Published:Updated:

வாசகர் மேடை: ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க முகமூடி!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

அய்யய்யோ இந்தத் தடவையும் #Save_Chennai சொல்ல வச்சுடுமோ?

வாசகர் மேடை: ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க முகமூடி!

அய்யய்யோ இந்தத் தடவையும் #Save_Chennai சொல்ல வச்சுடுமோ?

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

மழை வரும்போதெல்லாம் சென்னைக்காரர்களின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்?

பேசாம, நம்ம ஊர்லேயே இருந்திருக்கலாமோ!

 விசாலாட்சி

செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விடாமல் இருந்தால் போதும்னுதான்.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

அய்யய்யோ இந்தத் தடவையும் #Save_Chennai சொல்ல வச்சுடுமோ?

saravankavi

கரைமேல் பிறக்க வைத்தான். மழைத் தண்ணீரில் மிதக்க வைத்தான்..!

absivam

காரை எங்கே கொண்டு போய் பார்க் செய்யறது. வேளச்சேரி மேம்பாலம் இந்நேரம் ஃபுல்லாகி இருக்குமோ!

S.கருணாகரன், சென்னை.

யார் மேல தவறுன்னு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி அறிக்கை விடுவாங்களே!

PG911_twitz

வந்துச்சு... கொட்டுச்சு... நிரம்புச்சு... ரிப்பீட்டு... முடியல தலைவரே!

RavindranRasu

2022-ல் ஒரு தமிழ் நடிகர்/நடிகை என்ன விஷயத்தை மாற்றியே ஆகவேண்டும், யார் அவர்?

வாசகர் மேடை: ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க முகமூடி!

விஜய் ஆன்டனி. நடிச்சுக்கிட்டே அவர் மியூசிக்கும் பண்ணணும்.

அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்.

சந்தானம். ‘கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன்’ என்ற தன் முடிவை சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி மாற்றிக் கொள்ளலாம்..!

பெ.பச்சையப்பன், கம்பம்.

விஜய் சேதுபதி. டைம் பாஸுக்காக நடிப்பது போல் தோன்றுகிறது. எவ்வளவு தேர்ந்த நடிகர் நீங்கள். வெள்ளிக்கிழமை ஹீரோவாக ஆக நினைப்பதை விட்டுவிட்டு, கதைத்தேர்வில் கவனம் செலுத்துங்கள்.

எஸ்.பற்குணன், கொளத்தூர்.

சிம்பு. ஏதோ ஒரு படம் நன்றாக ஓடியதைக் கண்டு மீண்டும் முருங்கை மரம் ஏறாமல் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பைத் தந்து அடுத்தடுத்த படங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுக்க வேண்டும்.

vairabala

அஸ்வின். கதை கேட்கும் போது தூங்குவதை மாற்றியே ஆக வேண்டும்.

amuduarattai

சுந்தர். சி. தன்னைப் பிடிச்ச பேயை ஓட்டி விட்டுட்டு, நடிப்பையும் கைகழுவிட்டு, இப்ப இருக்கிற இளம் நடிகர்களை வைத்து காமெடி படம் எடுக்கலாம்.

MahiVani_79

கௌதம் மேனன் பட ஹீரோக்கள், ஹீரோயினைப் பார்த்த உடனே லவ் பண்ணுவதை நிறுத்த வேண்டும்.

Vasanth920

ராகவா லாரன்ஸ் பேய்க் கதைகளில் இருந்து வெளியே வர வேண்டும். பாவம் பேய்கள்!

KrishnaratnamVC

கமலஹாசன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அப்பாவாக நடிக்க வேண்டும்.

adiraibuhari

அஜித். தன் பட புரொமோஷனுக்கு வரணும்!

jerry46327240

ஒருவேளை ரத்து ஆகாமல் பா.ஜ.க. மோடி பொங்கல் கொண்டாடியிருந்தால் என்ன மாதிரியான கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் இருந்திருக்கலாம்?

தாமரையை மலர வைப்பது எப்படி என்று பேச்சுப் போட்டி வைக்கலாம்.

எஸ்.கே.சௌந்தரராஜன், கம்பிளியம்பட்டி.

கட்டப்பட்டு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கண்டுபிடிக்கும் போட்டி.

rubanandrew

‘ஆரோக்கியத்துக்கு சிறந்தது கோமியமா, கிரீன் டீயா’ன்னு மதுவந்தி தலைமையில் ஒரு பட்டிமன்றம் போடலாம்.

bommaiya

வெறும் செங்கல்லை ஒண்ணு மேல ஒண்ணு வச்சு கட்டடம் கட்டணும். யார் உயரமா கட்றாங்களோ, அவங்கதான் வெற்றியாளர்!

jill_online

அதிகமான போட்டிகளில் தோல்வி பெறுபவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு காத்திருக்கிறது. அது ‘கவர்னர்' பதவியாகக்கூட இருக்கலாம்!

Saisudhar1

மோடியைக் களத்தில் இறக்கிவிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தலாம்.

Paa_Sakthivel

தரையில் படகோட்டும் போட்டி... படகே இல்லாமல்!

itz_idhayavan

மாட்டுப் பொங்கலுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சிறப்பு விருந்தினராக அழைத்து வரலாம்!

sarathitup4

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை நாடகமாக நடத்தலாம்...

chennappan10

ஜார்கண்ட் அரசு டூவீலர்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையைக் குறைத்ததைப் போல் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் என்ன வித்தியாசமான அறிவிப்பை வெளியிடலாம்?

ரெய்டு சம்பந்தமாக புதுப்புது ஐடியா வழங்குபவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசளிக்கலாம்!

ரிஷிவந்தியா, தஞ்சாவூர்.

எதுவும் புதிதாகச் செய்ய வேண்டாம். தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றினாலே போதுமானது.

அ.பச்சைப்பெருமாள், சென்னை.

கொரோனாத் தடுப்பூசி போட்டவர்களுக்கு ரேஷனில் சர்க்கரை இலவசம்.

அ.பச்சைப்பெருமாள், சென்னை 87.

ஞாயிற்றுக்கிழமை லாக்டெளனை முன்னிட்டு அனைவருக்கும் தாயக்கட்டை, சீட்டுக்கட்டு, பல்லாங்குழி பரிசளிக்கலாம்!

absivam

பொங்கலுக்கு ரேஷனில் கொடுத்த சிறப்புத் தொகுப்பு இனி ஒவ்வொரு மாதமும் தரப்படும்னு அறிவிக்கலாம்.

bommaiya

குண்டும் குழியுமான சாலையில் செல்வோர்க்கு இடுப்பு வலிக்கான இலவச சிகிச்சையை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கலாம்.

manipmp

தூய தமிழில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் பெற்றோர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கலாம்.

balasubramni1

நகராட்சி தோறும், சமூக இடைவெளியுடன் கூடிய, திறந்தவெளித் திரையரங்குகளை அமைக்கலாம்!

KrishnaratnamVC

தலைமறைவு வாழ்க்கையில் ராஜேந்திர பாலாஜி எத்தனையோ கெட்டப் போட்டிருப்பார், இருந்தாலும் அவருக்குப் பொருத்தமான கெட்டப் எது?

வாசகர் மேடை: ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க முகமூடி!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கெட்டப்.

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘மிக்கிமவுஸ்' கெட்டப் போட்டு ஏதாவது ஜவுளிக்கடை வாசல்ல நின்னா யாராலும் கண்டுபிடிக்க முடியாது, பொருத்தமாவும் இருக்கும்.

மன்னார்குடி ராஜகோபால்

சீசனுக்கு ஏற்ற கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப் பொருத்தமாக இருக்கும்.

balasubramni1

அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க-விற்குத் தாவினால் போதும், எந்த கெட்டப்பும் போட அவசியம் இல்லை. தி.மு.க என்ற ஒற்றை முகமூடி போதும்.

Vasanth920

மீசையை சுத்தமாக மழித்து, கிருஷ்ணர் கெட்டப் போட்டால், முகத்தில் பால்கோவா வழியும்...!

LAKSHMANAN_KL

‘அந்நியன்’ விக்ரமின் அந்நியன், ரெமோ, அம்பி என மல்டிபிள் பர்சனாலிட்டி கெட்டப்களைப் போட்டு ஈஸியா தப்பிக்கலாம்.

Kirachand4

நீளமா தாடி வளர்த்து... டாடி மோடி கெட்டப் போட்டால் அட்டகாசமா இருக்கும்..!

LAKSHMANAN_KL

ஹீத் லெட்ஜர் கெட்டப் அவருக்குப் பொருத்தமாக இருக்கும்!

NedumaranJ

செயற்கையாகத் தெத்துப் பல்லும், கூடுதலாகக் கொஞ்சம் தொப்பையும் வைத்து, ‘இந்திரன் சந்திரன்' படத்தில் கமல் கலக்கிய ‘மேயர்' கெட்டப்பைப் போட்டு அசத்தலாம்!

YavanaI

முகத்தில் மாஸ்க் அணிந்து சைக்கிளில் பால்வண்டிக்காரராக வந்திருக்கலாம்.

எம்.செல்லையா, சாத்தூர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்களை மாஸ்க் அணிய வைக்க ஒரு சூப்பர் ஐடியா ப்ளீஸ்?

2. மின்னல், சிலந்தி என சூப்பர் பவர் கிடைக்க நிறைய வழிகள் இருக்கின்றன. உங்கள் சாய்ஸ் என்ன விலங்கு/விஷயமாக இருக்கும்?

3. எதிர்க்கட்சியினரை ஜாமீனில் வர முடியாதபடி அரெஸ்ட் செய்ய தி.மு.க-வுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்!

4. ‘ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு’ என நீங்கள் சமீபத்தில் வாங்கிய பல்பு என்ன?

5. உ.பி தேர்தலே இப்போது ட்ரெண்டிங். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோபிக் எடுக்கலாம் என்றால், அதில் யார் ஹீரோ?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism