? பிக்பாஸை சுவாரஸ்யமாக்க நச்சுனு ஒரு டாஸ்க் சொல்லுங்க?

செம்பரம்பாக்கம் ஏரி செட் போட்டு, தண்ணிய தொறந்து விட்டு, ஒவ்வொருத்தரையும் மாறி, மாறி கைய வெச்சு முட்டுக்கொடுத்து அடைக்க வைக்கலாம்.

ச.பிரபு, குற்றாலம்

பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரு wrestling போட்டி வைக்கலாம். பாலா-ஆரி, ரியோ-ரமேஷ், கேபி-ஷிவானி, ரம்யா-சம்யுக்தா, அர்ச்சனா-நிஷா, சோமு-ஆஜித்...

nilaavan

ஒரு செய்தியைச் சொல்லி, அந்தச் செய்தியை கமல் ட்வீட் போடுவதுபோல் எழுதச் சொல்லலாம்! அதே செய்திக்கு கமலையும் ஒரு ட்வீட் எழுதச் சொல்லி, யார் எழுதியது கமல் எழுதிய ட்வீட்க்கு நெருக்கமாக இருக்கோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்!

h_umarfarook

டார்ச் வெளிச்சத்திலேயே ஒரு நாள் முழுதும் இருக்கணும்!

vrsuba

அர்ச்சனாவையும் அனிதாவையும் ஒரு நாள் முழுக்க பேசாமல் இருக்கச் சொல்லலாம்!

balebalu?

‘ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நிற்பேன்’ என்று சீமான் கூறியிருக்கிறார். இருவரின் பிரசாரமும் எப்படியிருக்கும்?

சீமான் பிரசாரம்:

‘குக் வித் கோமாளி...’

ஸ்டாலின் பிரசாரம்:

‘நீயா நானா...’

பாலு இளங்கோ, ஈரோடு.

ஸ்டாலின்: ஆகவே சீமான் இத்தொகுதியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

சீமான்: வாய்ப்பில்லை ராஜா.

ananthi.ramakrishnan.1

சீமான்: கலைஞர் என்னைத்தான் அவரது அரசியல் வாரிசு என்று என்னிடமே பலமுறை சொல்லியுள்ளார். அது ஸ்டாலினுக்குக்கூடத் தெரியாது. புஹா... புஹா...

ஸ்டாலின்: ‘அர்த்த ராத்திரிக்கு வாழ்வுவந்தால் அற்பனுக்குக் குடைபிடிக்குமாம்’ என்பதுபோல் பேசுகிறார் சீமான்.

ThanjaiPrana0

சீமான்: அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் நாவலர், பேராசிரியர், எம்ஜிஆர், அன்பில் ஆகியோர் என்னைத்தான் தமிழக முதல்வர் ஆகுமாறு சொன்னார்கள். நான் மறுத்ததாலேயே அப்பதவி கலைஞருக்குப் போனது.

ஸ்டாலின்: ஆக, இப்போது உயிருடன் இருக்கும் எவர் பெயரையும் இவர் மறந்துகூட சொல்லவில்லை.

pachaiperumal23

? டி.ராஜேந்தர் சரித்திரப் படம் எடுத்தால் மன்னருக்கு எப்படி வசனம் எழுதுவார்?

போர் என்றாலே எம் மன்னன் எப்போதும் இருப்பார் போல்டா, போரிலே எம் மன்னன் வீரத்தைப் பார்த்தால் எதிரி ஓடுவான் உசைன் போல்ட்டா!

balasubramni1

குடிமக்களுக்கு நான் அரசன்...குறுக்குவழியில் செல்பவர்களுக்கு நான் அசுரன்...போர்க்களத்தில் நான் வீரன்...துரோகிகளுக்கு நான் சூரன்... மொத்தத்தில் நான் தீரன்.

KLAKSHM141842574

(தங்கையிடம்) உன்னைய சாப்பிடவைக்க தாஜா செய்யற இந்த அண்ணன் ராஜாவா இருக்கிற வரைக்கும்தாம்மா நீ ரோஜா. சாப்டும்மா!

parath.sarathi

மங்குனி சிப்பாயே, பங்குனியில் படையெடுப்பேன் என்று கங்கணம் கட்டியுள்ளேன் என்று உங்கள் மன்னரிடம் சொல்.

அன்புக்கரசி பாலசுப்பிரமணியன்,

மன்னார்குடி

ஒற்றன் தந்தான் போருக்கு ஓலை, எதிரி மன்னனுக்கு ஊற்றுவேன் பாலை, பெறுவேன் வெற்றி மாலை!

எம். சேவியர் பால், கோயம்புத்தூர்

தப்பித்து ஓடிவிடு எதிரி நாட்டு மன்னா...இல்லை என்றால் ஆகிவிடுவாய் மண்ணோடு மண்ணா... ஒருமுறைதான் உனக்கு நான் சொல்வேன்... கேட்காவிட்டால் உன்னை நான் கொல்வேன்..!

வே.விநாயகமூர்த்தி, சென்னை

? 2020-ல் உங்களுக்கு பாசிட்டிவாக நடந்த ஒரு விஷயம் சொல்லுங்களேன்.

தியேட்டர் போய் படம் பார்க்காததால் கொஞ்சம் பணம் சேமிப்பு.

அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

குடியை மறந்ததுதான். ( டாஸ்மாக் கடையை மூடியதாலே) வேறவழியில்லாமே பாசிட்டிவா மாறவேண்டிய சூழ்நிலை!

பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

25.11.20 ஆனந்த விகடன் இதழில் 12-ம் பக்கம், வாசகர்களே எங்களின் `முக'வரியில் விரல் தேடுகிறது... கடைசியாக என்னுடைய போட்டோ. Wow!

மா.தருண், புதுக்கோட்டை

2020-ல் எனக்கு டபுள் பாசிட்டிவாய் நடந்த விஷயம் வாசகர் மேடையில் என் பெயர் இரண்டு முறை இடம் பெற்றதுதான்.

கண்ணண்செழியன், தேனி

நிறைய பேர் விசேஷத்துக்குக் கூப்பிடாததால் மொய்ச் செலவு மிச்சம்.

mani.pmp.5

அம்மா வீட்ல இருக்காங்க... Yes, my mom is a working woman.

raajini.vasan

இதுவரை கொரோனா பாசிட்டிவ் வரவில்லை.

skrajasekar20

600 பேருக்கும் மேல் இருந்த மொபைல் கான்டாக்ட் நம்பர்களில் ஏறக்குறைய 300 பேருக்கும் மேல் பேசி நட்பையும் உறவையும் புதுப்பித்துக்கொண்டதுதான்.

saravankavi8

என் இரண்டாவது மகன் திருமணத்தை வெகு சிக்கனமாக கொரோனா பீரியடில் நடத்தியது.

eromuthu

இரண்டு வருஷமா அப்பா அம்மா கூப்பிட்டாலும், அவங்ககூட நேரம் செலவழிக்கலை... இந்த வருஷம் லாக்டௌனில் சொந்த ஊர் வந்து அவங்ககூடதான் இருக்கேன்.

I_Banumathy

எனக்கு ஜலதோஷம் வந்தால் போன் பண்ணி விசாரிக்காத என் பிள்ளைகள், இந்தக் கொரோனா காலத்தில் எனக்கு சளி மற்றும் இருமல் வந்தவுடன் என் வீட்டிற்கு வந்து பல மணி நேரம் செலவிட்டது.

Shivan_113

? சரிந்துவிழும் காங்கிரஸ் எழுச்சி பெற யாரைத் தலைவராக்கலாம்?

சரிந்து கிடந்தால்கூட சரிசெய்ய ஆட்களைத் தேடலாம். படுத்தே கிடப்பதற்கு எங்கிட்டுப் போய் தலைவரைத் தேடுவது? அவர்களே எழுந்து நடந்தால்தான் உண்டு.

balasubramni1

தாமரையைச் சமாளிக்க, கவிஞர் தாமரையை தலைவராக்கலாம்... அவர்தான் ‘நீருக்குள் மூழ்கிடும் தாமரை' எனக் கணித்தவர்!

KLAKSHM14184257

சீமானை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கலாம். அவர் நேரு, காந்தி, இந்திரா காந்தி போன்ற பழம்பெரும் காங்கிரஸ் தலைவர்களின் கதைகளைப் பிரசாரமாக இடையறாது செய்து காங்கிரஸை எழுச்சிபெற வைப்பார்.

Shivan_11

மம்தா பானர்ஜி அல்லது ஜெகன்மோகன் ரெட்டியை காங்கிரஸ் தலைவராக்கலாம். இருவரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து, தனிக்கட்சி உருவாக்கி, தத்தமது மாநிலங்களில் செல்வாக்குடன் ஆட்சியில் இருப்பவர்கள். எதிர்த்து வெளியே வந்த அவர்களே காங்கிரஸை சரிவிலிருந்து மீட்கத் தகுதியானவர்கள்.

RamAathiNarayen

சோனியா காந்தியையே நிரந்தரத் தலைவராக்கலாம், ராஜமாதாதான் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் சரியான சாய்ஸ்.

SriRam_M_20

53 வயதாகும் ஹரியானா முன்னாள் எம்.எல்.ஏ ரந்தீப்சிங் சுர்ஜீவாலாவைத் தலைவராக்கலாம். 5 ஆண்டுகள் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த வழக்கறிஞரான இவர் ஓம் பிரகாஷ் சவுடாலாவை ஒருமுறை வென்று அமைச் சராகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்.

எஸ்.வைத்தியநாதன், மதுரை

ஈவிகேஎஸ்.இளங்கோவன். தினமும் ஏடாகூடமா அறிக்கை விட்டே கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பார்!

vvenraman

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? அழகிரி கட்சி தொடங்கினால் அதற்கு என்ன பெயர் வைப்பார்?

? ரஜினியின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும் என ஒரு ஹேஷ்டேக்காக சொல்லுங்களேன்!

? இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழக வீரர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? ஏன்?

? கறுப்பு வெள்ளையில் வந்த ஒரு காதல் திரைப்படத்தை லேட்டஸ்ட் இளம் தமிழ் ஹீரோ ஒருவர் ரீமேக் செய்யலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என்ன படம்?

? டி.ஆரும் பியர்ல் க்ரில்ஸும் பேசிக்கொண்டால் எப்படி பேசிக்கொள்வார்கள் என சுருக்கமாகச் சொல்லுங்களேன்!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com