏ.முருகேஸ்வரி, தென்காசி

மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு (மே மாதத்தில்தான்) பிற கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்களை லோக்கல் தலைவர்களை வைத்து, கலந்து பேசி பா.ஜ.க-வில் சேர்த்து விழா எடுக்கலாம்.

kavi prasad

மீம்ஸ் கிரியேட்டர்களின் கமென்ட்களைத் தாங்குற அளவுக்கு மனச பக்குவப்படுத்திக்கணும்.

? ‘குடி, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று மதுபான பாட்டில்களில் இருந்த வாக்கியத்தை மாற்றியிருக்கிறது தமிழக அரசு. வேறு எந்த அரசு அறிவிப்பை, எப்படி மாற்றலாம்?

prabhu65290/

சாலை விதிகளை மீறு அடுத்த நாள் ஜெயிலில்தான் சோறு

Smoke free zone போல Mobile free zone

பத்து மரத்தை நட்டு ஒரு மரத்தை வெட்டு

வாசகர் மேடை: ஒரு கதை சொல்வீங்களா தல?

RavikumarMGR

குடும்பக் கட்டுப்பாட்டு வாசகத்தை இப்படி மாற்றலாம். பெறுவோம் ஒன்று! வளர்ப்போம் நன்று!

amuduarattai

“மொபைலில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதீர்” என்பதை “மொபைலில் நோண்டிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டாதீர்” என்று மாற்றலாம்.

parveenyunus/

நில் கவனி மொபைலை நோண்டாதே.

pbukrish

பொது இடங்களில், “CCTV செல்பி எடுக்கிறது”னு போடலாம்.

adiraibuhari

விபத்தைத் தடுக்கப் பத்துமீட்டர் இடைவெளி; வியாதியை தடுக்க ஒருமீட்டர் இடைவெளி

sudarvizhie

வதந்தி பரவாமல் இருக்க: படித்தவுடன் டெலிட் செய்யவும்!

க.அய்யனார், தேனி.

கூட்டத்திலும் தனித்திரு! கவனத்தோடு விழித்திரு!!

சித்திரசேகர்

ஊட்டுலயே இருங்க

உசுரோட இருங்க!

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஒரு கதை சொல்வீங்களா தல?

? வேற்றுக்கிரகத்துக்குச் செல்வதாக இருந்தால் பூமியில் இருந்து எந்தப் பொருளை எடுத்துச் செல்வீர்கள்?

? வீட்டிலேயே இருக்கும் இந்த நாள்களில் ‘அட. இதை இவ்வளவு நாள் நாம கவனிக்கலையே?’ என்று நீங்கள் ஆச்சர்யப்பட்ட விஷயம் எது?

? நிறைய பார்த்துவிட்டோம். இதுவரை பார்க்காத, வடிவேலு வசனத்துக்குப் பொருந்திப்போகும் ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள்.

? இந்த ஓய்வுக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி எப்படி தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

? துப்புரவுப் பணியாளர்கள் - ஒரே வரியில் நெகிழும்படி கூறவும்.

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com