Published:Updated:

வாசகர் மேடை: எல்லா மனிதர்களும் வடிவேலுதான்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

Psycho திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம்.

வாசகர் மேடை: எல்லா மனிதர்களும் வடிவேலுதான்!

Psycho திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம்.

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

? ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சீரியல் கில்லர் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் நடிகர் நடிக்கலாமென்றால் உங்கள் சாய்ஸ் யார்?

`தி சைலன்ஸ் ஆப் தி லாம்ப்ஸ்’ படத்தில் வரும் மனிதர்களைக் கொன்று சாப்பிட்ட சீரியல் கில்லராக, ஹாலிவுட் நடிகர் அந்தோணி ஹாப்கின்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் நம்ம சத்தியராஜ் நடிக்கலாம்.

 க.விஜயபாஸ்கர், திருச்சி

Halloween படத்தில் வரும் Michael Myers கதாபாத்திரத்தில் கமல்.

SriRam_M 5

பீசஸ் படத்தில் போஸ்டனில் ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவிகளை தொடர் கொலை செய்யும் கிறிஸ்டோபர் ஜார்ஜ் பாத்திரத்தில் ஆர்யா நடிக்கலாம்.

RavindranKanna25

The Happening : மர்மமான விஷவாயுவால் தாக்கப்படும் நகரைக் காப்பாற்றப் புறப்படும் ஹீரோவாக ஜெயம் ரவி, அவர் மனைவியாக ஹன்சிகா.

Kirachand4

Psycho திரைப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம்.

pbukrish

சைக்கோ - நார்மன் பேட்ஸ், கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்தால் `சைக்கோ ஜாக்கிரதை' எனும் அளவுக்கு மிரட்டிவிடுவார்!

RavindranRasu

டெக்ஸ்டர் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கலாம். அட்டகாசமாக இருக்கும்.

karthikgauti

Joker (2019) வக்கீன் ஃபீனிக்ஸ். ஜோக்கரின் மனக்குமுறல்களை, தன் உடல்மொழியில் விக்ரம் அழகாக வெளிப்படுத்துவார்.

RamuvelK

`க்ரீப் 2’ படத்தில் அஞ்சான் சூர்யா நடித்தால் அமர்க்களமாக இருக்கும்.

Paa_Sakthivel

`ஐ சா த டெவில்’ ரோலில் ஜெயம் ரவி நடிக்கலாம்.

Paa_Sakthivel

அஜித் மற்றும் அதர்வாவை Memories of Murder படத்தில் நடிக்க வைக்கலாம்.

pbukrish

The silence of the lamps : Buffalo Bill's : பகத் பாசில்.

jerry

The Girl with the Dragon Tattoo படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம்.

pbukrish

Insomnia-வில் கமல் அல்லது விக்ரம்.

parveenyunus

`ஜோக்கர்' கேரக்டரில்...

நான் கடவுள் ஆர்யா.

 மணிமேகலை பாலு, நாமக்கல்.

வாசகர் மேடை: எல்லா மனிதர்களும் வடிவேலுதான்!

? ஏதாவது ஒரு சூப்பர்ஹிட் தமிழ்த் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றி வேறு பெயர் வைக்கலாமென்றால் என்ன பெயர் வைப்பீர்கள், ஏன்?

கிழக்குச் சீமையிலே மாற்றி, பாச மலர் - 2

 வே.புனிதா வேளாங்கண்ணி,

சோளிங்கர்.

விஜய் நடித்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்திற்கு `கொங்கு நாட்டு மாப்பிள்ளை’ என்று டைட்டில் வைத்திருந்தால் இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செமையா இருந்திருக்கும்.

 எம்.விக்னேஷ், மதுரை

கில்லி படத்துக்கு `கபடி கபடி’ன்னு பேரு வச்சிருக்கலாம்.

SowThanishka

இசையமைப்பாளர் ஆவதற்காக ஹீரோ போராடும் கதை என்பதால், அஜித் நடித்த முகவரி படத்துக்கு நான் வைக்க விரும்பும் டைட்டில்... `ஒரு `தல' ராகம்.'

l LAKSHMANAN_KL

கன்னிராசி படத்திற்கு செவ்வாய் தோஷம் எனப் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்.

manipmp

வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்கள் பல உண்டு. அப்படி ஓடிய தலைநகரம் படம் பார்ட் 2 வந்தால், அதற்கு வடிவேலுவின் கேரக்டர் பெயரான `நாய் சேகர்’ என்று வைக்கலாம்.

IamUzhavan0

? காலத்துக்கு ஏற்றாற்போல் இன்றைய தலைவர்கள் எந்த விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பொதுக்கூட்ட மேடையில் பேசிட இயலாத போது ட்விட்டர் ஸ்பேஸிலும், கிளப் ஹவுஸிலும் பங்கேற்றுப் பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

PG911_twitz

தலைவர்களுக்கு வணக்கம் வெச்சாலே போதுமே? அதுவே தமிழ்ப்பாரம்பரிய மரியாதை, எதுக்கு அடிமை மாதிரி கால்ல விழும் கலாசாரம்?

 சாலக்குடி பிந்தூ ப்ரியன், கேரளா

வலிமை அப்டேட் வாங்கித் தந்தேன் என வெட்டிப் பெருமை பேசாமல் ஒவ்வொரு மாதமும் சட்ட மன்ற உறுப்பினரான பின் என்னென்ன மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தினேன் என ப்ளக்ஸ் வைக்கலாம்.

h_umarfarook1

தொண்டர்களுக்கு வழக்கமான குஸ்காவும் 200 ரூபாயும் கொடுக்குறதுக்கு பதிலா ஆயிரம் ரூபாயை அக்கவுன்டில் போட்டால் தேவையானவற்றை மக்களே வாங்கிக் கொள்வார்கள்.

chennappan10

ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் நிகழ்வின் போது அல்வா கிண்டுவதைத் தவிர்க்கலாம்.

jerry

ரஜினி தன் படம் ஓட அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்வதுபோல், தேர்தல் சமயம் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவேன் எனச் சொல்வதை நிறுத்தலாம்.

Jayakum

இன்னும் சட்டசபைல டேபிளைத் தட்டிப் பாராட்டாமல், டிவில வர்ற மாதிரி பேக்ரெளண்ட்ல கை தட்டுற மாதிரி ஒலி எழுப்பலாம்!

San

நேரில் சென்று வாழ்த்திவிட்டு, பின்னர் அதனைப் போட்டோக்களுடன் சமூக வலைதளங்களிலும் பதிவிடும் வழக்கம் இருக்கும்போது, பின்னர் ஏன் ப்ளக்ஸ் போர்டும் அடிக்கவேண்டும்.

IamUzhavan

மற்ற கட்சிகளை மேடையில் ஆவேசமாகத் திட்டுவதைத் தவிர்க்கவேண்டும். எப்படியும் திட்டிய கட்சிக்கும் தாவும் வாய்ப்பு இருப்பதால்.

sarathitup4

வாசகர் மேடை: எல்லா மனிதர்களும் வடிவேலுதான்!

? உங்கள் வாழ்க்கைக்கு வடிவேலுவின் எந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள், ஏன்?

அடிக்கடி பஸ்ஸில் செல்லும்போது, `ஓ... இவரு தான் நல்ல டிக்கெட்டையெல்லாம் கிழிச்சுக் குடுக்கும் கண்டாக்டரா..?!' என்பதுதான் மைண்ட் வாய்ஸாக இருக்கும்..!

 பெ.பச்சையப்பன், கம்பம்.

இங்கயே இருக்கலாமா... இல்ல துபாய் பக்கம் போலாமான்னு இருக்கு வாழ்க்கை.

moto_priyan

ரைட்டு விடு.

Praba_1689

என் காதலி எதற்கு எடுத்தாலும் நீண்ட நெடிய விளக்கம் கேட்கும்போதெல்லாம் `நல்லா கேட்குறாங்கய்யா டீட்டெய்லு' என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்.

SriRam_M_20

பில்டப் பண்றமோ பீலா விடறமோ

அது முக்கியமில்ல... நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உத்துப் பாக்கணும்

ஆனா, நாம பண்றது நாலு பேருக்குப் புரியப்படாது, தெரியப்படாது!

IamJeevagan

``பீ கேர்ஃபுல் - என்னச் சொன்னேன்’’

(எல்லாப் பயலுகளும் டெரராவே திரியுதுங்க)

ARiyasahmed

வீட்டுல எந்தப் பொருள் எங்க இருக்குன்னு சொல்லும்போது ``இதுதான் கடுகுடப்பா, இதுலதான் கடுகெல்லாம் இருக்கும். இதான் சமையலறை, இங்கதான் சமையல் எல்லாம்.’’

urs_venbaa

இதமான ஏ.சி குளிர்ல ஆபீஸ் மீட்டிங் ஆரம்பிச்சு, எம்.டி பேச ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷம்... `இப்பவே கண்ணக் கட்டுதே..!'

LAKSHMANAN_KL

? நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு வாங்கி மூலையில் போட்டு வைத்திருக்கும் கேட்ஜெட் எது, ஏன்?

கம்ப்யூட்டர் வந்த புதிதில் வாங்கிய பி.சி எனப்படும் பர்சனல் கம்ப்யூட்டர். இப்போ எந்த உபயோகமும் இல்லாமல் சும்மா கிடக்குது.

 எஸ்.மோகன், கோவில்பட்டி

டார்ச் லைட்தான், அடுத்த எலக்‌ஷன் வரும் வரைக்கும் மூலையில்தான் கிடக்கும்

~ கமல்ஹாசன்

saravankavi

லேட்டஸ்ட்டா ஒரு வேப்பொரைசர்

(Vaporizer) வாங்கினேன். ஆவி பிடிக்க.

ஒரே தரம்தான் யூஸ் பண்ணினேன்.

சும்மா கிடக்கு இப்போ.

 கி.சரஸ்வதி, ஈரோடு

Gadget எதுவும் இல்ல, கேசட் மட்டும்தான் இருக்கு

isurenthar

பட்ஜெட் விலையில் வாங்கிய பவர் பேங்க் ஒன்று திவாலாகிவிட, அது கேட்ஜெட் இல்லை BADஜெட் என்று தெரிந்து அதை பேப்பர் வெயிட்டாக உபயோகிக்கிறேன்.

 எம். விக்னேஷ், மதுரை

`ஆன்லைனில் ஒரு சப்பாத்தி மேக்கர் வாங்கி அது இப்போது பரண் மேல் சப்பாத்தி போட்டுக்கொண்டு இருக்கிறது...'

lollumanix

டிரிம்மிங் மெஷின்... மீசையை டிரிம் செய்தபோது கை நழுவி மொத்த மீசையும் காலியாயிடுச்சு. அப்ப மூலையில் தூக்கிப் போட்டதுதான்!

chennappan10

வாங்கிய புதிதில் ட்ரெட்மில்லில் தினமும் மூன்று முறை ஓடினேன். தற்சமயம் துணி காயப்போடுகின்றனர். வயிறு எரியுது!

l bpthilakavathi1

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: எல்லா மனிதர்களும் வடிவேலுதான்!

? கவுண்டமணியும் வடிவேலுவும் ரீ-என்ட்ரி ஆகி ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம், என்ன டைட்டில் வைக்கலாம்?

? ஜென் நிலை என்பதற்கு உங்கள் வாழ்க்கையிலிருந்து ஜாலியான உதாரணம் சொல்லுங்கள்

? தேர்தலில் தோற்றாலும் தலைவர் பதவியும் இல்லை; மத்திய அமைச்சர் பதவியும் இல்லை. ஹெச்.ராஜாவுக்கு என்றே ஒரு பதவியை உருவாக்கலாம் என்றால் அது என்ன பதவி?

? காதல்: திருமணத்துக்கு முன், பின் - என்ன வித்தியாசம்?

? உங்களுக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் முதலில் என்ன செய்வீர்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism