Published:Updated:

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

சூர்யா, கமல்
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா, கமல்

சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க யாரும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசக்கூடாது என அறிக்கை விட வேண்டும்.

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க யாரும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசக்கூடாது என அறிக்கை விட வேண்டும்.

Published:Updated:
சூர்யா, கமல்
பிரீமியம் ஸ்டோரி
சூர்யா, கமல்

`விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் கமல், சூர்யாவோடு வேறு யார் நடிக்கலாம்?

விஜய் நடித்தால், அதன் வியாபாரம் மிகப்பெரிய ஜாக்பாட்தான்.

 த.சிவாஜி மூக்கையா, சென்னை.

ரஜினிதான் வில்லன்.

 நா.குழந்தைவேலு, சென்னை.

மங்காத்தா ‘விநாயக்’ அஜித்: விநாயக் - விக்ரம் - ரோலக்ஸ் மூவரின் கண்களையும் `விருமாண்டி’ கண் போஸ்டர் ஸ்டைலில் பர்ஸ்ட் லுக் விட்டுப் பாருங்க, லைக் தெறிக்கும்!

பெ.பாலசுப்ரமணி

கமலுக்கு அடுத்தபடியாக கெட்டப்பில் கலக்கும் விக்ரம் நடிக்கலாம்.

PG911_twitz

பிரேம்ஜி அமரன் - சாகசங்களை ஹீரோதான் பண்ணணுமா? துப்பறியும் சாம்பு பண்ணக்கூடாதா?

DevAnandR155

மம்மூட்டியை சிபிஐ அதிகாரியாக நடிக்க வைத்து விசாரணைக்கு மெருகூட்டலாம்.

jerry46327240

பிரதமர் மோடி... எவ்வளவோ நடிச்சிருக்கார், இதுல நடிக்க மாட்டாரா என்ன?!

SowThanishka

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசும் சக ரத்தத்தின் ரத்தங்களைக் கட்டுக்குள் வைக்க ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைக்கு ஐடியாக்கள் ப்ளீஸ்?

சிபிஐ ரெய்டுன்னா என்னன்னு விளக்க வேண்டியதுதான்.

 S.கருணாகரன், சென்னை.

கட்டுப்பாடு கொண்டுவரலாம், இந்த வாரத்தில் இவர்தான் சொந்தக்கருத்து கூறலாம், ஒரு வாரம் விட்டு இன்னொருவர் என்று டைம் டேபிள் போடலாம். ஒரு வார கேப்பில், அது சொந்தக்கருத்து என்று அண்ணாமலைக்கு அல்வா தரலாம்.

அ.சுகுமார்

பா.ஜ.க-வை விமர்சிக்காதவர்களுக்கு மட்டுமே அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டால் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ். தர்மசங்கடப்படாமல் தப்பிக்கலாம்..!

ஆர்.ஹரிகோபி

விரைவில் கட்சி கலைக்கப்பட்டு அனைவரும் பா.ஜ.க-வினர் ஆகப்போகிறோம் என்று வதந்தியைக் கிளப்பிவிட்டால் ரத்தத்தின் ரத்தங்கள் ‘சைலன்ட் மோடு’க்குப் போக வாய்ப்பிருக்கிறது.

எம்.கலையரசி

அண்ணாமலையாரின் மீட்டிங்குகளுக்குச் சென்று மீட்டிங் முடியும் வரை அமர வேண்டும்.

(அத்தோடு அந்தத் தொண்டர் அரோகராதான்)

ஆர்.சாந்தா பாய்

தொடர்ந்து இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா கட்சியை சசிகலாவிடம் ஒப்படைத்து விடுவோம்னு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டறிக்கை விடலாம்.

maha40176220

சீன ஆக்கிரமிப்பைத் தடுக்க யாரும் பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசக்கூடாது என அறிக்கை விட வேண்டும்.

Sivakum31085735

ராஜேந்திர பாலாஜி அழைத்து மொத்தக் கூட்டத்துக்கும் ஒரு கவுன்சலிங் கொடுத்தா போதும், மோடி பெருமை பாடியே பாடி ஆக்கிடுவார்.

itz_idhayavan

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

தோனி ஒரு தமிழ்ப்படம் தயாரித்தால் அதன் டைட்டில் என்னவாக இருக்கும்? ஹீரோ யார்?

கேட்ச் - விஜய்

 K விஸ்வநாதன், கோயம்புத்தூர்

வருத்தப்படாத கிரிக்கெட் சங்கம்,

ஹீரோ அதே சிவகார்த்திகேயன்.

 பாலா சரவணன், சென்னை

டைட்டில்: வந்தா கேப்டனாதான் வருவேன்!

ஹீரோ: சிம்பு

துடுப்பதி வெங்கண்ணா

சென்னை மகாராஜா (Chennai Super King)

ஹீரோவா நம்ம உதயநிதி ஸ்டாலினைப் போட்டால் பொருத்தமாக இருக்கும்.

பத்மநாபன்

விஜயகாந்த் - கேப்டன் கூல்!

இர.செல்வநிகிலா

வெங்கட் பிரபு அண்ட் டீமை வைத்து `சென்னை - 28 பார்ட் - 3' எடுக்கலாம், `ஏ வெங்கட் பிரபு சாம்பியன்ஷிப்!'

நா.இரவீந்திரன்

விண்ணைத் தாண்டி அடிப்பாயா!

இயக்கம்: கெளதம் மேனன்

ஹீரோ: சிம்பு

absivam

7 Stones.

7 நடிகர்களை வைத்து (பஞ்சதந்திரம் போல) ஒரு காமெடிப் படம் எடுக்கலாம்.

IamUzhavan

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

`இந்த நாளை உன் டயரில குறிச்சு வச்சுக்கோ' என `அண்ணாமலை' ரஜினிபோல தொடையைத் தட்டி நீங்கள் செய்த ரகளையான சபதம் எது?

சின்னம்மாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேட்கறீங்களே! என்னம்மா இப்படிக் கேட்கறீங்க.

 எம்.காஞ்சனாகரண், சென்னை.

`இரவுல சரியா தூக்கம் வராததால, ராத்திரி 7 மணிக்கு மேல செல்லை நோண்ட மாட்டேன்...'னு பண்ண சபதம்.

இரா.வசந்தராசன்

ஸ்கூலில் ஆறாப்பு படிக்கையில் ரமேஷ் மட்டும் கெத்தாக சைக்கிளில் வருவான். ஒரு தடவை `எனக்குக் குடுடா... ஒரே ஒரு ரவுண்டு ஓட்டிட்டுத் தரேன்'ன்னு ஆசையா கேட்டேன். அந்த நாதாரி `நத்திங் டுயிங்’னு மறுத்துட்டான். அன்னிக்கு சொடுக்குப் போட்டு சபதம் செய்தேன் `இன்னிலேருந்து ஒரு வாரம்... எண்ணி ஒரே வாரம்... உன் சைக்கிளைவிட அருமையான சைக்கிள் வாங்கி ஓட்டறேனா இல்லையான்னு பாரு.’ அடுத்த வாரம் வீட்டில் `குளிக்க மாட்டேன், சாப்பிடமாட்டேன், ஸ்கூலுக்குப் போக மாட்டேன்’ என்று ஒத்துழையாமை இயக்கம் நடத்தி அப்பாவைப் பாடாய்ப் படுத்தி அருமையான கியர் சைக்கிள் வாங்கி அடுத்த திங்களன்று பள்ளி போகையில் அவனை ஜிவ்வென்று அசால்டாக ஓவர் டேக் செய்தபோது அவன் ரியாக்‌ஷனைப் பார்க்கணுமே...

ஆர்.ரகோத்தமன்

1990-ல் 2000-க்குள் புதுக் கார் வாங்குவேன் என்று சபதம் செய்தேன், அது நிறைவேறியது 2005-ல்தான், அதுவும் செகண்ட் ஹேண்ட் கார்தான். நாம் என்ன சினிமா ரஜினியா?

தேன்ராஜா

ரயிலில் விற்கப்படும் காபி, டீ-யை வாங்கிக் குடிச்சப் பிறகு இந்த நாள டைரில குறிச்சி வச்சுக்கோ, ‘இனிமே இந்தச் சாக்கடைத் தண்ணிய தொடமாட்டேன்’னு ஒவ்வொரு ரயில் பணத்திலேயும் மனசுக்குள்ள தொடை தட்டி சத்தியம் பண்ணிக்குவேன்...

bommaiya

இந்த வருடம் கண்டிப்பா கமிட் ஆகிக் காட்டுறேன் என ஒவ்வொரு வருடமும் சபதம் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

ranjanikovai

வாசகர் மேடை - விண்ணைத் தாண்டி அடிப்பாயா?

பா.ம.க தலைவர் ஆகியுள்ள அன்புமணி ராமதாஸுக்கு `மாற்றம் முன்னேற்ற'த்துக்கு பதிலாக ஒரு முழக்கம்...

இப்போ இல்லேன்னா எப்போ?

பி.சி.ரகு, விழுப்புரம்.

`ஏற்றம்... நோ ஏமாற்றம்...’

பி.மஹதி

அமர்க்களம் அட்டகாசம் அன்புமணி

எஸ்.இராஜேந்திரன்

இசைக்கொரு ட்ரம்ஸ் மணி... அரசியலுக்கொரு அன்புமணி.

அ.பச்சைப்பெருமாள்

வழங்கினேன் 108

வழங்குங்க 234

`பெரியகுளம்' தேவா

முதல்வர் பதவி லட்சியம்

முதல்வர் கனவு நிச்சயம்!

LAKSHMANAN_KL

தாக்கம் தடுமாற்றம்

KmFarook6

*****

1. ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையைத் திரைப்படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

2. ராணுவத்துக்குத் தற்காலிக ஆட்கள் எடுப்பதுபோல் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், ஆளுநர் பதவிகளுக்கும் தற்காலிக ஆட்கள் எடுத்தால்..?

3. அண்டர் கவர் ஆபரேஷன் போலீஸ் அதிகாரிகளின் அட்ராசிட்டிகள் - சிறுகுறிப்பு வரைக

4. கமலும் விஜய்யும் இணைந்து நடித்தால் என்ன கதை, என்ன தலைப்பு?

5. வெப் சீரிஸ், மெகா சீரியல் - என்ன வித்தியாசம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism