Published:Updated:

வாசகர் மேடை: ஈயம் இருக்கு... ஆனா இல்லை!

ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி

வடக்கே வாழும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன், தாய்மண்ணைப் பார்க்க வருகிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக தங்கபாலு...

வாசகர் மேடை: ஈயம் இருக்கு... ஆனா இல்லை!

வடக்கே வாழும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன், தாய்மண்ணைப் பார்க்க வருகிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக தங்கபாலு...

Published:Updated:
ராகுல் காந்தி
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி
‘நானும் தமிழன்தான்’ என்று சொல்லும் ராகுல் தமிழ் சினிமாவில் நடிப்பது என்றால் என்ன படத்தில் நடிக்கலாம்?

பிரதமராக முடியுதோ இல்லையோ, ‘முதல்வன்’ படத்தில் அட்லீஸ்ட் ஒரு நாள் முதல்வராவாவது நடிக்கலாம்.

 லாவண்யா, சென்னை.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்கலாம். மோடிஜியைக் கடுப்பேத்தின மாதிரியும் ஆச்சு, தமிழக மக்களைக் கவர்ந்த மாதிரியும் ஆச்சு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

அ.பச்சைப்பெருமாள்

‘மாநாடு’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா கேரக்டரில் நடிக்கலாம்...!

பாராளுமன்றத்தில் மோடியுடன் மோதுவார்... வீர வசனம் பேசுவார்... அடுத்த பாராளுமன்றத்தில் மீண்டும் ‘ரிப்பீட்டு...!’

மணிமேகலை பாலு

‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம் ராகுலுக்கு இயல்பாக அமையும். பாவம் சினிமாவிலாவது ‘ராஜபார்ட்’ எடுக்கட்டுமே!

ஆர்.விநாயகராமன்

வடக்கே வாழும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்த தமிழன், தாய்மண்ணைப் பார்க்க வருகிறார். அவருக்கு மொழிபெயர்ப்பாளராக தங்கபாலு... குலுங்கிக் குலுங்கி சிரிக்கவைக்கும் காமெடி கதையில் நடிக்கலாம்...

டைட்டில் : சொல்வ தெல்லாம் உண்மை.

DevAnandR155

‘தனி ஒருவன்’ படத்தில் நடிக்கலாம். டைட்டிலும் பொருத்தமாக இருக்கும்..

KmFarook6

வாசகர் மேடை: ஈயம் இருக்கு... ஆனா இல்லை!
மாதம் ஒரு குழு அமைக்கும் ஸ்டாலின், ஜாலியாகக் குழுக்கள் அமைப்பது என்றால் என்னென்ன குழுக்கள் அமைக்கலாம்?

இதுவரை அமைக்கப்பட்ட குழுக்கள் ஒழுங்காகச் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க ஒரு சூப்பர் குழு அமைக்கலாம்.

 கா.மு.ஃபாரூக்,

விருகம்பாக்கம்

பாக்றோம் தூக்றோம் குழு

(படம் தயாரிப்பில் இருக்கும்போதே நல்லா வந்திருக்கு என்று கேள்விப்பட்டதையறிந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸுக்காக வாங்கிக் கொடுக்கும் குழு)

ஜெரி.D.டார்வி

‘ஸ்விம்மிங் லைசென்ஸ் குழு.’ லேசா மழை பெஞ்சாலே ரோடெல்லாம் வெள்ளக்காடு; பொதுசனம் நீந்திப் போறதுக்கு, நீச்சல் கத்துக் குடுத்து லைசென்ஸ் கொடுக்க...

RaghurajanR

வீண்பேச்சுக் குழு - சட்டமன்றத்தில் பி.ஜே.பி உறுப்பினர்கள் நால்வருக்கும் பேச அனுமதி அளித்துவிட்டு, நீங்க பேசறதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, சட்டுபுட்டுனு வெளிநடப்பு பண்ணுங்கன்னு சொல்ல, சபாநாயகர் தலைமையில் அவருக்குப் பின்னால் 4 எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கலாம்.

JaNeHANUSHKA

கூட்டணி இதயக்குழு. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அளவில் சீட் கொடுக்கவில்லை என்றாலும் எப்படி இதயத்தில் இடம் கொடுத்துக் கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணியைத் தொடர்வது என்பதற்காக.

SriRam_M_20

ஒரு வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு அரைக் கிலோ ரவா மட்டும்தான் தரணும்னு மளிகைக்கடை அண்ணாச்சிங் களுக்கு அறிவுறுத்தி அத கண்காணிக்க ஒரு குழுவ நியமிங்க முதல்வரய்யா...

bommaiya

தொலைக்காட்சி அரசியல் விவாதங்களில் நீங்கள் ரசித்த சுவையான சம்பவம்?

‘‘அன்னைத் தமிழ் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். ரஜினிகாந்த் கட்சி தொடங்க மாட்டார்!” எனச் சில வருடங்களுக்கு முன் தந்தி டி.வி-யின் மக்கள் மன்றத்தில் நாஞ்சில் சம்பத் அறுதியிட்டுக் கூறிய காட்சியை உள்ளுக்குள் ரசித்தேன்!

ரிஷிவந்தியா

சி.பி.எம் அருணனிடம், ‘மக்கள் நலக் கூட்டணியை விட நான் அதிகப்படியான வாக்கு வாங்கிக் காட்டலைனா, கட்சிய கலைச்சிட்டு நான் கம்யூனிஸ்ட்ல வந்து சேர்ந்திடுறேன்... எழுதி வெச்சுக்குங்க’ என்று சீமான் வீர வசனம் பேசி மாட்டிக் கொண்டது!

நா.இரவீந்திரன்

பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்ற நிறைய கட்சிகள் தாவியவர்கள் கலந்து கொள்ளும்போது எதிர்தரப்பினர் இவர்களுடைய பழைய பேச்சை சுட்டிக் காட்டுவார்கள்.. அப்போது இவர்களது முகம் போகும் போக்கைக் காண கண் கோடி வேண்டும்.

ParveenF7

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், இடஒதுக்கீடு ஏன் தேவை என இளைய தலைமுறையினருக்குப் புரியும்படி எடுத்துக் கூறிய விவாத நிகழ்ச்சிதான்!

pbukrish

இந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களில் சிலர் அரசியல் விமர்சகர், திரை விமர்சகர், பொருளாதார அறிஞர், கல்வி வல்லுநர், நீர் மேலாண்மை வழிகாட்டி, சமூக ஆர்வலர் எனப் பல்வேறு வகையான அவதாரம் எடுப்பது...

premprathap18

உடல் எடையைக் குறைக்கிறேன் என்று உங்கள் நண்பர்கள் செய்யும் காமெடிகளைச் சொல்லுங்களேன்...

உடல் எடையைக் குறைக்கிறேன் என உணவைக் குறைத்துவிட்டு நொறுக்குத் தீனியாகத் தின்பது...

பா.சக்திவேல்

Loop No 1: நாளையில் இருந்து ஜிம் போக ஆரம்பிக்கிறேன்னு தினமும் நைட்டு படுக்கப் போய்ட்டு,

Loop No 2: அடுத்த நாள் காலைல 8 மணிக்கு எழுந்து Loop No 1-ஐச் செய்யறது.

bala.sharmi.94

சைக்கிள் வாங்கி, வீட்டு வாசலில் சும்மா நிறுத்தி வைப்பது...

jeyaprakash.prakash.186

டயட்ல இருக்கேன் பேர்வழின்னு ராத்திரி ரெண்டு சப்பாத்தி சாப்பிட்டு அரை வயிற்றோடு படுத்து, நடுராத்திரி எழுந்து நாலு மேகி பாக்கெட்டை காலி பண்றது.

அஜித்

நாலு மணிக்கு அலாரம் வைத்து, நாலு நாளுக்கு வாக்கிங் போயிட்டு, அஞ்சாவது நாளன்று ஏழு மணி வரை தூங்கும் நண்பர்களைப் பார்த்தால் காமெடியாக இருக்கும்.

அவ்வை. கே.

சஞ்சீவிபாரதி

1 வருட ஜிம் சந்தா கட்டிட்டு 2 நாள் போயி உடம்பு வலிக்கிதுன்னு விட்டுடுவாங்க.

YAADHuMAAGE

ஆறாவது மாடில இருக்கிற ரூம்க்குகூட லிப்ட் யூஸ் பண்ண மாட்டேன்னு சொல்லி, படிக்கட்டில்தான் வருவேன்னு அடம்பிடிக்கிறது.

Anvar_officia

4 தண்டால் போட்டுட்டு வயிறு குறைஞ்சிருச்சான்னு டேப் வைத்து அளந்து பார்ப்பது!

San8416

உறவினர் ஒருவர், உடல் எடையைக் குறைக்க தினமும் அரை வயிறு சாப்பிட்டுவிட்டு, இப்போது ‘அல்சருக்கு’ வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.

 லாவண்யா, சென்னை.

வெறித்தனமாகப் பத்து கி.மீ தூரத்தை ஒரே நாளில் நடக்கிறேன் பேர்வழி என்று பாதி வழியில் ஆட்டோ பிடித்து வீடு திரும்பிய நண்பர் எனக்கு உண்டு.

 ஆர்.பிரசன்னா, ஸ்ரீரங்கம்.

வாசகர் மேடை: ஈயம் இருக்கு... ஆனா இல்லை!
‘ஈயம் பூசுன மாதிரியும் இருக்கும், பூசாத மாதிரியும் இருக்கும்’ என்பதற்கு ஓர் உதாரணம்..?

இரவு 10 மணிக்கு மேல், ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்று போட்ட லாக்டௌன் எல்லாமே ஈயம் பூசிய வகையைச் சேர்ந்ததே.

செல்லத்துரை

‘கிரிப்டோ கரன்ஸிக்கு வரிவிதிப்பதால் அதை அங்கீகரிப்பதாக அர்த்தமல்ல’ என்று நிர்மலா சீதாராமன் சொன்னது!

parath.sarathi?

நம்ம ஜியோட ‘மன் கி பாத்’ பேச்சுகள் எல்லாமே ‘மைல்டான’ ஈயப் பூச்சுகள்தான் விகடனாரே!

 கா.மு.ஃபாருக்

விருகம்பாக்கம்

‘பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவது என்பது, உங்க இஷ்டம். நாங்க கட்டாயப் படுத்தலை. அதுக்காக, குறைச்சலா போட்டுறாதீங்க’ என்று மாப்பிள்ளையின் அம்மா சொல்றது.

எஸ். மோகன்

‘பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணியில் தான் இருக்கு, ஆனால் இல்லை’ என்று அண்ணாமலை சொன்னது.

NedumaranJ

அரபிக் குத்து பாடல்தான் மிகச் சிறந்த உதாரணம்... அரபிக் மாதிரியும் இருக்கும், இல்லாத மாதிரியும் இருக்கும்.

Vasanth920

பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தே.மு.தி.க அறிக்கையை இன்னும் கேப்டன் அறிக்கை வெளியிடுவது போலவே வெளியிடுவது.

sudarvizhie

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வாசகர் மேடை: ஈயம் இருக்கு... ஆனா இல்லை!

1. அரபி வேடம் போட்ட அனிருத் இனி என்னவெல்லாம் கெட்டப் போட்டு என்ன மாதிரியான பாடல்கள் கொடுக்கலாம்?

2. தமிழ் டப்பிங்கில் உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த வசனம் - காட்சி எது?

3. உங்களால் மறக்க முடியாத பிறந்தநாள் எது, ஏன்?

4. மம்தா பானர்ஜி பயோபிக் எடுத்தால் நடிக்கப் பொருத்தமான தமிழ் நடிகை யார்?

5. ‘நமக்கும் வயதாகிவிட்டது’ என்பதை உணரும்போது உங்கள் மைண்ட்வாய்ஸ் என்ன?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism