Published:Updated:

வாசகர் மேடை: அந்த ஒரு கேள்வி!

விஜய்சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதி

வெளிநாட்டில் கௌரவ மேயர் பதவி தருவதுபோல, தமிழர்கள் விரும்பும் ஜாக்கி சானுக்கு நம்ம ஊரிலும் தரலாம்.

வாசகர் மேடை: அந்த ஒரு கேள்வி!

வெளிநாட்டில் கௌரவ மேயர் பதவி தருவதுபோல, தமிழர்கள் விரும்பும் ஜாக்கி சானுக்கு நம்ம ஊரிலும் தரலாம்.

Published:Updated:
விஜய்சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதி

யாராவது ஒரு நடிகரை/ நடிகையை ஒருநாள் மேயர் ஆக்கலாம் என்றால் உங்கள் சாய்ஸ் யார், ஏன்?

நடிகர் விஜய்சேதுபதி. ஏன்னா அவர்தான் ஒரு நாள் ஒரு காட்சியில நடிக்கச் சொன்னாலும் ஓகே சொல்வாரு.

கு.வைரச்சந்திரன்

‘வடிவேலு.’ அனைவராலும் விரும்பப்படும் ஒரே நடிகர் அவர்தான்.

 D.நரசிம்ம ராஜ், மதுரை.

வெளிநாட்டில் கௌரவ மேயர் பதவி தருவதுபோல, தமிழர்கள் விரும்பும் ஜாக்கி சானுக்கு நம்ம ஊரிலும் தரலாம்.

parath.sarathi?

நடிகர் சந்தானபாரதியை ஆக்கலாம். தமிழ்நாட்டில் எங்கள் அமித்ஷாஜி மேயர் பதவிக்கு வந்துவிட்டார் என பா.ஜ.க-வினர் தம்பட்டம் அடிக்கும் காமெடிக் காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடியும்!

எஸ்.இராஜேந்திரன்

எப்படியும் மக்கள் நீதி மய்யம் மூலமாகப் பதவி கிடைப்பது தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. கமல் தன் ஐடியாக்களை எவ்வளவு தூரம் செயல்படுத்த முடிகிறது என்று பார்க்க ஒரு நாள் மேயர் பதவி கொடுத்துதான் பார்ப்போமே.

மீனலோசனி

பட்டாபிராமன்

நடிகர் சூர்யாவை மேயர் ஆக்கலாம். மாநகராட்சிப் பள்ளிகளைச் சீரமைத்து மாணவர்களை ஈர்த்து சேர்க்கையை அதிகரிப்பார்.

பா.சக்திவேல்

சீமான் - நேற்றைய நடிகர், இன்றைய அதிபர், நாளைய மேயர்... புஹாஹா..!

நா.இரவீந்திரன்

‘சரத்குமார்’ - சமீபத்தில் ‘ஒரு’ மனதாக சமத்துவ மக்கள் கட்சிக்கு மீண்டும் தலைவரான அவருக்கு ‘ஒருநாள்’ மேயர் பதவி மிகப்பொருத்தம்.

DevAnandR155

வாசகர் மேடை: அந்த ஒரு கேள்வி!

தேர்தலில் ஒத்த ஓட்டு வாங்கும் வேட்பாளர்களின் மைண்ட்வாய்ஸ் எப்படியிருக்கும்?

இருக்கட்டும்டா... இருக்கட்டும். அதனால என்ன. இந்த உத்தரப்பிரதேசத்துக்கோ, அல்லது மேகாலயாவுக்கோ கவர்னர் ஆயிட்டுப்போறேன்.

அ.பச்சைப்பெருமாள்

நம்ம ‘வலிமை அப்டேட்’ அவ்ளோதான்போல...அவ்வ்வ்!

எஸ்.ஏ.விஜயலக்ஷ்மி

ஒருவேளை வோட்டிங் மெஷினை ஓப்பன் பண்ணும் போது, ஒரு ஓட்டைப் போட்டுப் பதிவாகுதான்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்ததை டெலிட் பண்ணாம விட்டிருப்பார்களோ?!

ப.சோமசுந்தரம்

நல்லவேளை, என் ஓட்டு இருக்கற தொகுதியிலயே நின்னேன்.

பி.பாரதி

‘ஆமா... இந்த ஒரு ஓட்டு மட்டும் எப்படி விழுந்துச்சு, நாமளே நமக்குப் போடலியே..?!’

கி.சரஸ்வதி

மொதல்ல வீட்ல நல்ல பேரு வாங்கணும்போல.

ராம்கி

நல்லவேளை, நீட் எக்ஸாம், கேட் எக்ஸாம்ல நெகட்டிவ் மார்க்ஸ் இருக்குற மாதிரி, தேர்தலில் நெகட்டிவ் வோட்டிங் இல்லை. இல்லைன்னா மைனஸ்ல ஓட்டு வாங்கி, ஊரெல்லாம் ஒரே அசிங்கமாப்போயிருக்கும் குமாரு...

JaNeHANUSHKA

அப்படி என்ன நல்லது பண்ணிட்டேன், இல்ல...இதுக்குமேல பண்ணப் போறேன்னு நினைச்சி ஒருத்தன் என்னை நம்பி ஓட்டு போட்டிருக்கான்?!

NedumaranJ

பிக்பாஸுக்கு வரும் சிம்பு - என்னென்ன எதிர்பார்க்கலாம்?

விரல்களால் கதை சொல்லும் ஒரு போட்டி கண்டிப்பாக இடம்பெறும்.

நிஷாந்தன்

பிக்பாஸ் வீட்டில் நூறு நாள்களும் இவரே தூங்கியவர்களைப் பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடிட்டே எழுப்பிவிட. அதிரடியாக வரலாம்!

பா.து.பிரகாஷ்

சிம்பு டைமிங்குக்கு ஏத்த மாதிரி பிக்பாஸ் வீட்டுக்குள்ள எழுந்துக்குற டைம், சாப்பிடுற டைம், தூங்குற டைம் எல்லாம் மாத்தி வச்சிருவாங்க.

ச.பிரபு

“பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும்” என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் வேண்டுகோள் வைப்பதை எதிர்பார்க்கலாம்.

PG911_twitz

கமலைவிட மிகவும் நேர்த்தியாக சிம்பு பிக்பாஸைத் தொகுத்து வழங்கியதாக கூல் சுரேஷ் பேட்டி கொடுப்பார்.

SriRam_M_20

படங்களில் பிஸி என்று சிம்பு நடுவில் விலகி, டி.ஆர் வந்து நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ParveenF7

மூக்குத்தி, குடம் என்று ஆரம்பித்த ‘தேர்தல் லஞ்சம்’ இப்போது ஹாட்பாக்ஸ், வெள்ளிக்கொலுசு வரை வந்துவிட்டது. இன்னும் என்னவெல்லாம் கொடுப்பார்கள்?

ஒரு வார குடும்பச் சுற்றுலா செல்ல டோக்கன் கொடுப்பார்கள்.

அவ்வை. கே.

சஞ்சீவிபாரதி

நாங்கள் வெற்றிபெற்றுப் பதவிக்கு வந்து செய்யப் போகும் ஊழலில் கிடைக்கும் பணத்தில் பங்கு கொடுப்போம் என வாக்குறுதி கொடுத்தாலும் கொடுக்கலாம்.

பர்வீன் யூனுஸ்

இலவச பிரியாணி, அண்டாவுடன்!

mohamednizamudeen.

abdulhakim

வீட்டுக்கு ஒரு வருடத்துக்கு ஏதாவது ஒரு ஓ.டி.டி தளத்துக்கு சப்ஸ்க்ரிப்ஷன் கட்டுவார்கள்.

எஸ். வாஜு

வைஃபை பாஸ்வேர்டு, விகடன் இணைய ஆண்டு சந்தா, மொபைல் ரீசார்ஜ்னு ஓட்டுக்கு டெக்னிக்கலா பல புதிய அயிட்டங்களைக் கொடுத்து மக்களைக் கவரலாம்!

absivam

லோக்கல் கறிக்கடையில் காண்ட்ராக்ட் போட்டு, நாலு ஓட்டு உள்ள குடும்பத்துக்கு (எங்க வீட்ல நாலு ஓட்டுங்கோவ்!‌) ஞாயிறு அன்று ஒரு கிலோ மட்டன், அரை கிலோ சிக்கன் கொடுக்க டோக்கன் கொடுக்கலாம்ணே...!

KmFarook6

கிரிப்டோ கரன்சிக்கான டோக்கன் தருவார்கள்!

sudarvizhie

வரலாறு, கணக்கு, நிர்வாகம் என்று எல்லாவற்றிலும் பலவீனமாக இருக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ் தேர்வாகியிருப்பதற்கு அப்படி என்னதான் கேள்வி கேட்டிருப்பார்கள்?

வாசகர் மேடை: அந்த ஒரு கேள்வி!

ஐ.பி.எஸ் தேர்வு கேள்வி: வரலாறு, கணக்கு, நிர்வாகம் இம்மூன்றும் தேவைப்படாத துறைக்கு நீங்கள் போவீர்களா?

அண்ணாமலை பதில்:

அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்!

துடுப்பதி வெங்கண்ணா

கொண்டையில் தாழம்பூ

நெஞ்சிலே வாழப்பூ

கூடையில் என்ன பூ..?

Adhirai Yusuf

முழங்கால் அளவு தண்ணீரில் படகுவிட முடியுமா என்று கேட்டிருப்பார்கள்.

 எம்.கலையரசி, சேலம்

நீங்கதானே மிஸ்டர் அண்ணாமலை?

அண்ணாமலை சற்றுநேரம் யோசித்துவிட்டு வேகமாக, ‘ஆமா ஆமா நான்தான் அண்ணாமலை!’

 சொக்கம்பட்டி தேவதாசன்

நடுக்கடலில் இறங்கி கப்பலைத் தள்ள முடியுமா என்று கேட்டிருப்பார்கள். (இப்போது தமிழ்நாட்டில் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்)

எம்.கலையரசி

தோற்றுப்போனால் கிடைக்கும் பதவிகள் எவைன்னு கேட்டிருப்பாங்க!

KRavikumar39

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1. ஒரு சினிமாவில் யாருமே எதிர்பாராத க்ளைமாக்ஸ் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

2. இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி என்று சுருங்கிவிட்ட காங்கிரஸ் வளர வேண்டும் என்றால் ராகுல் என்ன செய்ய வேண்டும்?

3. பெட்ரோல், டீசல் - ஒரு குட்டிக்கவிதை ப்ளீஸ்...

4. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு மாதிரி இன்னும் என்னென்ன கொண்டுவருவார்கள்?

5. அர்விந்த் கெஜ்ரிவால் பயோபிக் எடுத்தால் யார் நடிக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை,

ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism