Published:Updated:

வாசகர் மேடை: தர்மயுத்தம் தகர்த்த மர்மயுத்தர்!

அஜித் - விஜய்

தங்களின் ஒரே தம்பியான பிரேம்ஜிக்குக் கல்யாணம் செய்து வைக்க இருவர் நடத்தும் போராட்டமே கதை

வாசகர் மேடை: தர்மயுத்தம் தகர்த்த மர்மயுத்தர்!

தங்களின் ஒரே தம்பியான பிரேம்ஜிக்குக் கல்யாணம் செய்து வைக்க இருவர் நடத்தும் போராட்டமே கதை

Published:Updated:
அஜித் - விஜய்

உங்கள் காலத்துப் பள்ளிக்கூடம், உங்கள் குழந்தைகள் காலத்துப் பள்ளிக்கூடம் - என்ன வித்தியாசம்?

முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கச் சொல்லிக் கெஞ்சுவார்கள். இப்போது அரசுப்பள்ளி குழந்தைகளைச் சேர்க்கச் சொல்லிக் கெஞ்சுகிறது.

 பி.சி.ரகு, விழுப்புரம்

அப்ப சாதாரண பள்ளி, இப்போ ஸ்மார்ட் பள்ளி.

 டி.முருகேசன், கங்களாஞ்சேரி

அது பாடசாலை, இது பணச்சோலை.

 அனிதா நரசிம்மராஜ், மதுரை

எங்கள் காலத்தில் ஆறு கிலோமீட்டர் பள்ளிக்கூடத்துக்கு நடந்தே சென்றோம். எங்கள் குழந்தைகள் அரை மீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளிக்கே வேனில்தான் செல்கிறார்கள்.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்

எங்க காலத்துல பள்ளிக்கூடமா இருந்துச்சு. இப்போ MNC-யா மாறியிருக்கு.

கி.சரஸ்வதி

வலது கையைத் தலைக்கு மேலாகத் தூக்கி இடது காதைத் தொட்டுவிட்டால் பால்வாடியில் இருந்து பள்ளிக்கூடம் அப்போது. எல்.கே.ஜி, யு.கே.ஜி அங்கன்வாடியிலா அல்லது பள்ளிக்கூடத்திலா என்ற குழப்பம் இப்போது.

வீ.வைகை சுரேஷ்

அப்போ மரத்தடிக் கல்வி!

இப்போ மடிக்கணினிக் கல்வி!

pbukrish

நான் படிக்கும்போது வீட்டில் சேமிப்பு இருந்தது, பள்ளிக்குச் செலவு இல்லை. என் குழந்தை படிப்புக்குக் கட்டியபிறகு பணமே மிஞ்சுவதில்லை. எங்கே சேமிப்பு..?

SaiAzhagesh

வாசகர் மேடை: தர்மயுத்தம் தகர்த்த மர்மயுத்தர்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்- அஜித் இணைந்து நடித்தால்... நாலுவரியில் கதை சொல்லுங்களேன்!

இளமை ஊஞ்சலாடுகிறது 2.0 எடுக்கலாம்!

ஹெச்.உமர் பாரூக்

விஜய், அஜித் இருவரும் புகழ்பெற்ற கார்ப்பரேட் ஆளுமைகள். பங்குச்சந்தையின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள். அதலபாதாளத்தில் விழுந்து மரணப்படுக்கையில் இருக்கும் இந்திய பங்குச்சந்தையை விஜய்-அஜித் கூட்டணி எப்படி வில்லன் எஸ்.ஜே.சூர்யாவை வதைத்து உச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதுதான் கதை.

ஆர். ஹரிகோபி

உக்ரைன் நாட்டு கிரிக்கெட் வீரர் விஜய். ரஷ்ய நாட்டு கிரிக்கெட் வீரர் அஜித். இருவரும் இணைந்து, கிரிக்கெட் மூலம் எவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கின்றனர் என்பதே கதை. (காமெடிக்கு அவ்வபோது பிரேம்ஜி வந்து போவார்!)

ரிஷிவந்தியா

தங்களின் ஒரே தம்பியான பிரேம்ஜிக்குக் கல்யாணம் செய்து வைக்க இருவர் நடத்தும் போராட்டமே கதை.

manipmp

சுறா, ஜி - ரெண்டு பேரோட ஃப்ளாப் படத்தையும் மல்டிவெர்ஸ்ல இணைச்சு புதுசா கொடுத்து ஹிட் அடிக்குறாரு வெங்கட்பிரபு. டைட்டில்: ஜிறா (எ வெங்கட் பிரபு யூனிவர்ஸ்)

JaNeHANUSHKA

‘தெறி’யின் விஜய்குமார், ‘மங்காத்தா'வில் பணம் கொள்ளையடித்துச் சென்ற விநாயக் மகாதேவைப் பிடிக்கச் செல்லும் கதையாக எடுக்கலாம்... Sequel of two films!

Ajit_karthi

‘இணைந்த கைகள்’ படத்தை ரீமேக் செய்யலாம்.

velukutty3337

இப்போ கொடுங்க எடப்பாடிக்கு ஸ்பெஷல் பட்டம்...

ஒற்றை ஸ்டாட்டர்ஜி

 பி.சுமதி, கோவூர்

எடப்பாடி கண்ட எழுச்சி ஞாயிறு

 பாலா சரவணன், சென்னை

பழனிசாமி குத்தகைக்காரர்

வி.சி. கிருஷ்ணரத்னம்

தர்மயுத்தம் தகர்த்த மர்மயுத்தர்!

அ.வேளாங்கண்ணி

மிங்கிளாகா சிங்கிள்!

நா.இரவீந்திரன்

மிக்சரை வீழ்த்திய சிக்ஸரே!

LAKSHMANAN_KL

துரோகிகளைத் தொடை நடுங்க ஓடவிட்ட தொல்காப்பியரே! (பட்டம் சொன்னால் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது)

NedumaranJ

அமாவாசைகளின் அமாவாசையே!

SriRam_M_20

வாசகர் மேடை: தர்மயுத்தம் தகர்த்த மர்மயுத்தர்!

ஒரு புதுப்படத்தில் இந்தக் காட்சிக்கு இளையராஜாவின் இந்தப் பின்னணி இசையைப் போடலாம் என்றால் எந்தக் காட்சி, என்ன பி.ஜி.எம்?

‘டாக்டர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் ‘செல்லம்மா' பாட்டுக் காட்சி காட்டப்பட்டு படத்தை முடித்திருப்பார்கள். அந்தப் பாட்டுக்கு பதில் ‘புன்னகை மன்னன்' படத்தில் கமல் ரேவதிக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கும் நடனக் காட்சியில் வரும் புகழ்பெற்ற அந்த பி.ஜி.எம்மைப் பயன்படுத்தலாம்.

பர்வீன் யூனுஸ்

‘விக்ரம்’ படத்தில் கமலின் பேரனுக்கு பகத் பாசில் முதலுதவி தருமிடத்திற்கு நாயகனில் வரும் தென்பாண்டி சீமையில பாட்டின் பி.ஜி.எம்மைப் போட்டால் உள்ளத்தை உருக்கும்.

அ.பச்சைப்பெருமாள்

‘விக்ரம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் மருமகள் அவரைப் பார்த்து, ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா?’ என்று கேட்கும்பொழுது, ‘தென்பாண்டி சீமையில’ பாடலின் இசையைப் போட்டால் பொருத்தமாக இருக்கும்!

திருச்சி இமான்

‘ரெட்டைவால் குருவி’ படத்தின் பி.ஜி.எம்மை அப்படியே ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்துக்குப் போடலாம். ‘ராஜராஜ சோழன் நான்...' பாட்டுல விஜய்சேதுபதியையும் நயன்தாராவையும் சமந்தாவையும் யோசிச்சுப் பார்க்கவே அமோகமா இருக்கு.

அஜித்

‘ஜெய்பீம்’ படத்தில் இறந்தவரைத் தேடும் காட்சிகளில் ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் ‘அழகிய கண்ணே’ பி.ஜி.எம் போடலாம்.

KRavikumar39

‘அசுரன்’ படத்தில் தனுஷ் வீதியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சிக்கு ‘நாயகன்’ படத்தின் ‘தென்பாண்டி சீமையில’ பாடலும் பி.ஜி.எம்மும் பக்காவா பொருந்தும்.

balasubramni1

‘96’ படத்தில் ‘ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?’ என த்ரிஷா கேட்க, அதற்கு வி.சே ‘உன்னை எங்கே விட்டுட்டுப் போனேனோ அங்கேயேதான் இருக்கேன்' எனச் சொல்லும் படத்தின் உயிர்நாடிக் காட்சியில் ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது' பாடலில் தொடங்கும் இளையராஜாவின் ஆலாபனையை ஒலிக்க விடலாம்.

ParveenF7

RRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் அடி வாங்குவதைப் பார்த்து ராம்சரண் உள்ளுக்குள் வருந்தும் காட்சிக்கு, பழைய ‘படிக்காதவன்’ படத்தின் இசை சாலப் பொருத்தம்.

maha40176220

நீங்கள் ஒருநாள் ஜனாதிபதி ஆனால் என்ன செய்வீர்கள்?

‘ஏக் தின் கா பாத்' என ஊடகங்களில் உரையாற்றுவேன்...

 க.கிரண்ராஜ், சென்னை

மாதக் கணக்கில் நகராமல் கிடக்கும் கருணை மனுக்கள்மீது நடவடிக்கை எடுப்பேன்!

மூ.மோகன்

ஒண்ணும் செய்ய முடியாது. இவ்வளவு நாள் வீட்டுக்கு ரப்பர் ஸ்டாம்பா இருந்தோம். இனிமே நாட்டுக்கு ரப்பர் ஸ்டாம்பா இருக்கணும்.

கு.வைரச்சந்திரன்

ஜனாதிபதிக்கு அழகு வெளிநாடு சென்று வருதல். ஒரு நாள் ஜனாதிபதி வெளிநாடு செல்லக்கூடாதா? நான் ஒரு நாள் ஜனாதிபதி ஆனால் ஒரு நாளில் சென்று வரக்கூடிய நாட்டுக்கு, குறைந்தபட்சம் நேபாளத்துக்குச் சென்று வருவேன்.

வி.பஞ்சாபகேசன்

ஜாலியாகப் பொழுதைக் கழித்துவிட்டு, ‘இனி யாரையும் ஒரு நாள் ஜனாதிபதியாக ஆக்கக் கூடாது' என்று அவசர சட்டத்தையும் போட்டு விட்டு வருவேன்!

நெல்லை குரலோன்

பாவம், யாராவது இரண்டு மூன்று தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனுவை தண்டனைக் குறைப்பு செய்வேன். ஏதோ என்னால் முடிஞ்சது.

புவனா அசோகன்

எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஒரு நாள் முழுக்க சும்மா எல்லாம் இருக்க முடியாது!

இர.செல்வநிகிலா

அப்படி ஆனாலாவது கோவா டூருக்கு பிரெண்ட்ஸோட போயிட்டு வந்திடணும்!

absivam

15 லட்சம் பேங்க் அக்கவுன்டில் போடாததைக் கண்டித்து ‘ராஜினாமா' செய்துவிடுவேன். அனுதாபம் பிறக்கும். அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்று முழுநேர அரசியல்வாதியாக மாறிவிடுவேன்.

Sivakum31085735

1. `பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்காத நடிகர், இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கலாமே என்று உங்களுக்குத் தோன்றுபவர் யார்?

2. 2கே கிட்ஸ் - சிறுகுறிப்பு வரைக!

3. அ.தி.மு.க-விலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் இனி என்ன செய்யலாம்?

4. போதைப்பொருள் கடத்தல் சினிமாக்களின் காமெடிகள்?

5. பா.ஜ.க தலைவராகி ஒரு வருடம் கடந்திருக்கும் அண்ணாமலையை நாலு வரிக் கவிதையால் பாராட்டலாமே ப்ரெண்ட்ஸ்...

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com