Published:Updated:

வாசகர் மேடை: ஜில்லா இருக்குமா நல்லா?

சிம்பு - டி.ராஜேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு - டி.ராஜேந்தர்

முதலில் அவங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமையை ஏற்படுத்தும் கூட்டமைப்பை ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு இன்னொரு கூட்டமைப்பைப் பற்றி யோசிப்போம்.

வாசகர் மேடை: ஜில்லா இருக்குமா நல்லா?

முதலில் அவங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமையை ஏற்படுத்தும் கூட்டமைப்பை ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு இன்னொரு கூட்டமைப்பைப் பற்றி யோசிப்போம்.

Published:Updated:
சிம்பு - டி.ராஜேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சிம்பு - டி.ராஜேந்தர்

உங்கள் வாழ்க்கையில் பஞ்ச் டயலாக் பேசும் வாய்ப்பு கிடைத்தால் என்ன பேசுவீர்கள்?

``என்னதான் நீ ஸ்கூல் மேடை, காலேஜ் மேடை, அரசியல் மேடைன்னு பல மேடைகள் ஏறியிருந்தாலும், `வாசகர் மேடை'யில ஏறணும்னா, விகடன் மனசு வெச்சாதான் முடியும் தம்பி...’’

ஆர். பத்மப்ரியா

வில்லுக்கு விஜயன். சொல்லுக்கு இந்த சரவணன்.

 பாலா சரவணன்,

சென்னை

பாஸிடம் போய், ``இந்த நாள உன் டைரில குறிச்சிக்கோ, இன்னும் ஒரு வருஷத்தில, உன்னைவிடப் பெரிய ஆபீசராகி, நிறைய சம்பாதிச்சு, கார், வீடுன்னு உன்னவிடப் பெரிய ஆளா ஆகுறேன் பாரு’’ எனப் பஞ்ச் பேசணும்னு ஆசைதான். மாசக் கடைசில சம்பளம் வந்ததும், அந்தப் பஞ்ச்ச அடுத்த மாசத்துக்குத் தள்ளிப் போட்டுட வேண்டியது.

ச.பிரபு

ஒரு தடவை முடிவு பண்ணிட்டால், என் பேச்சை நானே கேட்க மாட்டேன் (என் பேச்சை எவனுமே கேட்கிறதில்லை. நான் மட்டும் ஏன் கேட்கணும்).

ரிஃபாத்துன்னிஷா

என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கஷ்டத்தையும் ஏன் ஒவ்வொரு ஏழரையையும் நானா இழுத்துப் போட்டுக்கிட்டதுடா...

பெ.பாலசுப்ரமணி

ஆனந்த விகடன்ல வலை பாயிறவன்னு நினைச்சியா... வாசகர் மேடையில பஞ்ச்சா பேசிப் பணம் வாங்குறவன்டா.

YAADHuMAAGE

நான் குட்ட குட்ட குனியிறவன் இல்லடா... ஒரே ஒரு குட்டு வாங்குனாலே

ஓ...ன்னு அழுவுறவன்டா...

twitter.com/bommaiya

நான் பார்த்தா பாப்கார்ன்...பாய்ஞ்சா படா டான்!

rishivandiya

அப்பா - மகன் ஜோடி சேர்ந்து நடிக்கும் காலம் இது. மீண்டும் டி.ஆர் - சிம்பு இணைந்து நடித்தால் காலத்துக்கு ஏற்றமாதிரி என்ன வேடங்களில் நடிக்கலாம்?

`ஜில்லா' படத்தில் அப்பாவாக வரும் மோகன்லால் கேரக்டரில் டி.ராஜேந்தரும், மகனாக வரும் விஜய் கேரக்டரில் சிம்புவும் நடித்தால் சிறப்பாக இருக்கும்!

ப.சோமசுந்தரம்

எல்லா நடிகர்களின் டெஸ்டினேஷனும் முதல்வர் ஆகறதுதானே...

டி.ஆர் முதல்வராகவும் சிம்பு துணை முதல்வராகவும் நடிச்சா பின்னாடி யூஸ் ஆகும்ல.

கி.சரஸ்வதி

புரோ டாடி படத்தை ரீமேக் பண்ணி நடிக்கலாம்.

ஹெச்.உமர் பாரூக்

கேடித் தந்தையாக தாடி டிஆரும் கில்லாடி பிள்ளையாக மீசைகூட இல்லாத சிம்புவும் `ராகவா லாரன்ஸ்' இயக்கத்தில் ஒரு பேய்க் கதையில் நடித்தால் தியேட்டர் முன் `மாநாடு' போல் கூட்டம் வரும் (முக்கிய காரணம் பேய்கள் அடுக்கு மொழி பேசாது என்பதால் ரசிகர்கள் அமைதியாக ரசிப்பார்கள்).

எஸ்.எல்.ஜார்ஜ் அருண்

‘காதலன்’ படத்து எஸ்.பி.பி கேரக்டரில் அப்பாவாக டி.ஆரும், பிரபுதேவா வேடத்தில் சிம்புவும் நடிக்கலாம். `பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்' என்று இருவரும் பாடி ஆடினால் தியேட்டரே கலகலக்கும்.

balebalu

டி.ஆர் வழக்கம்போல வக்கீல்தான். சிம்பு பிரபல பாடலாசிரியர். இவர் எழுதிய ஒரு பாடல் சர்ச்சைக் குள்ளாகிறது. அந்த வழக்கை தந்தை டி. ஆர் எப்படி வாதாடி வெற்றி பெறுகிறார் என்பதே கதையின் கரு.

Vasanth920

வாசகர் மேடை: ஜில்லா இருக்குமா நல்லா?

ஸ்டாலினின் சமூகநீதிக் கூட்டமைப்புக்குப் போட்டியாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அகில இந்திய அளவில் என்ன கூட்டமைப்பை ஏற்படுத்தலாம்?

பணிவான துணிவு, துணிவான பணிவுக் கூட்டமைப்பு!

எஸ்.இராஜேந்திரன்

தமிழக கவர்னருக்கு ஆதரவாக `அனைத்து மாநில கவர்னர்கள் கூட்டமைப்பு..!’

சட்டப்படி அது சாத்தியமில்லை என்றாலும் இவர்கள் முயற்சி செய்வார்கள்!

துடுப்பதி வெங்கண்ணா

`சமஸ்தான அடிமைக் கூட்டமைப்பு.'

என்.ஜே.ராமன்

`வழக்குகளில் விலக்கு கோரும் கூட்டமைப்பு.'

மருதூர் மணிமாறன்

அகில இந்திய தாமரைத் தடாகம் கூட்டமைப்பு.

மஹஜூதா

சமூக சரணாகதி கூட்டமைப்பு.

எஸ். வாஜு

பா.ஜ.க டப்பிங் பேசுவோர் கூட்டமைப்பு.

PG911_twitz

குனிந்து கும்பிடுவோர் கூட்டமைப்பு.

திண்டுக்கல் சிவா

`அனைத்து இந்திய சின்னம்மா தலையீடு இல்லா கூட்டமைப்பு!’

sudarvizhie

முதலில் அவங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமையை ஏற்படுத்தும் கூட்டமைப்பை ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு இன்னொரு கூட்டமைப்பைப் பற்றி யோசிப்போம்.

RahimGazzali

டிரெய்லர், டீசர், மோஷன் போஸ்டர், சிங்கிள் சாங் வெளியீடு என்பது இப்போது ‘பாட்டு போடப்போறோம்’ வீடியோ வரை வந்துவிட்டது. இனியும் இந்த சினிமாக்காரர்கள் என்ன வீடியோவெல்லாம் வெளியிடுவார்கள்?

‘கதை உருவான கதை’ என்று கதை விவாதம் நடப்பதை வீடியோவாகப் போடலாம்.

அ.பச்சைப்பெருமாள்

வீடு, நிலம் எல்லாத்தையும் வித்துப் படமெடுத்து ‘கேர் ஆஃப் பிளாட்பாரம்' ஆக நிற்கிறேன் என்கிற புரொட்யூசரின் `அனுதாப அலை' உருவாக்கும் வீடியோ.படம் கொஞ்சமாவது ஓட இது உதவும்.

பர்வீன் யூனுஸ்

‘இந்தப் பாட்டு எந்தெந்த மொழிகளிலிருந்து உருவி மெட்டுப் போட்டோம்'னு வீடியோவா வெளியிடலாம்!

பா து பிரகாஷ்

படம் உருவான விதத்தை `Making' வீடியோவாக வெளியிடுவதைப் போல, படத்தின் கதையையும் நல்ல சீன்களையும் எங்கிருந்து எடுத்தார்கள் என்பதை `Taking' வீடியோவாக வெளியி டுவார்கள்.

மன்னார்குடி

இராஜகோபால்

தான் இயக்கிய படம் மூலம் தயாரிப்பாளர் எவ்வளவு லாபம் சம்பாதித்து என்னென்ன சொத்துகள் வாங்கியுள்ளார் என்று அடுத்த தயாரிப்பாளருக்கு ஆசையைத் தூண்டும் வகையில் இயக்குநர்கள் வீடியோ வெளியிடலாம்.

SowThanishka

பத்து வருஷத்துக்கு அப்புறம் இந்தப் படத்தில நடிக்க வேண்டியது இவரு அவருன்னு சொல்லறதுக்குப் பதிலா, பட ரிலீஸுக்கு முன்னமே அதைச் சொல்லி வீடியோ வெளியிட்டுப் பரபரப்பை உண்டாக்கலாம்!

twitter.com/absivam

அந்தப் படத்தில் ஹீரோவை நடிக்க சம்மதிக்க வைக்க டைரக்டர் எத்தனை முறை அலைந்தார் என்பதைப் பற்றிய வீடியோவை வெளியிடலாம்.

amuduarattai

டைரக்டர் கதை சொல்றப்ப ஹீரோ அழுதது, சிரிச்சது, முக்கியமா தூங்குனது... அதை ஒரு வீடியோவா.

SaiAzhagesh

வாசகர் மேடை: ஜில்லா இருக்குமா நல்லா?

முதன்முதலாக ஏ.டி.எம்-மில் டெபிட் கார்டு பயன்படுத்திய சுவையான அனுபவத்தைச் சொல்லுங்களேன்...

கார்டை எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாமல் தலைகீழாகச் செருகி, பதற்றத்தில் பின் எண்ணைத் தவறாக உள்ளிட்டு நேரத்தைக் கடத்தி, வெளியில் சேர்ந்த கூட்டத்திடம் திட்டு வாங்கி, ``மொதல்லேயே எங்கிட்ட கேட்டிருந்தீனா நான் சொல்லியிருப்பேன்ல’’ என்று ஏ.டி.எம் காவலாளி என்னை நக்கல் செய்ததுதான் ஹைலைட்.

ஆர். ஸ்ரீகாந்தன்

கூடவே பாங்க்ல வேலை செய்ற நண்பரைக் கூட்டிட்டுப் போயாச்சு. ஏதாவது பிரச்னைன்னா நண்பர் மெஷின்ல கைய விட்டு சரி பண்ணிருவார்னு ஒரு நப்பாசை!

விஜய பாஸ்கரன்

கார்டைச் செருகி `பின்’ கொடுத்த பிறகு பணத்தை எண்ணும் சத்தம் முடிந்த இரண்டு நொடி அமைதியில் என் கை என்னையுமறியாமல் மெஷினைப் பக்க வாட்டில் தட்டியது. யாராவது பார்க்கிறார்களா என கதவுப் பக்கம் திரும்பிய வேளையில் மெஷினின் வாய் திறந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் வெளிவந்தன. ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை இரண்டு முறை எண்ணினேன். வீட்டில் நுழையும் முன்பே இன்னைக்கு மெஷின்ல பணமெடுத்தேன் என சத்தமாகச் சொன்னதை யாரும் கண்டுகொள்ளாதது கொஞ்சம் வருத்தம்தான்...

கொ.ச.அமிர்தகடேஸ்வரன்

ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க ஐந்நூற்று இருபது என்று என்டர் செய்ய, சரியான டினாமினேஷனை என்டர் செய்யவும் என்று மெசேஜ் வரவும், ஐம்பதாயிரத்து இருபது என்று டைப் செய்து விட்டோமோ என்று மீண்டும் முயற்சி செய்ய , மீண்டும் அதே மெசேஜ். வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்துவிட்டேன். பத்து, இருபது எல்லாம் ஏ.டி.எம்மில் வராது என்று வீடே சிரிப்பாய்ச் சிரித்தது.

என்.உஷாதேவி

முதல் முறை என்பதால் செக் செய்வதற்காக 100 ரூபாய் எடுக்க, போட்டேன். மெஷின் கவுன்டிங் ரொம்ப நேரம் வரவும், ஆஹா... இன்னைக்கு லக்குதான்... போட்டதவிட அதிகமா வரும் போலயேன்னு நினைச்சுட்டு இருக்க, வந்தது ஒத்தை 100 ரூபாய் நோட்டு...அதையா அவ்ளோ நேரம் வளைச்சு வளைச்சு கவுன்ட் பண்ணுச்சு?

NedumaranJ

ஏ.டி.எம்-மில் கேக்கப்படும் கரன்ட் அக்கவுன்ட் & சேவிங்ஸ் அக்கவுன்ட் என்ற ஆப்ஷனுக்கு எதை அழுத்துவது என்று தெரியாமல், அருகில் உள்ளவரிடம் கேட்டிருக்கிறேன்.

Muthukumar8196

*****

1. தேர்தலில் ஒத்த ஓட்டு வாங்கும் வேட்பாளர்களின் மைண்ட்வாய்ஸ் எப்படியிருக்கும்?

2. வரலாறு, கணக்கு, நிர்வாகம் என்று எல்லாவற்றிலும் பலவீனமாக இருக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ் தேர்வாகியிருப்பதற்கு அப்படி என்னதான் கேள்வி கேட்டிருப்பார்கள்?

3. பிக்பாஸுக்கு வரும் சிம்பு - என்னென்ன எதிர்பார்க்கலாம்?

4. மூக்குத்தி, குடம் என்று ஆரம்பித்த ‘தேர்தல் லஞ்சம்’ இப்போது ஹாட்பாக்ஸ், வெள்ளிக்கொலுசு வரை வந்துவிட்டது. இன்னும் என்னவெல்லாம் கொடுப்பார்கள்?

5. யாராவது ஒரு நடிகரை/ நடிகையை ஒருநாள் மேயர் ஆக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார், ஏன்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com