Published:Updated:

வாசகர் மேடை: கதை கதையாம் காரணமாம்!

கவுண்டமணி
பிரீமியம் ஸ்டோரி
News
கவுண்டமணி

ஓவியம்: பிரகாஷ் கலை

? விஜய் 65 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து படத்தின் ஒன்லைனைச் சுருக்கமாகச் சொல்லுங்க.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு மிருகம் பதுங்கிக் கிடக்கிறது. பலர் அதை அடக்கி வைக்கின்றனர். இவன் அதை எழுப்பிவிட்டான். இனி என்ன நடக்கும் என்பது அவனுக்கே தெரியாது.

 K.R.M.ஜியாவுதீன், தேரழந்தூர்

பொதுவாக விஜய் படம்னாவே ஒன்லைன் கதைதான் இருக்கும். சோ, இப்பவே அந்த ஒன்லைனையும் சொல்லக்கூடாது, சாரி!

pbukrish

பகலில் அமைதியான எல்ஐசி ஏஜென்ட், இரவில் அதிரடி Raw ஏஜென்ட். அதுதான் நம்ம ‘பீஸ்ட்.’

RamuvelK

பெரும்பாடுபட்டு வலிமை அப்டேட்டைக் கண்டுபிடிக்கிறார் தளபதி விஜய். 

KarthikeyanTwts

காட்டுக்குள் நடக்கும் அரசியல் கதைக்களம். வனத்துறை அதிகாரியான விஜய் அரசியல்வாதிகளிடமிருந்து வனவிலங்குகளைப் பாதுகாக்கிறார்.

Vasanth920

இப்போது நான் சொல்லும் கருவைக் கேட்டு அவர்கள் படமெடுத்து விட்டால் டைட்டில் கார்டில் மூலக்கதை என்று என் பெயரைப் போட வைப்பீர்களா..? 

parveenyunus

வாசகர் மேடை: கதை கதையாம் காரணமாம்!

? இதுவரை விளம்பரங்களில் நடிக்காத கவுண்டமணி எந்த விளம்பரத்தில் நடிக்கலாம்?

‘அக்கா மவளே இந்துன்னு இன்னுமா லெட்டர் எழுதிட்டுத் திரியுறீங்க. புது செல்போன் வாங்கிப் பேசுங்ய்யா...’ என்று புதுமாடல் செல்போன் விளம்பரத்தில் நடிக்கலாம்.

pachaiperumal23

ஒத்த செருப்பு வச்சுக்கிட்டு, ‘ஒன்னு இங்க இருக்கு, இன்னொன்னு எங்க இருக்கு’ன்னு கேட்க வைக்கலாம்.

Elambirairajgov

சைக்கிள் பெடல் காலில் பட்டு வலியுடன் ‘கால்ரா... கால்ரா...’ என்று கத்தி நடித்த கவுண்டமணி ‘ஆர்த்தோ ஹெர்ப்’ விளம்பரத்தில் நடிக்கலாம்.

JEYANTHYKIRA171

இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா' என்று புலம்பி, கடைசியில் ‘அதுக்கு ஒரு வழி பொறந்தாச்சு நாராயணா' என்று சொல்லி, கொசு விரட்டி விளம்பரத்தில் நடிக்கலாம். 

balebalu

‘நீங்க உட்கார்ந்து பார்க்கலாம்; நின்னுக்கிட்டுப் பார்க்கலாம்; ஏன், படுத்துக்கிட்டேகூட பார்க்கலாம்’ என்று அவருக்கேயான பாணியில் வசனம் பேசி OTT தளத்துக்கு விளம்பரம் செய்யலாம்.

IamUzhavan

காலணி, ஷூ (Shoe) விளம்பரங்களில் நடிக்கலாம். ‘எப்படி உதைத்தாலும் தாங்கும், கிழியாது’ எனச் சொல்லலாம்.

 கதிஜா ஹனிபா. திருச்சி

‘இதா பாரு, இங்க பூசு, லெப்டில் பூசு, ரைட்டில் பூசு, பேக்கில் பூசு’ என்று கூறி, பாடி லோஷன் விளம்பரத்தில் நடிக்கலாம்.

amuduarattai

நடிகர் செந்திலை வைத்துக்கொண்டு ‘எப்படி உதைத்தாலும் தாங்குகிறானே’ எனக் கட்டுமானக்கம்பி விளம்பரத்தில் நடிக்கலாம். 

 த சிவாஜிமூக்கையா, சென்னை

? 2020 லாக்டௌன், 2021 லாக்டௌன் - என்ன வித்தியாசம்?

2020-ல் ஒரு மாஸ்க், 2021-ல் டபுள் மாஸ்க்.

இரா.கமலக்கண்ணன், ஈரோடு

வித்தியாசம்: 2020-ல் எல்லாத்தையும் தட்டுனோம். 2021-ல அது இல்லை.ஒற்றுமை: அதே ரேடியோ, அதே குரல், அதே வசனம் இப்பவும் ஒலிக்குது.

 Dorairajan UmaShankar,

மலேசியா

முதல் லாக்டௌன், நல்ல நல்ல ஸ்வீட்ஸ், நிறைய புதிய ரெசிப்பி. இரண்டாம் லாக்டௌன், கஷாயம், கஷாயம் மற்றும் கஷாயம். அடிஷனலா, பாதிப் பேர் அரை டாக்டர் ஆயாச்சு.

 ஷபினா பானு

‘ஜீ'யோட தாடி நீளம்தான்..!

LAKSHMANAN_KL

2020 - பதற்றமா இருந்துச்சு, 2021 - பழகிருச்சு.

RavikumarMGR

2020 லாக்டௌன்-ஆயிரம் நிவாரணம், 2021 லாக்டௌன்- இரண்டாயிரம் நிவாரணம்.

urs_venbaa

2020 - கொரோனா, கொரோனா மட்டுமே தெரிந்தது.  2021 - கொரோனாவின் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வேரியன்ட்களும், அதன் சப்ளிமெண்டரி வண்ணப் பூஞ்சை நோய்களும் தெரிந்தன.

NedumaranJ9

? அணிலால் மின்தடை ஏற்படுவதுபோல் நம் வாழ்க்கையில் என்னென்ன வினோதக் காரணங்களைச் சொல்லலாம்?

‘ஏன் குளம் வறண்டுபோய்க் கிடக்கு?’‘மீனெல்லாம் தண்ணியைக் குடிச்சிடுச்சு..!’

 கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

கலப்படம் எனக்குப் பிடிக்காது. அதனால்தான்செம்பு கலந்த தங்க நகைகளை வாங்குவது இல்லை.

 K.R.M.ஜியாவுதீன், தேரழந்தூர்

நல்லவேளைப்பா... அந்த நரி என் முகத்தில் முழிச்சுச்சு. இல்லன்னா இன்னைக்கு ஃபுல்லா பட்டினியாதான் இருந்திருக்கும்! 

 வீரணம் சரவணன் 

வீட்டுக் குழாயில் தண்ணீர் வராமல் காற்று வந்தால், வளிமண்டலத்தில் காற்றின் ஆதிக்கம் அதிகம் என்று அர்த்தம்.

 எம்.விக்னேஷ், மதுரை

எல்லோரும் டூவீலர்ல போறதுனாலதான் பெட்ரோல் வெல ஏறிப்போச்சு.

 கி.சரஸ்வதி, ஈரோடு

பசுக்கள் வைக்கோலையும் புண்ணாக்கையும் கலந்து அசைபோடுவதால் பாலில் கலப்படம் உண்டாகிறது!

absivam2

ரொம்ப தூரத்துல இருக்குற வளைகுடா, அரபு நாடுகள்ல இருந்து பெட்ரோல், டீசல் வர்றதாலதான் இவ்வளவு விலைக்கு விற்பனை செய்ய வேண்டியதா இருக்கு..!

SowThanishka1

ஜோசியக்காரர் இரும்பு சம்பந்தமான தொழில் அமையும் எனக் கூறியதால் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் எடுத்துப் படிக்க வேண்டியதாயிருச்சு.

manipmp

‘‘என்னம்மா, மீன் குழம்பு இவ்ளோ உப்பா இருக்கு..?’’ ‘‘கடல்மீனைப் போட்டுக் குழம்பு வச்சா அப்படித்தான் இருக்கும்...’’ 

LAKSHMANAN_KL

கொரோனாவால ஆல்பாஸ் போட்டுட்டாங்க. இல்லைன்னா நான்தான் ஸ்டேட்பர்ஸ்ட்.

pachaiperumal

ஓவியம்: ஹாசிப்கான்
ஓவியம்: ஹாசிப்கான்

? ஒருவேளை ஸ்டாலினுக்குப் பதில் அழகிரி தி.மு.க தலைவர் ஆகியிருந்தால்...?

‘மனதின் குரல்' நிகழ்ச்சியை மதுரையில் நடத்திக் காட்டுவார். அப்போது சிறந்த முதல்வருக்கான விருது அவருக்கு வழங்கப்படும்.

தேனா லட்சுமி மதுரை

பிரசாந்த் கிஷோர்க்கு வேலை யில்லாமப் போயிருக்கும்.

pasumpon.elango0

மதுரையைத் தமிழகத் தலைநகரமாக மாற்றியிருப்பார்.

 க.கீராசந்த், விருதுநகர்

‘நம்ம ஊருக்காரப் பய...' என்று சொல்லி, வடிவேலுவுக்கு அரசவை நகைச்சுவையாளர் அந்தஸ்து வழங்கப்படும்.

 பெ.பச்சையப்பன், கம்பம்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அண்ணன் அழகிரி எனும் நான்...

 மணிமேகலை பாலு, நாமக்கல்

ஸ்டாலின், உடன்பிறப்புகளோட பேசி, ஆடியோ லாஞ்ச் பண்ணிக்கிட்டு இருப்பார்.

 கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.

‘அழகிரிதான் வாராரு! நல்லாட்சி தரப் போறாரு’ன்னு பாடியிருப்பாங்க.

 எ .முகமது ஹுமாயூன், நாகர்கோவில் 

அழகிரி திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகம் (ஸ்திமுக)ன்னு திமுக ரெண்டு கட்சியாகி இருக்கும்.

saravankavi

தயாநிதி அழகிரி இளைஞர் அணிச் செயலாளர் ஆகியிருப்பார்.

urs_venbaa

‘ஒருவேளை அழகிரிக்குப் பதில் ஸ்டாலின் திமுக தலைவர் ஆகியி ருந்தால்’ன்னு கேள்வி கேட்ருப்பீங்க.

RajaAnvar_Offic

தொண்டர்கள் பிரியாணிக்குப் பதிலாகக் கறிதோசைக்கு அடித்துக்கொள்வார்கள்.  

vikneshmadurai

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் - மூன்று பேருக்கும் மூன்று மாஸ் பன்ச் சொல்லுங்கள்.

? ஓ.டி.டி தளங்களில் உங்களைக் கடுப்பாக்கும் ஒரு விஷயம் என்ன?

? சேப்பாக்கம் எம்.எல்.ஏ உதயநிதியை சேகுவேராவாகச் சித்திரித்து போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். உண்மையில் உதயநிதி யார் பயோபிக்கிற்குப் பொருத்தமாக இருப்பார்?

? அண்ணாமலை - எல்.முருகன் - தமிழிசை சௌந்தரராஜன்: ஜாலியான வித்தியாசங்கள் சொல்லுங்கள்.

? ‘வலிமை’ மோஷன் போஸ்டரை வைத்து அதன் கதையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com