Published:Updated:

வாசகர் மேடை: சிவாஜி - பத்மினியைப் பார்த்த மாதிரியே இருக்கு!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

என்னுடைய இரண்டு `பட்டச் சான்றிதழ்கள்' திடீரெனக் காணாமல் போய்விட்டன. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

வாசகர் மேடை: சிவாஜி - பத்மினியைப் பார்த்த மாதிரியே இருக்கு!

என்னுடைய இரண்டு `பட்டச் சான்றிதழ்கள்' திடீரெனக் காணாமல் போய்விட்டன. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை ரீமேக் செய்தால் சிவாஜி - பத்மினி கேரக்டர்களில் நடிப்பதற்கு இப்போது பொருத்தமான நடிகர்கள் யார்?

சிவாஜியாய் கார்த்தி;

பத்மினியாய் கீர்த்தி சுரேஷ்.

 கு.வைரச்சந்திரன்

சிவாஜிபோல பாவனை கொடுக்க வடிவேலுவைத் தவிர வேறு யாருமில்லை, பத்மினியாக அனுஷ்கா நடிக்கலாம்.

 மு.ஸ்ரீராம்

கண்களாலேயே நலம் விசாரிக்கும் காட்சி இருப்பதால் கண்ணழகி மீனாவும், அவருக்கு ஜோடியாக மொழு மொழுவென நாதஸ்வர வித்வான்போல இருக்கும் ஜெயராமும் பொருத்தமாக இருப்பார்கள்.

IamUzhavan

சீரியஸா சொல் லணும்னா... பிரித்திவிராஜ் - கீர்த்தி சுரேஷ், அதையே காமெடி சப்ஜெக்டா ட்ரை பண்ணுனா மிர்ச்சி சிவா - ஓவியா... சும்மா அள்ளும் போங்க!

nadesanbala

மோகன்லால் சிவாஜியாகவும், மஞ்சு வாரியர் பத்மினியாகவும் மிகவும் பொருத்தமாக இருப்பார்கள்.

SriRam_M_20

வாசகர் மேடை: சிவாஜி - பத்மினியைப் பார்த்த மாதிரியே இருக்கு!

? ‘அப்டியே ஷாக் ஆகிட்டேன்’ என்று உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று..?

என்னுடைய இரண்டு `பட்டச் சான்றிதழ்கள்' திடீரெனக் காணாமல் போய்விட்டன. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. திடீரென ஒரு நாள் என்னுடைய தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, ``இந்தாங்க... உங்க சான்றிதழ்கள். எப்படியோ ஆபீஸ் ஃபைல்ல கலந்திட்டிருக்கு’’ என்று கொடுக்க `அப்படியே ஷாக் ஆகிட்டேன்.'

 இரா.வசந்தராசன்

டைம் பாஸ் இதழ் நடத்திய ‘ஐந்தே ரூபாயில் பாங்காக் பறக்கலாம்’ போட்டியைப் பார்த்து நண்பர்கள், ‘அதெல்லாம் சாத்தியம் இல்லை’ என்றார்கள். ஒரு கை பார்த்துவிடலாம் என்று முயன்று கடைசிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலில் என் பெயரைப் பார்த்ததும் ஷாக் ஆனது நானல்ல, என் நண்பர்கள்.

 எம். விக்னேஷ்

எங்கள் ஊரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பழைய பட்டுப்புடவைகள் வாங்கப்பட்டு, பணம் கொடுப்பது வழக்கம். என் பாட்டியின் கிழிந்த பழைய பட்டுப்புடவையை எடுத்துச் சென்றேன். எப்படியும் ஒரு நூறு, இருநூறு தேறும் என நினைத்திருந்தேன். அவர்கள் ஜரிகையை சோதித்துப் பார்த்துவிட்டு, ‘12,000 ரூபாய்க்குப் போகும் சார்’ என்றதும், நான் மயங்கி விழாத குறைதான்.

 ஆர்.பிரசன்னா

டெல்லி போய் ஜீயையும், ஷாவையும் சந்தித்து வந்த இ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும்... `தமிழக நலனுக்காகச் சந்தித்தோம்'னு பேட்டி கொடுத்தபோது..!

LAKSHMANAN_KL

கர்ப்பமா இருக்கும்போது குழந்தை எப்படி இருக்குன்னு பார்க்க நார்மல் செக் அப்புக்கு ஹாஸ்பிடல் போனேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஆபரேஷன் பண்ணி ‘நீயே செக் பண்ணிக்க’ என்று குழந்தையை என் கையிலேயே கொடுத்துட்டாங்க.

kalagowri91

நான் வெளியே போய் விட்டதாக நினைத்துக் கொண்டு, என்னைத் தேடிவந்த ஒருவரிடம் ``அது எங்கயோ போயிருக்கு’’ என்று என் மனைவி சொன்னபோது.

PG911_twitz

தாயார், உறவினரிடம் பணம் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் தர முடியவில்லை. உறவினர் நீதிமன்றம் மூலமாக வசூல் செய்துவிட்டார். படிக்கும் காலத்தில் அவர் இலவசமாகத் தன் கடையிலிருந்து எனக்கு நோட்டுப்புத்தகம் கொடுத்தார். அதற்கான விலையுடன் வட்டியும் சேர்த்து வாங்கி விட்டார்.

RajuBalasubram7

? சார்பட்டா பரம்பரை போல் ஒவ்வொரு கட்சிக்கும் பெயர் சூட்ட வேண்டும் என்றால் என்ன ‘பரம்பரை’ பெயர் சூட்டலாம்?

பா.ம.க - தாவித்தாவும் பரம்பரை.

 KM ஃபரூக், சென்னை

தி.மு.க-விற்கு - முத்துவேலர் பரம்பரை; பாட்டாளி மக்கள் கட்சிக்கு முந்திரிக்காடு பரம்பரை; ம.தி.மு.க-வின் ஃபேவரைட் தொகுதி சிவகாசி என்பதால், பட்டாஸ் பரம்பரை.

 கு.வைரச்சந்திரன்

ஜி.கே.வாசன் கட்சி - ‘இருக்கு, ஆனா இல்லை’ பரம்பரை.

 மணிமேகலை பாலு

ம.நீ.ம - தனிப்பட்டா பரம்பரை.

ம.தி.மு.க - கூட்டுப்பட்டா பரம்பரை.

நா.த.க - வாய்ப்பட்டா பரம்பரை.

 ப. சீனிவாசன்

பா.ஜ.க - அடிக்கடி தமிழக பா.ஜ.க தலைவரை மாற்றுவதால் - சாட், பூட், த்ரீ பரம்பரை; ம.நீ.ம - பருத்தி மூட்டை (குடோனிலேயே இருந்திருக்கலாம்) பரம்பரை;

அ.தி.மு.க - எடுப்பார் கைப்பிள்ளை பரம்பரை.

 எம். விக்னேஷ்

காங்கிரஸ் - சிட்டுக்குருவி பரம்பரை. செல்போன் டவரால் சிட்டுக்குருவி இனம் அழிந்ததுபோல், புதிய கட்சிகளின் வரவாலும், கட்சித் தலைவர்கள் விலகித் தனிக்கட்சி ஆரம்பித்ததாலும் காணாமல் போய்க் கொண்டிருப்பதால்.

ParveenF7

அ.தி.மு.க-வின் குறைகளைப் புத்தகமாக எழுதிவிட்டு, பிறகு அதையெல்லாம் மறந்து அ.தி.மு.க-வுடனே கூட்டணி வைத்த பா.ம.க-வுக்கு `அம்னீசியா பரம்பரை’ பெயர் பொருத்தமாக இருக்கும்.

chennappa

வாசகர் மேடை: சிவாஜி - பத்மினியைப் பார்த்த மாதிரியே இருக்கு!

? ஒலிம்பிக்கில் எந்தத் தமிழக அரசியல் தலைவர் எந்த விளையாட்டில் பங்கேற்றால் பதக்கம் உறுதி?

குஷ்பு போல்வால்ட்டில் கலந்துகொண்டால் தங்கம் உறுதி. எவ்வளவு லாகவமாகக் கட்சி விட்டுக் கட்சி தாவுகிறார்!

 D. Sellathurai

சீமான் - துப்பாக்கி சுடுதல்.

 சி. கார்த்திகேயன்

உதயநிதி - பளு தூக்கும் போட்டி (எய்ம்ஸையே கையில் அசால்ட்டா தூக்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றிய அனுபவம் இருப்பதால்).

 கே.லக்‌ஷ்மணன்

‘சீமான் அண்ணே, நீங்க மட்டும் ஒலிம்பிக்ல கலந்துகொள்றதா இருந்தா, நாங்க போட்டிக்கே வரலன்னு சீனா, அமெரிக்க வீரர்கள் நேத்து எனக்கு போன் பண்ணிக் கதறுறானுங்க! புஹாஹா...’

pbukrish

எத்தனை பேர் கட்சியை விட்டுப் போனாலும், சோலோவாகக் கட்சியைத் தூக்குறதால, பளு தூக்குதல் பிரிவில் கமலுக்குத் தங்கம் உறுதி.

RamuvelK

ஜெயக்குமார் குத்துச் சண்டையில் பங்கேற்றால் சந்தேகமேயில்லாமல் பதக்கம் உறுதி...

உட்றா வண்டிய, ராசியப்பன் பாத்திரக் கடைக்கு!

IamJeevagan

? தமிழ் சினிமாவில் இன்னமும் மாறாத க்ளிஷே என்று நீங்கள் நினைப்பது எது?

ஹெல்மெட் இல்லாமல் டூ வீலர் ஓட்டும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் பதிவிடாமலிருப்பதை சென்சாரே கண்டுக்காம இருப்பது. (பக்கத்து மாநிலமான மலையாள சினிமாவில் எப்பவோ கொண்டுவந்திட்டாங்க... மாறுங்க பாஸ்!)

 ஜெரி.D.டார்வி

பேய் இருக்கற வீடுன்னு தெரியும். ஆனா வீட்டை மாத்த மாட்டானுங்க. அங்கனயே இருந்துக்கிட்டு லோலாயம் பண்ணுவானுங்க.

 கி.சரஸ்வதி

ஃபாரின்ல போய் தமிழில் பாட்டு பாடினாலும் கூட சேர்ந்து ஆடறதுக்கு 10 பேரு ஹீரோவுக்குக் கிடைக்கிறாங்க! நாம ஃபாரின் போய் பாட்டு பாடினா சில்லறைதான் போடுவாங்க!

 சிவம்

முக்கால்வாசி படங்களில் ஹீரோ என்ன வேலை செய்றார்னே தெரியாது. ஆனா விதவிதமா உடை அணிந்து பார்க், பீச்னு சுத்துவார்.

balebalu

`இன்னாருடைய பயோபிக்கில் யார் நடிக்கலாம்? இந்தப் படத்தின் ஒன்லைன் என்ன? ‘இவரும் அவரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?’ என்று வாசகர் மேடையில் இன்னும் மாறாத க்ளிஷே கேள்விகளே வருவது விகடனாருக்குத் தெரியலைங்களா?

Kirachand4

வெட்டியாய் இருக்கும் ஹீரோவையே காதலிப்பேன் என்று ஹீரோயின் அடம்பிடிப்பது!

absivam

தொலைபேசியில் எதிர்முனையில் யார் பேசறாங்க, என்ன பேசறாங்கன்னு காட்டாமல் இந்த முனையில் பேசுபவர் மட்டும் ``வ்வாட்..! என்ன சொல்றீங்க..?’’ என்று அதிர்ச்சியுடன் கேட்பது.

saravankavi

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: சிவாஜி - பத்மினியைப் பார்த்த மாதிரியே இருக்கு!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? `என்னென்ன சொல்றான் பாருங்க.’ இப்படி நீங்கள் இந்த ஆண்டு கேள்விப்பட்ட விஷயம் ஒன்று சொல்லுங்களேன்.

? இளையராஜா பயோபிக் எடுத்தால் அதில் யார் ராஜாவாக நடிக்கலாம்?

? ஸ்டாலின் ஆட்சியின் நூறு நாள்கள். ஒரு பிளஸ், ஒரு மைனஸ் சொல்லுங்களேன்.

? ஆஃபருக்கு வாங்கி, நீங்கள் வீட்டில் சும்மா வைத்திருக்கும் பொருள் என்ன?

? இந்த விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் நாம் தங்கம் வெல்லலாம். இப்படியான ஒரு விளையாட்டு சொல்லுங்களேன்..?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com