Published:Updated:

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

எம்ஜிஆர் படங்களே அவர் நடிச்ச முந்திய படத்தோட ரீமேக் மாதிரிதான் இருக்கும்.

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

எம்ஜிஆர் படங்களே அவர் நடிச்ச முந்திய படத்தோட ரீமேக் மாதிரிதான் இருக்கும்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லும் கமல், எந்த எம்.ஜி.ஆர் படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?

எந்தப் படம்னு சொல்லிடுவேன். அப்புறம் யாராவது காப்பி அடிச்சுடுவாங்க... அதனால வேண்டாம்.

poonasimedhavi

‘குடியிருந்த கோயில்’ படத்தை ரீமேக் செய்யலாம். கமலுக்கு இரண்டு, மூன்று வேடங்களெல்லாம் சாதாரணம்.

Vikki_Twits

எம்ஜிஆர் படங்களே அவர் நடிச்ச முந்திய படத்தோட ரீமேக் மாதிரிதான் இருக்கும்.

HariprabuGuru

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

கமல் டார்ச் லைட் சின்னம் கிடைக்கவில்லை என்றால் கலங்கரை விளக்கம் சின்னம் கிடைக்க வேண்டி ‘கலங்கரை விளக்கம்’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்.

Kirachand4

இதயக்கனி!

அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர்.

‘எம்.ஜி.ஆரின் இதயக்கனி கமல்ஹாசன்’ என்று சொல்லிக்கொள்ளலாம்.

Aruns212

‘நீதிக்குத் தலை வணங்கு.’ ஏன்னா, இவருடைய கட்சியிலும் நீதி இருப்பதால்.

மக்கள் ‘நீதி’ மய்யம்

ManivannanVija2

ஆல்ரெடி பண்ணிட்டாரு... எம்.ஜி.ஆரின் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தின் ரீமேக்தான் ‘சகலகலா வல்லவன்.’ (கொண்டையைக்கூட மறைக்கல)

Elanthenral

‘உலகம் சுற்றும் வாலிபன்’, இல்லேன்னா ‘நவரத்தினம்.’ ஏன்னா அதுலதான் தலைவர் நிறைய ஹீரோயின்ஸ்கூட பெர்ஃபாம் பண்ணியிருப்பார்.

chithradevi_91

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

? கொரோனா 2வது அலை, இங்கிலாந்தில் புதிய வைரஸ்... இவற்றைக் கேட்டபோது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?

வேண்டாம், முடியல. வலிக்குது!

என்.எஸ்.சிவம் கோவை

மைண்ட் வாய்ஸ போயி சத்தமா கேக்குறீங்களே தாத்தா?!

YAADHuMAAGE

இந்த வருடமும் ஓ.டி.டி.யில் நிறைய படம் பார்க்கலாம்.

RahimGazzali

மோடிக்கு இந்த வருடமும் உள்நாட்டில் மட்டும்தான் சுற்றுப்பயணம் போல.

amuduarattai

இந்த வாட்டி எத்தனை லட்சம் கோடியோ, எத்தனை கிலோ கொண்டைக் கடலையோ? அந்த நிதியமைச்சருக்கே வெளிச்சம்...

saravankavi

இந்தக் காளி ரொம்ப கெட்ட பய சார்... எது வந்தாலும் பொழச்சுக்குவான்!

Sundara97795956

“அய்யய்யோ, இதற்கு மேலும் தாங்காது குருநாதா!”

தனசேகரன், சென்னை

MUMMY RETURNS டைட்டில்தான்.

RAGHU CHANDER,

சென்னை

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

? உலகம் சதுரமாக இருந்தி ருந்தால் எப்படியிருந்திருக்கும்?

அட்லஸ் தனது தோள்களில் சதுர வடிவ உலகத்தைத் தாங்கியிருப்பார்.

ஆ. மாடக்கண்ணு,

பாப்பான்குளம்

டேய் ரமேஷ்...

உன் காரைக் கொடுடா...

ஒரு ரவுண்டு, ஸாரி... ஒரு ஸ்கொயர் போய்ட்டு வாரேன்...!

பாலு இளங்கோ, வேலூர்.

‘உலகம் உருண்டையாக இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?’ என்று வாசகர் மேடையில் கேள்வி கேட்டிருப்பீர்கள்.

எம்.கலையரசி சேலம்.

ஒரு பக்கம் பகலும் மூன்று பக்கம் இருளும் பெரும்பாலும் இருந்திருக்கும்!

Rajkumarvee69

அப்பவும் பெரிய வித்தயாசம் இருந்திருக்காது!

சதுரமான பெட்டி செஞ்சு உலக சூட்டைக் குறைக்க தண்ணி ஊத்தியிருப்போம்!

Kozhiyaar

நாலு மூலைலயும் ஒரு சேட்டா, டீக்கடை போட்ருப்பார்.

jill_online

‘ஏதோ ஒரு மூலையில் வாழ்கிறேன்’ என்ற புலம்பல் உண்மையாகி இருக்கும்.

HariprabuGuru

Round earth theorists, YouTube வீடியோ செய்து கொண்டிருப்பார்கள்.

CineversalS

? மறதி என்ற ஒன்று இல்லாமல் போயிருந்தால்...?

அனைவரும் தேர்வில் சம மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதால், தேர்வு முறையே ரத்தாகியிருக்கும்.

வைரபாலா , மன்னார்குடி

வல்லாரை லேகியம் சேல்ஸ் டௌனாகியிருக்கும்.

gurunaatha

‘வீட்டுப்பாட நோட்ட மறந்து வச்சுட்டு வந்துட்டேன் சார்’னு சொல்ல முடியாது.

TN72DuskyKundan

மனநோயாளிகளாகி இருப்போம்.

umakrishh

பிறந்தநாள், கல்யாண நாள் போன்ற தேதிகளையெல்லாம் நினைவு வச்சு திடீர் திடீர்னு மனைவி கேக்கறப்ப கணவன்மார்கள் கரெக்டா சொல்லி அசத்தியிருப்பாங்க.

chithradevi_91

இப்ப வந்த ஆல் பாஸ், எப்பவோ வந்திருக்கும்!

poonasimedhavi

வெளியூர் போகும்போது ‘வீட்டை கரெக்டா பூட்டினமா, காஸ் ஆஃப் பண்ணினமா’ன்னு சந்தேகமும் பயமும் வராது . நிம்மதியா என்ஜாய் பண்ணலாம்!

balebalu

கணிப்பொறி போன்றவற்றில் பின்பற்றப்படும் ‘Reset’ நுட்பம் நமக்குள்ளும் இருந்திருக்கும்.

Kannarka

‘கோமாளி’ படத்துக்கு அந்த அளவிற்கு வெற்றி கிடைத்திருக்காது.

THARZIKA

Forgot password... இந்த Option எந்த Loginகளிலும் இருக்காது.

Raajavijeyan

மறதியை ஏற்படுத்துவதற்கு மருத்துவ உலகம் போராடிக்கொண்டிருக்கும்.

Kaleeskkl

? பிக்பாஸைக் கிண்டலடிக்கும் எடப்பாடிக்கு ஒரு டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என்ன நிகழ்ச்சியாக இருக்கலாம், ஏன்?

ஒருவேளை கமல் ஜெயித்து முதலமைச்சர் ஆகிவிட்டால், எடப்பாடியே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம், செம ஃபன்னாக இருக்கும்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

வயலும் வாழ்வும்!

தன்னை விவசாயின்னு சொல்லிக்கொள்கிறார் இல்லையா, அதனால்!

SeSenthilkumar

சாய் வித் சாமி... எல்லாக் கட்சித் தலைவரையும் பேட்டி எடுப்பது!

manipmp

குரோர்பதி நிகழ்ச்சிதான்.

சேக்கிழார் எழுதிய நூல் எது?

இயேசுவைச் சுட்டது யார்?

காந்தியைச் சிலுவையில் அறைஞ்சது எங்கே?

போன்ற கஷ்டமான கேள்விகள் அவர்கிட்ட மட்டும்தான் இருக்கு.

KarthikeyanTwts

குக் வித் கோமாளி - செஃப் தாமு ரோல் எடப்பாடியார் நடத்தலாம். உடல் மொழி, பேச்சு ஒத்து வரும். மனம் நோகாமல் பேசுவார்.

எஸ்.விஜயலெஷ்மி, சென்னை

சிரிச்சா போச்சு. அவர் சிரிப்பு.. ஆஹா..! அதுக்காகவே நடத்தலாம்.

pachaiperumal23

பிக்பாஸை ரீமேக் செய்து கூவத்தூர் ரிசார்ட்டில் அமைச்சர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தலாம்! வந்த பாதையை மறக்கக் கூடாது அல்லவா?

sudarvizhie

சூப்பர் மாம்

சூப்பர் மாம் பட்டத்தை அம்மாவுக்குக் கொடுக்கிறாரா, இல்லை, சின்னம்மாவுக்குக் கொடுக்கிறாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்!

IamUzhavan

வாசகர் மேடை! - கொண்டைய மறைக்காத ரீமேக்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? 2021- ஐ வெற்றிகரமாக கடக்க ஒரு ஜாலி மந்திரம் சொல்லுங்கள்!

? பள்ளி, தியேட்டரை எல்லாம் திறப்பதும் மூடுவதுமாக அறிவித்துக் குழப்பும் அரசுக்கு நறுக்குன்னு ஒரு அட்வைஸ்?

? டிரம்ப்பும் வடிவேலுவும் இப்போது சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொள்வார்கள்?

? பிக்பாஸ் முடிந்த பின் கமல், தேர்தல் வரை மக்களை சந்திக்க என்ன ரியாலிட்டி ஷோ தொகுத்து வழங்கலாம்?

? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஸ்லெட்ஜிங்கை சமாளிக்க ஒரு கோலிவுட் நடிகரைக் களமிறக்கலாம் என்றால் உங்களின் சாய்ஸ் யார்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com