Published:Updated:

வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

ஹெச்.ராஜா

ஹீரோவிற்கு அக்கா வேஷம். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி ஹீரோவை எரிச்சல்படுத்துவார்.

வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

ஹீரோவிற்கு அக்கா வேஷம். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி ஹீரோவை எரிச்சல்படுத்துவார்.

Published:Updated:
ஹெச்.ராஜா

அண்ணாமலையே சினிமாவில் நீச்சல் பயிற்சியாளராக நடித்துவிட்டார். மற்ற பா.ஜ.க தலைவர்கள் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் போன்றவர்கள் சினிமாவில் நடிப்பது என்றால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?

வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

ஹெச்.ராஜா: முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் கதாநாயகனுக்குத் தேர்தல் பிரசாரகர் ரோல் ஜமாய்க்கும். வெளி மாநிலத் தலைவர்கள் பேசும் பிற மொழியை மொழிபெயர்க்கும் காட்சிகளில் (ஜ)மாய்ப்பார்!

வானதி சீனிவாசன்: ஆர்.ஜே பாலாஜியின் அரசியல் படம் ஒன்றில் விவாதமேடையில் பங்கேற்பாளராக நடிக்கலாம். விவாத ரெய்னிங் கொட்டும்!

மருதூர் மணிமாறன்

வானதி சீனிவாசன்: ஊதாரியாகத் திரியும் ஹீரோவுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கும் அண்ணியாக பொருத்தமாக இருப்பார்.

ஹெச்.ராஜா: ஹீரோவுடன் சேர்ந்து ஊரையே நக்கலடிக்கும் ‘சித்தப்பு சரவணன்’ மாதிரி கேரக்டர்களில் வூடு கட்டி அடிப்பாரே..!

எம்.கலையரசி

ஹெச்.ராஜா: வக்கீல் வேஷம்... கோர்ட்டில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின் அவரே அதைத் தமிழில் மொழிபெயர்க்க, நீதிபதி புரியாமல் விழிக்க, சீன் செம ஜாலியா இருக்கும்.

வானதி சீனிவாசன்: ஹீரோவிற்கு அக்கா வேஷம். சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லி ஹீரோவை எரிச்சல்படுத்துவார்.

அ.சுகுமார்

வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

தமிழக சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த ஹெச்.ராஜா, ‘டாணாக்காரன் 2'-ல் ஈஸ்வரமூர்த்தி ரோலில் நடித்துப் பழிதீர்க்கலாம்!

வானதி, ‘விக்ரம் 3'-ல் கமல்ஹாசனின் ஏஜென்ட்ஸ் குழுவில் ஏஜென்ட் வீ.எஸ் ஆக நடிக்கலாம்!

ஜோ.ஆல்பர்ட் சந்துரு

‘கிழக்குச் சீமையிலே' கதையை ‘வடக்குச் சீமையிலே' என மாற்றி அண்ணன் தங்கையாக இருவரையும் நடிக்க வைக்கலாம்.

urs_venbaa

ஹெச்.ராஜா, சுப்ரமணியம் சுவாமியா நடிக்கலாம். (ஒத்துவரும்ல!) வானதி சீனிவாசன், பாடலாசிரியர் தாமரையாக நடிக்கலாம்.

nanbanvela

வட இந்தியர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் என்ன?

சாப்பிடுவது இரண்டு இட்லியாக இருந்தாலும் சாம்பார் மற்றும் இரண்டு வகை சட்னி இலவசமாகக் கொடுப்பது தென்னிந்தியர்கள். சாப்பிடுவது சப்பாத்தியாக இருந்தாலும் குருமாவுக்கும் பில் போடுவது வட இந்தியர்கள்.

செல்லத்துரை

ரயில் பயணங்களின்போது பல வட இந்தியர்கள் டிக்கெட் எடுப்பதில்லை. ரிசர்வேஷன் விதிகளைப் பின்பற்றுவதும் இல்லை. இரண்டிலும் தென்னிந்தியர்கள் நம்பர் ஒன்.

வி.பஞ்சாபகேசன்

‘பையா, ஏக் பானி பூரி!' என்றால் தென்னிந்தியர்கள், ‘சார், கார்டு மேலே இருக்க பதினாறு நம்பர் சொல்லு' என்றால் வட இந்தியர்கள்!

நா.இரவீந்திரன்

அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் ட்ரெயினின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் வட இந்தியர்கள். ஒரு ஆபத்தின் போது ட்ரெயினின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்தால் அது தென்னிந்தியர்கள்.

amuduarattai

வட இந்தியர்கள் - மதவெறி

தென்னிந்தியர்கள் - சாதி வெறி

RavikumarMGR

வட இந்தியன் ‘வேலை என்ன இருக்கு, சொல்லுங்க’ என்பான், தென்இந்தியன் ‘எவ்வளவு சம்பளம்’ எனக் கேட்பான்.

SaiAzhagesh

நகைக்குத்தான் கடன் குடுப்பேன் என்று ராஜஸ்தானில் இருந்து ராமநாதபுரம் வந்து கடை வைப்பது வட இந்தியர்கள். உள்ளூரை விட்டுப் போக மனசு இல்லாமல் 10 மளிகைக் கடை இருக்கற கிராமத்துல 11வது கடை போடுவது தென்னிந்தியர்கள்.

KaveriTweet

தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

வேறு எதை, டொனேஷனைத்தான்!

 டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

பெற்றோர்கள் படித்தவர்களாக இருந்தால்தான் பள்ளியில் பிள்ளைகளுக்கு சீட் தரப்படும் என்பதை மாற்ற வேண்டும்.

உமா சீனிவாசன்

நெருப்பாய்க் கொளுத்தும் வெயில் காலத்திலும் கழுத்தை இறுக்கும் டை, காலில் சாக்ஸ், ஷூ அணியச் செய்து இம்சிப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

எஸ்.இராஜேந்திரன்

பக்கத்துத் தெருவுலயே பள்ளிக்கூடம் இருந்தாலும் ஸ்கூல் பஸ்லதான் வரணும்னு 5,000 அபேஸ் பண்ற அராஜகத்தை நிறுத்தணும்!

absivam

எல்.கே.ஜி குழந்தைக்கு உணவுக் கட்டணம் வசூலிப்பதை... அந்தக் குழந்தை என்ன முனி ராஜ்கிரணா அவ்வளவு அதிகம் சாப்பிட!

manipmp

அட்மிஷன் என்ற பெயரில் அப்ளிகேஷன் கொடுத்து அதில் ஒரு வருமானம் பார்ப்பதை மாற்ற வேண்டும்...

sasitwittz

பிள்ளைகளை ‘படிப்பாளி' ஆக்க பெற்றோரைக் ‘கடனாளி' ஆக்குவதை மாற்ற வேண்டும்.

parveen0212

நாங்க சொல்ற துணிக்கடைலதான் யூனிபார்ம் துணி வாங்கணும், நாங்க சொல்ற டைலர்கிட்டதான் யூனிபார்ம் தைக்கணும்னு சொல்றதை மாற்ற வேணும்.

Anvar_officia

ஒரே நடிகர் முழுப்படம் நடிப்பது, சிங்கிள் ஷாட் சினிமாவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் என்ன புதுமையான முயற்சி செய்யலாம்?

ஒரு நடிகருக்கு பதில் இருவர். இன்டர்வெல் வரை அஜித், செகண்ட் ஹாஃபில் விஜய். இப்படி ஒரு படம் எடுக்கலாமே..? ரசிகர்களுக்குள் சண்டையும் வராது.

பர்வீன் யூனுஸ்

நடிகர் சங்கத்தின் தற்போதைய அத்தனை உறுப்பினர்களையும் வைத்து ஒரு பிரமாண்டமான படம் எடுக்கலாம்.

வி.சி.கிருஷ்ணரத்னம்

டைட்டில் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, ரசிகர்கள் பார்த்து விட்டுத் தலைப்பு சொல்ல வைத்து, புரொட்யூசர் மனதில் இருக்கும் சரியான டைட்டிலைச் சொல்ப வர்களுக்குப் பரிசு தரலாம்.

பெ.பாலசுப்ரமணி

படம் முழுவதும் ஆண்களே இல்லாமல் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் , தயாரிப்பு, பாடல்கள் என்று அத்தனையையும் பெண்களே பங்குகொள்ளும் புது முயற்சியாகச் செய்யலாம்.

 வி.சண்முகப்பிரியா, சிவகாசி.

எல்லாப் புதுமையும் செய்தாச்சு. இனி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தே நேரடியாக தியேட்டர்களுக்கு ஒளிபரப்ப லாம். கோடிகளை அள்ளிக் குவிக்கும் நடிகர்களின் ‘நடிப்பு' வெளிச்சத்தை மக்கள் புரிந்துகொள்வது மட்டுமன்றி, டைரக்டர், கேமராமேன், டெக்னீஷியன்கள், தொழி லாளர்களின் உழைப்பையும் மக்கள் நேரடியாகக் காணலாம்!

கே.கருணாநிதி

படுத்துக்கொண்டே படம் பார்க்கிற மாதிரி ஏற்பாடு பண்ணினா, போரடிச்சா ஒரு 3 மணி நேரம் நிம்மதியாவாவது தூங்கிட்டுப் போலாம்...

ஜெ.நெடுமாறன்

மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற ‘நீல வானம்' பாடலைப் போல வசனம் உட்பட முழுப்படத்தையும் ரிவர்ஸ்ல எடுக்கலாம்.

Vasanth920

வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

சினிமாக்காரர்கள் பேட்டியில் உங்களுக்குப் புரியாத விஷயம் எது?

அடிக்கடி காரணம் இல்லாமல் சிரித்துக்கொண்டே இருப்பது.

 S. கருணாகரன், சென்னை

இதுவொரு வித்தியாசமான படம்

 கோ.சு.சுரேஷ், கோவை

தேவையில்லாமல் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகள்.

 பி.சி.ரகு, விழுப்புரம்

‘இந்தப் படத்துல இந்த ஹீரோதான் நடிக்கணும்னு அஞ்சு வருஷமா வெயிட் பண்ணினேன்' அப்படின்னு சொல்லுவது.

சத்திய மூர்த்தி.G

பிரபல இளம் நடிகர்களின் அப்பாக்கள் தங்கள் மகனை ‘சார்' போட்டு அழைப்பது.

அஜித்

நாயகனைத் தேடிக்கிட்டு இருந்தேன். திடீரென ஒரு ப்ளாஷ், ‘நம்ம வீட்ல ஒரு பையன் இருக்கானே'ன்னு கேட்டேன், ஒத்துக்கிட்டார். கேமராவுக்கு முன்னாடி வந்துநின்னப்ப, அவரோட டெடிகேஷன் தெரிந்தது.

இயக்குநர் தந்தைகளின் பேட்டி...

DevAnandR155

படம்தான் பாக்க சகிக்கல, Making videoவையாவது ட்ரெண்ட் பண்ணுவோம்னு நினைக்கிற அந்த மனசு சார்.

vrsuba

படம் மொத்தமே பத்து தியேட்டர், இருபது ஷோன்னு சொந்தப் பணம் போட்டு ரிலீஸ் பண்ணி ஃப்ரீ டிக்கெட், ஸ்நாக்ஸ் குடுத்து வலுக்கட்டாயமா பார்க்க வெச்சிருப்பாங்க. ஆனா ‘இந்த மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து'ன்னு பேட்டி குடுக்கறது...

lollumanix

பாட்டு நல்லா வந்திருக்கு, காமெடி நல்லா வந்திருக்கு, கதை நல்லா வந்திருக்குன்னு சொல்றவங்க, படமா நல்லா வந்திருக்கான்னு பாப்பாங்களா இல்லையா...

SENTHIL_WIN

வாய்க்கு வந்த வார்த்தைய போட்டு எழுதிட்டு, போட்ட மியூசிக்கையே மறுபடியும் போட்டு ஒரு பாடலை வெளியிட்டுட்டு அதுக்கு வேற ‘பாடல் உருவான விதம்'னு ஒரு நேர்காணல் கொடுப்பது....

Vkarthik_puthur

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: வூடுகட்டி அடிக்கும் சித்தப்பு!

? எம்.ஜி.ஆர் கெட்டப்பையும் ரஜினி நடையையும் கலந்து அசத்தும் (?) லெஜண்ட் சரவணன் எந்த எம்.ஜி.ஆர்/ரஜினி படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?

? க்ரிஞ்ச் என்பதற்கு தமிழ் சினிமா, அரசியலில் இருந்து ஒரு உதாரணம்...

? கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு உடன்பிறப்புகளையும் மய்யத்துக்காரர்களையும் திருப்திப்படுத்துவதுபோல் ஒரு டைட்டில் சொல்லுங்க பார்ப்போம்!

? டி.வி செய்தி வாசிப்பில் நீங்கள் க்ளிஷே என்று கருதும் விஷயம்?

? ஸ்டாலினின் செஸ் ஒலிம்பியாட்டுக்குப் போட்டியாக எடப்பாடி பழனிசாமி என்ன விழா நடத்தலாம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com