Published:Updated:

வாசகர் மேடை: ஒரு நோபல் பார்சல்ல்ல்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

ஆளுக்கொரு தாமரை மொட்டு வழங்கப்படும். அதை மலரச் செய்யும் போட்டி. நடுவர்-மேலே இருப்பவர்கள்.

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரில் ஒருவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆக, விளையாட்டுப்போட்டி நடத்தலாம் என்றால் என்ன போட்டி நடத்தலாம்?

* ஏலம் விடுவதே சிறந்த முறை.

நா.குழந்தைவேலு, மதுரை.

*ஓ.பி.எஸ் என்றாலே நம்பர் 2 என்றாகிவிட்டது. அதனால் போட்டியே தேவைப்படாது. இங்கிலீஷ்லயும் E-க்கு அப்புறம்தானே O வருகிறது?!

S. கருணாகரன், சென்னை

*ஒரு அறைக்குள் கண்களைத் துணியால் கட்டி இருவரையும் அமர வைக்க வேண்டும். பின் கட்சியின் நிர்வாகிகளை ஒவ்வொருவராக வரச்செய்து குறிப்பால் கண்டறியச் செய்ய வேண்டும். அதிக நிர்வாகிகளைக் குறிப்பறிந்து கண்டிபிடிப்பவரே கட்சியின் பொதுச்செயலாளர். பொதுச்செயலாளராகிவிட்டால் பின்னாளில் கட்சியிலுள்ள புல்லுருவிகளை இனம் கண்டு களைய இப்போட்டி உதவும்.

 மன்னார்குடி ராஜகோபால்.

*ஆளுக்கொரு தாமரை மொட்டு வழங்கப்படும்.(காஞ்சு போனதான்னு கேட்கக்கூடாது)அதை மலரச் செய்யும் போட்டி. நடுவர்-மேலே இருப்பவர்கள்.

 ஜெய்க்ரிஷ்

*‘முட்டிப் போட்டி’! அதாங்க... யானை மாதிரி முட்டி போட்டுத் தவழ்ந்து தவழ்ந்து தவழ்ந்து ஓடுற விளையாட்டுப் போட்டி வைக்கலாமுங்க..!

R. உமா, ஈரோடு.

*வேறென்ன விளையாட்டு?! கபடிதான்...அதுலதானே ஒருத்தர் காலை இன்னொருத்தர் வாரி விட முடியும்?

பூங்குன்றன் இளங்கோவன்

*ஸ்பூன்லிங் - எலுமிச்சம்பழத்தை ஸ்பூனில் கவ்விக்கொண்டு விழாமல் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தவழ்ந்தே செல்ல வேண்டும்!

San8416

*‘கதை கேட்கும் போட்டி.’ தூங்காமல் 40 கதைகள் கேட்க வேண்டும்.

Vasanth920

வாசகர் மேடை: ஒரு நோபல் பார்சல்ல்ல்!

ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் எந்தக் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கலாம்?

* பன் புரோட்டா, இலை புரோட்டா, நெய் புரோட்டா, கொத்து புரோட்டா என்று விதவிதமாக புரோட்டாவுக்குப் பெயர்கள் கண்டுபிடித்துச் சூட்டும் தமிழர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்!

கே.எம். ரவிச்சந்திரன்

*நம் ஊர் சாலைகளில் ஸ்பீடு பிரேக்கருக்குப் பக்கத்தில ஒரு பாதை உருவாக்கியிருப்பாங்க பாருங்க... அந்தக் கண்டுபிடிப்பிற்கு நிச்சயம் நோபல் பரிசு கொடுத்தே ஆக வேண்டும்.

கோ.ராஜசேகர்

*‘நீங்க என்ன ஆளுங்க’ என்பதைக் கண்டறியும் முறைக்குத்தான்!

iluvmel_c

*சுற்றுலா செல்லும்போது மூன்று நாள்களானாலும் வச்சு சாப்பிடும் கெட்டுப்போகாத புளியோதரையைக் கண்டுபிடித்த தமிழனின் மூளைக்காக ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் ‘நோபல்’ பரிசு கொடுக்கலாம்.

IamJeevagan

*இம்மி பிசகாமல் ஜாதகம் பார்த்து, சேரக்கூடாத ஜோடிகளைச் சேர்த்து வைக்கும் பெற்றோர்களுக்குத் தரலாம்!

தாரை செ.ஆசைத்தம்பி

*இதுபோன்ற கேள்விகளைக் கண்டுபிடிக்கும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் குழுவிற்கு சிறந்த கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

ARiyasahmed

*இதுக்கு என்னங்க போட்டி..?

கம்பர் எழுதியது கம்பராமாயணம்னு தமிழ்கூறு நல்லுலகம் நம்பிக்கிட்டிருந்தபோது, ஆராய்ச்சிகள் பல செய்து, ‘சேக்கிழார் பெருமான்தான் கம்ப ராமாயணம் எழுதியது’ என்று நிரூபித்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்.

KmFarook6

*தேர்தலில் ‘நோட்டா’வைக் கண்டுபிடித்த வர்களுக்குக் கொடுக்கலாம். ஆனா என்ன, அந்த ஒரு கட்சிதான் பாவம். எப்பப் பாரு இந்த நோட்டா வந்து அவங்க வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சிடுது.

Rajasekar4795

‘`என்னை மக்களாகிய நீங்கள்தான் பார்த்துக்கணும்” என்று சிம்பு சொல்லியிருக்கிறாரே, அவரை எப்படியெல்லாம் பார்த்துக்கலாம்?

*“என் மவன் நடிச்சது மாநாடு... அவன் கிட்ட மோதினா நீங்க கருவாடு” என டி.ராஜேந்தரை வசனம் பேச வைத்து சிம்புவுக்குக் குடைச்சல் கொடுப்பவர்களை அலறியடித்து ஓட வைக்கலாம்!

 ரிஷிவந்தியா

*‘மாநாடு’ மாதிரியே திரும்பத் திரும்ப வந்தார்னா நல்லா பார்த்துக்கலாம்.

 அ.வேளாங்கண்ணி

*சினிமாத் தயாரிப்பாளர்கள்: நாங்க உங்களைப் பார்த்துக்கறோம்... பதிலுக்கு நீங்க எங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துக்கணும்... ஓகேவா?

saravankavi

*‘AAA’ பார்ட் 2 படத்தை மட்டும் எடுக்க விடாமப் பார்த்துக்கணும். பாவம், அந்தப் படம் வந்த பிறகு மனுசன் இப்படி ஆகிட்டாப்ல!

sudarvizhie

*அப்படிப் பார்த்துக்க, அவர் சம்பளமாக வாங்குகிற கோடிகளில் ஒரு பர்சன்டேஜ் வெட்டுவாரா... அதைக் கேட்டுச் சொல்லுங்க விகடனாரே..!

parveenyunus

*‘‘மாநாடு திரைப்பட ரிலீசுக்கு நான்தான் உதவினேன்’’ என்று சீமான் சொல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

kayathaisathya

வாசகர் மேடை: ஒரு நோபல் பார்சல்ல்ல்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒமைக்ரான் - இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டதும் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்தது?

*ஐயய்யோ... இத புதுசுன்னு சொல்லவா... இல்லே பழசுன்னு சொல்லவா..?!

ஏ.முருகேஸ்வரி, தென்காசி.

*விகடனுக்கு லாக்டௌன் கதைகள் ரெடி பண்ணணும்.

 ஆர். பிரசன்னா

*வருஷத்துக்கு நாலு புயலுக்குப் பேரு வைக்குற மாதிரி, இப்போ வைரஸுக்கும் பேரு வைக்க ஆரம்பிச்சுட்டாங்களே!

 எம். விக்னேஷ்

*விஜய் ஆண்டனி சாங்ஸ்ல வர்ற வார்த்தை மாதிரி ஒரு தினுசா இருக்கே!

 நா.இரவீந்திரன்

*என் மைண்ட் வாய்ஸைவிட என் மகன் மைண்ட் வாய்ஸ் என்னன்னு சொல்றேன்... ‘ஹையா... இந்த வருஷமும் ஆல் பாஸ், ஜாலி...’ என்பதாகும்.

ParveenF7

*ரெண்டு வருஷத்துக்கு முன்னே வாட்ஸ்அப்ல வந்த மருத்துவக் குறிப்புகள் எல்லாம் மறுபடியும் ஒரு ரவுண்டு வருமேன்னு நினைக்கும்போதே கண்ணைக் கட்டுதே!

NedumaranJ

*ஐயய்யோ, மொத்தப் பயலுகளும் லாக்டௌன் வர்றதுக்குள்ள கல்யாணத்த வச்சிடுவோம்னு கல்யாணப் பத்திரிகைய நீட்டுவானுங்களே...அம்புட்டுப் பயலுகளுக்கும் மொய்க்கு எங்க போவேன்?!

Lakshmi98598036

*வருஷா வருஷம் நம்ம வாழ்க்கை அப்டேட் ஆகுதோ இல்லையோ, இவன் கரெக்டா அப்டேட் ஆகிடுறான்!

PRABU_4M_ADM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொபைல் போனை வயதான உங்கள் அப்பா-அம்மா பயன்படுத்துவதற்கும் உங்கள் குழந்தை பயன்படுத்து வதற்கும் சுவாரஸ்யமான வித்தியாசம் என்ன?

*அம்மா அப்பாவுக்கு நாம சொல்லிக் கொடுப்போம், குழந்தைகள் நமக்குத் திட்டிட்டே கத்துக்கொடுப்பாங்க!

 Shabina

*யாருகிட்டயாவது நாம பேசலாம் அப்படின்னு அம்மா அப்பா போனைப் பயன்படுத்துவாங்க.யாருமே நம்மகிட்ட பேசாம இருக்கணும் அப்படிங்கறதுக்காக குழந்தைங்க போனைப் பயன்படுத்துவாங்க.

 தியானேஷ்

*‘என்னடா பண்றது’ என்று அப்பா-அம்மா கேட்பார்கள். ‘என்னடா பண்ணி வச்சிருக்கிற?’ என்று குழந்தைகளிடம் கேட்பேன்!

 இர.செல்வநிகிலா

*“தாத்தா, உனக்கு இதோட 100 தடவை சொல்லிக் கொடுத்துட்டேன். நான் ஒண்ணும் உன்னோட போனுக்கு அட்மின் இல்ல!” எங்கள் வீட்ல அடிக்கடி கேக்கிற டயலாக்!

Saisudhar1

*பெரியவங்களுக்கு ரீசார்ஜ் கார்டு இருந்தா போதும், குழந்தைகளுக்கு நெட் கார்டு இருந்தா போதும்!

urs_venbaa

*‘இவ்வளவா’ (விலையிலும் பலவிதப் பயன்களிலும்) மொபைல் போன் என ஆச்சரியப்பட்டால் பெற்றோர். ‘இவ்வளவுதான்’ என்று பயன்படுத்த நமக்கே கற்றுக்கொடுத்தால் குழந்தைகள்!

b_kaviyarasu

*மொபைல் போனை vertical-லா பயன்படுத்தினால் அது நம் பெற்றோர்கள். அதுவே Horizontal (#game)-ல பயன்படுத்தினால் நம்ம பசங்க...

RGSekar11

வாசகர் மேடை: ஒரு நோபல் பார்சல்ல்ல்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. ரஜினியும் தனுஷும் இணைந்து நடிக்க ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்?

2. 2021 - இதைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் என்ன சொல்லலாம்?

3.இன்னும் கட்சி ஆரம்பிக்காத நடிகர்களில் யார் கட்சி தொடங்க வேண்டும்? கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைக்கலாம்?

4. தெலுங்கு சினிமாக்களில் இருப்பதிலேயே அதிக அட்ராசிட்டி எது?

5. ‘இதுக்கெல்லாமா ட்ரீட் கேப்பாய்ங்க’ என்று நீங்கள் வியந்த சம்பவம்..?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com