Published:Updated:

வாசகர் மேடை: மேகி இப்போ தீதி!

ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா கிருஷ்ணன்

நம்மள பார்த்தாலே எல்லோரும் பார்க்காத மாதிரி போறாங்களே! ரொம்ப அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டமோ?

வாசகர் மேடை: மேகி இப்போ தீதி!

நம்மள பார்த்தாலே எல்லோரும் பார்க்காத மாதிரி போறாங்களே! ரொம்ப அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டமோ?

Published:Updated:
ரம்யா கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
ரம்யா கிருஷ்ணன்

`நமக்கும் வயதாகிவிட்டது’ என்பதை உணரும்போது உங்கள் மைண்ட்வாய்ஸ் என்ன?

இனிமேல் மளிகை லிஸ்ட்ல `ஹேர் டை'யும் வேற சேர்த்தாகணுமா... (அதுவும் திருட்டுத்தனமா)

ஆர்.பிரசன்னா

அநீதி, அக்கிரமங்களைக் கண்டு மனசு பொங்கும்போது கூடவே மைண்ட் வாய்ஸ், `இப்ப நீ தாதா இல்லை, தாத்தா' என்று சொல்லி அடக்கிவிடும்.

எஸ்.இராஜேந்திரன்

மூட்டு வலி, நரைமுடி, சுகர், பிபி, முடி கொட்டுதல், தோல் சுருக்கம், கண் பார்வைக் கோளாறு... லிஸ்ட் ரொம்பப் பெருசா இருக்கே!

நா.இரவீந்திரன்

நம்மள பார்த்தாலே எல்லோரும் பார்க்காத மாதிரி போறாங்களே! ரொம்ப அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டமோ?

JaNeHANUSHKA

இன்னைல இருந்து ஜிம்முக்குப் போறோம், ஒரே வாரத்துல யூத் ஆகறோம்!

San8416

நம்ம பையனே அடுத்த வருஷம் இன்ஜினீயரிங் காலேஜ்ல சேரப்போறான், நாம இன்னும் அரியர் கிளியர் பண்ணலையேன்னு.

valarselvan

நாங்கள்லாம் அந்தக் காலத்துலேன்னு நானும் பேச ஆரம்பிச்சிடுவேனா...ஐயோடா!

ZY1KtAKuv5F0Ktl

வீட்ல அம்மா `பக்கத்து வீட்டுப் பையன்’னு சொல்லி ஏதாவது ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உருப்படியா ஒரு வேலைக்குப் போயிரணும்.

Muthukumar8196

மம்தா பானர்ஜி பயோபிக் எடுத்தால் நடிக்கப் பொருத்தமான தமிழ் நடிகை யார்?

வாசகர் மேடை: மேகி இப்போ தீதி!

அரசியல் தலைவராகக் கால் பதிக்க நினைக்கும் குஷ்பு பொருத்தமாக இருப்பார்.

த.வேல்முருகன்

சீதா - சிறப்பாக இருப்பார் (உயரம் பொருந்தும்), செகண்ட் இன்னிங்ஸாக இருக்கும்.

dindiguldeva?

வேற சாய்ஸ்க்கு சான்ஸே இல்லை. ஒன் அண்ட் ஒன்லி நயன்தாராவேதான்!

துடுப்பதி வெங்கண்ணா

மம்தா பானர்ஜி பயோபிக் எடுத்தால் அவரைப் போலவே வட்ட முகமும் கம்பீரத் தோற்றமும் உள்ள ஜோதிகா நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

ப.த.தங்கவேலு

ரம்யா கிருஷ்ணன். மம்தாவுக்கு உள்ள `கெத்தை' அப்படியே வெளிக் கொண்டு வருவார்.

வ.வெற்றிச்செல்வி

முன்னாள் நடிகை சுவலட்சுமியைத் தேடிக் கண்டுபிடித்து நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும்.

அஜித்

என் சாய்ஸ் மீரா ஜாஸ்மின் - நடிப்பு ராட்சசி

சுஸ்.துருவ்

முதல் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி.

அ.பச்சைப்பெருமாள்

மம்தாவின் கோபத்தையும் துணிச்சலையும் திரையில் காண்பிக்க ராதிகா பொருத்தமாக இருப்பார்.

Dr.செல்வகணேஷ்

சாவித்திரியாவே கலக்கிய கீர்த்தி சுரேஷ் மம்தாவாவும் கலக்கமுடியும்.

அ.வேளாங்கண்ணி

துணிச்சலான கேரக்டர்களில் நடிப்பதை அல்வா சாப்பிடுவது போல் செய்யும் `சுஷ்மிதா சென்' மிகப்பொருத்தம்.

NedumaranJ

தமிழ் டப்பிங்கில் உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வசனம் - காட்சி எது?

வாசகர் மேடை: மேகி இப்போ தீதி!

‘டீ சாப்பிடுறீங்களா’ என்ற ஒரு வரி வசனத்தை ‘நீங்க டீ சாப்பிடலாம்னு நான் நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க’ என்று இழுத்துப் பேசுவது.

கு.வைரச்சந்திரன்

‘ஜுராசிக் பார்க்’ படத்தில் ``யாரும் சத்தம் போடாதீங்க! டைனோசர் வருது. எல்லாத்தையும் கடிச்சிரும்!’’ என்று டைனோசர் காதில் கேட்குமளவுக்கு ஒருவர் சத்தமாகப் பேசும் வசனம்.

எ.முகமது ஹுமாயூன்

‘Fast and Furious 6’ படத்தில் ஏஜென்ட் ஹாப்ஸ் பேசும் போது ``நீங்க சொன்னீங்கன்னு தான் போலீஸ் ஸ்டேஷனை உடைச்சேன். உலக தொலைக்காட்சியில் முதன் முறையா வானத்துல பறக்கிற ஏரோபிளேனைச் சுடச் சொன்னீங்க. நானும் சுட்டேன்’’ என்று கூறும் காட்சி.

எம் விக்னேஷ்

``அமைதியா இருக்கிற துக்கும், எதுவும் செய்யாம இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு’’ - இந்த டப்பிங் டயலாக்கை வேலை செய்யாமல் பராக்கு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கும் சக வேலையாட்களிடம் கூறுவது வழக்கம்!

absivam

`தோர் - ரக்னரக்' படத்தில் கோர்க் கதாபாத்திரம் நெல்லைத் தமிழில் பேசுவதாக டப்பிங் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு வசனமும் சிரித்து சிரித்துக் கண்ணீரை வரவழைத்தது.

IamJeevagan

`லயன் கிங்' படத்தில் மிருகங்களுக்காக அதுவும் வட்டார வழக்கில் நம்மூர் பிரபலங்களான மனோபாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, அர்விந்த் சுவாமியை வைத்து டப்பிங் பேச வைத்தது காமெடி. செமையாக ஒர்க் அவுட் ஆகியது.

jerry46327240

‘பாரத மாதாவைப் பத்தி என்ன நினைச்சே’ன்னு சாய்குமார் டப்பிங் படத்தில ரொம்ப உக்கிரமா திட்டும்போது நமக்கே ஜெர்க் ஆகும்.

manipmp

ஹேங்க் ஓவர் படத்தை நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தமிழ் டப்பிங் செய்திருக்கிறார்கள். சிரிக்காமல் பார்க்கவே முடியாது.

RavikumarMGR

ஜிம் கேரியின் மாஸ்க் படத்தில் `இந்த நியூஸை ஜூனியர் விகடன்ல போட்ருவேன்' என்ற வசனம் வரும். பக்கெனச் சிரித்தேன்!

parath.sarathi?

அரபி வேடம் போட்ட அனிருத் இனி என்னவெல்லாம் கெட்டப் போட்டு என்ன மாதிரியான பாடல்கள் கொடுக்கலாம்?

பாட்டு வரியே இல்லாமல் வெறும் இசையை மட்டும் போட்டு ஊமைக் குத்துன்னு பாட்டு போடலாம்.

பெ.பாலசுப்ரமணி

ஒவ்வொரு மாநில கலாசார உடை அணிந்து வேடமிட்டு, மோடி அவர்களுக்கு ஒரு ‘எலெக்ஷன் குத்து’ கொடுத்தால், அவருக்கு உபயோக மானதாகவும் இருக்கும். அனிருத்துக்கும் ஒரு நியமன எம்.பி. பதவியோ, இல்லை ஆளுநர் பதவியோ கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது.

IamUzhavan

`யுவேந்த்ர சாஹல்' வேடம் போட்டு `ஸ்பின் குத்து'ன்னு புதுவகைப் பாடலைக் கொடுக்கலாம்.

IamJeevagan

எம்.ஜி.ஆர் தொப்பி அணிந்து நாகூர் ஹனிபா டைப் ஹை பிட்ச் பாடல்.

kayathaisathya

உங்களால் மறக்க முடியாத பிறந்தநாள் எது, ஏன்?

காலேஜ் மெஸ்ஸில் மீந்து போனதெல்லாம் வச்சு பஞ்சாமிர்தம் செஞ்சு, பர்த்டே பாயை நைட் மரத்தில கட்டி அபிஷேகம் செஞ்சு, அப்புறம் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செஞ்சு, புது ட்ரெஸ் போட்டுவிட்டு, அன்னிக்கு முழுக்க எல்லாப் பணிவிடைகளும் நண்பர்கள் செய்ய, ஒருநாள் ராஜாவா இருந்த காலேஜ் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்தான் மறக்க முடியாதது.

ச.பிரபு

1989-ல் எனது 32வது பிறந்த நாளன்று எங்களது புதிய கார் விக்கிரவாண்டியில் விபத்தில் சிக்கிய போது காருக்கு சேதம் அதிகமேற்பட்டாலும் காரை ஓட்டிச்சென்ற என் தம்பி சிறு காயங்களுடன் உயிர் தப்பியதை ஒவ்வொரு பிறந்த நாளன்றும் என்னால் மறக்க முடியாது.

vaira.bala.12

சுட்டி விகடனின் நிருபர் பயிற்சித் திட்டத்தில் தேர்வான குழந்தைகளுக்கு சுட்டி ஸ்டார் பட்டம் வழங்கும் விழா நடந்த 7.01.2018 அன்றுதான் என் பிறந்த நாள். பட்டம் பெற்ற என் மகளை 12 படங்கள் எடுத்து மாதக் காலண்டர் தயாரித்து விகடன் கொடுத்த போது என் பிறந்த நாளையும் அதில் குறிப்பிட்டிருந்ததால், சர்ப்ரைஸாக என்னை மேடைக்கு அழைத்து புத்தகப் பரிசு கொடுத்தது மாபெரும் கௌரவமானது. அதுமட்டுமா! பட்டம் வென்ற 55 குழந்தைகளும் எழுந்து நின்று கோரஸாக ``ஹேப்பி பர்த் டு யூ’’ பாடி, என்னை வாழ்த்தியது ஆனந்தக்கண்ணீரை வரவழைத்தது.

அண்ணா அன்பழகன்

என் பத்தாவது பிறந்த நாளின் போது நிகழ்ந்த சம்பவம். அலுவலகம் முடிந்து அப்பா கேக் வாங்கி ஒரு லெதர் பேக்கினுள் வைத்து பேக்கை பைக்கின் பக்கவாட்டில் மாட்டிக்கொண்டு வந்திருக்கிறார். சைலன்சரின் மேல் இருந்த பாதுகாப்புப் பட்டை கழண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. பிறகென்ன... அவர் வீடு வந்து சேர்ந்த போது லெதர் பேக் சூடாகி, கேக் கூழாகி... நான் பிறந்த போது அழுததைவிட அன்றைக்குத்தான் அதிகம் அழுதேன் என்று என் தாய் அடிக்கடி கூறுவார்.

எம்.கலையரசி

பள்ளிக் கால நண்பர்களைத் தேடிப்பிடித்து வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்திய ஆண்டு, கொண்டாடிய பிறந்த நாள் மறக்க முடியாதது. எத்தனை பேர் வாழ்த்தினார்கள் என வாட்ஸ் அப்பில் கணக்குபோட்ட அந்த நாள் மீண்டும் வராது.

களந்தசுகுமார்

20 வது பிறந்த நாள்தான். ஏன்னா அன்னைக்கு முந்தைய வாரத்தில் என் பரம்பரையில் முதல் தலைமுறை பட்டதாரியாக ஆனேன்.

saravankavi

2016 பிறந்த நாள் மறக்க முடியா பிறந்த நாள் ஆகியது! ஆக்கியது நம்ம பிரதமர்!

புரியலையா, முதல் நாள் இரவு 8 மணிக்குத்தான் பணமதிப்பு நீக்கம் செய்து ரோடு ரோடா அலைய விட்டார்!

h_umarfarook

1983 அன்று காமராஜர் பிறந்த ஜூலை 15-ந் தேதியை என்னால் மறக்க முடியாது. அன்றைய தினம் திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்ட அந்த விழாவில் ராஜீவ்காந்தி, சிவாஜிகணேசன் ஆகியோரை மிக நெருக்கத்தில் நின்று பார்த்தேன்.

adiraibuhari

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. சசிகலா - ஓ.பி.எஸ் - எடப்பாடி - தினகரன்... ஆளுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுங்கள்.

2. நிறையவே மாறிவிட்ட தமிழ் சினிமாவில் ‘இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏன் மாத்தவே மாட்டேங்கிறாங்க’ என்று உங்களை நினைக்க வைக்கும் க்ளிஷே?

3. ‘ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது’ என்று சமீபத்தில் தோன்ற வைத்த சம்பவம்..?

4. ஏகப்பட்ட கெட்டப்கள் போட்டவர் கமல். அவருக்குப் போட்டியாக ஸ்ருதிஹாசன் என்னென்ன வித்தியாசமான கெட்டப்கள் போடலாம்?

5. இலக்கியவாதிகளின் அட்ராசிட்டிகளில் எது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism