Published:Updated:

வாசகர் மேடை! - சீமானிச சமையல் சாதம்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

எச் ராஜா: தமிழகம் பெரியார் மண்... வட இந்தியா சாவர்க்கர் மண்... இதை என் அட்மின் சொல்லல, நானே சொல்றேன்.

வாசகர் மேடை! - சீமானிச சமையல் சாதம்!

எச் ராஜா: தமிழகம் பெரியார் மண்... வட இந்தியா சாவர்க்கர் மண்... இதை என் அட்மின் சொல்லல, நானே சொல்றேன்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்... இந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றபடி என்ன பொங்கல் கொண்டாடலாம்?

365 நாள்களும் ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்கள் பொங்கலிடும் `மாண்புமிகு மகளிர் பொங்கல்' கொண்டாடலாம்..!

laks.veni

வேளாண்மை அழியாமல் இருக்க நீர்நிலைகளைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். எனவே #ஏரிப்_பொங்கல் விழா எடுத்துக் கொண்டாடலாம்!

Rajkumarvee696

ஆன்லைன் கிளாஸ் பொங்கல், இனிமேல் மாணவர்கள் எல்லாருக்கும் ஆன்லைன் கிளாஸ் தானே!

SriRam_M_201

ஓடிடி பொங்கல். சிறப்பான படங்கள் பல வெளிவர வேண்டி பொங்கல் வைத்து வழிபடலாம்.

pachaiperumal23

நிறைய மாற்றங்களை இந்த வருடம் சந்தித்ததால் மாட்டுப்பொங்கலோடு சேர்த்து ‘மாற்றுப்பொங்கல்’ என்ற ஒன்றையும் கொண்டாடிவிடுவோம்.

krishmaggi

பணப்பற்றாக்குறையால் மக்கள் நிறைய அவதிப்பட்டதால் சிம்பிளாகக் கொண்டாடும் விதமாக இந்த வருடம் ‘பட்ஜெட் பொங்கல்.’

krishmaggi7

நீர்ப் பொங்கல் - விவசாயம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் பொங்கலன்று நன்றி தெரிவிக்கிறோம். நீரை டீல்ல விட்டது நியாயம்னு தோணலை.

அஜித், சென்னை.

லாக்டௌன் பொங்கல். காணும் பொங்கலில் நல்லா ஊர் சுத்திட்டு, அடுத்த நாள் வீட்டிலேயே இருந்து செல்ஃபி எடுத்து லைக்ஸ் வாங்கலாம்.

அஸ்ரா, நெல்லை.

தற்காலத்திற்கு ஏற்றபடி கபசுரப் பொங்கல் என்று கொண்டாடலாம்.

sheilasri

பா.ஜ.க ~ தி.மு.க; காங்கிரஸ் ~ அ.தி.மு.க கூட்டணி அமைத்தால், யார் எப்படி ஓட்டு கேட்பார்கள்?

ஒரு பக்கம் ஜெ. இடத்தில் சோனியாவை வைத்து ‘மோடியா... லேடியா’ என்றும்,பதிலுக்கு இந்தப் பக்கம் ‘பூவா... பப்புவா’ என்றும் இருக்கும்.

Adhirai Yusuf

ஸ்டாலின்: `சூரியச் சூட்டில் சுடர்விடும் தாமரை' என்றால் அது மிகையாகாது. ஆக, அவற்றைக் கையைக்கொண்டோ, இலையைக் கொண்டோ என்றும் மறைத்துவிட முடியாது.

எடப்பாடி: அன்னை சோனியா, அருமைத் தம்பி ராகுல் துணையோடு, அம்மாவின் ஆட்சியை, `விவசாயி'யான என் தலைமையில், ஓபிஎஸ் சகிதம் மீண்டும் அமைப்பேன்.

vc.krishnarathnam

பா.ஜ.க - தி.மு.க கூட்டணி: தாமரைக்குத் தலை வணங்கும் உதயசூரியன்.

காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி: கைகளுக்குள் இரட்டை இலை.

eromuthu

மேடைகளில் ஸ்டாலின் பழமொழி சொல்வதுபோல, இனி தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் `நீ சூரியன், நான் தாமரை. நீ வந்தால் தானே மலர்கிறேன்’ எனும் பாடலைப் பாடுவார்.

IamUzhavan

குஷ்பு: நான் பெரியாரின் பேத்தி. கலைஞரின் மகள். ஸ்டாலின் தங்கச்சி. உதயநிதிக்கு அக்கா. அண்ணன் ஸ்டாலினை முதல்வர் அரியணையில் அமர வைப்பதே இந்தத் தங்கையின் லட்சியம்.

balasubramni1

வாசகர் மேடை! - சீமானிச சமையல் சாதம்!

எச் ராஜா: தமிழகம் பெரியார் மண்... வட இந்தியா சாவர்க்கர் மண்... இதை என் அட்மின் சொல்லல, நானே சொல்றேன்.

parveenyunus3

நீங்கள் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தால் ‘வாசகர் மேடை’யில் என்ன வித்தியாசமான கேள்வி கேட்பீர்கள்?

மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்தினால் அந்த வருவாயை ஈடுகட்ட தமிழக அரசுக்கு உங்கள் யோசனை என்ன..?

துடுப்பதி வெங்கண்ணா

டைரக்டர் விசு படங்களை, தற்போது ரீமேக் செய்தால், அவர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்... ஏன்?

vc.krishnarathnam

தற்போதைய சூழ்நிலையில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்?

Ram Aathi Narayenan

‘அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக குஷ்பு’ என பா.ஜ.க-வால் அறிவிக்கப்பட்டால், ஓபிஎஸ், எடப்பாடி மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

ravikumar.krishnasamy

வாசகர் மேடை! - சீமானிச சமையல் சாதம்!

ஜாக்கி ஜானும் உதயநிதியும் இணைந்து ஒரு படம் நடித்தால், படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

kavi.chennappan

புதிய ரூபாய் நோட்டு வெளியிடலாம் என்றால் உங்கள் சாய்ஸ் எத்தனை ரூபாய் நோட்டு?

venkat

காமெடியன்கள் ஹீரோவாக நடிக்கும் காலம் வந்துவிட்டது. ஒரு மாஸ் ஆக்‌ஷன் படத்தை காமெடி நடிகரை வைத்து ரீமேக் செய்யலாம் என்றால், எந்தப் படத்தை ரீமேக் செய்யலாம், யார் ஹீரோ?

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

சீமான் எந்தெந்தப் பிரபலங்களுடன் என்னென்ன உணவு சாப்பிட்டிருப்பார். கற்பனையைத் தட்டி விடுங்களேன்...

SowThanishka

உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல பழக்கம், அதை மற்றவர்களும் பின்பற்றலாம் என்று நீங்கள் நினைக்கும் பழக்கம் எது?

balasubramni1

நீங்கள் வாழ்க்கையில் பாசிட்டிவாக நினைத்து நெகட்டிவாக முடிந்த விஷயம் என்ன?

SriRam_M_20

நடிகர்களெல்லாம் வேறு துறைக்குச் சென்றிருந்தால். யார் எந்தத் துறைக்குப் பொருத்தமாக இருந்திருப்பார்கள்?

isanthakumar

`கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது’ டைப்பில் இரு வரி ஜாலி பஞ்ச் சொல்லுங்கள்.

ARiyasahmed

சமையல் யூடியூப் சேனல்களில் உங்களை வெறுப்பேற்றும் விஷயம் எது?

ரெசிப்பிக்கு வாயில் நுழையாத பெயரை வைப்பது... வாயில் வைக்க முடியாத அளவுக்கு அந்த ரெசிப்பி இருப்பது..!

laks.veni

முட்டை சுர்கா, முட்டையில்லாமல் செய்வது எப்படி? பாதாம் இல்லாமல் பாதாம் அல்வா செய்வது எப்படின்னு 4 வீடியோ பாருங்க. உங்களுக்கே புரியும்.

SowmyRed

நம்மை ஏலியன்ஸ் என்று நினைத்துக்கொண்டு தேங்காய் சட்னி வைப்பது, டீ போடுவது எப்படி என்றெல்லாம் கதை விடுவார்கள்.

Adhirai Yusuf

யாராவது ஒரு டிஷ் செய்தால் அதை அனைத்து யூடியூப் சேனல்களிலும் காப்பி பேஸ்ட் செய்வது.

SriRam_M_203

`இரண்டு நிமிடத்தில் தயார் பண்ணும் டிஷ் இது’ என்று சொல்லிவிட்டு வீடியோவில் பன்னிரண்டு நிமிடங்கள் செய்முறை சொல்வது.

pachaiperumal23

கடல்லயே இல்லையாம்ங்கற ரேஞ்சுக்கு இருக்கும் சில பொருள்களைக் கொண்டு் செய்யும் டிஷ்.

Raja_AnvarTwits

இருக்கிறதை வெச்சு சமைக்கலாம் என்று பார்த்தால்... கொஞ்சம் ‘வினிகர்’ ஊத்திக்கங்க, ‘சோயா சாஸ்’ சேர்த்துக்கோங்க, ‘கஷ்மீரி மிளகாய்த்தூளை’ போட்டுக் கிளறிவிடுங்க என்று வெறுப்பேத்துவது.

krishmaggi

நாலு வெரைட்டி செய்யவும், அது நல்லா இல்லைன்னா பழிபோடவும் எங்களுக்குன்னு இருக்கற ஆபத்பாந்தவன் இந்தச் சமையல் சேனல்தான். அதைப் பத்தி தயவுசெய்து தப்பாப் பேசி எங்க பொழப்பக் கெடுக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

jeyanthis2

சீரியல்களுக்கு நடுவே விளம்பரம் வரும். இதில் விளம்பரங்களுக்கு நடுநடுவே சமையல் பண்ணுவாங்க.

Afrose9500

பத்து நிமிடத்தில் பளிச் டிபன்னு சொல்லுவாங்க. நாம செய்ய ஆரம்பிச்சா லஞ்ச் டைமுக்குத்தான் முடியும்!

absivam

வேறென்ன, தேவையான பொருள்கள் பட்டியல்தான்; பார்த்துட்டு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டதும் நிம்மதி வரும்!

MurthiK14

கண்டதைப் பண்ணிட்டு `இது மருத்துவ குணம் மிக்கது 'ன்னு `சீமானிசம் (கதை)’ செய்வது.

mahaa

விஜய் 65 படத்துக்கு ஒரு நல்ல டைட்டில் சொல்லுங்க...

Vijay65 என்பதே நல்லாருக்கு...படமும் நல்ல காரஞ்சாரமா இருக்கும்.

samy.ramesh.

சகோ

என்.விஜயலக்ஷ்மி, மதுரை

வாத்தி/வாத்தியார்

shivaas_twitz2

சி.எம் (சந்திரசேகர் மகன்)

h_umarfarook7

நெல்சனின் டாக்டர், விஜய்யின் மாஸ்டர் இவற்றைப் பொதுவாக வைத்துப் பார்த்தால் விஜய் 65க்கு (மெடிக்கல் காலேஜ்) ‘டீன்’ என்று டைட்டில் வைக்கலாம்.

krishmaggi

வெற்றிமாறா

vrsuba8

வாசகர் மேடை! - சீமானிச சமையல் சாதம்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என்று ரஜினி அறிவித்தபோது

எல்.முருகன், எடப்பாடி, ஸ்டாலின், கமல் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

? ‘அட, நம்மளைவிட நம்ம குழந்தை புத்திசாலியா இருக்கே’ என்று நீங்கள் வியந்த சம்பவம்? (சுருக்கமாக...)

? இன்னும் பத்தாண்டுகளுக்கு உங்களுக்கு வயது கூடாது,

இதே வயதுதான் என்றால் எப்படியிருக்கும்?

? சினிமாவை விட்டு விலகுபவர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம். அதேபோல் அரசியலை விட்டே விலகிய தமிழருவி மணியன் சினிமாவில் நடிக்க வந்தால் அந்தப் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

? வாசகர் கேள்வி : மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்தினால் அந்த வருவாயை ஈடுகட்ட தமிழக அரசுக்கு உங்கள் யோசனை என்ன...?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism