Published:Updated:

வாசகர் மேடை: நான்தானே ஜென் வசந்தம்!

வடிவேலு, கவுண்டமணி
பிரீமியம் ஸ்டோரி
வடிவேலு, கவுண்டமணி

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தையே காமெடியாக இருவரையும் போட்டு எடுக்கலாம். டைட்டில்: கவுண்டரும் கைப்புள்ளையும்.

வாசகர் மேடை: நான்தானே ஜென் வசந்தம்!

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தையே காமெடியாக இருவரையும் போட்டு எடுக்கலாம். டைட்டில்: கவுண்டரும் கைப்புள்ளையும்.

Published:Updated:
வடிவேலு, கவுண்டமணி
பிரீமியம் ஸ்டோரி
வடிவேலு, கவுண்டமணி

கவுண்டமணியும் வடிவேலுவும் ரீ-என்ட்ரி ஆகி ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம், என்ன டைட்டில் வைக்கலாம்?

‘தர்மபிரபு-2’-ல் கவுண்டமணி எமதர்மனாகவும், வடிவேலு சித்திர குப்தனாகவும் நடிக்கலாம்.

 த.வேல்முருகன்

‘சிரிப்பு போலீஸ்’ சொன்ன சொல் மாறாத கோட்டைசாமியும், ஏட்டு ஏகாம்பரமும் இணைந்தால் `மாமூல்' காமெடிக்கு சில்லறையைச் சிதறவிடலாம்!

 நா.இரவீந்திரன்

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தையே காமெடியாக இருவரையும் போட்டு எடுக்கலாம். டைட்டில்: கவுண்டரும் கைப்புள்ளையும்.

ParveenF7

பாகுபலி `பிரபாஸ்’ கெட்டப்பில் வடிவேலுவும் `கட்டப்பா’ கெட்டப்பில் கவுண்டமணியும் நடிக்க, படத்தின் பெயர் `கட்டப்பாவுக்குக் கட்டம் சரியில்ல’.

Kirachand4

வாசகர் மேடை: நான்தானே ஜென் வசந்தம்!

ஜென் நிலை என்பதற்கு உங்கள் வாழ்க்கையிலிருந்து ஜாலியான உதாரணம் சொல்லுங்கள்!

கொரோனாத் தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடவேண்டிய நாள் கடந்தும் கிடைக்காமல், கடைசியில் போடுமிடத்தை அலைந்து தேடி வெற்றிகரமாகப் போட்டு வந்த பின், மறுநாள் வீட்டு அருகிலேயே சிறப்பு முகாம் என்று அறிந்ததும் ஏற்பட்டதே ஜென் நிலை.

 என்.உஷாதேவி

ஆபீஸில் புரமோஷனை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நாள்களில் மேனேஜர் நம்மை எவ்வளவுதான் திட்டினாலும் காது கேட்காதது போலவே இருப்பது.

 செல்வராஜ் K

விகடன் வாசகர் மேடையில் பதில்களைப் படித்துக்கொண்டு வரும்போது நாம் எழுதியது போலவே ஒரு பதில் வேறு யார் பெயரிலிலோ வந்திருப்பதைப் பார்த்ததும் வருவதுதான் ஜென் நிலை!

 ஆசிக் ஜாரிஃப்

``இயர் எண்ட்ல போயி ரெண்டு நாள் லீவு போடணுமா’’ன்னு கேட்டு என்னோட லீவை கேன்சல் பண்ண வெச்சிட்டு, ஒரு வார லீவ் எடுத்து குடும்பத்துடன் சுற்றுலா போன சக ஊழியருடைய வேலையையும் சேர்த்துப் பார்த்த போது என் மனநிலை.

RamuvelK

மழை வரும் என்று ரெயின் கோட் போட்டுக்கொண்டு போகும்போது மழையே வராது. அப்போது இருக்கும் மனநிலைதான்..!

chennappan10

``எங்க வீட்ல எல்லா முடிவும் ‘இவர்’தான் எடுப்பார்’’ என்று மனைவி சொல்லும்போது,

``ஆம்’’ என்றோ ``இல்லை’’ என்றோ சொல்ல முடியாத நிலை!

Suyambu26745699

சம்பளம் கிரெடிட் ஆன சிறிது நேரத்தில் இ.எம்.ஐ-க்கு பணம் பிடித்த மெசேஜ் வரும்போது ஏற்படுவதே ஜென் நிலை.

manipmp

எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகள், விமர்சனங்களின் போது பிரதமர் மோடி இருக்கும் நிலை!

NedumaranJ

வாசகர் மேடை: நான்தானே ஜென் வசந்தம்!

தேர்தலில் தோற்றாலும் தலைவர் பதவியும் இல்லை; மத்திய அமைச்சர் பதவியும் இல்லை. ஹெச்.ராஜாவுக்கு என்றே ஒரு பதவியை உருவாக்கலாம் என்றால் அது என்ன பதவி?

தேசிய ‘திட்டக்' குழுத் தலைவர் பதவி...!

 மணிமேகலை பாலு

எதற்கெடுத்தாலும் பா.ஜ.க-வுக்கும், மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களைத் தமிழகத்தில் நியாயப்படுத்தியும் பேசி முட்டுக்கொடுக்கும் ஹெச்.ராஜாவுக்காக `முரட்டு முட்டர்' எனும் புதிய பதவியை உருவாக்கலாம்!

EpWNZCOMXj3asdB

எந்தப் பதவியை அவருக்குக் கொடுத்தாலும், அதன் முழுப் பொறுப்பையும் அவரோட அட்மின் கிட்ட கொடுக்கப்போறார். அதனால எந்தப் பதவியைக் கொடுக்குறதா இருந்தாலும், அதை அவர் அட்மினுக்கே நேரடியா கொடுத்துடலாம்.

NedumaranJ

டெல்லியிலிருந்து பதவியுடன் வந்திறங்கும் தலைவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுக்கும் ‘வரவேற்பாளர்’ பதவியைக் கொடுத்து அழகு பார்க்கலாம்.

jerry46327240

‘மீம்ஸ் வாரியத் தலைவர்’ என்ற பதவியை உருவாக்கலாம். ஹெச்.ராஜாவைத் தவிர இந்தத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள்.

PG911_twitz

நமக்குப் பதவி கொடுக்கணும்னு விகடனுக்கு இருக்கும் அக்கறைகூட கட்சிக்கு இல்லை பாருங்க: ஹெச். ராஜா

balasubramni1

ஆன்டி இந்தியன் பிரிவெண்டிங் செக்கரட்டரி போஸ்ட் தரலாம். அண்ணாருக்கு அது வாய்வந்த கலை. எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடி ஆளையும் ஆன்டி இந்தியனா இல்லையான்னு கண்டுபிடிச்சுச் சொல்லிருவாரு.

MahiVani_79

`உங்கள் பதவி வரிசையில் உள்ளது' என்ற ஒரு துறையை உருவாக்கி அதன் தலைவராக ஹெச்.ராஜாவையும் துணைத் தலைவராக குஷ்புவையும் நியமிக்கலாம்.

AyyanGee1

உங்களுக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் என்ன செய்வீர்கள்?

விண்வெளியில் கொரோனா இருக்கிறதா என உறுதி செய்துகொள்வேன்.

  மல்லிகா குரு

விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஜன்னல் சீட் கேப்பேன். எலுமிச்சம் பழமும் வேணும். ட்ராவல் சிக்னெஸ் பாஸ்...

 கி.சரஸ்வதி

நிலாச்சோறு சாப்பிட்டு அலுத்துப் போய்விட்டது ஜீ. நிலாவுக்குப் போய் பூமிச் சோறு சாப்பிடுவேன்.

 வானதி ஜவஹர்

மிச்சம் மீதி இருக்கற இசைஞானியோட பாட்டெல்லாம் டவுன்லோடு பண்ண ஆரம்பிச்சுடுவேன். ஆமாம், போகும் வழியெங்கும் ராஜா துணைதான்!

 ஜெ. மாணிக்கவாசகம்

விண்வெளிக் குப்பைகளை அள்ளிவந்து பழைய இரும்புக் கடையில் போட்டுக் காசு வாங்குவேன்.

urs_venbaa

அந்த வாய்ப்பு கொடுப்பவரிடம் - அதற்கு பதில் அதனால் ஆகும் செலவை எனது பேங்க் அக்கவுன்ட் நம்பர் கொடுத்து அதில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லுவேன்!

YTLshankar

Work from space-ல் வேலை செய்வேன்.டார்கெட் முடிக்கணுமே!

manipmp

கொரோனாவால் வெளிநாடு எங்கேயும் போகாமல் நாட்டு மக்களின் வலியை எல்லாம் தாங்கிக் கொண்டு தாடியுடன் வாழும் நம்ம பிரதமருக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்து விடுவேன்.

balasubramni1

`என் வேண்டுகோளை ஏற்று பச்சைப்பெருமாளை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தமைக்கு நன்றி’ என்ற தைலாபுரத்து மருத்துவ ரய்யாவின் அறிக்கையை மாறி மாறி வாசித்து சிலாகித்துப் போவேன்.

pachaiperumal23

அருகிலிருப்பவர் என்னைப் பார்த்து `இதுதான் பர்ஸ்ட் டைமா?’ எனக் கேட்டு விடக்கூடாது என்பதற் காக, சீட் பெல்ட் எப்படிப் போடுவது என்பதை யூடியூப் பார்த்துத் தெரிந்துகொள்வேன்.

IamUzhavan

விண்வெளியில் இருந்து பார்த்தாலாவது கைலாசா தெரியுதான்னு பார்ப்பேன்.

balasubramni1

அணில்களால் விண்கலத்தில் மின்தடை ஏற்பட்டதா என ஜெப் பெசோஸுக்கு போன் போட்டுத் தெரிந்துகொள்வேன்.

pbukrish

காதல் : திருமணத்துக்கு முன், பின் - என்ன வித்தியாசம்?

காதல் - தி.மு: அம்மா இல்லாதபோது இருந்த அ. தி.மு.க அமைச்சர்போல இருக்கலாம்!

தி.பி: அம்மா இருந்தபோது இருந்த அ.தி.மு.க அமைச்சர் மாதிரி இருக்கணும்.

 செந்(தில்)வேல்

திருமணத்திற்கு முன் கவிதை; திருமணமான பின் சொற்பொழிவு.

 இராம. பூர்விதா

திருமணத்துக்கு முன் நினைத்தாலே இனிக்கும், பின் வாழ்வே மாயம்..!

 பெ.பச்சையப்பன்

தி.மு: Dairy milk வாங்கிக்கொடுப்பது...

தி.பி: Daily milk வாங்கிக்கொடுப்பது...

LAKSHMANAN_KL

காதல் - தி.மு: பள்ளியில் படிக்கும்போது கிடைக்கிற கோடை விடுமுறை மாதிரி.

தி.பி: லாக்டௌன்ல வர்ற ஞாயிற்றுக்கிழமை மாதிரி, இருக்கா இல்லையான்னே தெரியமாட்டேங்குது..!

kalagowri91

தி.மு: பனிவிழும் மலர்வனம்.

தி.பி: ஒரு தென்றல் புயலாகி வருதே.

NatarajanAS2

தி.மு: ஏதோ மோகம்... ஏதோ தாகம்!

தி.பி: ஏதோ சோகம்... ஏதோ சாபம்!

rajasinghjeyak1

திருமணத்துக்கு முன் டைட்டானிக் ரோஸ்!

திருமணத்துக்குப் பின் டான்சிங் ரோஸ்!

pbukrish

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: நான்தானே ஜென் வசந்தம்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தமிழ்நாட்டுத்தலைவர்கள் சுயசரிதை எழுதினால் யார் சுயசரிதைக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

? பணம் என்கிற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகம் எப்படி இருந்திருக்கும்?

? நம்மூர் இயக்குநர்கள் பிறமொழி ஹீரோக்களை வரிசையாக இயக்கும் காலம் இது. தமிழ் இயக்குநர் ஒருவர் ஹாலிவுட் நடிகரை இயக்கலாம் என்றால் உங்களின் சாய்ஸ் எந்த இயக்குநர் - நடிகராக இருக்கும்?

? ஆண்கள் பெண்களை வர்ணிப்பதுபோல் பெண்கள் ஆண்களை வர்ணிப்பதில்லையே ஏன்?

? ‘நாம் ஒண்ணு நினைச்சா...’ - சொலவடைக்கு உங்கள் வாழ்வில் பொருத்தமான ஜாலி சம்பவம் சொல்லுங்க...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com