சிவாஜி முதல் விஜய் வரை பாரதியார் கெட்டப்பில் நடித்துவிட்டார்கள். இதுவரை யாரும் நடிக்காத புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கெட்டப்பில் யார் நடிக்கலாம்?
சிவகுமார் அசத்திவிடுவார். கவிதைகளையும் மூச்சுவிடாமல் சொல்லி விடுவார்.
தார்சி எஸ்.பெர்னாண்டோ,
சென்னை
அழகம்பெருமாள்
மது, கும்பகோணம்
நாஞ்சில் சம்பத். மீசை அளவைக் கொஞ்சம் குறைச்சுக் கற்பனை செஞ்சு பாருங்க.
எ. முகமது ஹுமாயூன்,
நாகர்கோவில்
ஜான் விஜய்தான் என்னுடைய தேர்வு.
ப. இராஜகோபால்,
மன்னார்குடி
தமிழ் நன்றாகத் தெரிந்த, சிறப்பாகத் தமிழை உச்சரிக்கும் பிரகாஷ் ராஜ் சாலப் பொருத்தமானவர்.
ஆர். ஸ்ரீகாந்தன், சென்னை
ரெங்காராவ் நடித்தால் பொருத்தமா இருக்கும். ஆனால் அவர்தான் உயிரோடு இல்லையே.
எஸ். மோகன்,
கோவில்பட்டி
விட்ட குறை, தொட்ட குறையா இல்லாம, பேசாம கமலே பாரதிதாசனா ஹிட்லர் மீசையோட நடிக்கலாம். ஆனா பாமரருக்கும் புரியுற பாவேந்தர் பாடல்களுக்கு, அவருக்கே புரியாத மாதிரி கமல் விளக்கம் கொடுக்காம இருந்தா சரி.
ச.பிரபு, குற்றாலம்
நடிகர் ராஜேஷ் சரியாக இருப்பார்.
absivam
மௌலி நடிக்கலாம்.
vrsuba

‘இருக்கு... ஆனா இல்லை’ என்பதற்கு உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு ஜாலி உதாரணம்..?
பிரசவம்தான். ‘அம்மா’ என்கிற ஸ்தானம் மகிழ்ச்சியா இருக்கு, ஆனா இல்லை!
லாவண்யா, சென்னை
வாரந்தோறும் வியாழனன்று காலையில் விகடன் வாங்கி ஆர்வமுடன் ‘வாசகர் மேடை’யில் இந்த வாரம் நம் பெயர் இருக்கும் என நினைப்பேன். ஆனா இருக்காது.
பாலாசரவணன், சென்னை
பேங்க் அக்கவுன்ட் இருக்கு, மினிமம் பேலன்ஸ் இல்லை!
நா.இரவீந்திரன்
நாவல் எழுத ஆசை. ஆனால், வாசகர் கடிதம்கூட எழுத வரமாட்டேன்கிறதே!
ஆ. மாடக்கண்ணு,
பாப்பான்குளம்
பதினைந்து வருடங்களுக்கு முன் டிரைவிங் கற்றுக்கொண்டு எடுத்த லைசென்ஸ் இருக்கிறது; ஆனால் ஓட்டுவதற்கு கார்தான் இல்லை.
எம் விக்னேஷ், மதுரை
கொரோனா இருக்கா இல்லையான்னு தெரியாம வாழுற நம்ம வாழ்க்கை.
Vanma_Godown
லவ் இருக்கு; லவ் பண்ண லவ்வர் இல்லை.
leo_di_caprio13
அம்மா மரணம் தொடர்பான அனைத்து ஆதாரமும் இருக்கு. ஆனா இப்போதைக்கு எங்கிட்ட இல்லை: ஓ.பி.எஸ்.
balasubramni1
மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கு... ஆனா இல்லை.
Naan_raja
அன்லிமிடெட் கால் பண்ண வசதி இருக்கு, ஆனா கால் பண்ணத்தான் யாரும் இல்லை.
sasitwittz
மரம் வளர்க்க ஆசை இருக்கு... ஆனா அபார்ட்மென்ட்ல மரம் வளர்க்க முடியாதாமே!
Saisudhar1
வீட்டு பட்ஜெட், அரசு பட்ஜெட் - என்ன வித்தியாசம்?
இரண்டுமே பற்றாக்குறை பட்ஜெட்தான்.
கே.விஸ்வநாதன்,
கோயம்புத்தூர்
வீட்டு பட்ஜெட்டுக்குக் கடன் வாங்கினா நாமதான் கட்டியாகணும். அரசு பட்ஜெட்டுக்குக் கடன் வாங்கினா அடுத்ததாக வரும் ஆட்சியாளர்கள் தலையில கட்டிடலாம்.
வளர்மதி ஆசைத்தம்பி,
தஞ்சாவூர்
அரசு பட்ஜெட் : பிடிக்கலைன்னா வெளிநடப்பு செய்யலாம்.
வீட்டு பட்ஜெட் : வாய்ப்பேயில்லை ராஜா.
பூநசி.மேதாவி, சென்னை
வீட்டு பட்ஜெட் ~ ஏதாச்சும் வாங்கணும்னு நினைச்சுப் போடுவது.
அரசு பட்ஜெட் ~ எல்லாத்தையும் விற்கணும்னு நினைச்சுப் போடுவது.
saravankavi
டாஸ்மாக்கால லாபம் வந்தா அரசு பட்ஜெட். நஷ்டம் வந்தா வீட்டு பட்ஜெட்.
HariprabuGuru
வீட்டு பட்ஜெட்-சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும்.
அரசு பட்ஜெட்-செவ்வாய்க் கிரகத்துக்கு மிக அருகாமையில் இருக்கும்.
urs_venbaa
அரசு பட்ஜெட் ஷங்கர் படம் மாதிரி பிரமாண்டமாக இருக்கும். வீட்டு பட்ஜெட் வி.சேகர் படம் மாதிரி. விரலுக்கேத்த வீக்கம் அவ்ளோதான் வித்தியாசம்.
itz_idhayavan
பசங்களுக்கு அல்வா வாங்க நிதி ஒதுக்கினால் வீட்டு பட்ஜெட்!
மக்களுக்கு அல்வா கொடுத்துட்டு நிதி ஒதுக்கினால் அரசு பட்ஜெட்!
pbukrish
20,000 புத்தகங்களைப் படித்து பிரமிக்க வைக்கும் அண்ணாமலை ஒரு புத்தகம் எழுதினால், நாம் இன்னும் பிரமிக்கும் அளவுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?
போலீஸ் முதல் ‘போலி’ஸ் வரை
லாவண்யா
ஆயிரம் சம்மன் வாங்கிய அபூர்வ அண்ணாமலை
ஆர். இந்துமதி,
மன்னார்குடி.
படிக்காததும் கைமண் அளவு.
சி.சுரேஷ், தருமபுரி
காக்கி, காவி மற்றும் கூகுள்
கொ.மூர்த்தி,
குட்டலாடம்பட்டி
ஹௌ டு ரீட் லைக் சிட்டி ரோபோ
ப.த.தங்கவேலு, பண்ருட்டி
பொய்மையும் பொய்மையுடைத்து
லீலாராம், தக்கலை
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்
செந்தில், மைசூர்
அலப்பறைகள் ஓய்வதில்லை
எஸ். வாஜு, சென்னை
படித்தவுடன் கிழித்துவிடவும்
அந்தோணி ரெனிஸ்டன். வி
நம்பினால் நம்புங்கள்
பெ.பொன்ராஜபாண்டி,
மதுரை
ஆட்டையும் நாட்டையும் பராமரிப்பது எப்படி?
ரிஷிவந்தியா, தஞ்சாவூர்
டிரெண்டிங் லட்சியம்!
ட்ரோலிங் நிச்சயம்!
pbukrish
முப்பது நாளில் முந்நூறு புத்தகம் படிப்பது எப்படி?
DevAnandR155
அரெஸ்ட் பண்ணுங்க
6 மணி நேரம் ஆபீஸ்ல காத்திருக்கேன்
JaNeHANUSHKA
தி பிரதர் மவுன்ட்
IamJeevagan

திடீரென்று உங்களுக்கு வால் முளைத்தால் என்ன செய்வீர்கள்?
எனக்கு நானே ‘டெயில் வுமன்’ எனப் பட்டம் வைத்துக்கொண்டு ஊரைக் கலக்குவேன்.
க.கீர்த்தனா, சென்னை
பேன்ட் தைக்கும்போது பின் பக்கமும் ஜிப் வைக்கச் சொல்வேன். வாலுக்கு வசதியாக!
ராம்கி
வால் மொளச்சா பஸ்ல, வேற எங்கயும் கூட்டத்துல அனுமார் மாதிரி சீட் பத்திக் கவலைப்படாம வால்மேல உக்காந்துக்கலாம்.
கி.சரஸ்வதி, ஈரோடு
முதல் வேலையா டெயில் இன்ஷூரன்ஸ்...!
மணிமேகலை பாலு.
வால் முனையை எடுத்துக் காதில் விட்டு சுகமா குடைவேன்.
ஆ.கதிரேஷ், ஈரோடு
அடிக்கிற வெயிலுக்கு விசிறியா யூஸ் பண்ண வேண்டியதுதான்!
இர.செல்வநிகிலா
இத காரணம் காட்டி Work from Home இன்னும் ஒரு வருஷம் Extend பண்ணிடுவேன்!
கண்ணன் V
முதுகு தேய்த்துக் குளிக்க வசதியாக இருக்கும்.
இந்திராணி தங்கவேல்,
சென்னை
ஆஞ்சநேயர் அவதாரம்னு சொல்லி கலெக்ஷன்ல இறங்கிட வேண்டியதுதான். வாயில வடை சுட்டால்தான் வடைமாலை கிடைக்கும் பாஸூ!
absivam
என்னை வாலாட்ட வருவாளா, நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளான்னு பாட வேண்டியதுதான்.
saravankavi
யாரையும் தொட விடமாட்டேன். அப்டி தொட்டா “வாலு, வால விடு”ன்னு பன்ச் பேசுவேன்.
imSambath
`கவசத்தையும் கண்டதில்ல
எந்தக் குண்டலமும்கூட இல்ல
வால் முளைச்சு நின்னேன் பாரு
வந்து சண்டை போட எவனுமில்லை’ன்னு பாட்டுப் பாடுவேன்.
balasubramni1
உ.பி-யில் கட்டும் ராமர் கோவில் பக்கம் போய் விடுவேன். அங்கேதானே நமக்கு ராஜமரியாதை கிடைக்கும்.
amuduarattai
‘நீ வீட்ல வாள் வச்சிருக்கவன், நான் உடம்பிலே வால் வச்சிருக்கவன்டா’ என பன்ச் டயலாக் விடுவேன்.
pbukrish
டாக்டரிடம் சொல்லி, அந்த வால் முடியை எடுத்து, எனது வழுக்கைத் தலையில் hair
implantation செய்யச் சொல்வேன்..!
LAKSHMANAN_KL

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com
1. ஐ.பி.எல் பார்க்கிறேன் பேர்வழி என உங்கள் வீட்டில் நடக்கும் கூத்துகள் என்னென்ன?
2. எந்நேரமும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு இருப்பவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம்?
3. நெல்சன் - ரஜினி இணையும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும்?
4. ஸ்டாலின் - மோடி சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் மைண்ட்வாய்ஸ் என்ன பேசியிருக்கும்?
5. தவறு செய்யும் அமைச்சர்களை இலாகா மாற்றுவதைப்போல் இன்னும் என்னென்ன ஈஸியான தண்டனைகள் கொடுக்கலாம்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!