Published:Updated:

வாசகர் மேடை: உதய் மார்லி!

அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்

மூவரும் காக்கிச் சட்டை, கறுப்பு கவுன், வெள்ளைக் கோட் அணிந்திருந்து காவித்துண்டைப் போர்த்தி யவர்கள்.

வாசகர் மேடை: உதய் மார்லி!

மூவரும் காக்கிச் சட்டை, கறுப்பு கவுன், வெள்ளைக் கோட் அணிந்திருந்து காவித்துண்டைப் போர்த்தி யவர்கள்.

Published:Updated:
அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்

? அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்: ஜாலியான வித்தியாசங்கள் சொல்லுங்கள்.

அண்ணாமலை : 

அரைச்ச மாவுல தீஞ்சு போன தோசை போடுவார்.

முருகன் : 

அரைச்ச மாவையே அரைச்சுட்டு இருப்பார்.

தமிழிசை சௌந்தரராஜன் :

மாவே அரைக்க மாட்டாங்க.

 ஆர்.பிரசன்னா, திருச்சி.

வித்தியாசத்தை விடுங்க, இந்த ஒற்றுமைகளைப் பாருங்க...

மூவரும் தேர்தலில் தோற்ற பின்னரே பதவிக்கு வந்தவர்கள்.

மூவரும் மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு ரொம்பப் பிடித்தவர்கள்.

மூவரும் காக்கிச் சட்டை, கறுப்பு கவுன், வெள்ளைக் கோட் அணிந்திருந்து காவித்துண்டைப் போர்த்தி யவர்கள்.

saravankavi

தமிழிசை :

பேச்சில் உளறல் இருக்கும், ஆனால் உரசல் இருக்காது.

எல். முருகன் : 

பேச்சில் உரசல் இருக்கும், ஆனால் உத்வேகம் இருக்காது.

அண்ணாமலை : 

பேச்சில் உத்வேகம் இருக்கும், ஆனால் உருப்படியாக இருக்காது.

 ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்

அண்ணாமலை: ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு... 

எல்.முருகன்: குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்.  தமிழிசை சௌந்தரராஜன்:

தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே. 

mohan_sendhil

தமிழிசை சௌந்தர ராஜன்: முன்னாள் மீம்ஸ் கன்ட்டென்ட்.

எல்.முருகன்: நேற்றைய மீம்ஸ் கன்ட்டென்ட்.

அண்ணாமலை: இன்றைய மீம்ஸ் கன்ட்டென்ட்.

 கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

‘தாமரை மலர்ந்தே தீரும்' - தமிழிசை... ‘மலர்ந்தே தீரும்' - எல்.முருகன், ‘... தீரும்' - அண்ணாமலை. 

 நா.இரவீந்திரன், வாவிபாளையம்.

vikatan
vikatan

? கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் - மூன்று பேருக்கும் மூன்று மாஸ் பன்ச் சொல்லுங்கள்.

கமல்: என் கட்சிக்காரங்க வேணும்னு கேட்டியாமே, இப்பவே எடுத்துக்கோ... அப்புறம் ஆள் இருக்காது.

விஜய் சேதுபதி: உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் கொடுக்குறேன், என்னப் பேசவிடாம செஞ்சுரு... அப்புறம் நீ தாங்கமாட்ட!

பகத் பாசில்: எனக்கும் சேர்த்து சேட்டன்கள் பறஞ்சிட்டாங்க, இனி ஞான் என்ன பறைய?

 ச.பிரபு, குற்றாலம்.

கமல்: நான் தோற்கல, நீங்க தோத்துட்டீங்க மக்களே! 

விஜய் சேதுபதி: நான்தான் வில்லாதி வில்லன், அடுத்த படத்துல எனக்கு நானே வில்லன்.

பகத் பாசில்: பன்ச்சா... எனக்கு அதெல்லாம் தெரியாது, நடிக்கச் சொல்லுங்க, நடிக்கறேன்.

 அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

கமல்: நான் என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரிந்துகொள்ளும் வயசு இன்னும் வரல.

விஜய் சேதுபதி: எங்களுக்கு எத்தனை வயசானாலும், நீங்கள் சொல்றது புரியப் போவதில்லை.

பகத் பாசில்: எங்களுக்கு மட்டுமில்லை, சமயத்தில் உங்களுக்கே நீங்க என்ன சொன்னீங்கன்னு புரியப் போவதில்லை.

amuduarattai

கமல்: நான் காதல் இளவரசன்னு காதல் பரிசு வாங்கியவன்.

விஜய் சேதுபதி: காதலும் கடந்து போகும்னு, காதலை அசால்ட்டா டீல் பண்ணுனவன்.

பகத் பாசில்: எங்க அப்பாவே காதலுக்கு மரியாதை கொடுத்தவர். நானோ காதலில் விழுந்தவன்.

amuduarattai

? ஓ.டி.டி தளங்களில் உங்களைக் கடுப்பாக்கும் ஒரு விஷயம் என்ன?

படமோ/சீரியலோ மொக்கைன்னுதான்

பார்க்காம விட்ருப்போம். CONTINUE WATCHINGனு முதல்ல வந்து நிக்கும். 

 ரகுநாத், மதுரை.

கர்ண கொடூரமான டப்பிங் வெர்ஷன்!

jerry

எல்லா ஊர்லயும் வருஷக் கணக்கா புது பஸ் ஸ்டாண்டுன்னு பேர் இருப்பது மாதிரி பல பழைய படங்களுக்கு ‘New movie’ன்னு பேர் இருப்பது.

urs_venbaa

சரி, ஊரடங்கு காலத்தில் பொழுது போகணுமேன்னு ஒரு ஓடிடி தளத்துக்கு ஒரு வருஷத்துக்கு சந்தாதாரர் ஆனா, புடிச்ச படமெல்லாம் மத்த தளங்களில் வருது... என்னத்த சொல்ல? 

 பரமசிவன், நடுக்கல்லூர், நெல்லை

வேறென்ன... ஒரே தளத்தில் போடாமல், வெவ்வேறு தளத்தில் வெளியிட்டு நம்ம காசைப் பிடுங்கி OD (overdraft) ஆக்கறதுதான்.

 சஜிதா, பெங்களூரு.

? ‘வலிமை’ மோஷன் போஸ்டரை வைத்து அதன் கதையைச் சொல்லுங்கள், பார்க்கலாம்.

துப்பாக்கி சுடுதலில் இளம் வீரர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து அவர்களை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வைத்து, அவர்களின் வலிமையை அதிகரித்துத் தங்கப் பதக்கம் வாங்க வைக்கிறார் கோச்சான தல அஜித்.

 பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்

கோஸ்ட் ரைடர் மாதிரி நைட் டைம் வேட்டை.

 உமர் அஹமது

ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணின் பிணம் மிதக்கிறது. அந்தக் கொலையைச் செய்தவர் பற்றிய விவரங்களைத் துப்பறியக் கிளம்புறார் நம்ம தல..!

 K.M.ரவிச்சந்திரன், மதுரை

ஏ.டி.எம் கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் பிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை. அதுதான் அஜித்தின் வலிமை.

 வானதி ஜவஹர், விருதுநகர்

வினோத்துக்கே வெளிச்சம். போனி கபூர்க்காவது தெரியுமான்னு தெரியலயே!

nedumaranj

எதே... மோஷன் போஸ்டர் வெச்சு ஒன்லைனா? அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... அப்பயும் சொல்லிடாதீங்க ரேஞ்சில்தானே இருந்துச்சுங்க அந்த போஸ்டர்!

nedumaranj

‘பைக்கின்றி அமையாது வலிமை!' பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் தயாரிக்கிற நெட்வொர்க்கின் மூலகர்த்தாவை, தன்னோட பைக்குல துரத்திட்டுப் போய் அடக்கி, பெண்களுக்கு எப்படி நல்லது செய்யுறார் தல என விறுவிறுப்பான கதை. ரசிகர்களுக்கு விருந்து படைக்க, பைக் ஓட்டிக்கிட்டே காதலி ஹூமா குரோஷியோட, அட்டகாசமா டூயட் ஒண்ணும் பாடிக் கலக்குகிறார்.

vc.krishnarathnamF

எங்களுக்குக் கதையெல்லாம் தேவையில்லை, தியேட்டரில் ‘தல’ முகத்தைப் பார்த்தால் போதும்.

profile.

வாசகர் மேடை: உதய் மார்லி!

? சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதியை சேகுவேராவாகச் சித்திரித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். உண்மையில் உதயநிதி யார் பயோபிக்கிற்குப் பொருத்தமாக இருப்பார்?

நெல்சன் மண்டேலா - கறுப்பும் சிவப்பும் இணைந்தால் கனகச்சிதமாக இருக்கும்! 

 நா.இரவீந்திரன், வாவிபாளையம்

பார்ப்பதற்கு மிக அப்பாவியாகத் தோற்றமளிக்கும் அவர் சவுரவ் கங்குலி பயோபிக்கில் நடித்தால் அளவெடுத்துத் தைத்தது போலிருக்கும்.

RavikumarMGR

சேகுவேராவுக்கு அடுத்து பிடல் காஸ்ட்ரோதானே நினைவுக்கு வருவார். அதனால் அவரின் பயோபிக்கில் நடிக்கலாம். 

balasubramni1

ஒன்றிய அரசுக்கு டஃப் கொடுக்கும் பினராயி விஜயன் பயோபிக்கில் நடிக்கலாம்.

urs_venbaa

ராமகிருஷ்ண பரமஹம்சரின் புகைப்படத்தைப் பார்த்தால் எனக்கு உதயநிதி முகம் ஞாபகத்துக்கு வரும். உதயநிதி அந்த மகானின் பயோபிக்கில் நடிக்கலாம்.

 எஸ்.மோகன், கோவில்பட்டி.

பாடகர் பாப் மார்லியின் பயோபிக்கில் நடிக்கலாம்.

 நாசர், திண்டிவனம்.

ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் பயோபிக்கில் நடிக்க வைக்கலாம், செம பொருத்தமாக இருப்பார்.

 பெ.பச்சையப்பன், கம்பம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சார்பட்டா பரம்பரை போல் ஒவ்வொரு கட்சிக்கும் பெயர் சூட்ட வேண்டும் என்றால் என்ன ‘பரம்பரை’ பெயர் சூட்டலாம்?

? ‘அப்டியே ஷாக் ஆகிட்டேன்’ என்று உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று..?

? ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை ரீமேக் செய்தால் சிவாஜி - பத்மினி கேரக்டர்களில் நடிப்பதற்கு இப்போது பொருத்தமான நடிகர்கள் யார்?

? தமிழ் சினிமாவில் இன்னமும் மாறாத க்ளிஷே என்று நீங்கள் நினைப்பது எது?

? ஒலிம்பிக்கில் எந்தத் தமிழக அரசியல் தலைவர் எந்த விளையாட்டில் பங்கேற்றால் பதக்கம் உறுதி?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com