Published:Updated:

வாசகர் மேடை: மலருமா நெலும்போ நூசிபேரா?

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா

பேரறிவாளன் -அற்புதம்மாள் வாழ்க்கைப் போராட்டத்தைப் படமாக எடுத்தால் சூர்யாவும் ராதிகாவும் நடிக்கலாம்!

வாசகர் மேடை: மலருமா நெலும்போ நூசிபேரா?

பேரறிவாளன் -அற்புதம்மாள் வாழ்க்கைப் போராட்டத்தைப் படமாக எடுத்தால் சூர்யாவும் ராதிகாவும் நடிக்கலாம்!

Published:Updated:
சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா

நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வுக்குச் சில யோசனைகள் ப்ளீஸ்...

தாமரைக்கு ஓட்டு கேட்டா தான் பிரச்னை, அதனால் ‘நெலும்போ நூசிபேரா’வுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வாக்கு கேக்கலாம். புரியலைல்ல, அதாங்க தாமரையின் தாவரவியல் பெயர்!

A.ஆசிக் ஜாரிஃப்

‘ஓட்டு போட்டு எங்களை ஜெயிக்க வைக்கலைன்னா, எச்.ராஜா & ராதாரவியை உங்க வீட்டு வாசல்ல நிக்க வெச்சு உங்களைத் திட்ட வைப்போம்’னு சொல்லி ஓட்டு கேட்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.

எஸ்.ஏ.விஜயலஷ்மி

வடிவேலு பாணியில் “எவ்வளவு அடி வாங்கி யிருக்கோம், கப் எங்களுக்குத் தான்” என, தேர்தல் கமிஷ னரிடம் சண்டை போடலாம்.

ச.பிரபு

சில யோசனைகளெல்லாம் இல்லை, ஒரே யோசனைதான். ஓட்டு போடும் இயந்திரத்தை பா.ஜ.க-வே தயாரிக்க வேண்டும்.

கே.கருணாநிதி

வேட்பாளரோட ஃபேமிலி மெம்பர்ஸ் அத்தனை பேரும் பா.ஜ.க-விற்கு ஓட்டு போட்டாலே போதுமே... ஏன்னா, அவங்க ஒரு ஓட்டுக்கு மேல வாங்குனாவே ஜெயிச்ச மாதிரிதான்...

bommaiya

உங்க ஏரியாவில் வெள்ளம் வந்தால் போட்டோ ஷூட்டுக்குப் படகில் வரமாட்டேன் என எல்லா வாக்காளர்களுக்கும் சத்தியம் செய்து கொடுக்கலாம்!

Saisudhar1

வாசகர் மேடை: மலருமா நெலும்போ நூசிபேரா?

தொடர்ந்து வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்கும் சூர்யா அடுத்து யாருடைய பயோபிக்கில் நடிக்கலாம்?

எளிமையானவர், நேர்மையானவர், தன்னலம் பாராமல் உழைத்து மக்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்த தோழர் ஜீவானந்தம் பாத்திரத்தில் நடிக்கலாம்.

ஆர். ஸ்ரீகாந்தன்

நடிகர் சந்திரபாபுவின் பயோபிக்கில் நடித்தால் கலக்குவார்!

மூ‌. மோகன்

புத்தர் பயாபிக்கில் கலக்கலாமே...

பா து பிரகாஷ்

பேரறிவாளன் -அற்புதம்மாள் வாழ்க்கைப் போராட்டத்தைப் படமாக எடுத்தால் சூர்யாவும் ராதிகாவும் நடிக்கலாம்! வெற்றிமாறன் இயக்கினால் படத்துக்குத் தேசிய விருது கன்பார்ம்!

சிவம்

சுரேஷ் ரெய்னா, அவரோட பயோபிக்ல சூர்யா நடிச்சா நல்லா இருக்கும்னு சொல்லியிருக்காரு.

tsk_naveen6

சூர்யாவின் நடிப்பு வேட்கைக்குத் தீனி போடக்கூடிய கதை நம்ம நரேந்திர மோடி ஜி பயோபிக் தான்! எவ்வளவு பயணங்கள்... எவ்வளவு கெட்டப்புகள்..!

JaNeHANUSHKA

சேகுவாரா. கண்களும் உடல் மொழியும் பக்காவாகப் பொருந்தும்.

balebalu

ஜெகன் மோகன் ரெட்டி பயோபிக்கில் நடிக்கலாம்.

urs_venbaa

முன்னாள் மேற்குவங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களின் பயோபிக்கில் நடிக்கலாம்.

PG911_twitz

வாசகர் மேடை: மலருமா நெலும்போ நூசிபேரா?

இந்தப் படத்திற்கு இவருக்குப் பதில் இவர் இசையமைத்திருக்கலாம் என உங்களுக்குத் தோன்றிய படம் எது? ஏன்?

‘தசாவதாரம்’ படத்திற்கு ஹிமேஷ் ரேஷ்மய்யாவுக்கு பதில் இளையராஜா மியூஸிக் போட்டிருந்தால் நேட்டி விட்டியுடன் இருந்திருக்கும்.

பர்வீன் யூனுஸ்

‘இது நம்ம ஆளு.’ இசையமைப்பாளர் TR குறளரசனுக்கு பதில் அப்பா T.ராஜேந்தர் இசையமைத் திருந்தால் பாடல்களாவது ஹிட் அடித்திருக்கும்.

ஜெரி.D.டார்வி

‘அண்ணாத்தே’ படத்திற்கு S.A.ராஜ்குமார் இசையமைத் திருக்கலாம். ‘லா லா’ கொஞ்சம் தூக்கலாகவே இருந்திருக்கும்.

மாணிக்கம்

ஆசை - அஜித் நடித்து வசந்த் இயக்கிய இந்தப் படத்திற்கு தேவா, ஏ.ஆர் ரஹ்மானை இமிடேட் செய்தது போல் இசையமைத்திருப்பார் நிஜமாகவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றியதுண்டு.

எம்.கலையரசி

சாமி ஸ்கொயர் படத்திற்கு அதன் முந்தைய பாகத்தின் இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ், சிங்கம்-3 படத்திற்கு அதன் முந்தைய பாகங்களின் இசையமைப் பாளரான தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத் திருக்கலாம். ஏன் ஹரி இப்படிக் கலைச்சு விட்டார்னு தெரியவில்லை.

IamJeevagan

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தால் இரண்டு குத்துப் பாட்டு போட்டிருப்பார். படம் தப்பிச்சிருக்கும்னு தோணுச்சு!

NedumaranJ

திருவிளையாடல் படத்திற்கு ஜி.ஆர்.ராமநாதன் இசை அமைத்திருந்தால் பாடல்கள் இன்னும் பக்தி ரசம் சொட்டும் பாடல்களாய் அமைந்தி ருக்கும்...

JEYANTHYKIRA17

ஒரு கிடாயின் கருணை மனு போன்ற நல்ல, எளிமையான, கிராமத்துப் படங்களுக்கு இளையராஜா இசை இன்னும் இனித்திருக்கும், படத்திற்கும் வியாபாரம் கிடைத்திருக்கும்.

SaiAzhagesh

பராசக்தி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வில்லையே என்று பல நாள்கள் தூங்காமல் இருந்துள்ளேன்.

annaattheoffl

இந்தியாவிலும் பரவலாகிவிட்ட ஷவர்மா பற்றிக் குட்டிக்கவிதை எழுதுங்களேன்.

சுண்டல் தின்றுகொண்டிருந்த

நாங்கள் இப்போது

சுரண்டல் தின்று கொண்டிருக் கிறோம்.

ஷவர்மா,

இப்படிச் செய்றீங்களேமா?

செல்லத்துரை

‘ஷவர்’ என்றால் பாத்ரூமில்

தண்ணீர் கொட்டும்...!

ஷவர்மா என்றால் இனி

நாவில்

எச்சில் கொட்டும்..!

கே.எம்.ரவிச்சந்திரன்

கிரில் சிக்கன் இனிது

வாழையிலை மட்டன் இனிது என்பார்

ஷவர்மா சுவையறியாதவர்.

ராம்.ஆதிநாராயணன்

பிரியாணியும் புளிக்கிறது

ரைத்தாவும் கசக்கிறது

மையனைஸும் ப்ளஸ் ஆனது

ஷவர்மா என் ஃபேவரைட் டிஷ் ஆனதும்!

நா.இரவீந்திரன்

பிரியாணியைப் பார்த்ததும்

பரோட்டாவை பிரேக்அப் செய்தேன்

உன்னைப் பார்த்ததும்

பிரியாணியை பிரேக்அப் செய்தேன்

அன்பே ஷவர்மா...

இனி கடைசிவரை நீதான்

என் உயிர்மா..!

LAKSHMANAN_KL

வாசகர் மேடையில் உன்னைப் பற்றிக் குட்டிக் கவிதை எழுதத் சொன்னார்கள்.

நான் உன் பெயரை மட்டும் எழுதிவிட்டு வந்தேன்.

Vasanth920

சிக்கனின் டிசைனே

ஷவர்மா...

சாப்பாட்டில் நீயே

பவர்மா...

பல ஆன்மாக்கள்

விரும்பும்

சுவைமா...

உன்னை வெறுப்பவர்

இங்கே நெவர்மா!

vijiraja4

ஒரே ஒரு வேலையைச் செய்ய உங்களுக்கு ரோபோ வழங்கப்படும் என்றால் எந்த வேலைக்கு ரோபோவைக் கேட்பீர்கள்?

குளிக்கும் போது முதுகு தேய்த்து விட. எப்படி நீட்டினாலும் பாதிக்கு மேல் முதுகு தேய்க்கக் கை நீளமாட்டேங்குது!

எஸ்.இராஜேந்திரன்

புதுசா வாங்கின ரெடிமேடு சர்ட்ல இருக்கற குண்டூசிகளை எடுக்கற வேலைக்கு...

ஆர். பிரசன்னா

ஒரே ஒரு வேலைக்கு ரோபோ எதுக்குங்க? சமையல் பண்ணுனா, பாத்திரம் யாரு விளக்கறது?

கி.சரஸ்வதி

எனக்கு பதில் காலைல எந்திரிச்சு, ஒரு மணி நேரம் வாக்கிங் போற வேலைதான் (அதனால் எனக்கு என்ன பிரயோசனம் என்று கேட்காதீர்கள்).

சா.செல்வராஜ்

நடமாடும் செல்போன் சார்ஜராக எனக்குப் பயன்பட.

SriRam_M_20

எங்கேயாவது பார்ட் டைம் வேலையில் சேர்த்து விட்டு சம்பளத்தை நாமே வாங்கிக் கொள்ளலாம்!

manipmp

ஞாயிற்றுக்கிழமை காலையில் நேரத்தில் எழுந்து போய் மட்டன், சிக்கன் கடையில் நல்ல கறியாக வாங்கி வரச் சொல்வேன். மனைவியிடம் நமக்கு பதில் ரோபோ திட்டு வாங்கட்டும்.

amuduarattai

புள்ளிவிவரங்களைச் சொல்லும்போது சரியான தேதியைச் சொல்லிக்கொடுக்க ஒரு ரோபோ வேண்டும். - அண்ணாமலை

amUzhavan

உழவர் சந்தைக்குப் போக.

எப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் பூச்சி கத்தரிக்காய், முத்தலான வெண்டைக்காய் வந்துடுது.

Anvar_officia

1. டிரெய்லர், டீசர், மோஷன் போஸ்டர், சிங்கிள் சாங் வெளியீடு என்பது இப்போது ‘பாட்டு போடப்போறோம்’ வீடியோ வரை வந்துவிட்டது. இனியும் இந்த சினிமாக்காரர்கள் என்ன வீடியோவெல்லாம் வெளியிடுவார்கள்?

2. அப்பா - மகன் ஜோடி சேர்ந்து நடிக்கும் காலம் இது. மீண்டும் டி.ஆர் - சிம்பு இணைந்து நடித்தால் காலத்துக்கு ஏற்றமாதிரி என்ன வேடங்களில் நடிக்கலாம்?

3. ஸ்டாலினின் சமூகநீதிக் கூட்டமைப்புக்குப் போட்டியாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அகில இந்திய அளவில் என்ன கூட்டமைப்பை ஏற்படுத்தலாம்?

4. முதன்முதலாக ஏ.டி.எம்-மில் டெபிட் கார்டு பயன்படுத்திய சுவையான அனுபவத்தைச் சொல்லுங்களேன்...

5. உங்கள் வாழ்க்கையில் பஞ்ச் டயலாக் பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவீர்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com