Published:Updated:

வாசகர் மேடை: மாரி மாநாடு!

காட்சிகளை ஸ்க்ரீனில் டார்ச்லைட் அடித்துப் பார்க்கும் அளவுக்கு இருட்டில் எடுப்பது.

பிரீமியம் ஸ்டோரி

? சிம்புவும் தனுஷும் ஒரு குறும்படத்தில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

டூயல் சிம்

கிருஷ்ணா, சென்னை

36 வயதினிலே

Cp senthilkumar

Dad of Bad..!

RavindranRasu

வடசென்னைக்கு வருவாயா?

h_umarfarook

‘குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்’னு வைக்கலாம்!

absivam

கேடி காளை கில்லாடி சுள்ளான்!

SriRam_M_20

பட்டாஸ் டப்பாஸ்.

UDAYAKUMARKR202

? சைக்கோ த்ரில்லர் படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

சைக்கோவாக மாறியதற்கு அவர்கள் சொல்லவரும் லாஜிக்தான்.

ஜெயமோகன், சென்னை

காட்சிகளை ஸ்க்ரீனில் டார்ச்லைட் அடித்துப் பார்க்கும் அளவுக்கு இருட்டில் எடுப்பது.

pachaiperumal23

சைக்கோ ஆகியதற்கான காரணத்தை ஃப்ளாஷ்பேக்கில் சொல்லும்போது, கேவலம் இதுக்காகவா சைக்கோ ஆனான் என்று எரிச்சலாக இருக்கும்!

மாரி மாநாடு
மாரி மாநாடு

RavindranRasu

கடத்திட்டு வர்ர மத்த எல்லாரையும் உடனே கொல்ற சைக்கோ, ஹீரோயினை மட்டும் க்ளைமாக்ஸ் வரை கொல்லாம இருக்கிறது.

RamuvelK

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரும்புக்கடைசந்துல கடைவிரிச்சிருக்க மாதிரி சைஸ்வாரியா சாமான்களை அதாங்க பொருள்-கத்தி,அருவாவை ஒரு டேபிளில் அடுக்கிவைத்து அதுலபெரிய பொருளா எடுப்பாப்பிடின்னு பார்த்தா திடீர்னுசரக்குன்னு திரும்பி சுவத்துல மாட்டிஇருக்கற ஆணிஅடிக்கற சுத்தியல் எடுத்து ஸ்மைல் பண்ணுறது.

gmuruganandi

ஏதோ கொரோனா அறிகுறிபோல எப்பவும் கையுறை அணிந்திருப்பார்.

urs_venbaa

ஹீரோ கஜினி சூர்யா மாதிரி ஒரு ரூம் ஃபுல்லா பேப்பர் கட்டிங்கை ஒட்டி வச்சு அனலைஸ் பண்ணுறது!

vrsuba

சைக்கோ அப்டி என்னா வேலைக்குப் போய் சம்பாதிப்பார்னு தெரியாது. ஆனா எல்லா ஆயுதங்களும் வச்சிருப்பார். கார் பங்களான்னு வசதியா இருப்பார்.

manisuji12

இரவில் யாரும் அந்த வீட்டில் லைட்டைப் போட மாட்டாங்க.

அப்பார்ட்மென்ட் லிப்ட் வேலை செய்யாது.

தப்பிக்கப் பார்க்கும்போது கார் ஸ்டார்ட் ஆகாது!

prabacurren

? இப்போதைய சூழலில் சென்னைக்காரர்கள் பற்றி மற்ற ஊர்க்காரர்களின் மைண்ட் வாய்ஸ் என்ன? ஒரே வரியில் சுவாரஸ்யமாகச் சொல்லவும்.

எல்லா மாசமும் டிசம்பர் ஆக்கிட்டீங்களேப்பா

Thaadikkaran

பெரிய ஆட்டக்காரனா இருப்பானோ

வாசகர் மேடை: மாரி மாநாடு!

RamuvelK

இவனுக்கும் இருக்குமோ?

skkaran_68

கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க? மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரைன்னெல்லாம் சொன்னீங்கேளாடா!

ananthi.ramakrishnan.1

மாமு பத்திரமா இருக்கியாடா..? வாய்ப்பு கெடச்சா ஊர்ப்பக்கம் வந்துடாதடா...

bommaiyamurugan.murugan

எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டயே!

RavindranRasu

செவள... தாவுடா தாவு

RamuvelK

சோதிக்காதீங்கடா...!

absivam

சுனாமியவே சும்மா வேடிக்கை பார்த்தவர்கள்...கொரோனா எம்மாத்திரம்.

adtsubramani

“சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” ஃபோர்டு மட்டும் வச்சாப்போதுமா?

jerry46327240

அவங்களுக்கென்ன அங்கதான் ஏகப்பட்ட ஹாஸ்பிடல் இருக்கே... எப்படியும் பொழச்சுக்குவாங்க.

poonasimedhavi

? இப்போது திருவள்ளுவர் இருந்திருந்தால் எடப்பாடிக்கு ஏற்ற மாதிரி எப்படிக் குறள் எழுதியிருப்பார்?

இடார்பாட்டில் தவிப்பதே உலகு; வாழ்வில்

எடப்பாடிக் கேனிந்த கதி.

மு.காளியப்பன்

எண்ணித் துணிக சுடுவதற்கு சுட்டபின் பழிபோட பலவழி இருக்கு.

வாசகர் மேடை: மாரி மாநாடு!

pachaiperumal23

குழலினிது யாழினிது என்பர் சேக்கிழார் ராமாயணம் கேளா தார்

balasubramni1

வேண்டுதல் வேண்டாமை டெல்லிமோடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

KrishnaratnamVC

உருண்டு புரண்டு எழுந்து நின்றால்

நிலைத்து இருக்கும் பதவி.

umarfarook

ஆமைக்கறி இனிது பழம் இனிது என்பர் எங்கள் பழனிசொல் கேளாதவர்.

ananthi.ramakrishnan.1

அகரமுதல எழுத்தெல்லாம் ‘மோதி’ பகவன் முதற்றே உலகு.

manisuji12

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண அவையில்

இதெல்லாம் ரொம்ப தப்புங்க எனச் சொல்லி விடல்.

CpsWriter

நன்றி மறப்பது நன்றன்று பதவி கிடைத்தால் அன்றே மறப்பது நன்று.

Thaadikkaran twitter

பல்டியில் சிறந்த பல்டி அந்தர்பல்டி அந்த பல்டி அவ்வப்போது அடிக்கப்படும்.

PG911_twitz

டாஸ்மாக் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

எடப்பாடி அரசோடு சேராதார்.

pbukrish

எப்பா பாரு என்னை வெச்சே கேள்வி கேக்கறீங்க? என்னங்க நீங்க? இதெல்லாம் ரொம்ப தப்புங்க!

prabhu65290

? தமிழ்ப் படங்களில் எந்தப் படத்தை வெப் சீரிஸ் போல பல சீசன்களாக எடுத்து நிறைய பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள், ஏன்?

எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன்.

கதிஜா ஹனிபா திருச்சி

செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் படம். அப்பவாது படம் மக்களுக்குப் புரியும்?!

காந்தி திருச்சி

பாகுபலி: கண்களுக்கு விருந்தாகும் பிரமாண்டமான காட்சியமைப்பு களுக்காகவே வெப் சீரியசாக எடுக்கலாம்.

balasubramni1

புதுப்பேட்டை

guru_nathaa

விசாரணை. ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து என்ன நடக்கும் என்பதை த்ரில்லிங்கா டீட்டெய்லாகக் காட்டிவிடலாம்.

Thaadikkaran

? தமிழ்ப் படங்களில் எந்தப் படத்தை வெப் சீரிஸ் போல பல சீசன்களாக எடுத்து நிறைய பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள், ஏன்?

எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன்.

கதிஜா ஹனிபா திருச்சி

செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் படம். அப்பவாது படம் மக்களுக்குப் புரியும்?!

காந்தி திருச்சி

பாகுபலி: கண்களுக்கு விருந்தாகும் பிரமாண்டமான காட்சியமைப்பு களுக்காகவே வெப் சீரியசாக எடுக்கலாம்.

balasubramni1

புதுப்பேட்டை

guru_nathaa

விசாரணை. ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து என்ன நடக்கும் என்பதை த்ரில்லிங்கா டீட்டெய்லாகக் காட்டிவிடலாம்.

Thaadikkaran

மங்காத்தா : `ஐபிஎல் பெட்டிங்’கிற கதைக்களமே போதுமே, பல சீசன்கள் எடுப்பதற்கு.

RamuvelK

சிங்கம் படத்தை டைரக்டர் ஹரி வெப் சீரிஸ் மாதிரிதான் கொண்டு போய்க்கிட்டு இருக்கார். வெப் சீரிஸ்னு போர்டு வச்சா நல்லாதான் இருக்கும்!

absivam

பெரும்பாலான படங்களை எடிட் செய்யாம அப்படியே போட்டா கிட்டத்தட்ட வெப் சீரிஸ் மாதிரிதான் இருக்கும். எதுக்கு மெனக்கெட்டு புதுசா வேற எடுத்துட்டு.

poonasimedhavi

பொன்னியின் செல்வன்!

சினிமாவாக எடுப்பதைவிட வெப் சீரிஸா எடுத்தா ஒரிஜினல் கதையைச் சுருக்காமல், எல்லாக் கதாபாத்திரங்களையும் விரிவாகக் காண்பித்து சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பாக எடுக்க முடியும்.

balebalu

அயன். வெப் சீரிஸுக்கான கதைக்களத்தை அருமையாகக் கொண்டிருக்கும் படம்... அட்வெஞ்சர் சீன்களை அதிகப்படுத்தி, பல எபிசோடுகள் எடுத்து பட்டையக் கிளப்பலாம்..!

KLAKSHM14184257

அட்டக்கத்தி. அடுத்து அட்டக்கத்தி யாரை லவ் பண்ணினார். அவரிடம் எப்படி ஏமாந்தார் என ஐந்நூறு எபிசோடுகள் தாராளமா எடுக்கலாம்.

pachaiperumal23

தமிழ்ப்படம்: அமுதன்-சிவா காம்போவில் நிறைய படங்களை ஸ்கூப் செய்தால் செம என்டர்டெயின்மென்ட்

mani.pmp

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: மாரி மாநாடு!
  • ? அரசியல் தலைவரின் கதையை பயோபிக்காக எடுப்பதென்றால் யாருடைய பயோபிக்கில் எந்த நடிகர் நடிக்கலாம்?

  • ? தமிழுக்கென ஒரு ஓடிடி சேனல் வந்தால் அதற்குத் தமிழிலே என்ன பெயர் சூட்டலாம்?

  • ? உங்க வாழ்க்கையில் மறக்கவே முடியாத காமெடி சம்பவம்னு எதைச் சொல்வீங்க? (ரொம்ப சுருக்கமா)

  • ? பெண்கள் மனதைக் குறிப்பிட கடல் தொடங்கி ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. ஆண்மனதை என்ன சொல்லிக் குறிப்பிடலாம், ஏன்?

  • ? உதயநிதி ஸ்டாலினும் ஓ.பி.ரவீந்திரநாத்தும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு