Published:Updated:

வாசகர் மேடை: அசிங்கமாப்போச்சு குமாரு!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

மாஸ்க் அணியாதவர்கள் பி.ஜே.பி-யில் உறுப்பி னர்களாகச் சேர்க்கப் படுவார்கள் என்று அறிவித்தால் போதும்.

வாசகர் மேடை: அசிங்கமாப்போச்சு குமாரு!

மாஸ்க் அணியாதவர்கள் பி.ஜே.பி-யில் உறுப்பி னர்களாகச் சேர்க்கப் படுவார்கள் என்று அறிவித்தால் போதும்.

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

மாஸ்க் அணியாமல் சுற்றுபவர் களை மாஸ்க் அணிய வைக்க ஒரு சூப்பர் ஐடியா ப்ளீஸ்?

மாஸ்க் அணிந்தால் தினமும் 5 ஜி.பி டேட்டா ஃப்ரீன்னு சொல்லுங்க... தூங்கும்போது கூட மாஸ்க்கைக் கழட்ட மாட்டாங்க!

ஷபினா

மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்களின் மூக்கு நுனியில் தேர்தல் சமயங்களில் பயன்படுத்தப்படும் அழியாத மையை ‘பபூன்’ போலத் தடவி விட்டால் போதும். அன்றைக்கு மட்டுமல்ல, அந்த மை அழியும் வரைக்கும் அவர்கள் மாஸ்க் போடுவார்கள்.

சரவணன்

வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளதால் மாஸ்க் அணியாமல் சுற்றும் பத்துப் பேரை விலாசம் சகிதம் செல்லில் படம் பிடித்துக் கொடுப்போருக்கு ரூ.3,000 பரிசு என்று வைக்கலாம். உரியவர்களிடம் ரூ.500 வீதம் அபராதம் வசூலிக்கலாம்.

ஆர்.ஜே.கல்யாணி

பக்கத்தில் போய் இருமிட்டு ‘இப்பத்தான் டெஸ்ட் கொடுத்திட்டு வந்திருக்கேன்’னு சொல்லணும்!

h_umarfarook

மாஸ்க் அணியாதவர்கள் பி.ஜே.பி-யில் உறுப்பி னர்களாகச் சேர்க்கப் படுவார்கள் என்று அறிவித்தால் போதும்.

KarthikeyanTwts

வாசகர் மேடை: அசிங்கமாப்போச்சு குமாரு!

உ.பி தேர்தலே இப்போது ட்ரெண்டிங். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோபிக் எடுக்கலாம் என்றால், அதில் யார் ஹீரோ?

யோகி ஆதித்யநாத் பயோபிக் எடுத்தால் ஹீரோவாக நடிக்க மொட்டை ராஜேந்திரன் மட்டுமே பொருத்தமானவர்!

சோழ. நாகராஜன்

நம்ம நாசர், யோகியாகக் கலக்குவார்.

ஆர். பிரசன்னா

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தாக நடிக்க நடிகர் சரத்குமார் (‘சூரியன்’ படத்தில் மொட்டைத் தலையுடன் வந்த மாதிரி) பொருத்தமாக இருப்பார்.

ப.சோமசுந்தரம்

எம்.எஸ்.பாஸ்கர் நடித்தால் நன்றாக இருக்கும்.

மலர்சூர்யா

யோகியே நல்லாத்தான் நடிக்கிறார். எதுக்கு இன்னொரு நடிகர்?

balasubramni1

‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் வைகைப்புயலின் சாமியார் கெட்டப்பில் இருந்து மொட்டை மட்டும் போட்டு வைகைப்புயலை அப்படியே நடிக்க வைத்தால் யோகியின் பயோபிக் படத்திற்குப் பொருத்தமாக இருப்பார்!

sudarvizhie

நடிகர் பசுபதி நச்சுனு இருப்பார்லே!

Rajkumarvee69

மின்னல், சிலந்தி என சூப்பர் பவர் கிடைக்க நிறைய வழிகள் இருக்கின்றன. உங்கள் சாய்ஸ் என்ன விலங்கு/விஷயமாக இருக்கும்?

கொரோனா பரப்பிய அதே வவ்வால் என்னைக் கடித்து கொரோனா எதிர்ப்பு சக்தி எனது உடம்பில் வந்துவிடுகிறது. அதன்பிறகு உலக மக்கள் ஒவ்வொருவரையும் நான் கடித்து குணப்படுத்தி விடுவேன்.

செல்லத்துரை

பூனை. எவ்வளவு உயரத்திலிருந்து குதித்தாலும் சின்ன அடிகூடப் படாமல் தப்பிக்கும் லாகவம்!

மூ. மோகன்

கொசு... ரத்தத்தை உறிஞ்சுவதுபோல, நிலத்தடியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் சக்தி கிடைத்தால் கோடையைச் சமாளித்துவிடலாம்.

மாணிக்கம்

ஒட்டகச்சிவிங்கி கடிச்சா நல்லா உயரமா வளரலாம்... கிரௌண்ட் ப்ளோர்ல இருந்த வாக்குல மொட்ட மாடில துணி காய வைக்கலாம்.

bommaiya

குதிரையா இருக்கணும்னுதான் ஆசை... ஆனா பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் சவாரி செய்ய விட்டுட்டாங்கன்னா என்ன பண்றது..?

Rajasekar4795

கழுகு: கைலாசா நாட்டைக் கண்டுபிடிக்க...

Vasanth920

அன்னப் பறவையிடமிருந்து தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் கலையைக் கற்றுக் கொண்டால் கடையில் நாம் சாப்பிடும் தேநீரில் எந்த அளவு பால் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

KVENKAT85644735

‘ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு’ என நீங்கள் சமீபத்தில் வாங்கிய பல்பு என்ன?

என் நண்பரைக் கலாய்க்க நினைத்து, ப்ராங்க் கால் செய்ய ப்ளான் செய்து, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு, தெரியாத் தனமா யோசனையே இல்லாம வாட்ஸ்அப்ல கால் பண்ணிட்டேன். டி.பி தெரியும்ங்கற யோசனையே இல்லாம கலாய்ச்சுட்டு வச்சதும், திருப்பி போன் பண்ணிக் கலாய்ச்சாரு பாருங்க, ஒரே அசிங்கமாப் போச்சு.

கி.சரஸ்வதி

என் கையெழுத்து மேல எனக்கே ஒரு கர்வம் இருந்துச்சு, என் பொண்ணுகளோட கையெழுத்தைப் பார்க்கற வரைக்கும்...

அ.வேளாங்கண்ணி

வேறென்ன ‘டூத் பேஸ்ட்’ என நினைத்து அடிக்கடி ஷேவிங் கிரீமை டூத் பிரஷில் வைப்பதுதான்.

ஆ.மாடக்கண்ணு

அண்ணன் மகளுடன் ரூபிக் கியூப் சவால்விட்டு விளையாட ஆரம்பிக்க, 50 செகண்டில் கியூப்-ஐ செட் செய்து முடித்து, ஒரு பக்கத்தைக்கூட முழுமையாக முடிக்காத என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கவும்... ‘ஒரே அசிங்கமாப்போச்சு குமாரு!’

JaNeHANUSHKA

மதுரையில் மல்லிகைப்பூ நல்ல குண்டு குண்டாக அழகாக இருந்தது என்று வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்தேன். அதை வாங்கி முகர்ந்து பார்த்து, ‘இது அடுக்கு நந்தியாவட்டைப் பூ. இத்தனை வருடமாகப் பூ வாங்குறீங்க. வாசனை இல்லாமல் இருக்கும் போதுகூடத் தெரியவில்லையா’ என்று கேட்டபோது.

amuduarattai

லாக்டௌன்னு பயந்து பயந்து சின்னச் சின்ன சந்துக்குள்ளே பைக் ஓட்டி கோயில்ல நடக்குற ஒரு மேரேஜைப் பார்க்க லேட்டா போனா... அங்க இருந்த நூறு பேரும் ‘ஏன் லேட்டு, எங்களை மாதிரி மெயின்ரோடு வழியா வந்திருக்கலாம்’னு சொன்னாங்க. அத கேட்டதும் ரொம்ப அசிங்கமாப்போச்சு குமாரு!

Ntramesh_kpm

இங்கு இந்தியாவில் நாம் ‘பின் டைப்’ பல்புகளைப் பயன்படுத்துவோம் ஆனால் அரபு நாடுகளில் ‘ஸ்க்ரூ’ டைப் ஆக இருக்கும். நான் துபாயிலிருந்து திரும்பி வரும்போது தெரியாமல் ‘ஸ்க்ரூ’ டைம் பல்புகள் நிறைய வாங்கி வந்து நம்மூர் ஹோல்டரில் மாட்ட முடியாமல் பல்பு வாங்கிய அனுபவம்.

kayathaisathya

வாசகர் மேடை: அசிங்கமாப்போச்சு குமாரு!

எதிர்க்கட்சியினரை ஜாமீனில் வர முடியாதபடி அரெஸ்ட் செய்ய தி.மு.க-வுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்!

சின்னம்மா பிணைக் கையெழுத்து போட்டால் மட்டுமே ஜாமீனில் விடுவிக்க முடியும் என்று அறிவிக்கலாம்.

ஆர். பத்மப்ரியா

தி.மு.க-வுக்கு யோசனை சொன்னா எத்தனை கோடி கொடுப்பீங்க? (பிரசாந்த் கிஷோரை நினைச்சேன்...கேட்டேன்!)

ராம்ஆதிநாராயணன்

வெளியே இருக்குற ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கேஸ் போட்டு விசாரிச்சுக்கிட்டே இருந்தா, அவங்களே வெறுத்துப் போய் உள்ளே போயிடுவாங்க.

அஜித்

ஜாமீன் கேட்டா பென்ஷன் ரத்துன்னு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால் போச்சு...

Lakshmi98598036

நாம யோசனை சொல்ற அளவுக்கு இது ஒண்ணும் அ.தி.மு.க கட்சி இல்லையே.

Anvar_officia

வடிவேலுக்குக் கிடைச்ச அசிஸ்டென்ட் மாதிரி யாருக்காவது இருக்கான்னு பார்த்துத் தூக்கணும், கடல்லயே இல்லயாம்...

SaiAzhagesh

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க-வுக்குச் சில யோசனைகள் ப்ளீஸ்...

2. இந்தப் படத்திற்கு இவருக்குப் பதில் இவர் இசையமைத்திருக்கலாம் என உங்களுக்குத் தோன்றிய படம் எது? ஏன்?

3. இந்தியாவிலும் பரவலாகிவிட்ட ஷவர்மா பற்றிக் குட்டிக்கவிதை எழுதுங்களேன்.

4. தொடர்ந்து வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்கும் சூர்யா அடுத்து யாருடைய பயோபிக்கில் நடிக்கலாம்?

5. ஒரே ஒரு வேலையைச் செய்ய உங்களுக்கு ரோபோ வழங்கப்படும் என்றால் எந்த வேலைக்கு ரோபோவைக் கேட்பீர்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism