? பிக் பாஸில் தன் கட்சிச் சின்னத்தை விளம்பரம் செய்யும் கமல், தன் கட்சியை விளம்பரம் செய்ய இன்னும் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

* தனது காரின் முன்பக்க லைட்டை எடுத்து விட்டு, அந்த இடத்தில் டார்ச் லைட்டை வைத்து ஒளி உண்டாக்கி ஓட்டலாம்.

KRavikumar39

* பால் பாக்கெட்டுகளில் விளம்பரம் செய்தால், எளிதில் எல்லோரின் வீட்டுக்குள்ளும் கட்சியின் பெயரும் சின்னமும் சென்றுவிடும்.

IamUzhavan

* கொஞ்சநாள் கவிதை எழுதுதல், ட்வீட் போடுதலை நிறுத்திவைக்கலாம். ஹெவியா தலைசுத்துது!

pachaiperumal23

* "டார்ச்சர்" இல்லைங்க "டார்ச் லைட்" என்று தெளிவாகப் பேசி விளம்பரத்தைப் புரியும்படி விளம்பரப்படுத்தலாம்.

jerry46327240

* தன் பெயரை, "கமநீமைலஹாசன்" என்று மாற்றி விடலாம்!

BaluElango2

* ஸ்ருதி ஹாசன் தன் அனுமதியில்லாமல் தன்னைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டார் என்று பிரஸ்மீட் வைக்கலாம்..!

AchariyaLenin

* பா.ஜ.க-வில் சேராத பிக்பாஸ் போட்டியாளர்களைக் கட்சிக்காக கேன்வாஸ் செய்யச் சொல்லாம்.

Shivan_11

* இனி சினிமா விளம்பரங்களில் கலைஞானி பட்டம் போடாமல் `மக்கள் நீதி நாயகன்'னு பட்டம் போட்டுக்கொள்ளலாம்.

kayathaisathya

* 'மய்யத்துல சேராதவங்களைத் தட்டிக் கேட்பேன்; மய்யத்துல சேர்ந்தவங்களைத் தட்டிக் கொடுப்பேன்'னு 'பஞ்ச்' சொல்லி கட்சிக்காக, ஒரு புரொமோ பண்ணணும்!

KrishnaratnamVC

? ‘விஜய் பெயரில் கட்சி. ஆனால் விஜய்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை’ என்ற எஸ்.ஏ.சி-யின் அறிவிப்பைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?

* போகிற போக்கைப் பார்த்தால் ஒரே நாடு ஒரே வரி மாதிரி இந்தக் கட்சியின் ஒரே உறுப்பினர் மற்றும் ஒரே தலைவராக ஒரே எஸ்ஏசிதான் இருப்பார்போல!

balasubramni1

* பழைய பேஷன்ட் ரஜினியை டிஸ்சார்ஜ் பண்ணிட்டு புது பேஷன்ட் விஜய்யை அட்மிட் பண்ணிட்டாங்கன்னு தோணுச்சு.

KarthikeyanTwts

* யார் யாரையோ மீம்ஸ்ல கலாய்க்கிறாங்க என்னை மறந்திட்டாங்களேன்னு எஸ்.ஏ.சி நினைச்சிட்டார் போல!

Kirachand1

* இவர் பேசாமல், அஜித் பெயரில் கட்சி ஆரம்பித்து விஜய்யைக் குழப்பியிருக்கலாமோ என்று தோன்றுகிறது!

ramkumar_vea

* விஜய்: கந்தையானாலும் கசக்கிக் கட்டு...

தந்தையானாலும் திருப்பித் தட்டு.

BaluElango2

* சரோஜாதேவி படம் போட்ட சோப்பு டப்பா... சரோஜாதேவிக்கும் சோப்பு டப்பாக்கும் சம்பந்தமில்லை.

Ntramesh_kpm

* கடைசில விஜயையே ஸ்லீப்பர் செல் ஆக்கப் பார்க்கிறாரு.

urs_venbaa

* ட்வீட் செய்துவிட்டு, 'நானல்ல அட்மின்' என்று சொல்லும் அரசியல்வாதிகள்.

அஜித், சென்னை

? கிரிக்கெட் வீரர் பயோபிக் தமிழில் எடுத்தால் எந்த வீரரின் பயோபிக்கில் யார் நடிக்கலாம்?

* சச்சின் - சூர்யா

ramya natarajan, bangalore

* ரோஹித் சர்மாவாக, சிவா நடிக்கலாம் தோனியாக, அஜித்தே நடித்தால் இந்த 'தல' குழப்பத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

tparaval

* 'சிக்ஸர் ஸ்பெஷலிஸ்ட்' யுவராஜ் சிங்கின் உயரம், முக அமைப்பின்படி அவரது பயோபிக்கில் நடிக்க ஜெயம் ரவியை பிக்ஸ் செய்யலாம்.

RamAathiNarayen

* விவியன் ரிச்சர்ட்ஸ் : மொட்டை ராஜேந்திரன் மிகப் பொருத்தம்.

Kirachand1

* அஜித் வடேகர்: சரத் பாபு.

Kirachand1

* லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் பயோபிக்கில் 'மேற்குத்தொடர்ச்சி மலை' புகழ் ஆண்டனியை நடிக்க வைக்கலாம்.

amJeevagan

* ராபின்சிங் _ விஷ்ணு விஷால். வயது உட்பட சகலமும் அம்சமாக இருக்கும்.

pachaiperumal

* ஜஸ்பிரித் பும்ராவாக அசோக் செல்வன் நடித்தால் சாலப் பொருத்தமாக இருக்கும்.

Shivan_11

* ஸ்மிரிதி மந்தனாவாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் சரியாக இருப்பார்.

RamuvelK

* VVS லக்ஷ்மண் - கணேஷ் வெங்கட்ராம்

PG911_twitz

* சவுரவ் கங்குலி பயோபிக்குக்கு என் சாய்ஸ் அதர்வா. கண்சிமிட்டி கங்குலி விளையாடும் அழகு அப்படியே அதர்வாவுக்குப் பொருத்தமா இருக்கும்.

R.அருண்குமார், கும்பகோணம்.

? ஷாப்பிங் - ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம்?

* கடைக்குப் போனால் ஆண்கள், கடை கடையாய்ப் போனால் பெண்கள்!

நா.இரவீந்திரன், வாவிபாளையம்.

* ஆண்கள் ஷாப்பிங் - பிராண்டைப் பார்த்து வாங்குவார்கள். பெண்கள் ஷாப்பிங் - ப்ரெண்டைப் பார்த்து வாங்குவார்கள்.

எம். விக்னேஷ், மதுரை

* ஆண்கள் பிக்னிக் போன இடத்துல பஸ் நிக்ற நேரத்துல ஷாப்பிங் பண்ணிடுவாங்க...

பெண்கள் ஷாப்பிங் போற நேரத்துல ஒரு பிக்னிக்கே போய்ட்டு வந்துடலாம்.

Elanthenral

* பெண்கள் ஷாப்பிங் : டெஸ்ட் கிரிக்கெட்

ஆண்கள் ஷாப்பிங் : டி20 கிரிக்கெட்

SriRam_M_20

* ஆண்கள்: அழகிரி கட்சி தொடங்குற மாதிரி.

பெண்கள்: ரஜினி கட்சி தொடங்குற மாதிரி.

Raja_AnvarTwits

? ரயில் பயணங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

* இரவுப் பயணத்தில் நன்றாகத் தூக்கம் வந்த பிறகு, டிக்கெட் செக் செய்ய டிடிஆர் வந்து எழுப்புவது... அவ்ளோதான்... அப்புறம் சிவராத்திரிதான்!

ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

* விடியல் காலை 4 மணிக்கு அலாரம் வைத்து ஊரையே எழுப்பும் உத்தமர்கள்.

Shanthi Chandrasekaran Chennai

* ரயில் தண்ணீர் நமக்கு செட் ஆகாதுன்னு வீட்ல இருந்து தண்ணி கொண்டு போய் இருப்போம். பக்கத்தில் இருப்பவர்கள் கொஞ்சம் தண்ணி கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு கேனைக் காலி செய்து கொடுப்பது.

balasubramni1

* பாத்ரூமுக்குள் நுழையும்போது வரும் சிகரெட் நெடி நாற்றம்!

ramkumar_vea

* கும்பலாக. ஒரே குழுவாக ஏறி அடுத்த வீட்டுக் கதையிலிருந்து அகில உலக அரசியல்வரை சத்தம் போட்டுக்கொண்டே அலசுவது.

rajasinghjeyak1

* கிராசிங் என்ற பெயரில் வண்டியை ஸ்டேஷனுக்கு மிக அருகில் நிறுத்தி பொறுமையைச் சோதிப்பது.

ARiyasahmed

* பயணத்தில் வாசிக்கலாம் என நான் எடுத்துப் போகும் நாவல் அல்லது வார இதழைப் படித்து விட்டுத் தருகிறேன் என எதிர் சீட்காரர் வாங்கி மணிக்கணக்காய் படித்து இரிட்டேட் செய்வது தான்.

parveenyunus

* டாய்லட் நாற்றம் ப்ளஸ் கதவில் எழுதியிருக்கும் கெட்ட வார்த்தை.

ARiyasahmed

* ‘ட்ரெயின் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா? நீ ஏறுடா ரிசர்வ்டு கோச்ல’னு உள்ள புகுந்து ப்ரஷர் ஏத்தும் நல்ல உள்ளங்கள்!

San8416

* மேல் இருக்கையில் இருந்துகொண்டு தின்பண்டங்களைக் கீழே சிதற விடுறது. மேலே செல்லும்போது மிதித்துவிட்டுப் போறது.

Spykevasu

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? பிக்பாஸை சுவாரஸ்யமாக்க நச்சுனு ஒரு டாஸ்க் சொல்லுங்க் ?

? சரிந்துவிழும் காங்கிரஸ் எழுச்சி பெற யாரைத் தலைவராக்கலாம்?

? 2020-ல் உங்களுக்கு பாசிட்டிவாக நடந்த ஒரு விஷயம் சொல்லுங்களேன்.

? ‘ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து நிற்பேன்’ என்று சீமான் கூறியிருக்கிறார். இருவரின் பிரசாரமும் எப்படியிருக்கும்?

? டி.ராஜேந்தர் சரித்திரப் படம் எடுத்தால் மன்னருக்கு எப்படி வசனம் எழுதுவார்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்பvasagarmedai@vikatan.com