Published:Updated:

வாசகர் மேடை: கலகலாய்ப்பா இருக்கும்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

இளவயதில் காளைகளை அடக்கிய ஓ.பி.எஸ் ‘செண்பகமே செண்பகமே' எனப் பாட்டுப் பாடி அசத்தலாம்

வாசகர் மேடை: கலகலாய்ப்பா இருக்கும்!

இளவயதில் காளைகளை அடக்கிய ஓ.பி.எஸ் ‘செண்பகமே செண்பகமே' எனப் பாட்டுப் பாடி அசத்தலாம்

Published:Updated:
வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
வாசகர் மேடை

ராமராஜனின் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிக்க இப்போது பொருத்தமானவர் யார்?

கார்த்தி நடித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். கிராமத்து சாயல் நன்றாக இருக்கும்.

மணிவண்ணன்

நடிகர் விக்ரம் பிரபு! (‘கும்கி’யில் நடித்த அனுபவம் இருக்கிறதே!)

விநாயகமூர்த்தி

சாந்தமான முகம் கொண்ட சிவகார்த்திகேயன்.

 வேலுமணி, நாராயணபாளையம்.

வடிவேலு, பாட்டுப் பாடி காமெடியும் பண்ணிக் கலக்கிடுவார்!

மஹஜூதா

கிராமத்து வெள்ளந்தி இளைஞன் லுக் இப்போதுள்ள நடிகர்களில் விமலுக்கு மட்டுமே உள்ளது. அவரே பொருத்தமானவர்.

ஈனோஸ் இப்ராஹீம்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை நடிக்க வச்சா பசு விசுவாசிகள் எல்லாருமா சேர்ந்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் ரேஞ்சுக்கு தேசிய அளவுல ட்ரெண்டிங் ஆக்கிடுவாங்க!

முகமது ஹுமாயூன்

மிர்ச்சி சிவா நடித்தால் ‘கலகலாய்ப்பா' இருக்கும்.

ராம் ஆதிநாராயணன்

இளவயதில் காளைகளை அடக்கிய ஓ.பி.எஸ் ‘செண்பகமே செண்பகமே' எனப் பாட்டுப் பாடி அசத்தலாம்!

நா.இரவீந்திரன்

யாஷ். ‘கே.ஜி.எஃப்'பில் அதிரடி டானாக நடித்தவரை, இதில் நடிக்க வைத்து, அவரின் இன்னொரு முகத்தைக் காட்டலாம். ‘‘நான் 10 பசு மாடுகளுக்குப் பால் கறந்து பாட்டுக்காரன் ஆனவன் இல்லடா... நான் கறந்த 10 மாடுமே காளை மாடுடா’'ன்னு பஞ்ச் பேசினால் கம்பெனி பொறுப்பல்ல!

LAKSHMANAN_KL

அல்லு அர்ஜுன். மாட்டோடு ஒரு பாட்டுப் பாடி உலக ஹிட் ஆக்கிவிடுவார்.

KRavikumar39

வாசகர் மேடை: கலகலாய்ப்பா இருக்கும்!

உங்களால் மறக்க முடியாத ட்ரீட்..?

அலுவலகத்தில் நான் ஆயிரம் ரூபாய் கேஷ் அவார்டு வாங்கியதற்கு, மூவாயிரம் ரூபாய் செலவில் சக ஊழியர்களுக்கு வைத்த ட்ரீட்.

எஸ். ‌‌ராஜம்

என் நண்பர் இயக்குநர் எழில் இயக்கிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வெற்றிக்காக கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் ஹோட்டல் மாடியில் நண்பர்கள் அளித்த ட்ரீட் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

சத்தியமூர்த்தி.ஜி

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனாக் கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்தபோது எனது பிறந்த நாள். மனைவி, மகள் சென்னையிலும் நான் பெற்றோர் வீட்டிலும் இருக்க, இரண்டு நண்பர்கள் 100 கி. மீ. பயணம் செய்து கேக்குடன் சர்ப்ரைஸ் விசிட் அடித்ததை மறக்கவே மாட்டேன்.

செல்லத்துரை

புதிதாக ஆரம்பித்த ஐஸ்கிரீம் பார்லரில் 100 ரூபாய்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்ற சலுகை இருந்த போது என் தோழி பிறந்த நாள் ட்ரீட் கொடுக்க வெளுத்துக் கட்டிவிட்டு, உடம்பு சரியில்லாமல் 15 நாள் பட்ட அவஸ்தை மறக்கவே முடியாது.

