யாருமே எடுக்காத அளவு சினிமாவில் பிரமாண்டம் காட்டணும்னா என்ன பண்ணலாம்?
புரொட்யூசரை ஸ்டோரி டிஸ்கஷனுக்கே பிரமாண்ட பங்களா கட்டித் தரச் சொல்லலாம்.
மஹஜூதா
செவ்வாய் கிரகத்தில் சண்டைக் காட்சி எடுக்கலாம்.
M. இராஜேந்திரன், லால்குடி
டீமானிட்டைசேஷன் நிகழ்வுப் பின்னணியில் ஒரு கதை எழுதிப் படமாக்கலாம். யோசித்துப் பாருங்கள்... இந்தியாவின் எல்லா நகரங்களின் ஏ.டி.எம் முன்பும் மக்கள் வெள்ளம் நிற்கும் காட்சியை. எவ்வளவு துணை நடிகர்கள் தேவைப்படும், எத்தனை ஊர்களில் படமாக்கப்பட வேண்டும்?!
ஈனோஸ் இப்ராஹீம்.
வானில் நூறு ஹெலிகாப்டர் பறக்க அதில் ஒரு ஹெலிகாப்டரில் ஒரு லிட்டர் பெட்ரோலுடன் வில்லன் தப்பிக்கிறான். ஹெலிகாப்டருக்கு மேலே பறக்கும் ஏரோப்ளேனிலிருந்து ஸ்கை டைவிங் செய்து பெட்ரோலின் வாசனையை வைத்தே சரியாக ஹீரோ வில்லனின் ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்கிறார். இதைப் பத்தாயிரம் பேர் இமயமலை உச்சியிலிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
தஞ்சை ப்ரணா
ஹீரோ: அம்பானி
வில்லன்: விஜய் மல்லையா
சண்டைப் பயிற்சி: பாபா ராம்தேவ்
டைரக்ஷன்: ஜீ
தயாரிப்பு: அதானி
பிரமாண்டத்துக்குக் கேக்கவா வேணும்..?
ஆர். பத்மப்ரியா
பசிபிக் கடல் முழுக்கப் பூத்தூவி அதிலொரு பாடல் காட்சியும், இமயமலை முழுக்க பெயின்ட் அடிச்சு அதுல இன்னொரு பாடல் காட்சியும் எடுக்கலாம்.
அஜித்
ஹீரோ தனது டூவீலருக்குப் பெட்ரோல் போடுகிறார். பிறகு தனது காருக்கு டீசல் போடுகிறார். பிறகு அந்தக் காரில் பல டோல்கேட்ஸ் தாண்டி நகைக்கடைக்குப் போய் ஹீரோயினுக்குத் தங்க நகைகள் வாங்குகிறார். தனது அசையாச் சொத்துகளுக்குச் சொத்து வரி கட்டுகிறார்.
எஸ். ஏ. விஜயலஷ்மி

ஹரி டைரக்ஷனில் டாடா சுமோ பனை மரத்தில் மோதுவதற்குப் பதிலாக ராக்கெட்டுகளை செம்மரத்தில் மோத விட்டுப் படமாக்கலாம்!
absivam
ரஜினி பீஷ்மராக, கமல் துரோணராக, அஜித் கிருஷ்ணராக, விஜய் அர்ஜுனனாக, விக்ரம் கர்ணனாக, விஜய் சேதுபதி துரியோதனனாக, சூர்யா பரசுராமனாக, கார்த்தி பீமனாக, சரத்குமார் தர்மனாக, ஜேசன் சஞ்சய் அபிமன்யுவாக, எஸ்.ஜே.சூர்யா சகுனியாக நடிக்க கே.எஸ்.ஆர் மகாபாரதத்தை எடுக்கலாம்.
IamJeevagan
எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்களின் ‘வேள்பாரி’ நாவலை ராஜமௌலி இயக்கத்தில் திரைப்படமாக்கினால் பிரமாண்டமாக இருக்கும்.
NedumaranJ
ஒரு ராட்சத மிருகம் கடல் தண்ணீரை முழுதுமாகக் குடித்துவிட கதாநாயகனும் காமெடியனும் சேர்ந்து பல போராட்டங்களுக்குப் பின் அந்த ராட்சத மிருகம் குடித்த கடல் நீரைத் துப்ப வைத்து பிரமாண்டமாக எடுக்கலாம்.
NatarajanAS2
ம.தி.மு.க வளர்ச்சியடைய வைகோவுக்கு சில ஐடியாக்கள்...

அ.இ.ம.தி.மு.க என்று மாற்றி கட்சியின் பெயரை மட்டுமாவது வளர்ச்சி அடையச்செய்யலாம்.
செல்லத்துரை
முதல் எழுத்தை எடுத்து விட்டாலே வளர்ச்சிதானே!
. மல்லிகா குரு
ஒரே ஐடியாதான் -
ம.தி.மு.க-வுக்கு பிரசாந்த் கிஷோர் கட்டுப்படியாகாது. அதனால் அவரிடம் அசிஸ்டன்ட்டாகத் தொழில் கற்ற ஒருவரைப் பிடித்து துரை வையாபுரிக்கு ஆலோசகராக்கலாம்.
எம்.கலையரசி
புலி பெயரில் படக்கம்பெனி ஆரம்பித்து துரையை நாயகனாக வைத்து, வருடத்துக்கு இரண்டு என அடுத்த நான்கு வருடத்துக்கு எட்டுப் படம் எடுத்து வெளியிட்டால், அடுத்த தேர்தலில் மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைக்கும்.
#சந்தேகம் இருந்தால் எஸ்.ஏ.சந்திரசேகரை அணுகலாம்.
KRavikumar39
இந்தக் கேள்விக்கு வைகோ பதில் எழுதி விகடன் வாசகர்களைக் கவரலாம்.
Vasanth920
அமெரிக்க ஜனாதிபதிக்கு ஐடியா சொல்ல ரெடி...
வைகோவுக்கு மட்டும், ப்ளீஸ், வேண்டாம்..!
ThendralBalu25
நீங்கள் ரசித்த ஒரு ஆட்டோ/பைக் வாசகம்?
“முட்டாதே... முழுவதும் கடன்.”
பி. பாரதி
பணத்தைப் பொறுப்பாக வங்கியில் போடத் தெரிந்த உனக்கு, குப்பையை குப்பைத் தொட்டியில் போடவும் தெரிந்திருக்க வேண்டும்!
ரிஃபாத்துன்னிஷா
நம்பர் 108-க்கு ஆக்சிலேட்டரை அழுத்தவும்.
நபா ஷா
மத வெறி வளர்த்தால், பல
கல்லறைகள் உருவாகும்;
மரம், செடி வளர்த்தால் நம்
சந்ததிகள் நலமாகும்..!
கே.இந்து குமரப்பன்
நாலு பேர் வாயை மூட முடியாது!
உன் காதுகளை மூடிக்கொள்!
ஆர்.ஆர். உமா
ஆட்டோ பின்...
நிதி உதவி - எஸ்.பி.ஐ (மாமனார் வேலை பாக்குறார்)
DevAnandR155
RRR போல தமிழில் எந்த இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கலாம்? (இதுவரை இணைந்து நடிக்காத நடிகர்கள் மட்டும்)
ரஜினியும் சிம்புவும் இணைந்து நடிக்கலாம்... படத்தின் பெயர்: SSS (சூப்பர் ஸ்டார் அண்டு சிம்பு)
பி. மஹதி
அஜித் - விஜய்சேதுபதி
த.வேல்முருகன்
அஜித்தும் சூர்யாவும் சேர்ந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும்!
ப.சோமசுந்தரம்
இளம் ஹீரோக்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதியும், துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கலாம்.!
கே.எம். ரவிச்சந்திரன்
R R R போல தமிழில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிப்பதாக இருந்தால் தனுஷ் ராம் கேரக்டரிலும், கார்த்தி பீம் கேரக்டரிலும் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும், நடிப்பதற்கு இருவருக்கும் சம ௮ந்தஸ்தான வாய்ப்பு உள்ளது.
கனகம்பொன்னுசாமி
கார்த்தி மற்றும் சூர்யா... ரெண்டு பேரும் நீளமான மீச வச்சுக்கிட்டு படத்துக்கு SSSனு பேரும் வச்சிடலாம் (singam, siruthai, sivakumar).
அ.வேளாங்கண்ணி
பேய்களை வைத்தே மிரட்டும் ராகவா லாரன்ஸும் சுந்தர். சியும் இணைந்து நடித்தால் பேய்களே மிரண்டு போகும்.
பெ.பாலசுப்ரமணி
கமல் ஹீரோவாகவும் அர்விந்த் சுவாமி மிரட்டும் வில்லனாகவும் நடிக்கலாம்.
SriRam_M_20
சிம்புவும் அதர்வாவும்... சிம்புவுக்கு அப்பாவாக டி.ஆர்., அதர்வாவுக்கு சத்யராஜ்.
ParveenF7
ரெட்ஜெயண்ட் மற்றும் கிளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், உதயநிதியும் அருள்நிதியும் நடிக்க `அன்புள்ள அண்ணா’ -ன்னு படத்தின் பெயர். ஆமா, குடும்பப்படமேதான்!
pasakkarapaiyan
தோனியை மிஸ் பண்றவங்க அதை ஒரு குட்டிக்கவிதையாச் சொல்லுங்க பார்ப்போம்!

கவிதை வரல
கண்ணீர்தான்
வருது.
அ.பச்சைப்பெருமாள்
கரை சேர்க்கும் தோனியே
நட்டாற்றில் விட்டது ஏனோ...
குழந்தைவேலு, மதுரை
CSK சிங்கமே
World Cup வென்ற தங்கமே
கிரிக்கெட்டில் நீயே தலை
இன்னும் அடிக்குது உன் அலை.
கு.வைரச்சந்திரன்
தென்பாண்டி சீமையிலே! சேப்பாக்கம் வீதியிலே!
சி.எஸ்.கே `தலை’யாக வந்தவனே, யார் அடிப்பாரோ... இனி,
ஹெலிகாப்டர் ஷாட்
யார் அடிப்பாரோ?!
திருச்சி இமான்
காத்தாடி இல்லா ஹெலிகாப்டர்...
கிரிக்கெட் ரசிகர்களின் எனர்ஜி பூஸ்டர்...
எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு அண்டர் டேக்கர்...
எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் தோனி டோன்ட் கேர்..!
Rajasekar4795
மிஸ் யூ தோனி
என்பார்
ஐ.பி.எல் ரசிகர்கள்.
லவ் யூ தோனி
என்பார்
கிரிக்கெட் ரசிகர்கள்.
IamUzhavan
எதிரணிக்கு வைத்திடுவாய்
ஆப்பை...
எப்போதும் வென்றிடுவாய்
கோப்பை..!
rishivandiya
*****
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com
1. ‘அன்பே சிவம்’ படத்தை ரீமேக் செய்தால் இப்போது யார் நடிக்கலாம்?
2. உள்ளூர்த் திருவிழாக்களில் உங்களுக்குச் சிரிப்பு மூட்டும் விஷயம் எது?
3. பழைய படங்களைப் பார்த்து பார்த்துப் பாராட்டும் ராமதாஸ், சினிமாவுக்கு வந்தால் எந்தப் படத்தில் நடிக்கலாம்?
4. ஜோசியத்தில் இது நடக்கும் எனக் கூறி இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் நடக்காத சம்பவம் எது?
5. ஏற்கெனவே வெளியான ஒரு படத்தின் டைட்டிலை மாற்றலாம் என்றால் எந்தப் படத் தலைப்பை எப்படி மாற்றுவீர்கள்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!