Published:Updated:

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

அ.அ.அ.ம.க: அருமை அண்ணன் அன்பு மக்கள் கழகம்.

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

அ.அ.அ.ம.க: அருமை அண்ணன் அன்பு மக்கள் கழகம்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ரஜினியின் அரசியல் கொள்கை என்னவாக இருக்கும் என ஒரு ஹேஷ்டேக்காகச் சொல்லுங்களேன்!

#ராகவேந்திராயிசம்

அ.ராஜாரகுமான், கம்பம்

#ரசிகர்கள்_போருக்கு_தயாராகுங்கள்

#பாஜகவினர்_பதவிக்கு_தயாராகுங்கள்

saravankavi

#சிஸ்டத்தை_உள்ளே_மாத்து_கஷ்டத்தை_வெளியே_ஏத்து!

Rajkumarvee69

ரஜினி மைண்ட்வாய்ஸ்: என்னது கொள்கையா... இதைத்தான் தமிழருவி மணியனிடமும், அர்ஜுனமூர்த்தியிடமும் கேட்டுக்கிட்டே இருக்கேன். அவங்களும் சொல்ல மாட்டேங்கிறாங்க!

IamUzhavan

இப்ப பிஜேபி காலூன்றலைனா எப்பவும் இல்ல.

parveenyunus

ஐயா கொள்கைன்னா என்னங்கய்யான்னு பிக்பாஸ்ல கஞ்சா கருப்பு மாதிரி கேட்கலைன்னா சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

Vikki_Twits

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

? டி.ஆரும் பியர்ல் க்ரில்ஸும் பேசிக்கொண்டால் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என சுருக்கமாகச் சொல்லுங்களேன்!

பியர்ல் க்ரில்ஸ்: காட்டுல உங்களுக்கு ரொம்ப பயமா இல்லையா?

டி.ஆர்: Your trying to uppress suppress and depress the views of a Tamilan.

SriRam_M_20

டி.ஆர்: புலி பத்தி ஏதாவது சொல்லட்டுமா?

பியர்ல் க்ரில்ஸ்: ஐயா சாமி என்னை விட்டுடுங்க, நான் திரும்ப காட்டுக்கே போயிடறேன்.

udayakumar

பியர்ல் கிரில்ஸ்:

நாம் இப்போது இருக்குமிடம் ஆபத்தான காட்டாறு.

நம் கூட இருப்பது டி.ஆரு

டி. ஆர்:

காட்டாற்றை நீந்தியே

சேர்ந்திடுவேன் ஊரு

நிச்சயமா நடக்கும்

நீ பாரு

இல்லேன்னா மாத்திக்குவேன் என் பேரு.

ஜெ.ஜான்சி சுப்புராஜ், கோண்டூர்

பி.கி: நான் மோசமானவன்.

டி.ஆர்: நான் பாசமானவன்,

நான் நேசமானவன்,

நான் ரோஷமானவன்

நான் ஆக்ரோஷமானவன்,

நான், ‌‌...

( பி.கி ‘மாயமானவன்’ ஆனார்)

BaluElango2

பியர்ல் க்ரில்ஸ்: சாதனை மேல சாதனை படைக்கிறதுதான் என்னோட லட்சியம் டி.ஆர். சார்.

டி.ஆர்: அப்ப, லட்சிய திமுகவில் சேர்ந்திடுங்க பியர்ல் க்ரில்ஸ்!

KLAKSHM

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

? பழைய ஒரு திரைப்படத்தை லேட்டஸ்ட் இளம் தமிழ் ஹீரோ ஒருவர் ரீமேக் செய்யலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? என்ன படம்?

சிம்பு ~ ப்ரியா பவானிசங்கர்

வசந்தமாளிகை

அக்ஷய் குமார், திருச்சி

புவனா ஒரு கேள்விக்குறி - சிவகுமார் பாத்திரத்தில் விஷால், ரஜினி பாத்திரத்தில் அஜித்.

 Venkat

அன்பே வா - எம்.ஜி.ஆராக விஜய், சரோஜாதேவியாக கீர்த்தி சுரேஷ், நாகேஷாக வைகைப்புயல் வடிவேல்.

ச.ஜான்ரவி, கோவில்பட்டி.

‘நவராத்திரி’ சிவாஜியின் 9 வேடங்களில் உடம்பை வருத்தி நடிக்க விக்ரமே சரியான சாய்ஸ்... சாவித்திரியாக நடிக்க கீர்த்திசுரேஷுக்கே மீண்டும் சான்ஸ்!

RamAathiNarayen

தனுஷ்: நீர்க்குமிழி

balasubramni1

கலாட்டா கல்யாணம்

சிவாஜியாக சிவகார்த்திகேயன்

KRavikumar39

பார்த்தால் பசி தீரும் - சூர்யா - கார்த்தி

IamUzhavan

‘காதலிக்க நேரமில்லை’ ரீமேக்கில் முத்துராமன் கேரக்டருக்கு விஜய் சேதுபதியும், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு அட்டகத்தி தினேஷும், நாகேஷ் கேரக்டருக்கு ஆர்.ஜே.பாலாஜியும் கச்சிதமாகப் பொருந்துவார்கள்.

IamJeevagan

‘அவள் அப்படித்தான்’ கமல் கேரக்டரில் சூர்யா, ஸ்ரீப்ரியா கேரக்டரில் அனுஷ்கா, ரஜினி கேரக்டரில் விஜய் சேதுபதி..!

KLAKSHMi

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ – விஜய் சேதுபதி (கல்யாண் குமார்)

எம்.கலையரசி, சேலம்

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ ஜெமினி கணேசன் கேரக்டரில் சிம்பு, வைஜயந்தி மாலா கேரக்டரில் ஹன்ஸிகா, பத்மினி கேரக்டரில் தமன்னா..!

laks.veni

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

? இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழக வீரர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? ஏன்?

ஸ்ரீகாந்த்... மின்னல் வேக பவுண்டரி ஷாட்டுக்காக. ஒரு வர்ணனையாளர் சொன்னார், ‘மற்றவர்களுக்கு Good shot... four என்று சொன்னால், இவருக்கு Four... Good shot...’ என்று சொல்ல வேண்டும்.

 மொஹம்மது யூசஃப்

சீனிவாசராகவன் வெங்கட்ராகவன் - சிறந்த வலது கை சுழல் பந்து வீச்சுத் திறமை கொண்டவர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த இன்டர்நேஷனல் கிரிக்கெட் நடுவர் இவர்.

வி.சி. கிருஷ்ணரத்னம், சென்னை

தினேஷ் கார்த்திக்.

பந்தா இல்லாத மனுஷன். மைதானத்தில் தமிழில் பேசுவார். நடனம் என்று வந்துவிட்டால் இறங்கிக் குத்துவார். மொத்தத்தில் பக்கா தமிழ் லோக்கல் பையன்.

IamJeevagan

முத்தையா முரளிதரன் (இலங்கை மலையகத் தமிழர்)

பயோபிக்தான் எடுக்க விடவில்லை. இதிலேயாவது கவுரவப்படுத்துங்களேன்.

jerry46327240

புதுமையான பௌலிங் (கேரம் பால்) முறையை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தி சாதித்த ரவிச்சந்திரன் அஸ்வின்.

R.அருண்குமார்

கும்பகோணம் பாலாஜி தான் சூப்பர், பாகிஸ்தான் பிரதமரிடமே பாராட்டு பெற்றார்.

மலர்விழி, சென்னை

நடராஜன், இன்று அவர்தான் விளையாட்டில் ‘கலக்குறாரு. அவரு தமிழர்களின் அடையாளம்.

சௌமியாசுப்பிரமணியன், சென்னை

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

? அழகிரி கட்சி தொடங்கினால் அதற்கு என்ன பெயர் வைப்பார்?

காந்திஅழகிரி திராவிட முன்னேற்றக் கழகம்! (காந்தி - மு.க.அழகிரியின் மனைவி பெயர். கட்சி பெயர்ல ‘தேசப்பிதா காந்தி’ பெயர் வந்த மாதிரியும் ஆச்சு)

RamAathiNarayen

ASMK

Anti ஸ்டாலின் முன்னேற்றக் கழகம்

IamUzhavan

அ.அ.அ.ம.க: அருமை அண்ணன் அன்பு மக்கள் கழகம்.

Kirachand4

சொ. செ. சூ. க - சொந்தச் செலவில் சூரியன் கழகம்.

SowThanishka

அஇஅதிமுக மாதிரி அநெஅதிமுக-ன்னு பேரு வைப்பார் (அஞ்சா நெஞ்சன் அழகிரி திராவிட முன்னேற்றக் கழகம்).

saravankavi

ஒண்ணுவிட்ட தி மு க

மு. கணபதி சென்னை

த.சா.க: தகப்பன்சாமி கட்சி.

பெ. பச்சையப்பன், கம்பம்

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

  • தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்... இந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றபடி என்ன பொங்கல் கொண்டாடலாம்?

  • பா.ஜ.க ~ தி.மு.க; காங்கிரஸ் ~ அ.தி.மு.க கூட்டணி அமைத்தால், யார் எப்படி ஓட்டு கேட்பார்கள்?

  • சமையல் யூடியூப் சேனல்களில் உங்களை வெறுப்பேற்றும் விஷயம் எது?

  • நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தால் ‘வாசகர் மேடை’யில் என்ன வித்தியாசமான கேள்வி கேட்பீர்கள்?

  • விஜய் 65 படத்துக்கு ஒரு நல்ல டைட்டில் சொல்லுங்க...

வாசகர் மேடை! - அநெஅதிமுக!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com