Published:Updated:

வாசகர் மேடை: அடடா ஆக்‌ஷன்!

அடடா ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
அடடா ஆக்‌ஷன்!

வாசகர் மேடை

வாசகர் மேடை: அடடா ஆக்‌ஷன்!

வாசகர் மேடை

Published:Updated:
அடடா ஆக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
அடடா ஆக்‌ஷன்!

? எப்போதாவது வித்தியாசமான புத்தாண்டு சபதம் எடுத்திருக்கிறீர்களா? என்ன சபதம்?

வருடா வருடம், சிகரெட் பழக்கத்தை நிறுத்த வித்தியாச வித்தியாசமாக சபதம் எடுப்பேன்... சபதம் தொடர்கிறது.

பெ.பச்சையப்பன், கம்பம்

மீசையைக் கடிக்கும் பழக்கத்தை விடணும்னு ஒவ்வோர் ஆண்டும் சபதம் எடுக்கறதுதான்...

SeSenthilkumar

சிக்னல், ட்ராஃபிக்ல நிக்கும்போது ஹாரன் அடிக்கக் கூடாது. 2020-ல் இந்த சபதம் எடுக்க இருக்கிறேன்.

RedManoRed

பல வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில்லை என்ற சபதம் இப்போது வரை தொடர்கிறது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தினசரி காலண்டர்ல தேதி கிழிக்கும்போது எக்காரணம் கொண்டும் ராசிபலன் பார்க்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன்.

R.Hariharan, சென்னை

`எடுத்த சபதம் முடிப்பேன்’ அப்படின்னு பாட ஆசைதான். ஆனால் சபதம் எடுத்த அதே நாளிலேயே முடிந்துவிடுவதுதான் சோகம்!

saravankavi

இந்த வருடமாவது இலவசமாகக் கிடைக்கும் டைரியில் தினமும் ஏதாவது எழுதிடணும் என்று சபதம் எடுப்பேன். ஆனால் முதல் ஒரு வாரம்தான் எழுத முடிகிறது. அதோடு ஓரங்கட்டி வைத்துவிடுவேன்.

rizriza8

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

? ஆக்‌ஷன் படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம்?

ஹீரோக்கள் மட்டும் வில்லன் எப்பொழுது என்ன பண்ணுவார், என்ன நினைப்பார் என்ற அனைத்தையும் அறிவார்கள்.

nivya.bala

வாசகர் மேடை: அடடா ஆக்‌ஷன்!
வாசகர் மேடை: அடடா ஆக்‌ஷன்!

வில்லனால் அவன் பாசறையில் அடை பட்டிருக்கும் ஹீரோ அரை பிளேடினால் ஒண்ணரை இன்ச் தடிமனான கதவின் கம்பியை அறுத்துக்கொண்டு அநாயாசமாக வெளியேறுவது...

M.R. MURTHI, மும்பை

ஒரு மலையிலிருந்து இன்னொரு மலைக்குத் தாவும் ஜீப். மிலிட்டரிலகூட இந்த ஜீப் இல்லையே..!

RavikumarMGR

வில்லன்கள் அடியாட்கள் சுருட்டைத்தலை, அழுக்கு உடை எனச் சேரி மக்களாகக் காட்டும் அரசியல்.

umakrishh

எல்லோரும் செத்துடுவாங்க, அதுக்கு அப்புறம் ஹீரோ பஞ்ச் டயலாக் பேசுவார். அங்கே யாரு இருக்கா அத கேக்க..?!

sivaguru_n

ஹீரோவின் நண்பன் வில்லன்களால் உயிர் விடுவதை `கூட்டணி தர்மம்’ என்பதைப்போல் காட்டுவது..!

Ramesh

ஹீரோ 16 வயதினிலே கமல் மாதிரி இருப்பாரு. காதலிக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே ஹீரோவை ஆளவந்தான் கமல்போல் காட்டுவது.

balasubramni1

நியூட்டனின் மூன்றாம் விதி, புவியீர்ப்பு விசைக்கெல்லாம் ‘டஃப்’ கொடுக்கிற மாதிரி சண்டை போடும் ஹீரோக்களைப் பார்க்கும்போது காண்டாகுது!

nedumaranj

இப்ப பைக்கையெல்லாம் ஒரு கைல தூக்கி அடிக்க ஆரம்பிச் சிட்டானுங்க.

saraa_cbe

கேமரா முன்னாடி கையை முறுக்கிட்டுவந்து குத்துறது நம்ம மூஞ்சில குத்துற மாதிரி இருக்கும்.

Madhesh_Twitz

தலையால தலையை முட்டுவது! ஹீரோவோட தலை மட்டும் இரும்பால செய்யப்பட்டதா?

SeSenthilkumar

? கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்... நாளைய கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?

மனசுக்குள் இருக்கும் விஷயத்துக்கு ஒலிவடிவம் தந்து பேச வைக்கும் மைண்ட் ரீடர்.

வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி

கமலின் அறிக்கையைப் புரியும்படி மொழிபெயர்க்கும் கருவி.

mekalapugazh

எனி டைம் காபி/டீ மெஷின்

காபி/டீ சாப்பிட ஸ்விட்ச்சைப் போட்டால் இந்தக் கையளவு மெஷினில் பீங்கான் கோப்பை தோன்றி ஆவி பறக்க காபி/டீ படம் 3D எஃபக்ட்ல வரும். ஆனா, குடிக்க முடியாது. அதுல இருந்து வர்ற வாசனை (Aroma) மூக்கைத் துளைத்து, மண்டையில் ஏறி காபி/டீ சாப்பிட்ட திருப்தியை மட்டும் கொடுக்கும். உடலுக்கு காபி/டீ-யால வர்ற தீமை இருக்காது. ஆனா ஊனா பொண்டாட்டி பால் வாங்கக் கடைக்கு நம்மை அனுப்பமாட்டாங்க.

vc.krishnarathnam

போர் வந்து வெகுநாள்களாவிட்டது என்பதை ரஜினிக்கு உணர்த்த ஒரு கருவி.

bommaiyamurugan.murugan

எதுவாக இருந்தாலும் சரி, அது குழந்தைகளின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

கிருஷ்ணமூர்த்தி

மொபைல், லேப்டாப்களின் மின்னணுக் கழிவுகளை அப்புறப்படுத்தத் தேவை ஒரு தொழில்நுட்பம்.

எம்.விக்னேஷ், மதுரை

‘மாயவன்’ படத்தில் வருவதுபோல் ஒரு மனிதனின் மூளையில் இருக்கும் நினைவுகளை காப்பி செய்து வேறொரு மூளையில் பேஸ்ட் செய்வது...

நா.இரவீந்திரன், திருப்பூர்.

Nailtop. நகத்துக்கு மேல் ஒரு குட்டி கம்ப்யூட்டர்..‌. டிஸ்பிளே மட்டும் 3D laser view-ல இருக்கும்.

Ntramesh_kpm

டீசரைப் பார்க்கும்போதே அந்தப் படம் தேறுமா, தேறாதா என்று கண்டறியும் கருவி!

IamSMSengodan

நம் பிரதமரின் திடீர்த்திட்டங்களை முன்கூட்டியே கண்டுபிடிக்கும் கருவி.

Neravy Gajendiran

இவற்றிலிருந்து வெளிவர `Deaddiction Device’

vrsuba

பேசுவதன் மூலமே சார்ஜ் ஆகும் செல்போன்.

rizriza8

? ‘இப்படியெல்லாமா நடக்கும்?!’ என்று நீங்கள் 2019-ல் ஆச்சர்யப்பட்டது எதை?

பாக்கெட் பால் என்பது பன்றியின் பால் எனும் அரிய கண்டுபிடிப்பை 2019-ல் நிகழ்த்தும் இல.கணேசன் போன்றோரோடு நானும் வாழ்கிறேனே என வியப்படைந்தேன்.

vaira bala

ஓரங்கட்டப்பட்ட தல தோனி!

vrsuba

நித்தி... ஏதோ ஒரு நாட்டில் போய்த் தஞ்சமடைவார் என்றுதான் நினைத்தேன்... இப்படி ஒரு தீவையே வாங்குவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கலே.

Adhirai Yusuf

முட்டைக்கோஸும், வெள்ளரிக்காயும் வெங்காயத்திற்கு சப்ஸ்டிட்யுட் ஆனது.

Gopi_Ontheway

உங்கள் சிந்தையில் உதித்த ஐந்தாவது கேள்வி.

கே.ரவி, சென்னை

`எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ்!

ஜெ.மாணிக்கவாசகம், சேலம்

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.

RamuvelK

வள்ளுவருக்குப் பூசினாங்களே காவி... ஆயுசுக்கும் மறையாத ஆச்சர்யம்!

மகா, திருப்பூர்

`அடிமைப்பெண்’ எம்.ஜி.ஆர் போலக் குனிந்தே கிடந்த ஒரு கூட்டம், `உலகம் சுற்றும் வாலிபன்’ எம்.ஜி.ஆர் போல உலகத்தைச் சுற்றி வருவார்கள் என்று கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை.

ravikumar.krishnasamy

? சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டு முதல்வரானால் என்ன நடக்கும்?

தமிழ்ப் பொறுக்கிகளின் தலைவரான பெரும் பொறுக்கியே என்னும் சுவரொட்டிகளைப் பார்த்து மகிழலாம்.

mekalapugazh

மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ், நெல்லைத் தமிழ் மாதிரி புதிதாக சுப்பிரமணியன் சுவாமி தமிழும் உருவாகும்.

bommaiya

Subramanian Swamy
Subramanian Swamy

‘எந்த சாமிக்கு அர்ச்சனை?’ ‘நம்ம சுப்பிரமணிய சாமிக்கு’ன்னு ஒரு விளம்பரம் வரும்.

Gopi_Ontheway

மருத்துவமனைகள் போன்று நீதிமன்றங்களும் 24x7 எனச் செயல்படும்.

madurai.alagu

வழக்கு தொடரும் துறை என்று ஒரு தனித் துறையை உருவாக்குவார்.

பா.ஜெயக்குமார், வந்தவாசி

இப்பொழுது நடக்குறதைப் பார்த்தாலே சு.சுவாமி முதல்வரா இருக்குற மாதிரிதானே இருக்கு.

சேதுராமன்

தமிழ்நாட்டுக்கும் ரஷ்யாவிற்கும் போர்கூட நடக்கும்.

balasubramni1

தமிழிசை தமிழக கவர்னர் (அவருக்கு ‘செக்’ வைக்க)

Raja90881339

பெரிய வித்தியாசம் இருக்காது..!

பழனிசாமிக்கும், சு.சாமிக்கும்..!

maathorubhagan

கற்பனைன்னாலும் ஒரு நியாயம் வேணாமாடா?

007BOND_Villan

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: அடடா ஆக்‌ஷன்!

? சிம்பு இயக்கத்தில், குறளரசன் இசையமைப்பில், டி.ஆர் ஹீரோவாக ஒரு படம் நடித்தால் அதற்கு டைட்டில் என்னவாக இருக்கும்?

? மொக்கையான வாட்ஸப் ஃபார்வர்டு அனுப்புபவர்களை சமாளிப்பது எப்படி?

? இப்போது உங்களுக்குப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

? பழைய ராஜா ராணி படங்களில் உங்களுக்குச் சிரிப்பூட்டும் விஷயம் எது?

? இன்னும் ஓராண்டு மட்டுமே தொடரப்போகும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்னென்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism