Published:Updated:

வாசகர் மேடை! - எப்படி இருக்கணும் 2021?

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

மீட்டிங்கின் முக்கியத்துவம் உணராமல் பேப்பரில் கிறுக்கும் கிறுக்குகள்.

வாசகர் மேடை! - எப்படி இருக்கணும் 2021?

மீட்டிங்கின் முக்கியத்துவம் உணராமல் பேப்பரில் கிறுக்கும் கிறுக்குகள்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ஆபீஸ் மீட்டிங்கில் உங்களை வெறுப்பேற்றும் விஷயம் எது?

11.00 மணிக்கு மீட்டிங் ஆரம்பித்து லஞ்ச் டயத்தையும் தாண்டிப் போகும் போது மனசாட்சியே இல்லாமல் இரண்டு பிஸ்கட் டீ கொடுத்து 3 மணி வரை நோ(சா)கடிப்பது.

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

மீட்டிங்கின் போது பலரும் மொபைலை எடுத்துப் பார்த்து தனக்கு மெசேஜ், போன்கால் வந்திருக்கிறதா என்று செக் செய்வது.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

காபிதான்... வெளங்காது...

RavikumarMGR

மீட்டிங்கின் முக்கியத்துவம் உணராமல் பேப்பரில் கிறுக்கும் கிறுக்குகள்.

moodanmani200

ரெண்டுமணி நேர மீட்டிங் முடியப்போகும்போது, கடைசி அஞ்சு நிமிசத்துல ஒரு ஆர்வக்கோளாறு கேட்பான் ஒரு கேள்வி. மறுபடியும் ஸ்லைடை முதல்ல இருந்து ஆரம்பிப்பானுக...

tparaval

மேனேஜர் மொக்க ஜோக் சொல்லும் போது நாம் சிரிக்காமல் இருந்தால் நம்மளை முறைத்துக் கொண்டே பேசுவது! சிரிப்பு வந்திருந்தா சிரித்திருக்க மாட்டோமா ?!

h_umarfarook

நல்லா தூக்கம் வர்ற நேரத்துல, ‘நான் சொல்றது சரியா?’ என்று சத்தமாகக் கேட்கும் மேனேஜர்குரல்.

ragupc.pcragu

பத்து மணிக்கு மீட்டிங் என்று சொல்லிவிட்டு பதினொன்றரை மணிக்கு ஆரம்பிப்பது.

SriRam_M_20

எதுக்கு மீட்டிங் போட்டோமோ அதை விட்டுட்டு மத்ததைப் பேசும்போது.

Thaadikkaran

மீட்டிங்னு சொல்லிட்டு மேனேஜர் மட்டும் பேசிவிட்டு, ஏதாவது கேள்வி இருந்தா தனியா வந்து கேளும்பாரு.. இதுக்கு எதுக்கு மீட்டிங்?

prabaacurren

? கிறிஸ்டோபர் நோலன் தமிழில் படமெடுத்தால் யாரை ஹீரோவாகப் போடலாம், ஏன்?

கமல்ஹாசன் - நோலன் படம் மெல்ல மெல்லப் புரிவதுபோல் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த காரணத்தை மெல்ல மெல்லப் புரிந்து கொள்ளத்தான்.

கண்ணன்செழியன், திருமலாபுரம்

ரஜினி: உலகின் தலைசிறந்த இயக்குநர் நோலனின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதால் இப்போதைக்கு அரசியல் கட்சி ஆரம்பிப்பதை நிறுத்தி விட்டு அவர் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று இவர் அறிவிப்பதற்கு வசதியாக இருக்குமே!

balasubramni1

விஜய் மற்றும் அஜித். விஜய் ஹூரோவாகவும் அஜித் மிரட்டும் வில்லனாகவும் நடித்தால் பக்காவாக இருக்கும்.

SriRam_M

தனுஷ் தற்போதைய நடிகர்களில்திறமை வாய்ந்தவர்,எல்லா வேடங்களுக்கும் பொருந்துவார்...

MUBARAKAM12

ஒருவேளை அவர் தமிழில் படம் எடுத்தால், அவரே நடிக்கவும் செய்திடுவார், நம்மாளுங்க மாதிரி. அப்புறம் எதுக்கு இன்னொரு ஹீரோ?

thangaraja85

எஸ்.ஜே.சூர்யா. இரண்டு பேருமே 'இருக்கு ஆனா இல்லை'ன்னு சொல்றவங்கதானே!

SeSenthilkumar

? 2021 எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இ-பாஸ் போல் கடினமாக இல்லாமல் ஆல்-பாஸ் போல் சுலபமாக இருக்க வேண்டும்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

ஆனந்த விகடன்ல வாராவாரம் என் ட்வீட் வாசகர் மேடையில வரணும்...நிறைய காசு சம்பாதிக்கணும்.

YAADHuMAAGE0

போன வருஷமே பரவால்ல-ன்னு சொல்ற அளவுக்கு இல்லாம இருந்தா சரி.

saravankavi

நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டைக்கடலையோடு, அந்த ரூ.15 லட்சமும் கிடைக்கும் ஆண்டாக இருக்க வேண்டும்.

RamAathiNarayen

இன்னும் எம்ஜிஆர் எனும் பெயருக்கே ஓட்டு இருக்கிறதா இல்லையா என்கிற கேள்விக்கு விடை வேண்டும்.

IamUzhavan

எந்த நடிகரும் கட்சி ஆரம்பிக்காத ஆண்டா இருக்கணும்.

Raja_AnvarTwits

புதிதாக வாங்கியிருக்கும் ஸ்பெஷல் பிளேனில், பிரதமர் பழையபடி வெளிநாடுகள் செல்லும் சகஜநிலை திரும்பவேண்டும்!

parath.sarathi

வாசகர் மேடை! - எப்படி இருக்கணும் 2021?

? ரஜினியின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெறலாம்?

எந்த வாக்குறுதிகளா இருந்தாலும் தேர்தல் முடிஞ்சு ஒரு வாரம் கழித்துதான் ரஜினியே அறிவிப்பார், பரவாயில்லையா?

SowThanishka

ரசிகர்களின் பழைய தங்கக் காசுகளுக்கு தலைவரின் புது ஒரு துளி வியர்வை பரிசு. ராகவேந்திரா மண்டபத்திலேயே தனி அலுவலகம் அமைக்கப்படும்.

being_hari

போராட்டம் பண்ணி, நாடு ஷுடுகாடாவதைத் தடுக்கும்வகையில் கடும் சட்டங்கள் இயற்றப்படும்.

tparaval

மக்கள் ஒரு வருஷம் டேக்ஸ் கட்டினா நூறு வருஷம் டேக்ஸ் கட்டின மாதிரி.

Raveendran Gopalasamy விடாப்பிடியாக நின்று தன்னை அரசியலுக்கு அழைத்து வந்த தமிழருவிமணியன், துக்ளக் குருமூர்த்திக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்..!

vvenraman

வீட்டுக்கு வீடு கேட் இலவசமா அமைத்துத் தரப்படும்.

Raja_AnvarTwits

‘இலவச இமயமலை யாத்திரைத் திட்டம் மூலம் பக்தர்கள் பாபா கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்' என்ற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை.

R.அருண்குமார், கும்பகோணம்.

வாசகர் மேடை! - எப்படி இருக்கணும் 2021?

? நீங்கள் கொரோனாத் தடுப்பூசி கண்டுபிடித்தால் அதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்? என்ன காரணம்?

Go Back covid - `திரும்பிப் போ கோவிட்' என்னும் அர்த்தத்தில் பெயர் வைப்பேன். (`Go Back Modi' ஞாபகத்துக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)

ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

L&L V - Live & Life Vaccine

saravankavi

One Nation

One Needle ONON

Elanthenral

`தாயத்து-21' : `நம்மூரு 'நம்பிக்கை'யைப் பிரதிபலிக்கும் வகையில்.'

KRavikumar39

ONE TOUCH (`ஊசி ஒரே முறைதான்' என்பதன் சுருக்கம்)

KRavikumar39

Coவிடு

profile.

பெயரையே `நாட் பார் சேல்' என்று வைப்பேன். அப்போதுதான் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்!

parath.sarathi

சீமானாக்சின்:

கொரோனா ஒரு வந்தேறி வைரஸ் என்பதால் அதுக்கு எதிரா கடுமையாப் போராடும்.

A.Prabhakar.

சசிகலான்னு பெயர் வைக்கலாம். பீச்சுக்கு அழைச்சிட்டுப் போயி இனிமே வரவே மாட்டேன்னு சத்தியம் வாங்கிட்டு வழியனுப்பியும் வைக்கலாம்.

pachaiperumal23

சொன்னா காப்பி அடிச்சிருவாங்க. சொல்லமாட்டேன்.

Raja_AnvarTwits

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
vikatan
vikatan

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? எம்.ஜி.ஆரின் வாரிசு என்று சொல்லும் கமல், எந்த எம்.ஜி.ஆர் படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம்?

? பிக்பாஸைக் கிண்டலடிக்கும் எடப்பாடிக்கு ஒரு டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என்ன நிகழ்ச்சியாக இருக்கலாம், ஏன்?

? கொரோனா 2வது அலை, இங்கிலாந்தில் புதிய வைரஸ் - இவற்றைக் கேட்டபோது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?

? உலகம் சதுரமாக இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

? மறதி என்ற ஒன்று இல்லாமல்போயிருந்தால்...?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com