மீனலோசனி பட்டாபிராமன்

வேலையில் சேர்ந்து முதல் சம்பளம் வாங்கியதும் நண்பர்களுக்கு ட்ரீட் தருவதாகப் பேச்சு. பத்து நாள்களுக்குள் வேலை பிடிக்கவில்லை என விலகினேன். இப்படியே நாலைந்து இடங்கள். பார்த்த நண்பர்கள், ‘‘நீ ஒரு வேலையில் நீடித்து ஒரு மாதம் சம்பளம் வாங்கினால் நாங்க தர்றோம் ட்ரீட்’’ என்றனர். அதேபோல் பல வருடங்கள் வேலை பார்த்து, நண்பர்கள் ‘ட்ரீட்' தந்தது மறக்க முடியாதது.

கே.எம்.ரவிச்சந்திரன்

புதுசா வாட்ச் வாங்கினதுக்கு ட்ரீட் கேட்டாங்க. ‘நேரம்டா'ன்னு சம்சாவும் டீயும் வாங்கிக் கொடுத்தேன். சொல்லி வெச்ச மாதிரி அடுத்த நாளே அது காணாமப்போச்சு. நொந்து போன நேரத்தில கேட்டாங்க பாருங்க ட்ரீட்... அப்பவும் செஞ்சேன். வாட்ச் விலையைவிட அதிகமா! மறக்க முடியுமா?

பா.து.பிரகாஷ்

2005-ல என் அண்ணனோட நண்பன் எழில், எங்கள முதல்முறையா ஒரு பெரிய ரெஸ்டாரன்ட் கூட்டிட்டுப் போனாங்க. சூப்புல ஆரம்பிச்சு, ஸ்டார்ட்டர், main course, desserts-னு ஆர்டர் பண்ணினாங்க. இப்படி எல்லாம் ஐட்டம் இருக்கு, அதுக்கு இதெல்லாம் பேருன்னு தெரிஞ்சுக்கிட்ட நாள் அன்று.

vrsuba

2கே கிட்ஸைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் ---------------------- என்று. நிரப்புங்க பார்ப்போம்!

அவர்களின் கணக்குப் பாடம் எந்த அளவுக்குத் தலை சுற்ற வைக்கும் என்று.

மூ.மோகன்

நம்முடன் ஒரு நிமிஷம் பேச மறுக்கும் இன்றைய 2k கிட்ஸ், போனில் மற்றவர்களுடன் ஒரு மணிநேரம் பேசுவார்கள் என்று!

வி.கார்த்திகை குமார்

ஒரு ஸ்மார்ட்போன் என்னென்ன செய்யும் என்று.

கே.முருகன்

டி.வி-யில் தானும் நியூஸ் பாக்கமுடியாம, அவ அம்மாவும் சீரியல் பாக்கமுடியாம, இந்த மோட்டுபட்லு இன்ஸ்பெக்டர் சிங்கம் திருடன் ஜான் இவங்களையே ஒருநாளைக்கு முப்பது நாப்பது தடவை பாக்கறது எவ்வளவு பெரிய தண்டனை என்று.

ப.த.தங்கவேலு

எல்.கே.ஜி ஸ்கூல் பீஸுக்கே எஜுகேஷனல் லோன் எடுக்க வேண்டும் என்று!

absivam

90’ஸ் கிட்ஸைப் பெற்ற அப்பாக்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று.

Vasanth920

நமக்குப் பொண்ணு தேடி அலைந்தது போல, நாம் இவனுக்குப் பொண்ணு தேடி அலையும் வேலை இருக்காது என்று.

amuduarattai

மொபைல் டேட்டாவை ஒரே இரவில் காலி செய்வது எப்படி என்று.

balasubramni1

வாசகர் மேடை: கலகலாய்ப்பா இருக்கும்!

பிரசாந்த் கிஷோர் கட்சி ஆரம்பித்தால் தமிழகத்திலிருந்து யார் யாரைச் சேர்க்கலாம், ஏன்?

சரத்குமார், பாக்யராஜ், டி.ராஜேந்தர், கார்த்தி, கருணாஸ் ஆகிய கட்சி நடத்தும்/நடத்திய ஸ்டார் நடிகர்களைச் சேர்க்கலாம். இவங்க ராசியில் பிரசாந்த் கட்சி நிலைக்குமா?

அ.சுகுமார்

யாரைச் சேர்த்தாலும் சேர்க்கவில்லை என்றாலும், மன்சூர் அலிகானைச் சேர்க்கவேண்டும்!

திருச்சி இமான்

தமிழருவி மணியன்

 குழந்தைவேலு, மதுரை

ஜி.கே.வாசன் & அன்புமணி ராமதாஸ். கவனிப்பாரின்றி தனியா அல்லாடிட்டிருக்காங்க. அட்லீஸ்ட் கவனத்துக்காவது வருவாங்கில்ல.

துடுப்பதி வெங்கண்ணா

எஸ்.ஏ.சந்திரசேகர். (பிரசாந்த் கிஷோர் விரைவில் அரசியல் துறவறம் மேற்கொள்ள!)

பாலு இளங்கோ

கமல்ஹாசன். அவசர மீட்டிங்கிற்கு கிஷோர் வரமுடியாத சூழ்நிலையில், கமலே பிரசாந்த் கிஷோராக மேக்கப் போட்டு சமாளித்துவிடுவார்.

DevAnandR155

சிறுவயதில் ‘நீங்கள் எந்த வேலைக்குப் போகப்போகிறாய்?’ என்ற கேள்விக்கு ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்லியிருப்பீர்கள். இப்போது அதை நினைத்துப்பார்த்தால்..?

டாக்டர் ஆவேன்னு சொல்வேன். நீட் வரும்னு யாருக்குத் தெரியும்?

அஹமத்

சிறுவயதில் என் உறவினர் ஒருவர் ஏரோபிளேன் பற்றியும், அதில் பணிபுரியும் ஏர்ஹோஸ்டஸ் பற்றியும் சொல்ல, பறந்தவாறு உலகையே சுற்றிப்பார்க்கலாம் என்ற ஆசையில் நானும் ஏர்ஹோஸ்டஸ் ஆகத் தீர்மானித்தேன். இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. காரணம், இன்று வரை ஏரோபிளேனை வானத்தில் பறக்கும்போது பார்த்ததோடு சரி.

எம்.கலையரசி

நானும் எல்லாரையும் போல கலெக்டர் ஆவேன், டாக்டர்ஆவேன்னுதான் சொன்னேன். பட் டிசைன்ல எப்டின்னா டாக்டர் வீட்ல வாடகைக்கு இருந்துக்கிட்டு கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்திட்டிருக்கேன்.

செந்(தில்)வேல்

பரோட்டா போடப் போறேன்னு சொல்லிட்டு இருந்தேன். இப்போ பரோட்டாவுக்கு இருக்கிற கிரேஸ பார்த்தா, ‘நாட் பேட்’ எனச் சொல்லத் தோணுது.

ச.பிரபு

ஆறாம் வகுப்பு படிக்கும்போது வாத்தியார் கேட்டபோது ‘பேங்க் மேனேஜர்’ என்று சொன்னது, ஒவ்வொரு முறையும் வங்கியில் பணம் போடுவதற்கு க்யூவில் நிற்கும்போதும் நினைவில் வந்து வாட்டுகிறது.

ஏ.கணேசன்

இந்தி கத்துக்கிட்டு இந்தியா முழுக்க போய் வேலை செய்யணும்னு நினைச்சேன். இந்தி படிச்சவங்க அங்கிருந்து இங்கு வந்து, பானிபூரி விற்கிறதையும், கட்டடம் கட்டுவதையும் பார்த்துட்டு அப்படியே ஆஃப் ஆயிட்டேன்.

NedumaranJ

1. சி.எஸ்.கே அடுத்த சீசனில் கோப்பை வெல்ல ஒரு பிரபலத்தை ஏலத்தில் எடுக்கலாமென்றால் உங்களின் சாய்ஸ் யார்?

2. தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள தமிழக காங்கிரஸார் இன்னும் எப்படியெல்லாம் நூதனமாகப் போராடலாம்?

3. ‘எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல நீ?’ என நீங்கள் ஏமாறாமல் ஜஸ்ட் மிஸ்ஸான தருணங்கள்?

4. ரெய்டும் பெயிலுமாக நாள்களை நகர்த்தும் கார்த்தி சிதம்பரம் பார்க்க ஜாலியாக சில கற்பனை வெப் சீரிஸ் பரிந்துரைகள் ப்ளீஸ்?.

5. பொன்னியின் செல்வன் போல கல்கியின் `பார்த்திபன் கனவு' நாவலை மீண்டும் படமாக்கினால் அதில் ஹீரோ - ஹீரோயினாக யார் நடிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!