Published:Updated:

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!

உலக நாயகன் கமல்ஹாசன் தான். கண்டிப்பா சினிமா உலகம் வியக்கும் வண்ணம் பல காவியங்கள் படைத்திருப்பார். இந்திய சினிமா இயக்குநர்கள் தொடாத உயரம் தொட்டி ருப்பார்.

பிரீமியம் ஸ்டோரி

‘வானத்தைப் போல’ படத்தை இப்போது ரீமேக் செய்தால் அதில் அண்ணன் தம்பிகளாக யார் யார் நடிக்கலாம்?

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!

ஒன் அண்ட் ஒன்லி ஹீரோ கமல்ஹாசன்தான்... அண்ணன், தம்பிகள், ஏன் அந்த ஹீரோயின்கள் வேடம்கூட அவரே நடிச்சிடுவார்..!

saravankavi

அண்ணனாக கமல்... தம்பிகளாக சூர்யா, கார்த்தி... பின்னணியில் ‘லலலலா... லலலலா’ என்ற ஹம்மிங்கை ஓடவிட்டபடியே கற்பனை செய்து பாருங்கள்... அள்ளும்..!

LAKSHMANAN_KL

விஜய் மூத்தவராகவும் விஜய் ஆன்டனி, அருண் விஜய், விஜய் வசந்த் தம்பிகளாகவும் நடிக்கலாம்.

jerry46327240

அண்ணனாக ஆமை ஓட்டைத் தலைக்கு மேல் தூக்கியபடி சீமான் அதற்குக் கீழ் தம்பிகளாக STR, சந்தானம்...

bommaiya

நகைச்சுவை நடிகர்கள் சிங்கமுத்து அண்ணனாகவும், வடிவேலு, சார்லி ஆகியோர் தம்பிகளாகவும் நடித்தால் நன்றாக இருக்கும்.

 வன்னி தங்கம் ராதா,

மதுரை.

ஏன்... வித்தியாசமா நாம நம்ம வைகைப்புயல், பரோட்டா சூரி, யோகி பாபுவ ட்ரை பண்ணக் கூடாது..?

vijiraja4

அண்ணன் விஜய் சேதுபதி, தம்பிகள் பாபி சிம்ஹா, மாஸ்டர் மகேந்திரன், ரமேஷ் திலக்.

urs_venbaa

அண்ணன் விஜய், தம்பிகள் சாந்தனு, விக்ராந்த், சிபிராஜ்.

manipmp

மோகன்லால், சூர்யா, கார்த்தி, கதிர்.

UpscIps

இரண்டு விஜயகாந்த்களாக விஜய் சேதுபதி, லிவிங்ஸ்டனாக அதர்வா, பிரபுதேவாவாக சிவகார்த்திகேயன் நடிக்கலாம்.

SriRam_M_20

இனிவரும் காலங்களில் ‘உரிமைக்குரல்’ படத்தில்

எம்.ஜி.ஆருக்கு பதிலா யார் நடிக்கலாம், ‘கௌரவம்’ படத்தில் சிவாஜிக்கு பதிலா யார் நடிக்கலாம் போன்ற கேள்விகள் இடம்பெறாவிட்டால் சென்னைப் பெருவெள்ளத்தில் விகடனார் மாட்டிக்கொள்ளவேண்டி வரும்.

adiraibuhari

அண்ணனாக கவுண்டமணி... தம்பிகளாக செந்தில், வடிவேலு, சூரி நடித்தால் ரசிகர்களுக்கு காமெடி சரவெடி தான்...

 வானதி ஜவஹர், விருதுநகர்.

சரத்குமார், ஜீவா, தனுஷ். இவர்களுக்கு ஜோடியாக ராதிகா, கீர்த்தி சுரேஷ், சாய்பல்லவி நடிக்கலாம்.

 மலர்சூர்யா, பாண்டி.

‘இவர் நடிக்க வராம இயக்குநரா மட்டுமே இருந்திருந்தா நிறைய நல்ல படங்கள் வந்திருக்கும்’ என உங்களை யோசிக்க வைத்த இயக்குநர்/நடிகர் யார்?

பிரதாப் போத்தன்

 ஆ.மாடக்கண்ணு,

பாப்பான்குளம்.

‘சுப்பிரமணியபுரம்’ இயக்கிய சசிகுமார். நடிகர் என்ற வட்டத்திற்குள் அடை படாமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய நல்ல படங்கள் தந்திருப்பார்...

saravankavi 7

உலக நாயகன் கமல்ஹாசன் தான். கண்டிப்பா சினிமா உலகம் வியக்கும் வண்ணம் பல காவியங்கள் படைத்திருப்பார். இந்திய சினிமா இயக்குநர்கள் தொடாத உயரம் தொட்டி ருப்பார்.

diferenTstaR

சேரன் - ‘பொற்காலம்’, ‘பாண்டவர் பூமி’, ‘தவமாய் தவமிருந்து’ போல யதார்த்தமான பல படங்கள் வந்திருக்கும்.

balasubramni1 5

எஸ்.ஜே.சூர்யா. இயக்குநராக மட்டும் இருந்திருந்தால், தமிழின் தவிர்க்க முடியாத இயக்குநராக இருந்திருப்பார்.

Rajan1570

மணிவண்ணன். இன்னும் நிறைய படங்கள் இயக்கியிருப்பார். ஒவ்வொரு ஜானரிலும் வித்தியாசமாய் எடுத்திருப்பார்.

manipmp

நீங்கள் பார்த்துச் சிரித்த அண்ணன் - தங்கை அட்ராசிட்டி ஒன்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

ஊர்த் திருவிழாவில் நண்பரின் மகன் கடையில் தான் வாங்கிய கார் பொம்மை பேட்டரி போட்டும் வேலை செய்யாததால் அழுது கொண்டிருக்க, அவன் தங்கை அந்த பொம்மையை வாங்கிக்கொண்டு அருகில் நின்றிருந்த போலீஸ்காரரிடம் ‘அந்த மாமா ரிப்பேரான காரைக் கொடுத்துட்டாரு’ என்று கம்ப்ளையின்ட் செய்து, கடைக்குக் கூட்டிச்சென்று பொம்மையை மாற்றி வாங்கிவிட்டாள்!

parath.sarathi?

அண்ணனைத் தலையில் அடித்துவிட்டு, லேசாக ரத்தம் வந்தவுடன் ‘அண்ணா செத்துப் போயிடாதடா, அப்புறம் அம்மா என்னை அடிப்பாங்க’ என்று தங்கை கூறியது!

Kozhiyaar

அண்ணனோட செருப்பை வாசலில் போட்டால் நாய் கடிச்சுக் கொதறிடும். அதில் ஒரு ஆனந்தம்!

urs_venbaa

நிறைய நிஜத் தங்கைகள் அண்ணன்களை டேய், வாடா, போடா, அவன், இவன் எனப் பேசுவதும் அண்ணன்கள், தங்கைகளின் பேச்சுகளைச் சிரித்தபடி கேட்டுக் கடப்பதுமே சமகால நிஜமான அண்ணன் தங்கை அட்ராசிட்டி.

Vaigaisuresh9

முதல் முறை தங்கச்சி ருசியா சமைத்ததைச் சாப்பிடும் போது, எல்லார் முன்னாடியும் ‘கழுதை மேய்க்கிற புள்ளைக்கு இப்பிடி ஒரு திறமையா’ன்னு பாராட்டியது.

manipmp

நாலு கழுதை வயசாகும் அந்தத் தங்கச்சிக்கு... இன்னும் சின்ன வயசுல கூப்பிட்ட ‘பாப்பா’ன்னு சொல்லியே அண்ணன் கூப்பிடறதுதான்.

ParveenF7

மற்றவர்கள் கேள்விப்பட்டிராத, உங்கள் ஊரின் பிரபலமான உள்ளூர் விளையாட்டு ஒன்றைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்!

புளியங்கொட்டைகளை மலைபோல் குவித்து, கையால் தொடாமல் வாயால் பலம் கொண்ட மட்டும் ஊதிப் பரப்ப வேண்டும். பின் ஒவ்வொன்றாக, நம் விரலோ கொட்டையோ அடுத்த கொட்டை மேல் படாமல் எடுக்க வேண்டும். பட்டால் அவுட். எடுத்த கொட்டைகளை இன்னொருவர் எண்ணி வைப்பார். பின் அடுத்தவர் முயலவேண்டும். அதிக எண்ணிக்கையில் எடுத்தவர் வின்னர். மதுரையில் விளையாடுவோம்.

hemalatha.srinivasan.F

கதை கேளு... கதை சொல்லு! ஒருவர் கதை கூற ஆரம்பிக்க வேண்டும். அவர் நிறுத்திய பகுதியைத் தொடர்ந்து அடுத்தவர் சொல்ல வேண்டும். சொல்லாதவர்கள் குழுவில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

MathirajaTM

வண்ணக் கலவையில் முக்கியெடுத்து பந்தை, சுவரில் வரைந்து வைத்துள்ள வட்டத்துக்குள் வீச வேண்டும். ஒரு நபருக்கு ஐந்து வாய்ப்புகள். அதிக முறை வட்டத்துக்குள் பந்துவீசி வண்ணம் பதிப்பவர்களே வெற்றியாளர். வில் வித்தை மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வத்தைத் தூண்டும் இந்த விளையாட்டின் பெயர் ‘Colour ball.’

 ராஜகோபால்,

மன்னார்குடி.

நிலாக்கும்பல்! இரு அணியினராகப் பிரிந்து ஒரு அணியினர் மறைவாக குட்டிக்குட்டி மண் குவியல் களை ஏற்படுத்தி வைத்துவிட, அடுத்த அணியினர் அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும். அழிக்காமல் விட்ட எண்ணிக்கை இவர்களுக்கு. மீண்டும் அவர்கள் தொடர...

SeSenthilkumar

கீக்கான்: மன்னார்குடி ஆத்து மணல்ல ரெண்டு பேர் எதிர் எதிர் கால் நீட்டி உக்காந்து ஒதைச்சிக்கணும். யார் டயர்டாகுறாங்களோ அவங்க அவுட்... இப்ப அந்த விளையாட்டு அங்க இருக்கான்னு தெரியல!

bommaiya

ஈக்காங்குச்சி அல்லது நூறாங்குச்சி எனப்படும் சின்னப்புள்ளதனமான விளையாட்டு அருப்புக் கோட்டை, சிவகாசி பகுதி கிராமங்களில் பிரபலம். விளக்குமாற்றுக் குச்சிகளை உடைத்து, சிறிய குச்சிகள் நடுவே ஒரு பெரிய குச்சியை வைத்து கீழே போட வேண்டும். பெரிய குச்சி மேல் எந்த ஒரு சிறிய குச்சியும் இல்லை என்றால் அவர்கள் அவுட். பெரிய குச்சிகள் மேல் எத்தனை சிறிய குச்சிகள் விழுகிறதோ அத்தனை மார்க்.

 சாந்தினி, மதுரை.

இந்திய அணிப் பயிற்சியாளராக டிராவிட்டுக்கு பதில் நம்மூர் பிரபலம் ஒருவர் ஆகலாமென்றால் உங்களின் சாய்ஸ் யார்?

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!

எதிரணிகளுக்கு நக்கல் நையாண்டி மூலம் பதிலடி கொடுக்க ‘தக் லைஃப்’ துரைமுருகன்தான் பெஸ்ட் சாய்ஸ்!

 நா.இரவீந்திரன்

சமுத்திரக்கனியை நியமிக்கலாம். அட்வைஸ் பண்ணியே நம்ம டீமை நல்லா விளையாட வச்சிடுவாரு.

 கு.வைரச்சந்திரன், திருச்சி

ஆர்.ஜே.பாலாஜியைப் பயிற்சியாளராக்கிடலாம். எதிர்த்துப் பேசினால் காதில் ரத்தம் வரப் பேசுவார் என்று எல்லாரும் கடமையாக கிரிக்கெட் விளையாடுவார்கள்!

absivam

அண்ணாமலை - அணி ஜெயிக்குதோ, இல்லையோ... ஆனா பாக்குறதுக்கு தமாஷா இருக்கும்.

bommaiya

வடிவேலு. எதிரணி வீரர்கள் எவ்வளவு அடிச்சாலும் ‘வலிக்காத மாதிரியே நடிப்பது எப்படி’ன்னு கற்றுக் கொடுப்பார்.

balebalu

சேகர்பாபு. எந்த நேரமாய் இருந்தாலும் ஸ்பாட்டில் இருக்கும் பம்பரமான கோச்.

urs_venbaa

வாசகர் மேடை: குட் மார்னிங் கோச்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. மாதம்தோறும் போராட்டங்கள் நடத்தும் அண்ணாமலைக்கு புதிய போராட்டங்களுக்கான ஐடியா ப்ளீஸ்...

2. பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் நீங்கள் கண்டுபிடித்த லாஜிக் மிஸ்டேக்ஸ்?

3. உங்கள் ரயில் பயணங்களின் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சுருக்கமாகப் பகிர்ந்துகொள்ளலாமே...

4. சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிக்க, ஒரு பழைய படத்தை ரீமேக் செய்யலாம் என்றால் உங்கள் சாய்ஸ்..?

5. விசிட்டிங் கார்டு மட்டுமே இருந்த நிலை மாறி டெபிட் கார்டு, ஆதார் கார்டு என்று ஏராளமான கார்டுகள் வந்துவிட்டன. எதிர்காலத்தில் இன்னும் என்னென்ன கார்டுகள் வரும்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு