
? சினிமா, அரசியல் என்று பயணம் செய்திருக்கும் சீமான் சின்னத்திரைக்கு வந்தால் என்ன நிகழ்ச்சி செய்யலாம்?
சீமான் சின்னத்திரைக்கு வந்தால்,சமையல் ஷோ பண்ணலாம். வெஜிடேரியனுக்கு ஆமை வடை வெரைட்டீஸ், நான் வெஜிடேரியனுக்கு ஆமைக்கறி வெரைட்டீஸ்.
மாணிக்கம், திருப்பூர்
பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம், என்ன ஒண்ணு... போட்டியாளர்கள் பச்சைத் தமிழராகத் தன்னை நிரூபித்தால் மட்டுமே பங்கேற்க முடியும்.
சுந்தரபாண்டியன், தூத்துக்குடி.
குக்கு வித் கோமாளி. இட்லில கறி, தோசையில எலி, சப்பாத்தியில கோழி என்று போட்டியாளர்களுக்கு விதவிதமாக டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை நடத்த சீமான்தான் சரியான சாய்ஸ்.
SriRam_M_208
ஆவி வித் சீமான். இறந்தவர்களின் ஆவிகளுடன் சீமான் பேசும் நிகழ்ச்சி. சீமான் தன் முழுத் திறமையைக் காட்டுவதற்கான களம் இது.
amuduarattai
காதோடுதான் நான் பேசுவேன் - கத்திக் கத்திக் கதைகள் சொல்லும் சீமான் சன்னமான குரலில் ஆடியன்ஸ் காதுகளில் கதைகள் சொல்லும் வித்தியாசமான நிகழ்ச்சி!
RamAathiNarayen
‘சொல்லுவதெல்லாம் கதை’ என்ற நிகழ்ச்சி நடத்தலாம்.
amuduarattai
‘பைத்தியக்கார பயலுக புஹா... ஹா... ஹா...’ எனும் ‘நகைச்சுவை நிகழ்ச்சி’ ஒன்றைச் செய்யலாம்!
sudarvizhie
சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் நானும் (இந்திய தேசிய ராணுவத்தில் சீமானின் பங்கு பற்றி விரிவாகப் பேசுகிறார்).
pachaiperumal23
மன் கி கதா! - ஜீயின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக சீமான் நடத்தும் ‘மனதின் கதை’ நிகழ்ச்சி..!
LAKSHMANAN_KL
? ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவு எழுதவும் லாக்டௌன் வந்தால் எப்படி இருக்கும்?
ட்விட்டரில் 7 கோடி, ஃபேஸ்புக்கில் 5 கோடி பாலோயர்ஸ் வச்சிருக்கும் பிரதமர் மோடிதான் வருத்தமாக இருப்பார்.
balasubramni1
‘கூ’ ஆப்பைத் தரவிறக்கம் செய்யுங்க... குதூகலம் தரப்போகுதுங்க..!
LAKSHMANAN_KL
‘ட்விட்டர், ஃபேஸ்புக் பழக்கத்தில் இருந்து வெளியே வர இங்கே மனநல சிகிச்சை அளிக்கப்படும்’னு சில இடங்களில் அறிவிப்புப் பலகை தொங்கும்.
balasubramni1
இருக்கவே இருக்கு இளையராஜா சாங்ஸ்...
brammahbal
‘சீரியல் வரலைன்னு கலாய்ச்சியே இப்ப சாவு’ என்று மனைவி ஓட்டுவார்.
ARiyasahmed
ஒற்றைத் தலைவலி, இரட்டைத் தலைவலி, பைத்தியம் பிடிப்பது, வெறித்த பார்வை போன்றவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.
muthooshm
வாட்ஸப்பில் நிமிடத்துக்கு ஒரு முறை பதிவு எழுதி ஸ்டேட்டஸாக வைப்பது அதிகமாகும்...
tamilkaviswasan
‘நீங்க ட்விட்டர்ல இல்லயா...’ என்று யாரும் யாரையும் கலாய்க்க முடியாது.
twitter.com/jerry
கமல்: சரி, நம்ம கட்சிக்கும் லாக்டெளன் அறிவிச்சிட வேண்டியதுதான்.
pbukrish

? விஜய், அஜித் மேஜிக்மேனாக நடித்தால் படத்தில் என்ன மேஜிக் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
விஜய் & அஜித் படங்களின் ‘அப்டேட்’ என்றாலே ரசிகர்களுக்கு ‘மேஜிக்’தான்!
பாலு இளங்கோ, வேலூர்.
அஜித் கொரோனா நோயாளிகளை பறக்கும் காரில் கொண்டு போய் விஜய்யிடம் காட்ட, விஜய் அவர்களை மருந்து இல்லாமல் உடனே குணமாக்குவதுபோல் நடிக்கலாம்.
radhika.ravindrran
பெட்ரோல் பங்கிற்குள் அஜித்/விஜய் நுழைந்ததும் பெட்ரோல் விலை லிட்டர் பத்து ரூபாய்க்குக் குறைய வேண்டும்.
kavi.chennappan
மேஜிக் செய்து இருவரும் படத்துக்கு நல்ல கதையைக் கண்டுபிடிக்கலாம்..!
LAKSHMANAN_KL8
விஜய் ‘சுறா’ படத்திலும், அஜித் ‘விவேகம்’ படத்திலும் பண்ணியதைவிடவா புதுசா இனி மேஜிக் செய்துவிடப்போகிறார்கள்..?!
LAKSHMANAN_KL
அஜித் மாஸ்க்கை ஹெல்மெட்டாகவும், விஜய் சைக்கிளை பைக்காகவும் மாற்றும் மேஜிக் செய்ய வேண்டும்.
PG911_twitz
இருவரும் தங்களுக்காக சண்டை போடும் ரசிகர்களின் மோதலை நிரந்தரமாக நிறுத்தும் மேஜிக்கை செய்ய வேண்டும்.
SriRam_M_20
விஜய், அஜித் ரெண்டு பேரும் சேர்ந்து இன்னொரு படத்தில் நடித்தால், அதுவே ரசிகர்களுக்கு மேஜிக்தான்.
RamuvelK
அட்லி மெளனராகம், சத்திரியன் வரிசையில் ஒரு Now You See Me யா! செஞ்சிட்டாப்போச்சு.
pbukrish8
அஜித் மற்றும் விஜய் இருவரும் மேஜிக் செய்து, கைலாசாவில் இருக்கும் நித்யானந்தாவை இந்தியாவுக்கு வரச் சொல்லலாம்!
ManivannanVan
? மம்தா பானர்ஜியை சமாளிக்க மோடிக்குச் சில யோசனைகள் சொல்லுங்களேன்...
‘மன் கி பாத்’ போல ‘மம்தா கீ பாத்’ நடத்தி மம்தாவை சமாளிப்பது பற்றிச் சிந்திக்கலாம்.
வரதராஜன் A, சீர்காழி
தீதி எடுக்கும் எந்த ஒரு முடிவும் செல்லாது என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டி மசோதா நிறைவேற்றலாம்.
ஏ.முருகேஸ்வரி, தென்காசி
மம்தா பானர்ஜியின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோரை பிரதமர் மோடியின் நிர்வாக ஆலோசகராகப் பணியில் அமர்த்தலாம்.
க.அய்யனார், தேனி
சி.பிஐ-கிட்ட சொல்லி, `சாரதா’, ‘நாரதா’ ரெண்டையும் கண்டுக்காம விட்டாப் போதும்..!
LAKSHMANAN_KL
வழக்கம் போல கண் காணாத நாட்டுக்கு டூர் போய் ஒளிஞ்சுக்க வேண்டியதுதானே..?!
absivam
மோடிக்குக் குடைச்சல் கொடுக்கமம்தாவுக்கு யோசனை கேளுங்க தர்றோம்..!
SJB
மோடி, மம்தா பானர்ஜியை இந்தியாவின் குடியரசுத் தலைவராக்கிவிடலாம்.
SriRam_M_20
‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மம்தாவுக்குப் புகழாரம் சூட்டி அவரைக் கூல் பண்ணலாம்.
ARiyasahmed
பிஎம் கேர் ஃபண்ட் பற்றி மம்தா பானர்ஜிக்கு வெள்ளை அறிக்கை கொடுக்கலாம். தன்னிடம் நேர்மையாக நடந்துகொள்கிறாரே என்ற எண்ணத்தில் தீதி அமைதி ஆவார்.
Tamizhse
மம்தாவின் வெற்றிக்குப் பரிசாக, சில பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் ‘தாய் வீடு’ செல்ல அனுமதிக்கலாம்.
IamUzhavan
? அந்தக் காலத்து ஹீரோயின்கள் நடிப்பில் உங்களுக்குச் சிரிப்பை ஏற்படுத்தும் மூன்று விஷயங்களைச் சொல்லுங்கள்.
பயத்தில் வாயில் புறங்கையை வைத்துக் கத்துவது.
saroja.balasubramanian
ஹீரோவை மரியாதையாக(நீங்கள்) என அழைப்பது!
Suyambu
அத்தான்னு கூப்பிடறது, கண்களால் பேசறது, கணவனுக்குப் பணிவிடை செய்வது, காலையில் சீக்கிரம் எழுவது...
saravankavi
பூமிக்கு வலிக்கும் என்று மெதுவாக ஆடுவது...
BaaluElango
டூயட் சாங்கில் கல்யாணப் பெண் ரேஞ்சுக்கு உடை அணிவது, காதலனை விட்டுவிட்டு மரத்தைக் கட்டிப்பிடிப்பது, பாடல் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பது.
ARiyasahmed
தனக்குத் தானே பேசுவது, வெட்கத்தில் கால்களால் தரையில் கிணறு தோண்டுவது, ஒன்றுமில்லாததற்கு ஒப்பாரி வைப்பது.
amuduarattai4
கதாநாயகன் கத்தியால் குத்தப்பட்டு சாகக் கிடக்கும்போது ஒரு பாட்டுப் பாடுவது.
_umarfarook
மொக்கை டான்ஸ் ஆடுற ஹீரோ பக்கத்துல, பெர்ஃபக்ட்டான நடன அசைவுகளை வெளிப்படுத்தும் ஹீரோயினைப் பார்க்கும் போது, ரொம்பப் பாவமாவும், அதே சமயத்துல சிரிப்பாவும் இருக்கும்.
RamuvelK
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? ஜெ.தீபா பயோபிக்கில் நடிக்க எந்த நடிகை பொருத்தமாக இருப்பார்?
? கைலாசா போல் உங்களுக்கும் ஒரு தீவு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
? கிளப் ஹவுஸில் எட்டிப்பார்த்தீர்களா? அந்த அனுபவத்தை நாலே வரியில் ஜாலியாகச் சொல்லுங்களேன்
? யார் யாருக்கோ போன் செய்து பேசும் சசிகலா, மோடிக்கு போன் செய்தால் அந்த உரையாடல் எப்படி இருக்கும்?
? நம்பிக்கை - மூடநம்பிக்கை : ஜாலியான உதாரணங்களுடன் விளக்குங்களேன்.
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,
அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com