Published:Updated:

வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

சிவாஜி நடித்த கேரக்டரில் ரஜினியும், ரஜினி கேரக்டரில் தனுஷும் நடிக்கலாம்..!

‘இதுக்கெல்லாமா ட்ரீட் கேப்பாய்ங்க’ என்று நீங்கள் வியந்த சம்பவம்..?

வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததுக்குக் கேட்டார்கள் பாருங்கள்...

செல்லத்துரை

வீட்டில் பாத்ரூம் தகரக் கதவு பழசாகிப் போக, 2,000 ரூபாயில் பிளாஸ்டிக் கதவு போட்ட விஷயத்தை ஆபீஸில் பக்கத்து சீட்காரரிடம் சொல்ல, அவர், “இதுக்கு காபி, டீ ஏதாவது வாங்கித் தரக் கூடாதா?” என்று கேட்டார்.

எஸ். மோகன்

“வழக்கமாக மெடிக்கல் மாஸ்க் அணியும் நான் ஒரு நாள் N95 மாஸ்க் அணிந்து வர, `என்னய்யா, மாஸ்க் (பிராண்ட்) மாத்தியிருக்கே, ஒரு ட்ரீட் கிடையாதா’ன்னு கேட்டாய்ங்க பாருங்க..!’’

ப. சீனிவாசன்

வண்டியில க்ளட்ச் ஒயர் மாத்தினேன்னு சொன்னதுக்கு நண்பன் ட்ரீட் கேட்டான். இதுக்கெல்லாமா ட்ரீட் கேப்பீங்க...

YAADHuMAAGE

பொய் சொல்லி லீவ் (அ) பர்மிஷன் வாங்கிட்டா...

iam__susi

மேனேஜர் ரிசைன் பண்ணுனதுக்காக நண்பரொருவர் எங்களைக் கூப்பிட்டு ட்ரீட் கொடுத்த சம்பவமும் உண்டு.

IamUzhavan

ரஜினியும் தனுஷும் இணைந்து நடிக்க ஒரு படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்றால் எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம்?

வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

‘பலே பாண்டியா’ படத்தை ரீமேக் செய்யலாம். எம்.ஆர்.ராதா கேரக்டரில் ரஜினியும், சிவாஜி கேரக்டரில் தனுஷும் நடிக்கலாம்... ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ பாடலைக் கற்பனை செய்தாலே கலாட்டாவாக இருக்கிறது..!

பெ.பச்சையப்பன்

ரஜினி நடித்த ‘விடுதலை’ படத்தையே ரீமேக் செய்யலாம். சிவாஜி நடித்த கேரக்டரில் ரஜினியும், ரஜினி கேரக்டரில் தனுஷும் நடிக்கலாம்..!

கே.எம். ரவிச்சந்திரன்

‘தவமாய் தவமிருந்து’ - ராஜ்கிரணாக ரஜினி, சேரனாக தனுஷ்.

PG911_twitz

‘மிஸ்டர் பாரத்’ படத்தில் சத்யராஜ் வேடத்தில் ரஜினியும் ரஜினி வேடத்தில் தனுஷும் நடிக்கலாம். ‘என்னம்மா கண்ணு செளக்கியமா?’ன்னு ஏற்கெனவே பிரகாஷ்ராஜ் கிட்ட பாடிய தனுஷ் இப்ப ரஜினியைப் பார்த்துப் பாடினா எப்படி இருக்கும்னு பார்த்துடலாம்...

saravankavi

‘அய்யப்பனும் கோஷியும்’ - பிஜு மேனன் வேடத்தில் ரஜினிகாந்தும், பிருத்விராஜ் வேடத்தில் தனுஷும் நடித்தால், தியேட்டர் சும்மா... அதிரும்ல!

JaNeHANUSHKA

‘தில்லுமுல்லு’ படத்தை ரீமேக் செய்து தேங்காய் சீனிவாசன் ரோலில் ரஜினியும், ரஜினி ரோலில் தனுஷும் நடித்தால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது.

amuduarattai

2021 - இதைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் என்ன சொல்லலாம்?

சொல்றதுக்கில்ல...

சேவூர் சுரேஷ்

வெரி டேஞ்சர் ஃபெல்லோ.

அ.பச்சைப்பெருமாள்

20க்கு அப்புறம் 21 சொல்ற வேகம்தான். கடகடன்னு போயிடுச்சு.

ப. கருணாகரன்

2020 - பார்ட் 2

சத்தியா

பில்டிங் தப்பிச்சிருச்சு. பேஸ்மென்ட் வீக்காயிருச்சு.

KRavikumar39

இன்சென்டிவ் இல்லா ஆண்டு.

urs_venbaa

இன்னும் கட்சி ஆரம்பிக்காத நடிகர்களில் யார் கட்சி தொடங்க வேண்டும்? கட்சி ஆரம்பித்தால் என்ன பெயர் வைக்கலாம்?

வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

வடிவேலு - கட்சியின் பெயர்: தே.மீ.மு.க (தேசிய மீம்ஸ் முன்னேற்றக் கழகம்)

ஆர். பிரசன்னா

விஜய் - ஆளப் போறான் தமிழன் கட்சி (ஆ.போ.த.க‌.)

அ.வேளாங்கண்ணி

சமுத்திரக்கனி கட்சி ஆரம்பிக்கலாம். பேரு `நன்மக்கள் நீதி மையம்’னு வைக்கலாம். மேடைல அவர் பேசுறதுக்குப் பதில் அவர் படத்துல ஆத்துன உரைகளையே போட்டுக் காண்பிச்சிடலாம். அவ்வளவு கன்டென்ட் இருக்கு!

ச.பிரபு

பிரேம்ஜி - எவ்வளவோ பார்த்த ஜனநாயகக் கட்சி!

absivam

அதிருக்கட்டும், முதல்ல இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. அப்போதான் அந்தக் கேள்விக்கு சரியான பதில் சொல்லமுடியும். ‘ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிச்சாரா இல்லையா? கட்சிய ஆரம்பிச்சுட்டுக் கலைச்சாரா, ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே கலைச்சாரா?’

NedumaranJ

சிம்பு - மொரட்டு சிங்கிள்ஸ் முன்னேற்றக் கழகம்!

San8416

விஜய் சேதுபதி - காத்துவாக்குல ரெண்டு கழகம்.

JaNeHANUSHKA

தெலுங்கு சினிமாக்களில் இருப்பதிலேயே அதிக அட்ராசிட்டி எது?

வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

ஒரு சோகக் காட்சியைப் பார்த்து அதன் பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வருவதற்குள் கதாநாயகியை வலுக்கட்டாயமாகக் கனவு காண வைத்து ஒரு டூயட் சாங்கைத் திணித்து விடுவது..!

ம.ராஜா

படம் முழுக்க ‘ஹே..!’ ‘ஹே..!’ என ஆளாளுக்கு சவுண்ட் விடுவது..!

தேனி க.அய்யனார்

சண்டைக் காட்சிக்கு நிகராக ரோப் கட்டி டான்ஸ் ஸ்டெப்ஸ் போடுவதெல்லாம் ஓவர் டோஸ் பெர்ஃபாமன்ஸ்!

நா.இரவீந்திரன்

குடிசை, வயல்களைக்கூட VFX-ல் காட்டுவது.

எம் விக்னேஷ்

பஞ்சுமிட்டாய் கலர்ல சட்டை போட்டு டூயட், ஒரு கதையில் ஐந்து வில்லன்களுக்குக் குறையாமல் இருப்பது, நம்ப முடியாத சண்டைக்காட்சிகள்.

imvetti

ஸ்பீடான டான்ஸ் மூவ்மென்ட்ஸ்தான். என்.டி.ஆர் தொடங்கி இன்றைய பாலகிருஷ்ணா வரை ஆடும் குத்துப்பாட்டு ஸ்டெப்ஸ் அட்ரா சிட்டிகள் வேற லெவல்..!

KmFarook6

ஹீரோவிடம் காக்கிநாடாவில் அடி வாங்கும் வில்லன் அண்ட் கோ விசாகப்பட்டினத்தில் போய் விழுவது.

ARiyasahmed

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வாசகர் மேடை: இதுக்கெல்லாமா ட்ரீட்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. மழை வரும்போதெல்லாம் சென்னைக்காரர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்?

2. தலைமறைவு வாழ்க்கையில் ராஜேந்திர பாலாஜி எத்தனையோ கெட்டப் போட்டிருப்பார், இருந்தாலும் அவருக்குப் பொருத்தமான கெட்டப் எது?

3. பா.ஜ.க கொண்டாடும் மோடி பொங்கலில் என்ன மாதிரியான கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் இருக்கலாம்?

4. 2022-ல் ஒரு தமிழ் நடிகர்/நடிகை என்ன விஷயத்தை மாற்றியே ஆகவேண்டும், யார் அவர்?

5. ஜார்கண்ட் அரசு டூவீலர்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையைக் குறைத்ததைப் போல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என்ன வித்தியாசமான அறிவிப்பை வெளியிடலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com