Published:Updated:

வாசகர் மேடை: தர்மயுத்த அ.தி.மு.க!

விஜய் சேதுபதி

தினமும் பொன்னையனுக்கு போன் செய்து கட்சி ரகசியங்கள் பற்றி அவர் பேசும் ஆடியோவை வெளியிட்டு, அவரையும் கட்சியை விட்டு நீக்க வைக்கலாம்!

வாசகர் மேடை: தர்மயுத்த அ.தி.மு.க!

தினமும் பொன்னையனுக்கு போன் செய்து கட்சி ரகசியங்கள் பற்றி அவர் பேசும் ஆடியோவை வெளியிட்டு, அவரையும் கட்சியை விட்டு நீக்க வைக்கலாம்!

Published:Updated:
விஜய் சேதுபதி

2கே கிட்ஸ் - சிறுகுறிப்பு வரைக!

காதல் தோல்வியால் தாடி வளர்த்தும், தற்கொலை செய்துகொண்டும் இருந்த காலத்தை, ``பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்குவோம். இல்லைன்னா எப்பவும் போல ஃப்ரெண்ட்ஸாவே இருந்துக்கிடுவோம்’’ என்று மாற்றியவர்கள்.

IamUzhavan

பெரியவங்க யாராவது அறிவுரை சொன்னா அமைதியா கேட்டுட்டு, அப்புறமா, `யார் இவர்?' வாயைத் திறந்தார்னா மூடாம பேசிட்டே இருக்காரேன்னு கேட்பவர்கள்.

NedumaranJ

பெற்றோர் சீரியல் பார்ப்பதைக் கிண்டல் அடித்துவிட்டு OTT-யில் வெப் சீரிஸ் பாக்குறவங்க.

balebalu

250சி.சிக்குக் கீழ் பைக் ஓட்டுவதைப் பாவம் என்று நினைப்பவர்கள்.

urs_venbaa

கஷ்டப்படாமல் எல்லாமே கிடைத்துப் பழகிப்போனதால கஷ்டம் ஏற்படும்போது அதைத் தாங்கிக்க முடியாதவங்கதான் இந்த 2k கிட்ஸ்.

sasitwittz

அம்மா இல்லாமல்கூட இருந்துவிடுவார்கள், செல்ஃபோன் இல்லாமல் இருக்கவே முடியாது.

ஜி.மகாலட்சுமி, தூத்துக்குடி

வாசகர் மேடை: தர்மயுத்த அ.தி.மு.க!

`பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்காத நடிகர், இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றுபவர் யார்?

நெப்போலியன் சுந்தரபாண்டியனாக நடித்திருக்கலாம்.

பா.சக்திவேல்

`வந்தியத்தேவ’னாக யஷ் - கதை நெடுகப் பயணிக்கும் வீரதீர சாகசம் புரியும் இந்த இளைஞனின் பாத்திரத்திற்கு கம்பீரம், உயரம், உடற்கட்டு, வசீகரம், ராஜ களை என அனைத்து அம்சங்களும் கொண்டவர் இவர் என்பதால்.

பர்வீன் யூனுஸ்

குடந்தை ஜோதிடராக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருக்கலாம்.

அ.ரியாஸ்

மோகன்லால் - பெரிய பழுவேட்டரையர் ரோலுக்குப் பொருத்தமானவர்!

பிரான்சிஸ்கா

சுந்தர சோழனாக அல்லது ஆழ்வார்க்கடியான் நம்பியாக வைகைப்புயல் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கலாம். நகைச்சுவை கடந்து மிரட்டியிருப்பார்!

சு.மூன்சுதாகரன்

குந்தவையாக `சாய் பல்லவி' நடித்தால்... பார்க்கிற நமக்கு `ஜாய்' கிடைப்பது உறுதி..!

LAKSHMANAN_KL

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லணும்னா, சேக்கிழார் எழுதிய `பொன்னியின் செல்வன்' படிச்சிருக்கணுமோ?

KRavikumar39

நந்தினியாக ரீமா சென் நடித்திருக்கலாம்.

Vasanth920

ரவிதாசனாக விஜய் சேதுபதி

 க.கிற்றண்ராஜ், சென்னை

அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இனி என்ன செய்யலாம்?

பா.ஜ.க-வில் சேர்ந்து தேர்தலில் தோற்று தமிழ் நாட்டுக்கே கவர்னர் ஆகலாம்.

பா ஜெயக்குமார்

தர்மயுத்த அ.தி.மு.க என்று புதிய கட்சி தொடங்கலாம்.

மஹஜூதா

ஒரு கம்பெனியை விலைக்கு வாங்கி, சீஃப் மேனேஜர்னு ஒரு போஸ்ட் ல உட்கார்ந்துக்கலாம். பன்னீர்செல்வம் CM-னு நிறைய பெயர் பலகை செஞ்சு அங்கங்கே தொங்கவிடலாம். யாரும் அசைக்க முடியாது.

அ.ஜோசப் செல்வராஜ்

தினமும் பொன்னையனுக்கு போன் செய்து கட்சி ரகசியங்கள் பற்றி அவர் பேசும் ஆடியோவை வெளியிட்டு, அவரையும் கட்சியை விட்டு நீக்க வைக்கலாம்!

pbukrish

குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தேர்தல் கமிஷனராகி எடப்பாடிக்குக் கட்சி சின்னமும் கட்சிப் பெயரும் வழங்காமல் குடைச்சல் கொடுக்கலாம்.

kayathaisathya

மூத்த மகனை பா.ஜ.க-விலும், இளைய மகனை தி.மு.க-விலும் இணைத்துவிட்டு, தான் அதிருப்தி அ.தி.மு.க-வில் இருந்துகொண்டு காலத்தை ஓட்டலாம்.

modhumayoon

ஜெ.தீபாவைத் தூக்கத்திலிருந்து எழுப்பி அவரைக் கட்சித் தலைவி ஆக்கி, தான் பொ.செ ஆகி `வாழும் அம்மா வர்றாரு... வளமான ஆட்சி தரப் போறாரு' என்ற முழக்கத்தோடு தமிழ்நாடு முழுதும் அவருடன் பயணம் மேற்கொள்ளலாம்.

parveen0212

வாசகர் மேடை: தர்மயுத்த அ.தி.மு.க!

போதைப்பொருள் கடத்தல் சினிமாக்களின் காமெடிகள்?

போதைப்பொருளை நாக்குல நக்கியோ, நாசியில் முகர்ந்தோ அது என்ன விதமான போதைப்பொருள்னு ஹீரோ சொல்லிடுவார். `லேப்'னு ஒன்னு இருக்கேடா... அது எதுக்குடான்னு கேட்கத் தோன்றும்.

அஜித்

போதைப்பொருள்களைக் கடத்தும் வில்லன் உடல் முழுக்க பயங்கரமான(?) டிசைனில் `டாட்டூ ' வரைந்திருப்பதைப் பார்த்தாலே நமக்கு அன்லிமிட்டெட் சிரிப்பு அள்ளும்!

ரிஷிவந்தியா

சுவரைத் திருப்பினால் பதுங்கு அறை. மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்திலிருந்து சமீபத்திய விக்ரம் வரைக்கும் இதையே காட்டுறாங்க. மாத்தி யோசிங்கப்பா. மாவு ரொம்பவும் புளிச்சுப் போச்சு.

அ.பச்சைப்பெருமாள்

``போலீஸ்ல ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டும் நக்கிப் பார்த்தோ, மோந்து பார்த்தோ சரக்கு கொக்கைனா, மாரிஜூவானாவா, ஓபியமா, புகையிலையான்னு கரெக்டா சொல்லிடுவாப்ல! போலீஸுல இதுக்கெல்லாமா ட்ரெயினிங் குடுக்கறாங்க?!’’

சிவம்

கடத்தல் கும்பலில் ஒரு அண்டர் கவர் போலீஸ் இருப்பதும், போலீஸில் வில்லனின் ஒரு கறுப்பு ஆடு இருப்பதும்தான்!

நா.இரவீந்திரன்

ஹிப்பி முடி, தாடி வச்சிருந்தா போதைப் பொருள் யூஸ் பண்ற ஆசாமின்னு முத்திரை குத்துவது.

jerry46327240

போதைப் பொருள் கடத்தும் கும்பலின் தலைவன் ஏன் எதற்கு என்று தெரியாமல் உடனிருக்கிற நபர்களையெல்லாம் சுட்டுச் சாகடித்துக்கொண்டே இருப்பார். அவர் எப்போதும் நீச்சல் குளத்தில் இரண்டு அழகிகளுடன்தான் இருப்பார். இவர் தப்பித்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று தயார் நிலையில் இருக்கும்.

premprathap18

போலீஸ் நம்மை நெருங்கிவிட்டது என்ற தகவலைச் சொல்லி உஷார்ப்படுத்த வந்தவனை சம்பந்தமில்லாமல் கோபத்தில் சுட்டுத்தள்ளுவது.

PSriniv53328551

பா.ஜ.க தலைவராகி ஒரு வருடம் கடந்திருக்கும் அண்ணாமலையை நாலு வரிக் கவிதையால் பாராட்டலாமே ப்ரெண்ட்ஸ்...

சிங்கமாய் இருந்தப்ப

சிறை வைத்தவனையெல்லாம்

கட்சியில் சேர்த்தாவது

தாமரை மலர

தலைகீழா நிற்கிறார்

ஐபிஎஸ் ஒருநாள்

ஆளுநராவது நிச்சயம்.

சா.செல்வராஜ்

``அண்ணாமலை அண்ணாமலை...

நீங்க பேசினாலே பொழியுதே சுற்றிலும்

சிரிப்பு மழை...

பிழையாகப் பேசினாலும் அசராமல்

அடுத்ததற்குத் தாவும் நீர்

மீம்ஸ் க்ரியேடர்களின் வேட்டை மலை..!’’

அ. சுகுமார்

மலரா தாமரையை மலர வைக்க வந்த மாவீரனே...

மழையாய்ப் பொழிந்தபோதும் ‘போட்’ எடுத்து வந்த சூரனே...

புத்தகங்களை ‘சிட்டி ரோபோ’ போலப் படிக்கும் தீரனே... உன்னைப் புகழ எழுத்தில்லை தமிழில்.

krishmaggi

முன் எழுத்தில் அண்ணாவின் பெயர் இருந்தும், அதுக்கப்புறம் சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்லை... என்னமோ போங்க!

srmoorthi05

1. மச்சி, பாஸ், சகோ, ப்ரோ - காலந்தோறும் மற்றவர்களை அழைக்கும் வழக்கம் மாறிவருகிறதே... எது ரொம்ப நெருக்கமான வார்த்தை, ஏன்?

2 மனம் தளராமல் மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழருவி மணியன் இப்போது யாரை முதல்வராக்கப் பாடுபடலாம்? காரணம்?

3. தனுஷைத் தொடர்ந்து மற்ற தமிழ் சினிமா ஹீரோக்கள் ஹாலிவுட் போனால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?

4. ஒவ்வொரு குரூப்பிலும் காலாவதியான மொக்கை மெசேஜை ஃபார்வர்டு செய்பவர்களுக்கு ஒரு செல்லப் பெயர் சூட்டுங்களேன்!

5. ஓ.பி.ரவீந்திரநாத்தை ஆதரிக்கும் சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயர், சின்னம் என்னவாக இருக்கும்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com