ராஜேந்திர பாலாஜியின் எஸ்கேப் புராணத்தைப் படமாக்கினால் ரா.பா-வின் வேடத்தில் நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?
உருவ அமைப்பு, நக்கல் கலந்த டயலாக் டெலிவரி, ‘அமிதாப் மாமா’ கேரக்டரில் பல கெட்டப் போட்டுத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அனுபவம் எனப் பல விஷயங்கள் அட்டகாசமாக ஒத்துப்போவதால் நடிகர் இளவரசுதான் நம்மளோட ஒரே சாய்ஸ்..!
கே.லக்ஷ்மணன்
கோட்டா சீனிவாசராவ். ‘சாமி’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் எஸ்கேப் ஆக வண்டி மாறி மாறி ஓடும் அந்த நடிப்பு யாருக்கு வரும்?!
எஸ்.இராஜேந்திரன்
மிஷ்கின்... மிஸ்டேக் இல்லாத ஒரே தேர்வு!
மணிமேகலை பாலு
மன்சூர் அலி கானை நடிக்க வைத்தால் அப்படியே அச்சு அசலாக ராஜேந்திர பாலாஜி போலவே இருக்கும்.
மீனலோசனி பட்டாபிராமன்
நடிகர் சிங்கமுத்து மிகவும் பொருத்தமாக இருப்பார்.
தனசேகரன்
‘96’ படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜனகராஜ் கனகச்சிதமாகப் பொருந்துவார்.
ParveenF7
ராஜேந்திர பாலாஜியின் எஸ்கேப் புராணத்தில் மலையாள நடிகர் பிஜூ மேனன் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
SriRam_M_20
கதையின் நாயகன், ஹீரோவா, வில்லனா, காமெடியனா என்று ரசிகர்களைக் கடைசிவரை சீட் நுனியில் அமர்த்தி, கடைசியில் ஒரு ட்விஸ்ட் கொடுக்க, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி பொருத்தமாக இருப்பார்.
NedumaranJ
சாய்குமார். அந்த டென்ஷன் ஏற்றும் நடிப்பு அபாரமாய் இருக்கும்.
urs_venbaa
சாயாஜி ஷிண்டே, பாரதியா கலக்குனவருக்கு பாலாஜியா கலக்க முடியாதா என்ன?!
DevAnan82181837

ஒத்திவைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சிக்கு நம் திரைப்பட நட்சத்திரங்கள் புத்தகம் கொண்டு வருவதென்றால் என்னென்ன தலைப்புகளில் இருக்கலாம்?
சீமான் - கட்டுக்கதைகளின் கூட்டாஞ்சோறு.
வெ.சென்னப்பன்
விஜய் சேதுபதி - 365 நாளும் கால்ஷீட் தருவது எப்படி?
கு.வைரச்சந்திரன்
அஜித் - சில நேரங்களில் சில அப்டேட்டுகள்.
ச.பிரபு
கமல்ஹாசன் - முடிஞ்சா படிச்சுக்க புரிஞ்சுக்க!
நா.இரவீந்திரன்
கவுண்டமணி: வாழைப் பழம் ஒன்றா? இரண்டா?
Saisudhar1
ராகவா லாரன்ஸ்: வந்தா பேயாத்தான் வருவேன்!
Kirachand4
சிம்பு - முப்பதே நாளில் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி?
பர்வீன் யூனுஸ், சென்னை.
உதயநிதி ஸ்டாலின் - ஒரு செங்கல்... ஒரு வெற்றி.
சீ.பி.ஷபீ, சென்னை.
மோடி பொங்கல்தான் மிஸ்ஸாகிவிட்டது. ‘மோடி தீபாவளி’ கொண்டாட தமிழக பா.ஜ.க-வினர் என்னென்ன வெடிகளை ரெடி செய்யலாம்?
தமிழ்நாட்டில் அவங்க லெவலுக்கு கேப் ரோலும், விளையாட்டுத் துப்பாக்கியும் போதும்.
எஸ்.இராஜேந்திரன்
ஏழு பேர் விடுதலை வெடி, நீட் வெடி போன்ற தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வெடிகளை ரெடி செய்யா விட்டால் கடைசியில் புஸ்வாணம்தான்.
எம்.கலையரசி
ஒத்த வெடி வெடிச்சி வரப்போற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்ல தனிச்சி நிக்கலாம்னு பிரதமருக்கு உணர்த்தலாம்!
மருத.வடுகநாதன்
கேமரா வெடி - பத்த வச்சா மேல போய் க்ளிக்னு வெடிக்கும்.
bommaiya
எல்லா நாடுகளின் பெயர்களையும் எழுதி ராக்கெட் விடலாம்.
balebalu
ஆள் இழுப்பு வெடி. பிற கட்சிகளிடமிருந்து ஆட்களை இழுப்பது போல பிற வெடிகளின் சத்தத்தைத் தன்னிடம் இழுத்து வெடிக்கும் வெடி.
UDAYAKUMARKR202
மேம்பால வெடி :
மேம்பாலத்துல ஏற ஆரம்பிச்சதுமே டபடபன்னு வெடிக்கத் தொடங்கிடும்... மத்த எல்லாரும் தெறிச்சு ஓடிருவாங்க... மோடி அய்யா பயப்படாமப் போகலாம்!
TamilSiragi05
ஆதார் அணுகுண்டு : இந்த வெடியைப் பற்ற வைத்ததும் ஆதார் அட்டையில் இருக்கும் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி-யை வெடியில் டைப் பண்ணால்தான் வெடிக்கும்.
balasubramni1

‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்று நீங்கள் சமீபத்தில் யோசித்த தருணம்?
‘பிரதமரைத் தி.மு.க வரவேற்கும்’னு கனிமொழி சொன்னபோது...
மாணிக்கம்
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குக்கிற்கு அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்லி நகரில் சிலை அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு.
களந்தை சுகுமார்
கோலியின் எதிர்பாராத டெஸ்ட் கேப்டன்ஷிப் விட்டுக்கொடுத்தல்.
அ.வேளாங்கண்ணி
பதில் தெரியாத வாசகர் மேடைக் கேள்விகள் அனைத்துமே ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்று யோசிக்க வைக்கும்.
Dr.செல்வகணேஷ்
வருட, மாதாந்தர வீட்டு பட்ஜெட் போடும்போது சுற்றுலாப் பயணம், கேளிக்கைக்கு என்று தனியாகப் பணம் ஒதுக்குவதுண்டு. கொரோனாவால் இப்பொழுது அது லிஸ்டிலேயே இல்லாமல் போய்விட்டது.
இந்திராணி தங்கவேல்
டிபன் கூடவே நாம கேட்காமலே வடை வைக்கிற ஹோட்டல் பார்ட்டிங்க இப்ப வாட்டர் பாட்டிலையும் வச்சு பில்லைத் தீட்டுறதுதான்.
மன்னார்குடி ப.இராஜகோபால்
“தலைவர் சொல்வதைச் செய்யும் தொண்டனாக, மக்கள் சேவகனாகவே இருக்க விரும்புகிறேன்”னு சொன்ன உதயநிதி பேட்டியைப் பார்த்ததும்...
JaNeHANUSHKA

எது எதற்கெல்லாமோ ‘தினம்’ கொண்டாடுகிறார்கள், இதை ஏன் கொண்டாடுவதில்லை என்று நீங்கள் பரிந்துரைக்கும் ‘தினம்’?
கொரோனா தினம் - முதன்முதலில் சீனாவில் கண்டறிந்து, நாமகரணம் சூட்டப்பட்ட தினம் (உலகத்திற்கே பொது விடுமுறை அறிவிக்கலாம். எவ்ளோ நாள் லீவு விட்டாலும் பத்தாது!).
ஸ்வாதி
இந்தியாவிலேயே அதிகம் விரும்பும் உணவாக பிரியாணி இருப்பதால் அதைத் தாமும் உண்டு, இல்லாதோருக்கும் கொடுத்து உதவும் விதமாக ‘பிரியாணி தினம்' கொண்டாடலாம் !
எ.முகமது ஹுமாயூன்
மார்ச் 26-ம் தேதி மீம் கிரியேட்டர் தினம் கொண்டாடப்படுகிறது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கெல்லாம் தெய்வமாய் இருக்கும் வடிவேலு பிறந்தநாளை ஏன் மீம் தினமாகக் கொண்டாடக் கூடாது?
சந்திரபிரகாஷ்
சமையல் தினம் (அன்று இல்லத்தரசிகளுக்கு விடுப்பு அளித்துவிட்டு, ஆண்கள் சமையலில் இறங்கலாம்).
S கௌரி மீனாட்சி, நாகமலை.
செல்லூர் ராஜுவின் பிறந்த நாளை ‘வளரும் விஞ்ஞானிகள் தினமாகக்’ கொண்டாட வேண்டும்!
absivam
90'ஸ் கிட்ஸ் தினம் கொண்டாடியே ஆக வேண்டும்! அந்த விழாவிலாவது கல்யாணம் அமைய வாய்ப்பு ஏற்படலாம்.
IamJeevagan
லாக்டெளன் தினம் - மோடி அவர்கள் ரத்து செய்த முதல் வெளிநாட்டுப் பயணத்தின் நாள்.
IamUzhavan
டிசம்பர் 31 அன்று எல்லோரும், ‘நாளை முதல் அதைச் செய்வேன், இதைச் செய்ய மாட்டேன்’ என சபதம் எடுக்கிறோம். ஆனால் செயல்படுத்துவதில்லை. அதை ஏன் ‘பொய் சபத தினம்’ என்று கொண்டாடக் கூடாது?!
parveenyunus
நவம்பர் 8. அன்றுதான் டீமானிட்டைசேஷன் என்ற கொடூரம் நிகழ்ந்தது. அதை ஏன் ‘நடுத்தெரு நாராயணன் தினம்’ எனக் கொண்டாடக் கூடாது?!
பர்வீன் யூனுஸ், சென்னை.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS1. காதலுக்குத் தூது போய் மாட்டிக்கொண்ட சுவாரசியமான அனுபவம் இருக்கா? சொல்லுங்களேன்!
2. கமல் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன், பழைய கமல் படத்தை ரீமேக் செய்து நடிப்பது என்றால் எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்?
3. ராமதாஸும் நீண்டநாள்களாக ஆசைப்படுகிறார். அன்புமணி தமிழக முதல்வராக ஐடியாக்கள் ப்ளீஸ்...
4. தமிழ் சினிமாப் பாடல்களில் உங்களுக்கு நீண்ட நாள்களாகப் புரியாத விஷயம் எது?
5. 90களின் டி.வி அனுபவங்களில் இப்போது எதை மிஸ் பண்ணுகிறீர்கள்?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!