Published:Updated:

வாசகர் மேடை: தந்திரி... ராஜதந்திரி!

விகடன் டீம்
கார்த்திகேயன் மேடி
பிரேம் டாவின்ஸி

மன்சூர் படையப்பாவாகவும், கமல் நீலாம்பரி சண்முகியாகவும் நடிக்கலாம்.

பிரீமியம் ஸ்டோரி

? மன்சூர் அலிகான் ஹீரோவாகவும் கமல் வில்லனாகவும் நடித்தால் இருவரும் எந்த கெட்டப்பில் நடிக்கலாம்?

‘காக்கிச்சட்டை’ கமல் வேடத்தில் மன்சூரும் ``தகடு... தகடு...’’ சத்யராஜ் கேரக்டரில் கமலும் நடித்தால் அரங்கம் அதிரும்.

forgjeryda

மன்சூர் அலிகான்: `அபூர்வ சகோதரர்கள்' கமலின் 3 கெட்டப்... (சேதுபதி, அப்பு, ராஜா)கமல்: நாகேஷ், ஜெய்சங்கர், நாசர், டெல்லி கணேஷ் ஆகிய 4 பேர் கெட்டப்பையும் கமல் ஒருவரே போடலாம்..!

LAKSHMANAN_KL

மன்சூர் படையப்பாவாகவும், கமல் நீலாம்பரி சண்முகியாகவும் நடிக்கலாம்.

valarselvan

வீரபாண்டிய கட்டபொம்மனாக மன்சூர் அலிகான். ஜாக்சன் துரையாக கமல்ஹாசன்.

RavindranKanna2

இந்திய வைராலஜிஸ்ட் ஹீரோ மன்சூர் கண்டுபிடிக்கும், கொரோனாவை எதிர்க்கும் உயிர் காக்கும் மொத்த மருந்தையும் பதுக்கி, கள்ளச் சந்தைப்படுத்தும் குழுவின் தலைவராக வில்லன் கமல் செயல்படுகிறார். வி்ல்லனிடம் போராடி, மக்களைக் காப்பாற்றி நல்லது செய்கிறார் ஹீரோ!

vc.krishnarathnamF

`பாவமன்னிப்பு' படத்தில் சிவாஜி நடித்த ரஹீம் கேரக்டருக்கு மன்சூர் அலிகான் கச்சிதமாகப் பொருந்த, அவரின் அப்பாவாக வரும் எம்.ஆர்.ராதா கேரக்டருக்கு கமலும் கச்சிமாய்ப் பொருந்திக் கலக்குவார்.

மதுரை முருகேசன்

‘வசூல் ராஜா’ டாக்டராக மன்சூர், பிரகாஷ்ராஜ் வேடத்தில் கமல்.

pasumpon.elango

வாசகர் மேடை: தந்திரி... ராஜதந்திரி!

? தந்திரிக்கும் ராஜதந்திரிக்கும் என்ன வித்தியாசம்?

கஷ்டப்பட்டு பிரசாரம் பண்ணி மக்களைக் கவர்ந்து ஓட்டு வாங்கி ஜெயிக்க வைக்கிற தலைவர் தந்திரி; அந்த எம்.எல்.ஏ-வைக் காசு கொடுத்துத் தங்கள் கட்சியில் சேர்த்துப் பதவி தந்தா அவர் ராஜதந்திரி!

 A ஆசிக் ஜாரிஃப், ஆனைமலை.

குற்றம் செய்தும் சட்டத்தில் சிக்காதவன் தந்திரி; சட்டத்தில் சிக்கியும் குற்றத்தைத் தொடர்பவன் ராஜதந்திரி!

Akaskarpagam?F

வாயால் வடை சுடுபவன் தந்திரி; அவன்கிட்டே இருந்து அந்த வடையை `சுட்டு' விற்பவன் ராஜதந்திரி.

nalla.muthu.

நாட்டுக்குள்ளே ஆசிரமம் கட்டுபவன் தந்திரி;ஆசிரமத்திற்காக ஒரு நாட்டையே உருவாக்குபவன் ராஜதந்திரி.

gopinaths.gopinath.

சிறிய கட்சிகளுக்கு சீட் தந்து வளைத்துப் போடுவது தந்திரி; தங்களது சின்னத்திலேயே நிற்கச் சொல்வது ராஜதந்திரி.

அதிரை யூசுஃப்

அளவுக்கு அதிகமான சீட்டை அள்ளிக் கொடுத்த கமல் தந்திரின்னா... சீட்டு கிடைச்சும் நிற்காமல் ஜகா வாங்கிய சரத்குமார் ராஜதந்திரி.

jerry463272406

எய்ம்ஸுன்னு சொல்லி ஒத்தைச் செங்கல்லை மட்டும் காட்டினவங்க தந்திரி; அந்த ஒத்தைச் செங்கல்லைக் காட்டியே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிச்சவங்க ராஜதந்திரி..!

LAKSHMANAN_KL

மனைவிக்குப் பிடித்த மாதிரி இருப்பவன் தந்திரி; மாமனாருக்கும் பிடித்த மாதிரி இருப்பவன் ராஜதந்திரி.

manipmp

அல்வா கொடுக்கிற சைஸ்தான் வித்தியாசம்.

 ஜூனியர் தே‌ஜ், சீர்காழி.

அரசியல் நிலைப்பாட்டில் கமலும் ரஜினியும் எடுத்த முடிவே சொல்லிவிடும். யார் என்ன என்று!

 ஜெ. மாணிக்ஸ், இடைப்பாடி.

ஹெச்.ராஜாவின் அட்மினுக்கும் ஹெச்.ராஜாவுக்கும் உள்ள வித்தியாசம்.

 ஆர் கல்யாணி, நெல்லை.

? ரஜினியும் எஸ்கேப். அழகிரியும் தம்பிக்கு வாழ்த்து சொல்லியாச்சு. அடுத்து தமிழகத்தில் தாமரையை மலர வைக்க யாரைப் பிடிக்கலாம், ஏன்?

ஒரே கட்சி, ஒரே தலைவன், ஒரே தொண்டன் என்றிருக்கும் `நவரச நாயகன்' கார்த்திக்கைப் பிடித்தால் `ஆயிரம் தாமரை மொட்டுகள்!' மலரலாம்!

 நா.இரவீந்திரன், வாவிபாளையம்.

தாமரையை மலர வைக்க முதல்ல குளம் வேணுமே. அதனால வருத்தத்துல இருக்குற பெரியகுளத்தாளு ஓ.பி.எஸ்ஸை வளைத்துப் போட்டால் பேஸ்மெண்ட் போட்ட மாதிரியாகும்.

 அஜித், சென்னை.

மோடிஜியின் மைண்ட் வாய்ஸ்: நாம கொஞ்சம் மறக்கலாம்னாலும் ஆனந்த விகடன் வாசகர் மேடை நம்மை மறக்க விட மாட்டாங்களா?

 ரம்யா, பெங்களூரு.

தெரிஞ்சா சொல்ல மாட்டோமா... ஏன்யா வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்..?

RavikumarMGR

ஆமாம், பிரஷாந்த் கிஷோர் இப்ப ஃப்ரீயாதானே இருப்பாரு... அவர்கிட்ட பொறுப்பை விட்டுட்டா 2026-ல கண்டிப்பா தாமரை மலர்ந்துடுமே.`தாமரைதான் மலருது... தமிழ்நாடு அலறுது...' பாட்டுகூட ரெடி!

lollumanix

வாசகர் மேடை: தந்திரி... ராஜதந்திரி!

? நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதியைப்போல் ஆண்களுக்கு என்ன இலவசம் தரலாம்? (நோ டாஸ்மாக் கோரிக்கை!)

WFH செய்யும் ஆண்களுக்கு, ஃப்ரீ wifi தரலாம்.

 கு.ராஜசுவாதி பிரியா, சென்னை

சலூன் கடையில் முகச் சவரம் செய்யவும் முடிவெட்டவும் இலவசம் என்று அறிவிக்கலாம்.

balasubramni1

கல்யாண வீடுகளில் ஆண்களின் மொய்ச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும்..!

LAKSHMANAN_KL

அமேசான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷனும், ஒரு வைஃபை மோடம் வித் அன்லிமிட்டெட் டேட்டாவும்.

RamuvelK

இலவச இளநீர், நுங்கு கொடுக்கலாம் சார்.ஒரு இளநீர் ஐம்பது ரூபா சொல்றாங்க சார்.கட்டுப்படியாகல.

Kirachand47

இளைஞர்களுக்கு ‘வலிமை’ அப்டேட்டும், கொஞ்சம் வயதான இளைஞர்கள் வலிமையாக அப்டேட்டும் கொடுக்கலாம்.

JaNeHANUSHKA7

இலவசக் கழிப்பிடம் கட்டி ஆங்காங்கே வைக்கலாம்! தெரு சுத்தமாகும், அதே நேரம் ரோட்டில் பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க முடியும்.

balebalu

? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! - உங்கள் வாழ்க்கையில் நடந்த ஜாலியான சம்பவத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்களேன்!

கல்லூரி நாள்களில் கடைசி வரிசையில் இருந்து, வகுப்பு நடக்கும் போது பேராசிரியரைக் கலாய்ப்பதுண்டு. இன்று நான் ஓர் உதவிப் பேராசிரியராக என் வகுப்பில் மாணவர்களின் சேட்டையைப் பார்க்கும்போது, நான் செய்தது எனக்கே ரிபீட் அடிக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.

 எம். விக்னேஷ், மதுரை.

எக்ஸ் கேர்ள்பிரண்ட்ட கலாய்ப்போம்னு லவ் ஸ்டேட்டஸ் வச்சா, ‘என் ஹஸ்பண்டுக்கு இது பிடிச்சிருக்காம், அனுப்பி வைக்கிறியா’ன்னு கேக்கும்போதுதான் இளங்கோவடிகள் ஞாபகத்துக்கு வருவார். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.

 ரா.பிரசன்னா, மதுரை.

வீட்ல எல்லோரும் காலை டிபனுக்கு பூரி கிழங்கு கேட்டாங்க. நான் முடியாதுன்னு இட்லி செஞ்சேன். யாருமே சாப்பிடாம நூடுல்ஸ் செஞ்சு சாப்பிட்டாங்க. மீந்துபோன இட்லிகளை நைட்டுக்கு உப்புமா செஞ்சு போட்டேன்.

 கி.சரஸ்வதி, ஈரோடு.

வாட்ஸ் அப்பில் நாம் ஃபார்வேர்டு செய்யும் ஒரு மெசேஜ், அங்கே சுத்தி, இங்கே சுத்தி பூமராங் மாதிரி நமக்கே திரும்பி வரும் பாருங்க, அதுதான்.

 என் .சாந்தினி, மதுரை.

எங்கப்பாவை எப்படியெல்லாம் திட்டினேனோ அதே மாதிரி என் பையன் என்னைத் திட்டுறான்...

RavikumarMGR0

முற்பகல் salary credited message வரும்.பிற்பகலே EMI-க்குப் பணம் பிடிச்ச செய்தி வரும்.

urs_venbaa

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தேன் என் தங்கைக்கு... இப்போது எனக்கு கார் ஓட்டக் கற்றுத் தருகிறாள்.

chennappan109

வாசகர் மேடை: தந்திரி... ராஜதந்திரி!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தினகரன், சரத்குமார், சீமான் மூவரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

? பல கெட்டப்களில் நடித்திருக்கும் விக்ரம் யாருடைய பயோபிக்கிலாவது நடிப்பது என்றால் யார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கலாம்?

? கொரோனாவுக்குக் கோயில் கட்டுவது வரை வந்துவிட்ட நம்மாட்கள் அடுத்து என்னவெல்லாம் செய்வார்கள்?

? இந்த லாக்டௌன் காலத்தில் உங்கள் குழந்தையின் சுவாரஸ்யமான குறும்பை சுருக்கமாகச் சொல்லுங்களேன்...

? கொரோனா பிரச்னையெல்லாம் முடிந்தபிறகு மோடி எந்த வெளிநாட்டுக்குப் போவார், ஏன்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு