Published:Updated:

வாசகர் மேடை: நாலு பேரும் நல்ல பாட்டு டெடிகேஷனும்!

ஸ்ருதிஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதிஹாசன்

படம் முடியும் பொழுது, படத்தில் வந்த ஒரு டூயட் பாடலை மீண்டும் காட்டி முடிக்கும் வழக்கத்தை நிறுத்தலாம்.

வாசகர் மேடை: நாலு பேரும் நல்ல பாட்டு டெடிகேஷனும்!

படம் முடியும் பொழுது, படத்தில் வந்த ஒரு டூயட் பாடலை மீண்டும் காட்டி முடிக்கும் வழக்கத்தை நிறுத்தலாம்.

Published:Updated:
ஸ்ருதிஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ருதிஹாசன்

ஏகப்பட்ட கெட்டப்கள் போட்டவர் கமல். அவருக்குப் போட்டியாக ஸ்ருதிஹாசன் என்னென்ன வித்தியாசமான கெட்டப்கள் போடலாம்?

ஸ்ருதி பேசாம கமல்ஹாசன் கெட்டப் போடலாம்ல!

கி.சரஸ்வதி

ஸ்ருதிஹாசன் கமலுக்குப் போட்டியாக தசாவதாரம் போல் ஒரு படத்தில் அம்மன், டான்சர், தாதா போன்று பத்து கெட்டப்களில் நடித்து அசத்தலாம்.

செந்(தில்)வேல்

தந்தை ‘அவ்வை சண்முகி’யாகப் பெண் கெட்டப்பில் கலக்கினார். ஸ்ருதி ‘அவ்வை சண்முகனாக’ ஆண் கெட்டப் போட்டு ஒரு படத்தில் கலக்கலாமே!

எம்.கலையரசி

பூலான்தேவி கெட்டப் போடலாம்.

PG911_twitz

'ராணி வேலுநாச்சியார்' வேடம் ஏற்று நடிக்கலாம்.

IamJeevagan

வாசகர் மேடை: நாலு பேரும் நல்ல பாட்டு டெடிகேஷனும்!

சசிகலா - ஓ.பி.எஸ் - எடப்பாடி - தினகரன்... ஆளுக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுங்கள்.

சசிகலா: `பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’

ஓ.பி.எஸ்: `மன்னிக்க வேண்டுகிறேன்!’

தினகரன் : `நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா?!’

எடப்பாடி பழனிசாமி: `ஒருவன் ஒருவன் முதலாளி!’

கொ.மூர்த்தி

சசிகலா :

ஆண்டவன் யாரையும் விட்டதில்ல... வாழ்க்கை வட்டத்தில...

ஓ.பி.எஸ் :

தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா...

இ.பி.எஸ் :

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை...

தினகரன்:

போனால் போகட்டும் போடா,

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...

ப. சீனிவாசன்

சசிகலா: ஓ... ஒரு தென்றல் புயலாகி வருமே...

ஓ.பி.எஸ்: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா...

இ.பி.எஸ்: யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு...

தினகரன்: எங்களுக்கும் காலம் வரும்...

ரிஷிவந்தியா

சசிகலாவுக்கு டெடிகேட் பாடல்: அன்பு மலர்களே! நம்பி இருங்களே, நாளை நமதே..!

ஓ.பி.ஸ்-க்கு பாடல்:

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..!

எடப்பாடிக்குப் பாடல்:

நல்லவன்... எனக்கு நானே நல்லவன்..!

தினகரனுக்குப் பாடல்:

யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க..!

திருச்சி இமான்

தனித்தனிப் பாட்டெல்லாம் இல்லை. நாலு பேருக்கும் ஒரே பாட்டுதான்: `அம்மான்னா சும்மா இல்லடா...’

பெ.பாலசுப்ரமணி

எம்.ஜி.ஆர் பேர் சொல்லி அரசியல் செய்வதால் எல்லோருக்கும் அவரது பாடல்கள்.

சசிகலா: நான் ஆணை யிட்டால் அது நடந்து விட்டால்...

எடப்பாடி: நாளை நமதே இந்த நாளும் நமதே...

ஓ.பி.எஸ்: கடவுள் ஏன் கல்லானார்...

தினகரன்: ஒன்றே குலமென்று பாடுவோம்...

SowThanishka

சசி: சின்னத் தாயவள், தங்க ராசாவே!

OPS: போடா எல்லாம் விட்டுத்தள்ளு, பழசை யெல்லாம் சுட்டுத்தள்ளு!

தினகரன்: புதுசா இப்போ பொறந்தோம் என்று எண்ணிக் கொள்ளடா!

EPS: பயணம் எங்கே போனாலென்ன, பாதை நூறு ஆனாலென்ன, தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா!

San8416

சோதனை மேல் சோதனை, ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன், ஊதுங்கடா சங்கு இப்படி ஒரு டிஜே மிக்ஸிங்கே டெடிகேட் பண்ணலாம்...

Mullaivendan_7

நிறையவே மாறிவிட்ட தமிழ் சினிமாவில் ‘இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏன் மாத்தவே மாட்டேங்கிறாங்க’ என்று உங்களை நினைக்க வைக்கும் க்ளிஷே?

பங்குனி வெயில் பல்லைக் காட்டிக்கிட்டு இருந்தாலும், ஃபைட் சீன் வந்துட்டால், டக்குனு க்ளைமேட் சேஞ்ச் ஆகி, மழை கொட்ட ஆரம்பிப்பது.

எஸ். ‌ராஜம்

படம் முடியும் பொழுது, படத்தில் வந்த ஒரு டூயட் பாடலை மீண்டும் காட்டி முடிக்கும் வழக்கத்தை நிறுத்தலாம். ஏனென்றால் அதை யாரும் நின்னு பார்க்கப் போறதில்லை!

ப.சோமசுந்தரம்

கதாநாயகியின் தந்தை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் ஆனபின்பும் வீட்டில் எப்போதும் இராணுவத்தின் பச்சைநிற உடையையே அணிந்திருப்பார். அவர் கையில் எப்போதும் நீண்ட துப்பாக்கியிருக்கும் (என்னமோ ஓய்வுபெறும் அன்று அவருக்கு ஞாபகார்த்தமாக ஒரு ரைஃபிலை இராணுவ நிர்வாகம் கொடுத்து அனுப்புவதுபோல!)

ஆர். ஸ்ரீகாந்தன்

``இந்த அசைன்மென்டுக்குப் பொருத்தமான ஒருத்தர் இருக்கார். ஆனா அவர் இப்ப சஸ்பெண்ட் ஆகி குவாரில கல் ஒடச்சிட்டு இருக்கார்’’ என்ற பில்டப் இல்லாத போலீஸ் ஸ்டோரிய மாத்தவே முடியல.

ச.பிரபு

கறுப்பு நிறத்தில் ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்றால் வெள்ளையாக உள்ளவரை அழைத்து வந்து கறுப்பாக மேக்கப் போட்டு நடிக்க வைப்பது. கறுப்பாக உள்ளவரையே தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கலாமே!

இந்திராணி தங்கவேல்

ஹீரோ ரெங்கநாதன் தெருவுல போகும்போது பாட்டுப் பாடினால்கூட கூட்டத்துல போறவங்க எல்லாம் சேர்ந்து டான்ஸ் ஆடறாங்க! எல்லாருமா அவ்வளவு வெட்டியா இருக்காங்க?! ஒரு தடவை கடைவீதிக்குப் போய்ப் பாருங்க மக்களே!

absivam

ரோட்ல போய்ட்டு இருக்குற ஹீரோ திடீர்னு அப்படியே பாட்டுப் பாடி ஆட ஆரம்பிச்சுடுவாரு. உடனே ரோட்ல போய்ட்டு இருக்குறவங்க அவர் பின் அழகா வரிசை கட்டி ஒரே மாதிரி ஸ்டெப் போட்டு ஆடுவாங்க! நிஜத்துல அப்படி ஆடுபவரை வித்தியாசமா இருக்கேன்னு வேடிக்கைதான் பார்ப்பாங்க!

JaNeHANUSHKA

ஹீரோயினை எப்படிக் கணக்குப் பண்ணுவது என்று ஹீரோவுக்குப் பாடம் எடுக்கும் மொக்கை நண்பன்.

adiraibuhari

எப்பேர்ப்பட்ட வில்லனும் ஹீரோவைக் கண்டவுடன் கொல்ல மாட்டார். கட்டி வைத்து பாம் வேலி அமைத்து அல்லது பெட்ரோல் ஊற்றித் தீப்பற்ற வைத்து இன்னும் ஒருபடி மேலே போய் உயரத்தில் தொங்கவிட்டு... அப்பப்பா!

annaattheoffl

இலக்கியவாதிகளின் அட்ராசிட்டிகளில் எது உங்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்?

தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசாமல் எப்ப பாரு ரஷ்ய இலக்கியமும் இன்னும் பிற வாயில் நுழையாத இலக்கியம் குறித்தும் பேசிவிட்டு, தமது புத்தகம் அவ்வளவாக விற்பதில்லை என்று அங்கலாய்ப்பது.

தஞ்சை ப்ரணா

சந்தடி சாக்குல, பிரபலமான எழுத்தாளர்களோட நின்னு போட்டோ எடுத்து அவங்களோட கூட்டாளி மாதிரி ஊடகங்கள்ல விளம்பரப்படுத்தறது!

வேதை. அமுதன்

`அவர் எழுதுவதெல்லாம் எழுத்தே இல்லை' என்று சக எழுத்தாளர்களை கண்ணாடி பார்க்காமல் மட்டம் தட்டுவது.

அஜித்

எந்தப் படமும் சரியில்லை என்பார்கள்.

எந்தக் கட்சி யும் சரியில்லை என்பார்கள்.

அவர்ளைப் பொறுத்தவரை எது சரி எனபது அவர்களுக்கே வெளிச்சம்.

பா ஜெயக்குமார்

`நீங்கள் இலக்கியவாதியாக உருவாக உரம்போட்ட எழுத்தாளர்கள் யார்’ எனக் கேட்டால், ஒப்புக்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் பெயரைச் சொல்லிவிட்டு, ஒரு வரி அளவுக்கு நீண்ட பெயர்கொண்ட மூன்று ரஷ்ய எழுத்தாளர்களின் பெயரையும் இரண்டு பிரெஞ்ச் எழுத்தாளர்களையும் சொல்லி வைப்பது...

ம.ராஜா

புத்தகக்காட்சியில் தான் எழுதிய புத்தகத்துக்குப் பக்கத்திலேயே சேர் போட்டு அமர்ந்துகொள்வது. நாம் ஒவ்வொரு புத்தகமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, அவர்களின் புத்தகத்தைக் கையில் எடுக்கும்போதே, இவர்கள் கையெழுத்து போடத் தயாராகிவிடுவார்கள்.

IamUzhavan

வாசகர் மேடை: நாலு பேரும் நல்ல பாட்டு டெடிகேஷனும்!

`ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது’ என்று சமீபத்தில் தோன்ற வைத்த சம்பவம்..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளுக்கு முன்னால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணா மலை கொடுத்த பில்டப் இருக்கிறதே, அப்பப்பா! ஓவர் பில்டப் உடம்புக்கு மட்டுமல்ல, தலைமைக்கும் தாங்காது.

ஏ.கணேசன்

அன்புமணியாகிய நான்....................

அ.பச்சைப்பெருமாள்

``சூர்யா மன்னிப்பு கேட்டால்தான் எதற்கும் துணிந்தவன் படத்தை தியேட்டரில் வெளியிட விடுவோம்...’’ என்று ஓவர் பில்டப் காட்டிய பா.ம.க ராமதாஸ், படம் வெளியாகி சூப்பரா ஓட ஆரம்பிச்சிடுச்சு... பேச்சுமூச்சே காணோமே..!

KmFarook6

கொரோனாவைவிட பயங்கரமானது என பில்டப் காட்டி கடைசியில் மொக்கை வாங்கிய ஒமைக்ரான்.

Rajasekar4795

ரஜினியின் அரசியல் பிரவேசம்தான்.

KRavikumar39

****

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. ‘இருக்கு... ஆனா இல்லை’ என்பதற்கு உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒரு ஜாலி உதாரணம்...?

2. வீட்டு பட்ஜெட், அரசு பட்ஜெட் - என்ன வித்தியாசம்?

3. திடீரென்று உங்களுக்கு வால் முளைத்தால் என்ன செய்வீர்கள்?

4. சிவாஜி முதல் விஜய் வரை பாரதியார் கெட்டப்பில் நடித்துவிட்டார்கள். இதுவரை யாரும் நடிக்காத புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கெட்டப்பில் யார் நடிக்கலாம்?

5. 20,000 புத்தகங்களைப் படித்து பிரமிக்க வைக்கும் அண்ணாமலை ஒரு புத்தகம் எழுதினால், நாம் இன்னும் பிரமிக்கும் அளவுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com